முகநூலில் வெளியிட்டிருந்த என் உரையை இங்கே பதிவாக்குகிறேன் இதுவும் ஒரு வகையில் நினைவு மீட்டல்தானே கொடுக்கப்பட்ட லிங்கை சொடுக்கிப் படிக்கலாம்/ பார்க்கலாம்
speech
speech
மதுரை வலைப்
பதிவர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் காணொளி
முகநூலில் 2014ல் பகிர்ந்திருந்தது
இப்போதும் அதில் காணும் செய்திகள் relevant ஆக இருப்பதுபோல் தோன்றியதால்
இப்பதிவு
இதைப்படிக்க அல்லது பார்க்க முத்லில் face book ல் லாக் இன் செய்ய வேண்டி இருக் கும்
இதைப்படிக்க அல்லது பார்க்க முத்லில் face book ல் லாக் இன் செய்ய வேண்டி இருக் கும்
ஒரு தலைவரை போல மிக அழகாக பேசிகிறீர்கள் நல்ல குரல் வளம்
ReplyDeleteமிக்க நன்றி சார்
Deleteஅருமை.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிஸ்ரீ
Deleteமன்னிக்கவும் ஐயா!
ReplyDeleteலிங்கை சொடுக்கி பேஸ்புக்கில் போக முடியவில்லை,
The page you requested cannot be displayed at the moment. It may be temporarily unavailable, the link you clicked on may be broken or expired, or you may not have permission to view this page.
சிரமம் இருக்கக் கூடாதே முதலில் ஃபேஸ் புக்கில் லாக் இன் செய்யுங்கள்லாகவுட் ஆகாமல் இப்பதிவுக்கு வந்து சுட்டியைச்சொடுக்கினால் உரை பார்க்கலாம் படிக்கலாம்
Deleteஉங்களின் பேச்சு வீடியோ முழுமையாக அந்த லிங்கில் இல்லை பாதிதான் இருக்கிறது முடிந்தால் அந்த வீடியோவை முத்லில் உங்கள் கணணியில் டவுன் லோடு செய்து அதன் பின் இந்த பதிவில் அப்லோடு செய்யுங்கள்... இப்படி செய்வதால் பேஸ்புக் அக்கவுன்ட் இல்லாதவர்களும் அதை பார்க்க முடியும்
Deleteஉரை கணினியில் 100 mbக்கும் மேல் வருவதால் அப் லோட் செய்ய முடியவில்லை அதனால் யூ ட்யூபில் பதிவேற்றி இருக்கிறேன்
Deleteஃபேஸ்புக்கில் போக சிரமமா இருக்கு. ஆனால் ஏற்கெனவே கேட்டிருக்கேன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஃபேஸ்புக்கில் தேடவேண்டாம் முகநூலில் லாக் இன் செய்து பின் இப்பதிவுக்குவந்து சுட்டியைச் சொடுக்கினால் உரை பார்க்கலாம்/படிக்கலாம் நான் நீங்கள் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை பதிவில் படித்திருக்கலாம்
Deleteகுரல் வளம் அருமைப்பா
ReplyDeleteகுரல் வளம் மட்டும்தானா பேசு பொருள் பற்றிய கருத்து சொல்ல வில்லையே
ReplyDeleteஉங்கள் கனவுகள் மூலம் உங்களின் நல்ல எண்ணம் புரிகிறது...சட்டங்கள் மூலம் யாருடைய மனத்தை மாற்ற முடியாது மக்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்பதன் மூலம்தான் மாற்ற முடியும் ஆனால் இன்றைய தினத்தில் நல்லதை விதைக்க அப்படியே விதைத்தாலும் அதை அலட்சியப்படுத்தி விட்டு செல்லம் மனப்பான்மைதான் இருக்கிறது
Deleteநீங்கள் கண்ட கனவை ஒரு நல்ல தலைவன் கண்டு இருக்க வேண்டும்.... ஆனால் அப்படிப்பட்ட ஒரு தலைவரை கூட நம் மண்ணில் இப்போது பார்க்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும் எனக்கு தெரிந்த கடைசியாக இருந்த ஒரு நல்ல தேசிய தலைவர் வாஜ்பாய்தான் மட்டுமே.. அப்துல் கலாம் மற்றவர்களை கனவு காண சொல்லிவிட்டு தான் கண்ட கனவுகளை நிறைவேற்ற தன்னிடம் இருந்த முழுப்பவரையும் பயன்படுத்தாமல் சென்றுவிட்டார்...
எல்லோரும் கனவு காண்பதில்லை நினப்பதைச் சொல்லக் கூட விரும்புவதில்லை
Deleteஅப்போது கேட்டதில்லை.
ReplyDeleteஇன்று கேட்டேன். உங்கள் கருத்துகள் சிறப்பு. முழு உரையும் இல்லையே....
மதுரை பதிவர் திருவிழாவில் எனது உரை
Deleteஅன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமாயுள்ள உலகத் தமிழ் பதிவர் பெருமக்களே,முதற்கண் என் வணக்கம் முகந்தெரியா நட்புகளை முகந்தெரிந்து முகமன் கூறி வரவேற்றுக் களிக்கும் நல் உள்ளங்களே, இந்த இனிய வேளையில் ஒரு கனமான தலைப்பில் நான் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள்.ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான உள்ளங்களைச் சிந்திக்க வைக்க இது போன்ற சந்தர்ப்பம் அமையுமோ தெரியாது. அப்படியே அமைவதாய் இருந்தாலும் உங்களுடன் கருத்துக்களைப் பகிர நான் இருப்பேனோ தெரியாது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது சொல் வழக்கு, அதைத்தான் நான் செய்கிறேன்.
நண்பர்களே எனக்கு ஒரு கனவு உண்டு. “ பெரிய மார்ட்டின் லூதர் கிங் “ என்னும் நினைப்பு என்று நீங்கள் எண்ணலாம். ஏன் அவர் மட்டும்தான் கனவு காண முடியுமா.?அவர் அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்காகக் கனவு கண்டார். நான் நம் சமுதாய மககளுக்காகக் கனாக் காண்கிறேன்.
கனவுகள் பகற்கனவாய் , நிகழ முடியாததாய் இருக்கக் கூடாது.உள்ளத்தின் ஆதங்கங்கள் நலம் விளைக்கும் கனவாய் மலர்ந்து நிஜமாய் நிகழக்கூடாதா.? பல முறை நான் என் பதிவுகளில் மனம் திறந்து பகிர்ந்து கொண்ட விஷயங்கள்தான் இப்போது உங்கள் முன் கொட்டக் காத்திருக்கிறேன். என் பதிவுகளைத் தொடர்பவர்கள் சுமார் நூறு பேர் இருக்கலாம். அவர்களிலும் எழுத்தை ஒருபொழுது போக்காய் நினைப்பவர்கள் அறுபது சதவீதத்துக்கும் மேலிருக்கலாம். மீதி இருப்பவர்களில் பலரும் கருத்துக்களில் இருந்து மாறுபடலாம். ஏதோ ஒரு சிலர் கருத்துக்களுடன் ஒன்று பட்டாலும் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணி தூரப் போகலாம். ஆனால் நான் கூறும் செய்திகளில் உண்மை ஒளிவீசுகிறது என்பதில் கருத்து வேறுபாடு இருக்காது என்பது அவரவர் நன்னெஞ்சங்களுக்குத் தெரியும். இங்கு கூடியுள்ள அனைவருக்கும் தெரியும் , எல்லோரும் சொல்வதுதான் , வள்ளுவன் முதலே சொல்லி வருவதுதான். “பிறப்பொக்கும்” இதை உண்மையில் உணர்கிறோமா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மார்ட்டின் லூதர் கிங் I HAVE A DREAM என்று சொன்னான் ” I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the colour of their skin but by the content of their character.”
இங்கு நான் சொல்கிறேன் “ நான் ஒரு கனவு காண்கிறேன். நம்மிடையே ஒரு சமுதாயம் உருவாகும் கனவு காண்கிறேன், அதில் ஏற்ற தாழ்வு என்ற ஒன்று இல்லாதிருக்கக் காண்கிறேன் அரசியல் சட்டம் உறுதி அளிக்கும் சமத்துவம் உரிமை எல்லாம் எல்லோருக்கும் சென்றடையக் கனாக் காண்கிறேன் ஏனென்றால் இவை எல்லாம் ஏட்டளவிலேயே இருக்கிறது ஏட்டளவில் உறுதியளித்திருந்தாலும் மனசளவில் ஏற்றுக் கொள்ளப் பட வில்லையே.
Deleteநண்பர்களே பலருக்கும் தெரிந்திருக்கும் இக்குறைபாடுகள் நீங்க என்ன வழி..?
பிறப்பொக்கும் என்று நம்பும் நாம் . அவரவர் வாழ்க்கைமுறை அமைவது அவர்களது பூர்வ ஜென்ம பலன் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த சமுதாய நடைமுறைகளுக்கு நாமோ நம்முடைய முன்னோரோ காரணம் என்பது நிச்சயமாகச் சொல்ல முடியும்.அற்றைக் காலத்தில் குறிப்பிட்ட காரணங்களுக்காக பகுத்து விடப்பட்ட பணி முறைகள் யாரும் எதிர்பார்க்கா விதத்தில் ஆதிக்க முறைகளுக்கு வழி வகுத்து விட்டது. சரி எது தவறு எது என்று கேள்வி கேட்கும் திறன் தரக்கூடிய கல்வி பலருக்கும் மறுக்கப் பட்டது
இது அந்நியரின் ஆட்சிக் காலத்தில்தான் வேர் பிடித்தது என்று கூறி சமாதானம் அடைய முடியாது. காரணகர்த்தா யாராவது இருந்து போகட்டும். இன்றும் இந்நிலை நீடிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கும் இங்குமாக COSMETIC சரிகட்டல்கள் தென்படுகின்றன. ஒடுக்கப் பட்டோருக்கு ஒதுக்கீடுகள் என்று நடை முறையில் சில சட்டங்கள் காண்கிறோம் சட்டங்களால் கொண்டு வரக் கூடிய மாற்றங்கள் அல்ல.இவை. மன மாற்றங்கள் வர வேண்டும் அம்மாதிரியான மாற்றங்கள் நிகழ்த்தக் கூடிய சட்டங்கள் வேண்டும் எல்லோருக்கும் சம உரிமைகள் என்பது மனசளவில் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் அது நடக்கும் என்று நான் கனாக் காண்கிறேன். சாதி மத பேதங்களும் ஏழை பணக்காரன் எனும் வேறுபாடுகளும் வளர்ந்து வரும் சமுதாயத்திடம் இருக்காது என்று கனாக் காண்கிறேன். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் வளரும் பிஞ்சுகள் . எதிர்காலத் தலை முறைகள் மனம் பாதுகாக்கப் பட வேண்டும். அது கல்விக் கூடங்களில்தான் தொடங்க வேண்டும். எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு என்று இருந்தால் சிறார்களின் சிந்தைகளில் வேற்றுமை எண்ணம் உருவாகாது. எல்லோருக்கும் இலவசக் கல்வி, இலவசச் சீருடை, இலவச உணவு என்று கட்டாயப் படுத்தினால் மலரும் பிஞ்சு மனங்களில் வேற்றுமை எண்ணங்கள் உருவாகாது. ஒதுக்கீடு என்று கீழே உள்ளோரை மேலே கொண்டுவரும் முயற்சியில் மேலே இருப்பவர் மனம் மாற வாய்ப்பில்லை. ஏழை பணக்காரன் என்று கல்வியை வியாபாரம் ஆக்கும் முயற்சி தொடரும். கல்வி என்பது அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் வர்க்க பேதமற்ற , ஏற்ற தாழ்வில்லாத கல்வி முறையே நம் அடுத்த சந்ததியினரிடமாவது “பிறப்பொக்கும்’ என்னும் உண்மை நிலையை நிலை நிறுத்தும் என்று நான் கனாக் காண்கிறேன்
Deleteமுகம் தெரிந்திராத பதிவுலக நண்பர்களைக் கண்டோம் , சிரித்தோம், உண்டோம் மகிழ்ந்தோம் என்று மட்டுமல்லாமல் சீரிய சிந்தனைகளின் விளை நிலமாகவும் இப்பதிவர் பெருவிழா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் உந்தலே இவ்வுரைக்குக் காரணம். அனைவருக்கும் வணக்கம். நன்றி.
Deleteஅந்தக் காணொளி என்மகன் எடுத்ததுஇரு பாகங்களாக இருந்தது யூ ட்யூபில் பதிவேற்றினதுமுதல் பெரிய பாகத்தை மீதியை யும் இணைத்து பதிவேற்ற தெரியவில் கூடவே வரிகளையும் இணைத்திருந்ததால் அதை பெரிய குறையாக நினைக்க வில்லை உரை முழுவதையும் வாசித்தும்பார்த்தும் இருக்கிறீர்கள் வெரி ரேர் செயல் மிக்க நன்றி சார்
Deleteபல பதிவுகளில் பகிர்ந்து கொண்டசெய்திகள் சென்னை பதிவர் விழாவில் பேச வேண்டும் என்று எழுதியது சென்னை விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை அப்போது எழுதியது மதுரையில் உரையாக முடிந்தது
Delete@ வெங்கட் நாகராஜ் சில தொழில் நுட்பங்கள் தெரியாததால் முழு உரையும் கணினியில் ஏற்ற தெரியவில்லைஎனி வே பேசியது வரிகளாகவும் வந்திருக்கிறதே வருகைக்கு நன்றி சார்
Deleteமொபைல் மூலமாக உரையில் பாதி தான் கேட்க முடிந்தது. எழுத்து வடிவமாகவும் உங்கள் உரையை வாசித்தேன்.
ReplyDeleteஉரையின் முழு பகுதியும் கணினியில் அப்லோட் செய்ய முடியவில்லை வருகைக்கு நன்றி சார்
Deleteநீங்கள் யூடியுப்பில் பதிவி செய்திருந்தால் அந்த வீடியோவில் ஷேர் என்ற ஆப்சன் இருக்கும் அதை க்ளிக் செய்தால் ப்ளாக்கர் பேஸ்புக் டிவிட்டர் என்ர பட்டன் இருக்கும் அதில் ப்ளாக்கர் என்பதை க்ளிக் செய்தால் உடனே ப்ளாக்கர் போஸ்ட் பகுதி ஒப்பன் ஆகி அதில் இந்த வீடியோ லிங்க் இருக்கும் அதை கட் & பேஸ்ட் செய்து உங்கள் பதிவில் அதை பேஸ்ட் செய்தால் அந்த வீடியோ தெரியும்
Deleteயூ ட்யூபில் இரண்டாம் விடுபட்ட பகுதியை ஏற்றி விட்டேன் உங்களுக்கு மின் அஞ்சலும் அனுப்பி உள்ளேன் கைடன்ஸுக்கு மிக்கநன்றி
Deleteநேரில் கேட்டதை இன்றும் கேட்டேன் ஐயா.
ReplyDeleteமாநாட்டில் சப்தங்களுக்கு நடுவே அதிக டிஸ்டர்பன்ஸ் இருந்திருக்கும் உங்கள் அறையில்கணினி யோடு பேச்சையும் சேர்ந்து ரசிக்க இது ஒரு வாய்ப்பு
ReplyDeleteஉங்களின் கம்பீரமும், பேச்சாற்றலும் மிக அருமை ஐயா.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி சார்
ReplyDeleteஅன்று நேரடியாகக் கேட்டு மகிழ்தேன் எல்லோரும் கூடிக் களித்துக் கலைவதற்காக என வந்திருந்த வேளையில் தங்களின் ஆழமான உரை அன்றே கவனிக்கத்தக்கதாய் இருந்தது.மீண்டும் நினைவுறுத்தும் விதமாக பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteகூறப்பட்ட கருத்துகள் இன்றைக்கும் relevant ஆகத் தோன்றியதால் பதிவிட்டேன் வருகைக்கு நன்றிசார்
ReplyDeleteஅருமை. மீண்டும் மதுரைப் பதிவர் சந்திப்பு நிகழ்வுகள் மனதில் வலம் வருகின்றன
ReplyDeleteஅது என் முதல் வலைப்பதிவர் சந்திப்பில்நடந்தது மறக்க இயலாதது வருகைக்கு நன்றி சார்
ReplyDelete