தெய்வத்தின் குரலில் ......
------------------------------
நம்பிக்கைகளே பலரது வாழ்வுக்கும் ஆதார கீதமாக இருக்கிறது நான்
பயிற்சியில் இருந்தபோது ஒரு பாடம்.
பொறுப்புணர்த்தலே அதன் நோக்கம் நீ இப்போது நீயாக இருப்பதற்கு யாரை
பொறுப்பாக்குகிறாய் என்பதே கேள்வி. தந்தையின்
பங்கு இத்தனை சதம்
ஆசிரியரின் பங்கு இத்தனை சதம்
உற்றம் சுற்றம் இத்தனை சதம்
விதியின் பங்கு இத்தனை சதம் அதிர்ஷ்டம்
இத்தனை பங்கு விதியின் பங்கு
இவ்வளவு கடவுள் நண்பர் என்று
பொறுப்புகள் பங்கிடப்படும்
பெரும்பாலும் யாருமே தான்தான் பொறுப்பு என்று கூறமாட்டார்கள்நம்பிக்கைகள்
வாழ்வின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்எல்லாம் அவன் செயல் என்று இருப்பது பொறுப்புகளைத்
தட்டிக் கழிக்கவே உதவும் இரண்டு விதப்பார்வையையும் விளக்கும்
கதை ஒன்று உண்டு. இரு நண்பர்கள்.
ஒருவன் எல்லாம் விதிப்படி என்று நினைப்பவன்
இன்னொருவன் நம்மை மீறி
ஏதும் இல்லை என்று நினைப்பவன் இருவரும் சாலையில் செல்லும் போது அவர்கள்
கண்முன்பு ஒரு விபத்து நிகழ்கிறது
விபத்தில் ஒருவன் நன்கு அடிபட்டு
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் நம்மை மீறி எதுவும் இல்லை என்று நினைப்பவன்
விபத்துக்குள்ளானவனை மருத்துமனையில் சேர்த்து அவன் உயிர் பிழைக்க வைத்தான்எல்லாம்
விதிப்படி என்று நினைப்பவன் இதையெல்லாம்
வேடிக்கை பார்த்துக் கொண்டு வாளா இருந்தான் முதலாமவன் நான்
தகுந்த நேரத்தில் இவனை மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து சிகிச்சை
கொடுத்திராவிட்டால் இவன் இந்நேரம் பரலோகம் போய் இருப்பான்
என்றான் இரண்டாமவனோ விபத்து நேர வேண்டும் என்பது விதி. அவனை நீ மருத்துவமனையில்
சேர்க்கவேண்டும் என்பதும் விதி. அவன்
பிழைக்க வேண்டும் என்பதும் விதி. இதை மீறி
யாரும் ஒன்றும் செய்திருக்க முடியாது
என்றானாம் எந்த வாதம் சரி என்பதை
அவரவர் பின்னணியே கூறும்
ஒரு நாணயத்தைப் பற்றிக் கருத்துக் கூற வேண்டும் என்றால் அதன்
இரு பக்கமும் தெரிந்து இருக்கவேண்டும்
அதை ஒட்டியே நான் தமிழில் கீதை என்னும் பதிவை எழுதினேன் கடைசியில் என் கருத்தையும் எழுதி இருந்தேன் நான் ஒரு ஹிந்து, , கடவுளோடு ஒரு உரையாடல்
என்னும் பதிவுகளும் அவ்வகையைச் சார்ந்தவையே
அந்த நோக்கத்தோடுதான்
தெய்வத்தின் குரலைப் படிக்க
ஆரம்பித்தேன் அதை அப்படியே பதிவாக்கலாம் என்றும் நினைத்தேன் பல தமிழ் ஹிந்துக்களும் படித்திருக்க
வாய்ப்பு இருக்கிறது படிப்பது என்பது
வேறு உள்வாங்குதல் என்பது வேறு
தெய்வத்தின் குரல் போன்ற பதிவை
உள்வாங்கிப் படிக்க பல முறை வாசிக்க வேண்டும்
என்னிடம் புத்தகம் இருக்கிறது
இது தேவை இல்லை என்று சிலரும் காப்பி பேஸ்ட் செய்வது பதிவாகாது எனச்
சிலரும் நான் என் கருத்துக்களைக் கூறாமல் அவர் சொல்லியது அப்படி
இவர் சொல்லியது இப்படி என்று பொறுப்பைத்தட்டிக் கழிக்கிறேன் என்னும்
தொனியிலும் பின்னூட்டங்கள்
இருந்தனஆகவே தெய்வத்தின்
குரலிலிருந்து சில பகுதிகள் அவர்
சொன்னபடியே படிப்பதுதான் முறை என்று தோன்றியதால் அதிலிருந்து சில பகுதிகளைக்
காப்பி பேஸ்ட் செய்கிறேன் இதையே என்
எழுத்துக்களிலும் கொண்டு வர
முடியும் என்றாலும் அதை தவிர்க்கிறேன் என் எழுத்துக்களில் வரும்போது என்னையும் மீறி சிலகருத்துக்கள் சிதை படலாம்
உலகம் பரவிய மதம்
--------------------------------------
இப்போது ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற நமது மதம் ஒன்றே ஆதியில் லோகம் முழுதும் பரவியிருந்தது! அந்த ஒரே மதம் இருந்தால்தான் அதற்குத் தனியாகப் பெயர் வைக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதனால்தான் நம் ஆதார நூல்களில் ஹிந்து மதத்துக்குப் பெயரே இல்லை — என்பது என் அபிப்பிராயம்.
மிக மிகப் பழங்காலப் புதைப்பொருள் ஆராய்ச்சிகளைப் பார்த்தால் எல்லா அந்நிய தேசங்களிலுமே நமது வேத சமய சம்பந்தமான அம்சங்களை நிறையப் பார்க்கிறோம். உதாரணமாக, கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 1300 வருஷங்களுக்கு முன்னால் எகிப்து தேசத்தில் இரண்டு அரசர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை சாஸனம் பூமிக்கடியிலிருந்து கிடைத்திருக்கிறது. அதில் 'மித்ரா வருண' சாட்சியாக இந்த உடன்படிக்கை செய்யப்படுவதாகச் சொல்லியிருக்கிறது. மித்ரா-வருணங்கள் நமது வேதத்தில் சொல்லப்பட்ட தேவதைகள். மடகாஸ்கரில் உள்ள ஊர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது.* ராமேஸஸ் என்ற ராஜப் பெயருக்கும் நம் ராமனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
பூகோளத்தின் கீழ்ப் பாதியிலும் இத்தகைய அடையாளங்களே உள்ளன. மெக்ஸிகோவில் நமது நவராத்திரிப் பண்டிகையின்போது ஓர் உற்சவம் நடக்கிறது. அதற்கு 'ராம ஸீதா' என்று பெயர். அங்கே பூமியே வெட்டும் இடங்களிலெல்லாம் பிள்ளையார் விக்கிரம் அகப்படுகிறது.** ஸ்பெயின் தேசத்தார் புகுந்து அந்த நாட்டை வசப்படுத்துமுன் அங்கிருந்த பழங்குடிகள் ஆஸ்டெக்ஸ் (Aztecs) இது ஆஸ்திக என்பதன் திரிபே. பெருவில் சரியாக விஷு புண்ணிய காலத்தில் சூரியாலயத்தில் பூஜை செய்கிறார்கள். இவர்களுக்குப் பெயரே இன்காஸ். 'இனன்' என்பது சூரியனுடைய பெயர். 'இனகுல திலகன்' என்று ராமனைச் சொல்கிறோமே!
ஆஸ்திரேலியப் பழங்குடிகள் நிர்வாணமாக ஆடுகிற படங்களை ஒரு புஸ்தகத்தில் பார்த்தேன். (ஸ்பென்ஸர், கில்லன் என்பவர்கள் எழுதிய Native Tribes of Central Australia என்கிற புத்தகத்தில் 128, 129 என்ற எண்ணுள்ள படங்கள்). அதன்கீழ் சிவா டான்ஸ் என்று போட்டிருந்தது. நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். ஆடுகிற ஒவ்வொர் நெற்றியிலும் மூன்றாவது கண் வரைந்திருக்கிறது.
போர்னியோ தீவில் பிரம்ம சிருஷ்டி முதல் யாருமே உள்ளே நுழையாத காடு (Virgin Forest) என்று பெரிய ஒரு காட்டைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதில் உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்தபோது, நம் கிரந்த லிபியில் எழுதியதுபோல் ஒரு சாசனம் அசப்பட்டது. அதில் இன்ன மஹாராஜா, இன்ன யக்ஞம் செய்தான். இன்னவிடத்தில் யூபஸ்தம்பம் நட்டான். பிராமணர்களுக்கு கற்பக விருட்ச தானம் செய்தான் என்று கண்டிருக்கிறது. இதை Yupa inscription of Mulavarman of Koeti என்கிறார்கள். நம் மதத்தை ரொம்பப் பரிகாசம் செய்த இங்கிலீஸ்காரர்கள்தான் இத்தனை விஷயங்களையும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இவையெல்லாவற்றையும்விட, எனக்குத் தோன்றுகிற ஒன்று சொல்கிறேன். வேடிக்கையாக இருக்கும். 'ஸகரர்கள்யாகக் குதிரைகள் தேடிப் பாதாளத்துக்குப் வெட்டிக் கொண்டே போனார்கள். அப்போது உண்டான கடலே ஸகரர் பெயரில் 'ஸாகர' மாயிற்று. கடைசீயில் கபில மகரிஷியின் ஆசிரமத்துக்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள். அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை ஹிம்சித்தார்கள். அவர் திருஷ்டியினாலே அவர்களைப் பொசுக்கிச் சாம்பலாக்கிவிட்டார்'. இது ராமாயணக் கதை. நம் தேசத்துக்குக் நேர் கீழே உள்ள அமெரிக்காவைப் பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம்—(மதுரை என்பது மருதை என்கிற மாதிரி) கலிபாரண்யமாக-கலிபோர்னியாவாக-இருக்கலாம். அதற்குப் பக்கத்தில் குதிரைத் தீவு (Horse island) , சாம்பல் தீவு (Ash island) இவை உள்ளன.
ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது. ஸஹாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்கிறார்கள். ஸாகரம்தான் ஸஹாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.
இப்படி உலகம் முழுக்க நம் மதச் சின்னங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு, 'நம்மவர்களில் சிலர் இங்கேயிருந்து அங்கே போனார்கள். அந்தத் தேசத்தவர்கள் இங்கே வந்தார்கள், பலவித பரிவர்தனை ஏற்பட்டது' என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். எனக்கோ எல்லாவிடத்திலும் ஒரே தர்மம்தான் இருந்தது; இந்தச் சின்னங்கள் அங்கங்கேயே ஆதியில் இருந்தவர்களால் ஏற்பட்டவை என்றுதான் தோன்றுகிறது.
சரித்திர காலம் என்று சொல்லப்படுகிற ஒரு இரண்டாயிர மூவாயிர வருஷத்துக்கு உட்பட்ட சான்றுகள் மற்ற தேசங்களில் கிடைப்பதைப் பார்த்து, இந்தியர்கள் அங்கெல்லாம் சென்று அங்குள்ள பழைய நாகரிகத்தை அகற்றிவிட்டு அல்லது அதற்குள்ளேயே ஊரிப் போகிற மாதிரி, ஹிந்து நாகரீகத்தைப் புகுத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் நாலாயிரம் வருஷம், அதற்கும் முற்பட்ட காலங்களில்கூட வைதிக சின்னங்கள் பல தேசங்களில் இருக்கின்றன. அதாவது அந்த தேசங்களில் நாகரீக வாழ்வு (Civilization) தோன்றின போதே இந்த வைதிக அம்சங்கள் அங்கே இருந்திருக்கின்றன. இதற்குப் பிற்பாடுதான் அந்தத் தேசத்துப் பழங்குடிகளுக்கென்று ஒரு மதமே தோன்றுகிறது. கிரீஸில் இப்படி ஒரு பூர்விக மதம், பல தெய்வங்களுக்குப் பிறகு பெரிய பெரிய கோயில் கட்டி வழிபடுகிற மதம் உண்டாயிற்று. அதிலும் வைதிக சம்பந்தமான அம்சங்கள் இருக்கின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்த பகுதிகளில் இருந்த ஸெமிடிக், ஹீப்ரு மதங்களிலும் வேத மதத்தில் இருக்கிற அம்சங்கள்—ஒரு மாதிரி வர்ணாசிரமப்பிரிவினை உள்பட—இருந்திருக்கின்றன. மெக்ஸிகோ போன்ற தேசங்களின் பழங்குடிகளுக்கு (aborgines) ஒவ்வொரு மதம் உண்டு—அவர்களும் வேதத்தில் சொல்லியிருக்கிற மாதிரி இயற்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் தெய்வத்தன்மையைப் பார்த்து அவற்றை ஒவ்வொரு தேவதையாக வழிபட்டிருக்கிறார்கள். இந்த மதங்களில் எல்லாம் ஏகப் பட்ட சடங்கு (ritual) களும் உண்டு
இப்போது நாகரீகத்தின் உச்ச ஸ்தானத்தில் இருந்த கிரீஸின் (ஹெல்லெனிக்) மதம் உள்பட இவை எதுவுமே இல்லை. இங்கெல்லாம் அநேகமாக கிறிஸ்துவ மதமே இருந்திருக்கிறது. ஜப்பான் வரை மத்திய ஆசிய, கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் பரவியிருக்கிறது. சில இடங்களில் இஸ்லாம் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க வனாந்தரம் மாதிரியான பகுதிகளில் மட்டும், அந்தந்த தேசத்து ஆதி (original) மதம் என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிற மதங்கள் காட்டுக்குடிகளிடையில் (tribal) மட்டும் இருக்கிறது. இப்படிப்பட்ட மிகப் பூர்வீக மதங்களிலேயே வைதிக அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
அதற்கு முன்னால் ஒரு விஷயம். தத்துவங்களை விளக்குகிற போது கதாரூபம் (கதை உருவம்) கொடுப்பதுண்டு—அப்போதுதான் அவை சுலபமாகப் பாமர ஜனங்களுக்குப் புரியும். தத்வம் அப்படியே பொது ஜனங்களிடம் ஏறாது. ஒன்று, கதாரூபம் தர வேண்டும். அல்லது, ஒரு சடங்காக அதை ஆக்கிக் காரியத்தில் செய்யும்படியாகப் பண்ண வேண்டும். இம்மாதிரி சமய கர்மானுஷ்டானங்களைச் செய்யும் போதே அவற்றின் உள்ளே 'ஸிம்பாலிக்'காக இருக்கிற தத்வங்கள் புரியும். 'சடங்குகள் எல்லாமே ரூபகம் (ஸிம்பல்) தான்; உள்பொருளைப் புரிந்து கொண்டாலே போதும். சடங்கே வேண்டாம்' என்று சொல்லுகிறவர்களோடு நானும் சேர்ந்து கொண்டு இதைச் சொல்லவில்லை. தனிப்படச் சடங்கு என்று வைத்துக் கொண்டாலே அதற்குச் சக்தி உண்டுதான். இம்மாதிரியே, 'புராணக் கதைகள் தத்வ விளக்கம் மட்டுமேதான்; அவற்றையே நிஜம் என்று நம்பக்கூடாது' என்றும் நான் சொல்ல வரவில்லை. வாஸ்தவத்திலேயே, நடந்த உத்தமமான சரித்திரங்கள் தான் இவை. அதே சமயத்தில் தானாகவே தத்வங்களையும் நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன. அதேபோல் காரரியமாகச் செய்கிறபோதே நமக்கு ஒரு பலனைத் தந்து, பிறகு எந்தப் பலனும் கோராத சித்த சக்தியைத் தந்து, சிரேயஸைத் தருகிற சடங்குகளுக்குள் தத்வார்த்தங்களும் இருக்கின்றன.
ஆனால் நாள்பட வழக்கத்தில் இப்படிப்பட்ட கதைகள் அல்லது சடங்குகள் அவற்றின் உள்ளுறை பொருளாக (inner meaning) இருக்கப்பட்ட தத்வங்களிலிருந்து விலகி விடக் கூடும்; அல்லது அதை மறந்தே போகக் கூடும்.
வெளி தேசங்களில் எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் மூலமான வேத மதத்தோடு சம்பந்தமே இல்லாமல் புதிய மதங்கள் வளர்ந்தபோது இப்படித்தான் வைதிக தத்துவங்கள் உருமாறியிருக்கின்றன.
நான் சொல்ல வந்த உதாரணத்திற்கு வருகிறேன். ஹீப்ரு மதங்களில் ஆதம்-ஈவாள் கதை (Adam and Eve) என்று கேட்டிருப்பீர்கள். 'அறிவு மரம்' (Tree of Knowledge) என்று ஒன்று இருந்தது. அதன் பழக்கத்தைப் புசிக்கக்கூடாது என்பது ஈஸ்வராக்ஞை. ஆதம் அப்படியே சாப்பிடாமல் இருந்தான். ஆனால் ஈவ் அதைச் சாப்பிட்டாள். அதன் பிறகு, 'வாழ்வோ தாழ்வோ அவளுக்கு என்ன சம்பவிக்கிறதோ அதுவே தனக்கும் சம்பவிக்கக்கூடும்' என்று ஆதமும் அந்தப் பழக்கத்தைச் சாப்பிட்டான் என்பது பைபில் பழைய ஏற்பாட்டின் (Old Testament) முதல் கதை (Genesis).
நம் உபநிஷத் தத்துவங்களில் ஒன்றுதான் இப்படி கதா ரூபமாயிருக்கிறது. அப்படி ஆகும்போது காலம், தேசம் இவற்றின் மாறுபட்டால் குளறுபடியும் உண்டாகியிருக்கிறது, மூல தத்வமே மறைந்து போகிறாற்போல.
உபநிஷத்தில் என்ன சொல்லியிருக்கிறது? 'பிப்பல மரத்தில் இரண்டு பட்சிகள் இருக்கின்றன. ஒன்று பிப்பலத்தைச் சாப்பிடுகிறது. இன்னொன்று சாப்பிடாமல் மற்றதைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது' என்று உபநிஷத்து சொல்கிறது. சரீரம்தான் அந்த விருட்சம். அதில் ஜீவாத்மாவாக ஒருத்தன் தன்னை நினைத்துக் கொண்டு விஷயாநுபவங்கள் என்ற பழத்தைத் தின்று கொண்டிருக்கிறான். இவன் ஒரு பட்சி. இந்த சரீரத்திலேயே பரமாத்மா இன்னொரு பட்சியாக இருக்கிறான். அவன்தான் ஜீவனை ஆட வைக்கிறவன். ஆனாலும் அவன் ஆடுவதில்லை. சர்வ சாக்ஷியாக அவன் ஜீவனின் காரியங்களைப் பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிறான். இந்த ஜீவனுக்கு அவனே ஆதாரமானாலும் அவன் விஷயங்களை அனுபவிப்பதோ—பழத்தைச் சாப்பிடுவதோ—அதற்கான கர்ம பலனை அனுபவிப்பதோ இல்லை. இதை உபநிஷதம், பழம்—அதைச் சாப்பிட்ட பட்சி—சாப்பிடாத பட்சி என்று கவித்வத்தோடு சொல்கிறது. சாப்பிடுபவன் ஜீவன், சாப்பிடாதவன் பரம்பொருள்—தன்னை ஆத்மாவாக உணர்ந்திக்கிறவன்
இந்த ஜீவன்தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகியிருக்கிறான். 'ஜீ' என்பது 'ஈ' யாவது ஒரு வியாகரண விதி. 'ஜ' வரிசை சப்தங்கள் 'ய' வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான் யமுனா ஜமுனாவாயிற்று. 'யோகீந்திர்' என்பது 'ஜோகீந்தா' என்றாயிற்று. 'ஜீவ' என்பது 'ஈவ்' என்றாயிற்று. 'ஆத்மா' என்பது 'ஆதம்' ஆக மாறிவிட்டது. பிப்பலம் என்பது ஆப்பிள் (apple) என்றாயிற்று; அறிவு விருட்சம் என்பதும் நம் 'போதி விருட்சம்' தான். போதம் என்றால் 'ஞானம்'. புத்தருக்குப் போதி விருக்ஷத்தின் கீழ்தான் ஞானம் உண்டாயிற்று என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? ஆனால், அவருக்கும் முந்தியே அரச மரத்துக்குப் போதி விருட்சம் என்று பெயர் வந்தது.
உபநிஷதமானது தூர தேசம் ஒன்றில் எத்தனையோ காலத்துக்குப் பிற்பாடு மாறி மாறிப் புது ரூபம் எடுக்கிறபோது மூல தாத்பர்யம் மாறிப்போயிற்று. ஒரு போதும் விஷயாநுபோகத்துக்கு ஆளாக முடியாத ஆத்மாவும் பழத்தைச் சாப்பிட்டதாக பைபிள் கதை திசை திருப்பி விடுகிறது. விஷய சுகம் எல்லாம் அடிபட்டுப் போகிற அறிவை நம்முடைய போதி விருட்சம் குறிப்பிடுகிறது என்றால், அவர்களோ விஷய சுகத்தைப் பழுக்கிற லௌகீக அறிவையே Tree of Knowledge என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும், நம் வேத மதம் ஆதியில் அங்கேயிருந்திருக்கிறது என்பதற்கு இதிலிருந்து அத்தாட்சி கிடைக்கின்றதோ இல்லையோ? இன்னொரு உதாரணம் சொன்னால்தான் மூலத்தில் இருப்பது வெளி தேசத்தில் வேறு காலத்தில் ரொம்பவும் மாறிப்போகும்—மாறினாலும்கூட மூலத்தைக் காட்டிக் கொடுக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை வரும். நம்முடைய திருப்பாவை - திருவெம்பாவைப் பாடல்கள் வேதம் மாதிரி அத்தனை பிராசீனமானவை அல்ல. ஒரு ஆயிரத்தைந்நூறு வருஷங்களுக்குள் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வந்து விடுகிறார்கள். எப்படியானாலும் வேத இதிஹாச காலங்களுக்கு மிகவும் பிற்பட்டுத் தோன்றியவர்கள்தான் இந்த இரு பாவைகளைச் செய்த மாணிக்கவாசகரும் ஆண்டாளும். இழர்கள் காலத்துக்கு அப்புறம் கடல் கடந்து ஹிந்து சாம்ராஜ்யங்கள் உண்டாயின. தமிழ்நாட்டின் சோழ ராஜாக்கள்கூட அம்மாதிரி தேசாந்தரங்களில் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறார்கள். ஆனால் இந்த படை எடுப்பைவிட முக்கியமாக நம் கடல் வாணிபம் பெருகினதையே சொல்ல வேண்டும். வியாபார ரீதியில் நம் அந்நியத் தொடர்பு (Foreign contact) மிகவும் விருத்தியாயிற்று. இந்த வியாபாரிகளைப் பார்த்தே பல தேசங்களில் ஹிந்து நாகரீகத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு நம் மத அம்சங்களைத் தாங்களும் எடுத்துக் கொண்டார்கள். தூரக் கிழக்கு (Far - East ) என்று சொல்கிற நாடுகளை இவற்றில் முக்கியமாகச் சொல்ல வேண்டும். பாலி மாதிரி தேசங்கள் முழுக்க ஹிந்துவாயின. கம்போடியா, இப்போது தாய்லாந்து என்கிற ஸயாம், இந்தோ சைனா முழுவதும் பரவி, மணிலா இருக்கிற ஃபிலிப்பைன்ஸ் எல்லாம்கூட ஹிந்து கலாச்சாரத்துக்குள் வந்தன. அதை ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் என்பார்கள்
.
ஆக, ரொம்பவும் ஆதியில் எங்கேயும் வேத மதமே இருந்தது ஒரு நிலை; அப்புறம் அங்கங்கே புது மதங்கள் ஏற்பட்டது ஒரு நிலை; பிறகு இந்த மதங்கள் எல்லாம் மங்கிப் போகிற மாதிரி கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் இவை மட்டுமே அங்கெல்லாம் பரவிய நிலை; இதற்கப்புறம், சரித்திரத்தில் நன்றாக உறுதிப்பட்டுவிட்ட காலத்தில் மறுபடி இப்போது நான் சொன்னமாதிரி, ஹிந்து நாகரீகச் செல்வாக்கானது பல தேசங்களில் — குறிப்பாக கீழ்த்திசை நாடுகளில் ஜீவ களையுடன் ஏற்பட்டது ஒரு நிலை. இந்தக் கட்டத்தில்தான் அங்கோர்வாட், பேராபுதூர், ப்ரம்பானன் மாதிரி பெரிய பெரிய தமிழ்நாட்டுக் கோயில்கள் அங்கே எழும்பின. இந்தக் கட்டத்தில்தான் நம்முடைய திருப்பாவையும் திருவெம்பாவையும் கூட ஸயாமுக்கு—இப்போது தாய்லாந்து என்கிறார்கள்—சென்றிருக்கின்றன.
இதற்குச் சான்றாக இப்போதும் அங்கே வருஷா வருஷம் இங்கே நாம் இந்தப் பாவைகளைப் பாராயணம் பண்ணுகிற அதே மார்கழி மாதத்தில் ஒரு பெரிய உத்ஸவம் நடக்கிறது. இரண்டு பாவைகளும், சைவத்தையும் வைஷ்ணவத்தையும் சேர்த்து வைக்கிற மாதிரி இந்த உத்ஸவத்தில் பெருமானுக்குறிய டோலோத்ஸவத்தை (ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதை) சிவபெருமான் வேஷத்தைப் போட்டுக் கொள்கிற ஒருத்தனுக்கு ஸயாம் தேசத்தில் செய்கிறார்கள். சரி அவர்களுக்குப் 'பாவை' நூல்களைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டால், அடியோடு ஒன்றும் தெரியாது. அப்படியானால் இந்த உத்ஸவம் மார்கழியில் நடக்கிறது என்பது ஒன்றுக்காக அந்தப் பாவைகளோடு சேர்த்துப் பேசுவதற்கு ஆதாரம் இல்லை என்று தோன்றலாம். பின் நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், அவர்கள் இந்த உத்ஸவத்துக்குப் பெயரே ட்ரியம்பாவை, ட்ரிபாவை (Triyambavai, Tripavai) என்கிறார்கள். இப்போது பைபில் படிப்பவர்களுக்கு உபநிஷத சமாச்சாரமே தெரியாவிட்டாலும், அதிலிருந்து வந்த கதை மாத்திரம் அவர்களிடம் இருக்கிற மாதிரி, தாய்லாந்துக் காரர்களுக்கு இப்போது திருப்பாவை - திருவெம்பாவை பாராயணம் அடியோடு விட்டுப் போய்விட்டது என்றாலும், அவர்கள் இதே தநுர் மாசத்தில் சிவ வேஷம் போட்டுக் கொண்டவனுக்காக நடத்துகிற டோலோஸ்தவத்துக்கு "ட்ரியம்பாவை, ட்ரிபாவை" என்ற பெயர் மட்டும் இருக்கிறது! சரித்திர காலத்துக்குள் இப்படிப்பட்ட மாறுபாடுகள் உண்டானால், மூவாயிரம் நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட சமாச்சாரங்கள் வெளிநாடுகளில் எத்தனையோ திரிந்தும் மாறியும் தானே இருக்கும்? இத்தனை மாறினாலும் எல்லாவற்றிலும் வேத சம்பிரதாயத்தின் அடையாளங்கள் "இதோ இருக்கிறோம்" என்று தலை நீட்டுகின்றன.
சரித்திர காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று வைக்கப்பட்ட பழங்குடிகளின் மதங்களில்கூட நம் சமய சின்னங்கள் இருக்கின்றன என்றால்
என்ன அர்த்தம்? அத்தனை காலத்துக்கு முந்தி, நாகரீக வாழ்க்கையே உருவாகாத தூர தூர தேசங்களுக்கு இந்தியாவிலிருந்து படையெடுத்தோ வியாபாரத்துக்காகவோ போய் நம் நாகரீகத்தைப் பரப்பினார்கள் என்றால், அது பொருத்தமாகவே இல்லையே! அதனால்தான் 'இங்கிருந்து கொண்டுபோய் அங்கே புகுத்தவில்லை; ஆதியில் லோகம் முழுக்கவே வேத மதம்தான் இருந்திருக்க வேண்டும்' என்று எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் அவை திரிந்து திரிந்து இப்போது அந்தந்த தேசத்து 'ஒரிஜினல்' மதங்களாக நினைக்கப்படுபவையாக ஆகி, பிற்பாடு அங்கும் சரித்திர காலத்துக்கு உட்பட்ட கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம் ஆகியன பரவியிருக்க வேண்டும்.
பெரியவர்சங்கராச்சாரியார் அவருக்கே உரித்தான பாணியில் சில கருத்துக்களை கூறி இருக்கிறார் இவற்றைப் புரிந்து கொள்வதோ அவை சரியானவை இல்லையா என்று பட்டிமன்ற விவாதம் செய்வதோ நோக்கமல்ல. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டும்என்பதே குறி இருந்தாலும் பெரியவருக்குக் கற்பனை வளம் அதிகம் என்றே தோன்றுகிறது
.
|
//ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டும்என்பதே குறி இருந்தாலும் பெரியவருக்குக் கற்பனை வளம் அதிகம் என்றே தோன்றுகிறது.//
ReplyDeleteஇதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்துவிட்டுச் சொல்லி இருக்கலாமோ? ஏனெனில் அவரை epigraphical authority என்பார்கள். எத்தனையோ சரித்திர ஆய்வாளர்கள் அவரிடம் வந்து சந்தேகங்களைத் தெளிவித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆகவே அவர் இப்படிச் சொல்லி இருப்பது தவறு என்பதற்கான ஆதாரங்களும் தேவை.
//எல்லாம் அவன் செயல் என்று இருப்பது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கவே உதவும்.//
ReplyDeleteஎந்த முயற்சியும் செய்யாமலேயே எல்லாம் அவன் செயல்னு இருக்க முடியுமா? எனக்குத் தெரிந்து எங்க வீடுகளிலே இப்படிச் சொல்லிக் கொடுத்ததில்லை. பரிட்சைக்குப் படிக்காமலேயே கடவுள் அருளால் பாஸ் செய்ய முடியுமா? நம் முயற்சியும் வேண்டும். முயற்சிகளின் பலனைத்தான் "அவன் செயல்" என்பார்கள். ஏனெனில் எல்லோருக்கும் முயற்சிகளின் பலன் சரிவரக் கிடைத்துவிடுவதில்லையே!
ReplyDelete@ கீதா சாமசிவம்
/இவையெல்லாவற்றையும்விட, எனக்குத் தோன்றுகிற ஒன்று சொல்கிறேன். வேடிக்கையாக இருக்கும்./ இப்படி அவரே சொல்லிச் செல்லும் கதை கற்பனை என்றே தெரிகிறது
எல்லாமே கற்பனை என்று எப்படித் தான் சொல்கிறீர்களோ! :( திருப்பாவை, திருவெம்பாவை குறித்து அவர் சொல்லி இருப்பது முழு உண்மை என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். மற்றபடி உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு! :)
ReplyDelete
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
முயற்சிகளின் பலன் என்பதற்கு அளவுகோல் இருக்கிறதா எதிர்பார்க்கும் பலன் இல்லாவிட்டால் நம்மைப் பொறுப்பாக்க மாட்டோம் என்பதையே கூறி இருக்கிறேன் / எங்கள் வீடுகளில்....../இதைத்தான் நான் நம்மையே அளவுகோலாகக் கருதி விடுகிறோம் என்று பலமுறை கூறி இருக்கிறேன்
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
எல்லாமே கற்பனை என்று நான் எங்கு சொல்லி இருக்கிறேன் ஒரு முடிவுக்கு வந்து படிப்பதால் ஏற்படும் விளைவுகளே என் கருத்தைத் தான் சொல்லி இஒருக்கிறேன் எதையும் திணிக்க வில்லையே
பெரியவர் சொல்வதில் கற்பனை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! சிறப்பான பகிர்தலுக்கு நன்றி!
ReplyDeleteG.M.B அவர்களே ! மிகவும் ஆழமான விஷயங்களை தொடும் போது சான்றுகள் வேண்டும். பெரியவரின் நூல்கள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். சமிபத்தில்" சாதி,வர்க்கம்,மரபணு " என்ற புத்தகம் படிக்கக்கிடைத்தது.மனித குலவளர்ச்சியை அதன் புலம் பெயர்தலை மக்களின் மரபணுவை அறிவியல் ரீதியாக சோதித்து எழுதப்ப்பட்ட புத்தகம்.மரபணு அறிஞர் பாஸ்வான் என்ற மேலை நாட்டுக்கரரின் ஆராய்சி கட்டுரைகளை மேற்கோள்காட்டும்புத்தகம்.அதன்படி
ReplyDelete1. அப்பிரிக்காவில்தான் மனித குலம் தோன்றியது.
2. ஆப்பிரிக்க கடற்கரைஓரமாக கடலை ஒட்டி குடியேற்றம் ஆரம்பித்துள்ளது.
3.இந்தியாவிற்கு இவர்கள் 60000 ஆண்டுகளுக்கு முன்பு புலம் பெயர்ந்திருக்கிறார்கள்.
4.அதன் பிறகு 6000 ஆண்டுகலுக்கு பிறகு ஒரு கூட்டம் இந்தியாவிற்கு வந்துள்ளது.
4. பின்னர் 3000 ஆண்டுகளுக்கு பின் ஒருகூட்டம் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்துள்ளது.
இவை யாவும் மரபனு சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டவை.
இந்த புத்தகம் தமிழில் ப.கு ராஜன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. "சாதி,வர்க்கம்,மரபணு " என்ற புத்தகம் பாரதிபுத்தகாலயத்தில்கிடைக்கும்.
உண்மையில் இந்தியாவிற்குள் தான் குடியேற்றம் வந்துள்ளது .
"தெய்வத்தின் குரல் " நாம் மரியாதையோடு வனங்கும் பெரியவரின் குரல். அதற்கு சான்றுகளில்லாத போது அறிவியல் ரீதியாக அவை நிற்காது. வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்..
ReplyDelete@ தளிர் சுரேஷ்
நம்பிக்கை பற்றி நான் துவக்கத்திலேயே எழுதி இருக்கிறேன் பெரியவர் மீது மதிப்பு இருந்தால் அவர் சொல்வதெல்லாம் நம்பவேண்டுமா வருகைக்கு நன்றி சுரேஷ் அவர்களே
ReplyDelete@ காஸ்யபன்
ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி. இந்துமதம் ஆதி மதம் என்றும் அதையாரும் ஏற்படுத்தவில்லை என்றும்எங்கும் பரவி இருந்தது என்றும் பெரியவர் கூறி இருக்கிறார். அதற்கான சில சான்றுகளாக விவரங்கள் தருகிறார்பெரியவரின் வார்த்தைகளை அறிவியல் ரீதியாக யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா . அவரது கூற்றுகள் ஆராயப்பட்டிருக்கிறதா ?
ReplyDeleteமிகப்பெரிய விடயத்தை அலசி இருக்கின்றீர்கள் ஐயா எனக்கு கருத்து சொல்லும் பக்குவம் இல்லை இருப்பினும் பொது விடயத்தை முன்வைக்கும் பொழுது யாராக இருப்பினும் சந்தேகத்துக்கு இடமில்லாதவாறு சொல்வதே என்றும் நிலைபெறும் பகிர்வுக்கு நன்றி ஐயா.
மாந்தன் பிறந்தகம் குமரிக் கண்டமே
ReplyDeleteஅவன் பேசிய மொழி தமிழே
தமிழே உலக முதன் மொழி
தமிழே திரவிடத்திற்குத் தாய்
தமிழே ஆரியத்திற்கு மூலம்
என தேவநேயப் பாவாணர் ஆய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார் ஐயா
இது பற்றிய அறிவு பெரிதாக இல்லை எனினும், பெரியவரின் பல தரவுகள். அவர்கருத்தே! இவை கிருஸ்ணனும் - கிருஸ்துவும் ஒருவரே - எனெனில் கிருஸ்....எனத் தொடங்குதே என்பார்கள் சிலர்... அது போன்றதே!
ReplyDeleteஇதே சங்கராச்சாரியார் பற்றி "இந்து மதம் எங்கே போகிறது" எனும் தன் நூலில் அக்னி ஹோத்ர ராமானுச தாத்தாச்சாரியார் எழுதியவற்றைப் படித்த பின், இவர் மேல் இருந்த பிரமிப்பு அகன்றது. இவரை முக்காலமும் உணர்ந்தவர் என இவர் பக்தர்கள் குறிப்பிட்டு எழுதும் விடையங்களை வாசிக்கும் போது நகைப்பே வரும். முக்காலமும் உணர்ந்தவர்- ஜெயேந்திரரை சிஸ்யனாக எப்படி தேர்ந்தார். எவரிடமும் பதில் இல்லை.
ஆனால் இன்றுவரை இவர் அளவுக்கு தன் சாதிக்காக வாழ்ந்து சேவை செய்த மதத் தலைவர் எவருமே உலகில் இல்லை. அதனால் அவர் இனத்தவர்கள் அவரை என்றுமே நன்றிக் கடனுக்காக விட்டுக் கொடுத்ததேயில்லை. சோ' சு.சுவாமி உட்பட. மந்திரி கக்கனுக்கு குறுக்கே பசுமாட்டை விட்டு, கக்கனைப் பார்த்து ,மந்திரியானாலும் சில மனிதர் மாட்டிலும் கேவலம் என உணர்த்திய தெய்வம்.
//பெரியவருக்குக் கற்பனை வளம் அதிகம் என்றே தோன்றுகிறது.// மிக மிக அதிகம்.
ஏராளமான விஷயங்கள்.கருத்து சொல்லும் அளவுக்கு எனது ஞானம் போதாது தொடருங்கள் படிக்கிறேன்
ReplyDeleteதங்கள் பதிவினில் உள்ள பல செய்திகளை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன் ஐயா..
ReplyDeleteஐயா
ReplyDeleteமதம் என்பது எது என்பதிலேயே குழப்பம் உள்ளது. மதம் என்பது தத்துவமா? (பௌத்தம்) சரித்திரமா? (பைபிள்) சடங்குகள் சம்பிரதாயங்களா?(வேதங்கள்) குழுமம் சமுகமா?(யூதர்கள்) அல்லது கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களா? (குரான்) என்பதிலேயே தெளிவில்லை அல்லது இவை எல்லாம் சேர்ந்தனவா? ஆதி மதம் என்பதை எதன் அடிப்படையில் சொல்வது?
மதத்தை பின்பற்றுபவர்கள் மதம் "பிடித்தவர்கள்" என்று சொல்லலாமா?
-
Jayakumar
ர்கள் மதம் "பிடித்தவர்கள்" என்று சொல்லலாமா?
-
Jayakumar
ReplyDelete@ கில்லர்ஜி
சிலருக்கு எல்லாவற்றிலும் சந்தேகம் வரும் சிலருக்கு சில விஷயங்களில் சந்தேகமே வராத நம்பிக்கை இருக்கும் பெரியவர் கூற்றில் சந்தேகம் வரக் காரணமே நமக்கு இருக்கும் போதா அறிவே யாகும் எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியுமா இருந்தாலும் கலிஃபோர்னியாவை இந்தியாவிலிலுந்து தோண்டிய பாதாளத்தின் மறு கோடி என்பது கற்பனையின் உச்சம் என்றே எனக்குத் தோன்றியது வருகைக்கு நன்றி ஜி
ReplyDelete@டாக்டர் கந்தசாமி
வாசித்ததற்கும் வருகைக்கும் நன்றி சார்
ReplyDelete@ கரந்தை ஜெயக் குமார்
ஒரு தமிழ்ப் பற்று கொண்டவர் சொல்வதை நம்ப முடிந்தால் ஒரு மதாச்சாரியாரின் கூற்றை ஏன் நம்பக்கூடாது. மேலும் மொழி பற்றிய விஷயமேஅல்ல பதிவில். ஆதி மதம் குறித்த பதிவு அதுவும் சங்கராச்சாரியார் குரலில் வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ யோகன் பாரிஸ்
ஈசன் என்னும் பெயரே யேசு என்று மருவி இருக்கலாம் என்றும் படித்தநினைவு இந்துமதம் எங்கே போகிறது எழுதிய ராமானுச தாத்தாச்சாரியார் வைணவராயிருக்க வேண்டும் இந்த வைணவ சைவ வேறு பாடுகளே மதம் பற்றிய எந்தக் கருத்துக்கும் வர இயலாமல் தடுக்கிறது /கக்கனுக்கு குறுக்கே பசுமாட்டை விட்டு, கக்கனைப் பார்த்து ,மந்திரியானாலும் சில மனிதர் மாட்டிலும் கேவலம் என உணர்த்திய தெய்வம்/ கேள்விப்படாத செய்தி இது வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா
கற்பனை வளம் அதிகம் என்று சொல்வதை விட நன்றாகச் சிந்தித்திருக்கிறார் என்றும் சொல்லலாம். அவர் சொல்லியிருப்பவைகளின் பொருத்தங்கள் ஆச்சர்யமாகவே இருக்கின்றன. மிகவும் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். இதை மறுக்கும் நீங்கள் எதை வைத்து மறுக்கிறீர்கள், கற்பனை என்று சொல்கிறீர்கள் என்றும் சொன்னால் அதையும் தெரிந்து கொள்வேன்.
ReplyDelete
ReplyDelete@ டிஎன் முரளிதரன்
மனதில் படித்தபின் தோன்றுவதைக் கூற என்ன ஞானம் வேண்டும் ஒரு வேளை பெரியவரின் கருத்துக்கு மறுப்பு சொல்ல்த் தோன்றவில்லையோ என்னவோ வருகைக்கு நன்றி முரளிசார்
@ துரை செல்வராஜு
ReplyDelete/தங்கள் பதிவினில் உள்ள பல செய்திகளை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன் ஐயா./ இதை என் பதிவிலேயே கூறி இருக்கிறேனே பெரும்பாலுமான தமிழ் ஹிந்துக்கள் படித்திருக்கலாம்
ஆனால் எத்தனை பேர் உள்வாங்கி இருப்பார்கள் என்னும் கருத்தையும் கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ஜேகே 22384
அன்பின் ஜெயகுமார் வருகைக்கு நன்றி உங்களின் ஒரு பின்னூட்டமே என்னை இதை எழுத வைத்தது. நான் புரிந்து கொண்டவரை மதம் என்பது வாழ்வியல் நோக்கங்களைக் கூறுவதே பதிவில் கொடுத்திருக்கும் சுட்டியைப் படித்தீர்களா பெரியவர் வைதிக மதம் என்றும் கூறி இருக்கிறார் அப்படி என்றால் சடங்குகளும் சம்பிரதாயங்களுமே முன்னிலை பெறும் ஆதி மதத்தின் பல எச்சங்கள் பல இடங்களில் காணக் கிடைப்பதாகப் பெரியவர் கூறு கிறார் இவற்றில் சில கற்பனையாகவே தோன்று கிறது மதம் என்பது சம்பிரதாய சடங்குகளை மீறி அடுத்தவனிடம் நடக்கும் முறையையே மாற்றி வருவதே சங்கடம் தருவதுதத்துவம் சட்டம் சடங்கு சரித்திரம் இவை எல்லாவற்றின் கலவையாகவே மதம் எண்ணப்படுகிறதுஆகவே பெரியவரின் கூற்றும் வேதவாக்காகப் பார்க்கப்படுவதில் ஆச்சரியமில்லை. எல்லாப் பின்னூட்டங்களையும் வாசிக்க வேண்டுகிறேன்
ReplyDelete@ஸ்ரீராம்
வருகைக்கு நன்றி திரு காஸ்யபனின் கருத்தையும் படிக்க வேண்டுகிறேன் சகர புத்திரர்கள் குதிரையைத் தேடிப் பாதாளம் நோக்கிப் போனதாகவும்இந்தியாவின் மறு கோடியாக இருந்த இடமே கலிஃபோர்னியா என்று அழைக்கப்படும் இடமாகவும் இருக்கலாம் என்று கூறுவதைக் கற்பனை என்றே கூறுவேன் எனக்கு என் கருத்தை கூற எந்த taboo வும் இல்லை.நீங்கள் ஆராய்ச்சிகள் என்று எதைக் கூறு கிறீர்கள் அவரும் கேட்ட படித்த விஷயங்களை தன் கருத்துக்குச் சாதகமாக சொல்கிறார் இவை எத்தனை உண்மை என்று நான் கேட்டால் பெரியவரின் கூற்றை மறுப்பவன் என்றாகி விடும்
ReplyDeleteஆனாலும் சடங்கு சம்ப்ரதாயம் என்பவை இன்றும் எல்லா மதங்களிலும் பூஜை முறைகளில் கடைப்பிடிக்கப் படுகின்றன.இந்து பூஜை என்றால் ஆரத்தி, வேள்வி, போன்றவை. கிருஸ்துவ பூஜை என்றால் திருப்பலி போன்றவை. இஸ்லாம் முறை என்றால் தொழும் முறை. இவ்வாறு இப்படி சடங்குகள் செய்யவேண்டும் என்று எல்லா மதங்களிலும் ஒரு கோட்பாடு உண்டு. ஆனால் இது மட்டுமே மதத்தின் அடையாளம் ஆகாது. பெரியவர் வைதீக மதத்தைச் சார்ந்தவர். ஆகையால் அதையே இந்து மதம் என்று கூறுகிறார். "இந்து மதம்" என்பதே வேற்று மதத்தை சார்ந்தவர் உருவாக்கிய பெயர்.
ஆனால் எல்லா மதங்களும் வலியுறுத்துவது ஒரு கடவுள் அல்லது ஒரு பெரிய சக்தி என்பது மட்டுமே.
விளக்கங்களுக்கு நன்றி.
--
Jayakumar
Reg: california. இதை ஏன் கற்பனை வளம் என்று கூறுகிறீர்கள்? logical thinking அல்லது thinking out of the boxஆக இருக்கக் கூடாதா? மேலும் இதைப் பற்றி அவரே "வேடிக்கையாக ஒன்று" என்றுதான் குறிப்பிடிருக்கிறார்.
ReplyDeleteமற்றபடி அவர் குறிபிட்டுள்ள பல விஷயங்களை அந்த துறை வல்லுனர்களே வியந்துள்ளனர். கவிஞர் கண்ணதாசன் 'சேரமான் காதலி'(குலசேகர ஆழ்வாரைப் பற்றிய கதை) என்னும் சரித்திர கதையை தொடராக கல்கியில் எழுதிக்கொண்டிருந்த சமயம் மஹா பெரியவரை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றிருக்கிறார். அவரிடம் மஹா பெரியவர், பழனி சேர நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் நடுவில் அமைந்துள்ள இடம். அது சில காலம் சேர நாட்டோடும், சில காலம் சோழ நாட்டோடும் இணைந்திருக்கும். நீ எழுதும் கதை நடந்த காலத்தில் அது எந்த நாட்டோடு சேர்ந்திருந்தது என்று தெரியுமா? என்று கேட்டாராம்.
அதற்கு கண்ணதாசன்,"நான் அவ்வளவாக ஆராய்ச்சி செய்யவில்லை. பெரும்பாலும் நாங்கள் எல்லாம் சரித்திர கதைகள் எழுதும் பொழுது ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உண்மை 25% கற்பனை 75% என்று எழுதுவதுதான் பழக்கம்" என்றாராம். உடனே,மஹா பெரியவர், கடகடவென்று எந்தந்த காலத்தில் பழனி சோழ நாட்டை சார்ந்திருந்தது. எந்தந்த காலங்களில் சேர நாட்டை சார்ந்திருந்தது என்று விவரிக்க, கண்ணதாசன் வியந்து போனாராம்.
மஹா பெரியவர் சான்றில்லாமல் எதையும் தெரிவிக்க மாட்டார். அவருடைய கூற்றுகள் ஆராயப்படாமல் போனது துரத்ரிஷ்டமே!
ReplyDelete@ ஜேகே22384
/தத்துவம் சட்டம் சடங்கு சரித்திரம் இவை எல்லாவற்றின் கலவையாகவே மதம் எண்ணப்படுகிறது/ என்று கூறி இருக்கிறேன் இந்து மதம் என்பதே அயலவர் உருவாக்கிய பெயர் என்று பெரியவரே கூறி இருக்கிறார்/ஆனால் எல்லா மதங்களும் வலியுறுத்துவது ஒரு கடவுள் அல்லது ஒரு பெரிய சக்தி என்பது மட்டுமே/ ஆனால் இந்து மதத்தில் மட்டுமே பலகடவுள்கள் என்று சித்தரிக்கப்பட்டு அதன் தாத் பர்யமே அறிய முடியாதபடி வளர்த்து விட்டிருக்கிறார்கள் நான் எழுதிய நாம் படைத்த கடவுள்கள் படித்தீர்களா
அவ்வப்போது தோன்றுவதை எழுத்தில் கொண்டு வர முயன்றிருக்கிறேன் மீள் வருகைக்கு நன்றி சார்
பெரியவரின் கருத்துகளைச் சரி என்றோ தவறு என்றோ இல்லை கற்பனை என்றோ சொல்லும் அளவிற்கு எங்களுக்கு அதைப் பற்றிய விவரங்கள் இல்லை சார். இரண்டிற்குமே தகுந்த ஆதாரங்கள் தேவை.
ReplyDeleteஅறிவியல் கட்டுரைகளுமே ஒவ்வொருவரின் ஆராய்ச்சிக்குட்பட்டு மாறுபட்ட கருத்துகளை ஒவ்வொரு சமயமும் முன்வைக்கின்றன. எனவே இது அவரவர் நம்பிக்கைக்குட்பட்டது என்றே தோன்றுகின்றது.
@ பானுமதி வெங்கடேஸ்வரன்
ReplyDeletethinking out of the box என்பதைத்தான் கற்பனை வளம் என்றேன் நிறையவே அவுட் ஆஃப் த பாக்ஸ் எண்ணங்களே அவருடைய ஞானத்தையோ அறிவையோ எங்கும் நான் குறை கூற வில்லை வருகைக்கு நன்றி
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
நம்பிக்கைகளுக்கும் ஒரு காரணம் வேண்டும் சாகரர்கள் குதிரையைத் தேடி பாதாளம் செல்லத் தோண்ட இந்தியாவின் மறு கோடியில் இருக்கும் அமெரிக்க கலிஃபோர்னியாவில் குதிரையைக்கண்டனர் என்றும் அங்கு முனிவரால் சபிக்கப் பட்டு சாம்பல் ஆனார்கள் என்று கூறுவது நம்பமுடியவில்லை. கற்பனை என்றே தோன்றுகிறதுசரி ஏதாவது ஆராய்ச்சிகள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் வெறும் பெயர் விகாரங்களே சான்றாகாது வருகைக்கு நன்றி
ஆராய்ச்சி கட்டுரை , படித்தேன்.
ReplyDeleteநம்பிக்கைகள் பலவிதம்.
காஸ்யபன்
ReplyDeleteகூகிள்+ க்கு எழுதிய பின்னூட்டம்/இந்தியாவிற்கு நேர் கீழே அமெரிக்காவில் உள்ள Horse Island ,Ash Island இரண்டும் பகீரதப் பிரயத்தனத்தின் பொது உண்டானவை என்றும் பெரியவர் எழுதிய நினைவூ . பிரதமர்மொடி plastic surgeryஇந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று சர்வதேச விஞானிகள் மாநாட்டிலொரு பொடுபோட்டார்.சான்றாக" யானைமுகனை" சொன்னார் நாம் எல்லரும் கெட்டுக்கொண்டௌதானே இருந்தோம்---காஸ்யபண்.
ReplyDelete@ கோமதி அரசு
நம்பிக்கைகள் பலவிதம் / இது எந்தவிதம் என்றுபுரியவில்லை
ReplyDelete@ காஸ்யபன்
சிறப்பாகக் கருத்திட்டதற்கு நன்றி சார்
எல்லாமே கற்பனையா
ReplyDeleteஅப்பப்பா எவ்வளவு செய்திகள். அனைத்தும் நுணுக்கமாக. ஆழ்ந்து படித்தேன். பிரமிப்பாக இருந்தது. நன்றி ஐயா.
ReplyDelete
ReplyDelete@ஸ்ரீமலையப்பன்ஸ்ரீராம்
எல்லாமே கற்பனையா/அப்படிச் சொல்லவில்லையே வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
இத்தனை செய்திகள் இருப்பதே பதிவிட வைத்தது.வருகைக்கு நன்றி சார்
அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteசங்கராச்சாரியார் என்றாலே அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு ஆதரவானவர், அவர்களுக்கு குல குரு ஸ்தானத்தில் உள்ளவர் என்பதே பொதுவாகச் சொல்லப்படுகின்ற ஒரு கருத்து ஆகும். எனவே அவரைத் தெய்வமாக நினைக்கின்ற அந்த சமூக மக்கள் அவரது கருத்துகளை விமர்சனம் செய்வதும், மற்றவர் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதும் அரிது.
முதல் மனுஷி தோன்றிய இடம் ஆப்பிரிக்கா என்றார்கள்; அதுவும் இல்லை, சவுதி பக்கம் என்றும் சொல்கிறார்கள். ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் சுட்டிக் காட்டுவதைப் போன்று, மனிதனின் முதற் தோற்றம் நிகழ்ந்த இடம், குமரிக் கண்டமே என்றும் அறிஞர் பெருமக்கள் சொல்லுகிறார்கள். ஆராய்ச்சி முடிந்தபாடில்லை.
எனவே பெரியவர் சங்கராச்சாச்சாரியார் சொன்ன கருத்துக்களை காய்தல், உவத்தல் இன்றி ஆராய்ச்சி மனப்பான்மையில், ஆராய்ந்தால் மட்டுமே அவர் சொன்னது உண்மையா அல்லது கற்பனையா என்று தெரிய வரும். இவ்வாறு ஆராய்வது என்பது , அவர் சொன்ன கருத்துக்களுக்கு ஆராய்ச்சியாளர்தான் ஆதாரங்களைத் தேடிக் காட்ட வேண்டும்.
எனவே அவரது உரைகளை ‘தெய்வத்தின் குரல்’ என்று எண்ணுபவர்கள் மத்தியில் எத்தனை பேர் சோதிக்க ஒத்துக் கொள்வார்கள்? என்னைக் கேட்டால் இது ‘வேலியிலே போற ஓணானை எடுத்து காதிற்குள் விட்டுக் கொள்ளும்’ வேண்டாத வேலை. இறுதியில் குலத் துரோகி அல்லது பிராமண துவேஷி என்ற பட்டம் மட்டுமே மிஞ்சும்.
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
ஐயா வணக்கம் சங்கராச்சாரியாரின் கருத்துக்கள் பப்லிக் டொமெயினில்தான் இருக்கிறதுபல்வேறு கருத்துக்கள் உலவிவரும் வேளையில் மதிப்பிற்குரிய பெரியவரின் எழுத்துக்களையும் விருப்பு வெறுப்பு இன்றி அணுகினால்சில கருத்துக்கள் கற்பனை போல் தோன்றினாலும் சிலவை லாஜிக்கலாகவே இருக்கிறது கீழை நாடுகளில் தமிழர் அரசோச்சியது வரலாறு ஆக அங்கு திருப்பாவை திருவெம் பாவை விழாவாக அனுஷ்டிக்கப் பட்டு வருவதை ஆராய்ச்சி ஏதும் இல்லாமலேயே தெரிந்து கொள்ள முடியும் இதை அங்கு வசிக்கும் தமிழர்கள் வவுச் செய்யலாம் அவை தவறு என்று நிரூபிக்க ஆராய்ச்சியாளர்கள் முன் வருவார்களா. அது இல்லாதவரை அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பலருக்கும் இருக்கலாம் நாம் காய்தல் உவத்தல் இன்றி அணுகினால்போதும் என்றே தோன்று கிறது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா
பலரும் தொட அஞ்சும் தகவல்களை வெளியிட்டமைக்கு உங்களைப் பாராட்டுகிறேன் .பூமி தட்டையானது என நம்பிய காலத்தில் உருவாக்கிய கதை கடல் தோண்டிய கதை .உலக உருண்டையில் நெடுந் தூரம் தோண்டிக்கொண்டு செல்ல இயலாது .மானிடன் தோன்றிய இடம் கிழக்கு ஆப்பிரிக்கா என்பது உலக ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து ; இதற்கு மாறுபட்ட கருத்தை எந்த அறிவியல் ஆராய்ச்சிக்காரரும் சொல்லவில்லை .ஏனென்றால் அது பன்னெடுங் காலம் பற்பல அறிவியல் துறைகளைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான ஆய்வுகள்மூலம் நிலைநாட்டியது .
ReplyDeleteபெரியவர் நிறையத் தெரிந்தவர் என்பதில் ஐயமில்லை ; ஆனால் அவரது கருத்துகளை யெல்லாம் ஒப்புக்கொள்வதற்கில்லை . குறள் ஓதோம் என்று திருப்பாவையில் வருவதற்குத் திருக்குறளைப் படிக்கமாட்டோம் என்று பொருள் சொன்னவர் அவர் ; கோள் சொல்லமாட்டோம் என்பதுதான் சரியான அர்த்தம் . இது அந்த தெய்வத்துக்குத் தெரியாதா ? தமிழர் போற்றும் நூலை மட்டம் தட்டுவது அவர் நோக்கம் .
ஒரு திருத்தம் : திருப்பாவை 2 ஆம் பாட்டில் வருகின்ற சரியான தொடர் : தீக்குறளை சென்றோதோம் என்பது .தீமை தருகின்ற கோளை யாரிடமும் சென்று சொல்லமாட்டோம் என்பது பொருள் .
ReplyDelete
ReplyDelete@ சொ.ஞானசம்பந்தன்
ஐயா வணக்கம் என் வேண்டுகோளை ஏற்றதற்கு நன்றி குறள் ஓதோம் என்பதற்கு பெரியவர் சொன்னபொருள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. என் பதிவின் நோக்கமே எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் முறையில்தான் தெய்வத்தின் குரலிலிருந்து சில வரிகளை எழுதினேன் எனக்கு எங்கும் கண்மூடித்தனமாகச் செயல்படுவது காணக் கஷ்டமாக இருக்கிறது. மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை மீண்டும் நண்ரி ஐயா