Wednesday, October 31, 2018

திருமணம் சார்ந்த சில எண்ணங்களின் தொகுப்பு


                             திருமணம்  சில எண்ணங்களின் தொகுப்பு
                             ------------------------------------------------------------------

திருமணம்   சார்ந்த சிந்தனைகளில்  இருந்துஇன்னும் விடுபடவில்லை  அதுபற்றிய ஒரு விஷயம் என்னை ஆச்சரியத்துடன் சிந்திக்கவும் வைக்கும். இப்பூவுலகில் கோடானுகோடி மக்கள் ஆண் பெண் என்று இருக்கிறார்கள். உயரமானவர்கள், குட்டையானவர்கள்,கட்டையானவர்கள், ஒல்லியானவர்கள், சிவந்தவர்கள், கருத்தவர்கள், மாநிறத்தவர் என்று பல இடங்களில் பலவிதமாக வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருக்கும் ஆணுக்குப் பெண் என்று ஜோடிகள் இருக்கின்றன. 90% மேலானவர்கள் திருமணம் செய்து கொண்டு அவரவர் வம்ச விருத்தியில் ஈடுபடுகின்றனர். இதில் ஆச்சரியப் படுவதற்கும் சிந்திப்பதற்கும் என்ன இருக்கிறது என்றுதான் தோன்றும். இந்த ஜோடி சேர்வதுதான் என்னை ஆச்சரியப் படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் அவருடைய ஜோடி பற்றிய எண்ணங்கள் நிறைவேறுகிறதா.?சமூகத்தில் எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கப் பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு மூன்றாம் மனிதனாய் இருந்து இந்த ஜோடிகளைப் பார்க்கும்போது ,அவரவர் எதிர்பார்ப்புகள்தான் என்ன, அவை எல்லாம் ஈடேறி விடுகிறதா, என்றெல்லாம் சமயங்களில் நான் நினைப்பதுண்டு.

எனக்கு ஒரு உறவினர். நன்றாகப் படித்தவர். இப்போது சினிமாக்களில் வரும் ஹீரோக்களை விட லட்சணமாகவும் அழகாகவும் இருப்பார். அவருக்குத் திருமணம் செய்வது குறித்து முயற்சிகள் பல எடுக்கப் பட்டன. அவர் ஒரு விஷயத்தில் தீர்மானமாய் இருந்தார். அவருடைய கனவுக்கன்னியை முடிவாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கே என்றார். அவர் குடும்பத்தில் இதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை. பெரியவர்கள் எல்லாப் பொருத்தங்களும் பார்த்து பெண்ணைக் காண்பிப்பார்கள். இவர் முறைப்படி பெண் காணச் செல்வார். பலதடவை ,பல பெண்களைப் பார்த்தும் எதுவும் தோதாக அமையவில்லை. இவர் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கப் போகும்போது, பெண்ணுக்கு மதிப்பெண் போடுவார். குறைந்தது 60 விழுக்காடாவது பெண் எடுக்க வேண்டும் என்பதே இவரது கணிப்பு. உயரம் நிறம், படிப்பு, அழகு என்று பல பிரிவுகளுக்கும் மதிப் பெண் போடுவார். சாதாரணத் தேர்வுக்கான மதிப்பெண்கூட அவரிடமிருந்து பெண்களால் வாங்க முடியவில்லை. அநேகமாக எல்லோரும் சோர்ந்து போனார்கள். இவருக்கும் தன் கட் ஆஃப் மார்க் கூடுதலோ என்று ஐயம் வந்து விட்டது. எட்டு பத்து பெண்களை பார்த்தபிறகு பாஸ் மார்க் வாங்கும் பெண்ணாவது கிடைக்குமா என்று
எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கும்போது, ஒரு பெண்ணைப் பார்த்து இவர் சம்மதம் சொல்லி விட்டார். இவ்வளவு தேர்வுகளுக்குப் பிறகு வந்த பெண்ணை பார்த்தபோது பலரும் ஆச்சரியப் பட்டனர். தேர்வான பெண் மிகச் சாதாரணமாக இருந்தார். சராசரிக்கும் மேலாக அந்தப் பெண்ணிடம் இருந்த ஒரே குவாலிஃபிகேஷன்  அவர் நன்றாகப் பாடுவார்.என்பதுதான். இவருக்கு இவர் என்பது யாருக்குத் தெரியும்.?

இன்னொரு நண்பர் வீட்டில் பெண் பார்த்து அவர் வீட்டுக்கு மருமகளாய் வந்தவர் ஒல்லியாக, கருப்பாக, முன்பல் துருத்திக் கொண்டு எந்த அழகும் இல்லாமல் இருந்தார். கல்யாணப் பையனிடம் என்ன இப்படி என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எல்லோர் வாயையும் அடைத்து விட்டது. அவர் சொன்னார், எனக்குப் பிடிததது , மணம் செய்து கொண்டேன் .அவ்வளவுதான்.


ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. YOU CAN NOT MARRY ANOTHER MAN’S WIFE.”  உலகில் இருக்கும் அத்தனை மனிதனுக்கும் அவனுக்கென்று ஒரு ஜோடி இருக்கிறது. அவனுக்கென்று ஒரு இல்லற வாழ்வு இருக்கிறது. படிப்பும் பொருளும் அழகும் மட்டுமே ஜோடிகளைத் தீர்மானிப்பதில்லை. இவையெல்லாம் அதிகமாகப் பேசப் பட்டாலும் எல்லோர்க்கும் எல்லாம் அமைவது இல்லை என்று சொல்வது கூடத் தவறாகும். சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது பலருக்கும் தவறாகத் தோன்றலாம். அந்தந்த வயதின் தேவைகள் மற்ற எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடலாம். மேலும் அழகு என்பதற்கு எந்த Definition  -ம் கிடையாது. BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER  இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் விடை கிடைக்காது என்று தெரிந்துதான் “ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று “ என்று அறிய முடியாக் கடவுளிடம் பாரத்தை (பழியை ?) போடுகிறோமோ.?          
   .  .            .

Sunday, October 28, 2018

மழை விட்டும் தூவானம் ............



                                        மழை விட்டும் தூவானம் ...........
                                       -----------------------------------------


சில நாட்களுக்கு முன் ஒரு பதிவு எழுதி இருந்தேன். தலைப்பு “கடவுள் என்பது அறிவா உணர்வா”( பதிவைப் படிக்க கடவுள் என்பது அறிவா இடத்தைச் சுட்டவும்அப்பதிவுக்கு பல விதமான கருத்துக்கள் தாங்கிய பின்னூட்டங்கள் வந்தன நான்  ஒரு முறை  சென்னை சென்றிருந்தபோது சுப்புத்தாத்தா அவர்களை அவர் வீட்டில் சந்தித்தேன். எங்கள் பேச்சின் ஊடே இந்தப் பதிவு பற்றியும் விவாதங்கள் நடந்தது. எனக்கென்னவோ இந்தப் பதிவு என்னைப் பற்றிய ஒரு தவறான கருத்தை அவர் மனதில் விதைத்து விட்டதோ என்று தோன்றியது. அவருக்கு நான் நாத்திக வாதம் பேசுகிறேன் என்று தோன்றியதோ என்னவோ. நான் திரும்பி பெங்களூரு போகும்போதும் போய்ச் சேர்ந்ததும் இது பற்றி நன்கு சிந்திக்கச் சொல்லி இருந்தார். அதாவது அந்தப் பதிவை மீண்டும் அசைபோட்டுப்பார்க்கச் சொல்லி இருந்தார். நான் ஆத்திகனா நாத்திகனா என்பதல்ல வாதம். என் எழுத்துக்கள் சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லையோ என்பதே என் சந்தேகம்.என் பதிவு எளிய தமிழில் எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் அனைவரும் புரிந்து கொள்ளும்படி இருந்தது என்றே
எண்ணினேன் 
Any belief sustained over a fairly long period of one's life when integrated into one's intellect, is known as faith.சுப்புத்தாத்தா சொல்லி இருந்தார்இந்த நம்பிக்கைகள் எந்த அளவுக்கு அறிவோடு ஒத்துப்போகிறது என்பதே கேள்விக்குறி அறிவுக்கும் உணர்வுக்கும் மோதல் ஏற்பட்டால் அறிவு தோற்று உணர்வே வெற்றி பெரும் என்பதும் வாழ்வில் கண்கூடு. .  

 அறிவு நிறையக் கேள்விகள் கேட்கிறதுஉணர்வு நம்பினால் நலம் பயக்கும் என்கிறது.அறிந்ததும் உணர்ந்ததும் எழுதப் பட்டது. எல்லோருக்கும் உடன் பாடு இருக்கும் என்று தோன்றவில்லை. உண்ர்வும் அறிவும் ஒன்றா வேறு வேறா என்னும் அடிப்படைக் கேள்விக்கே வித்திட்டது.இனி எழுதுவதைக் கேள்விபதிலாய் எழுதினால் ஒரு சமயம் பலன் விளையலாம்.

 கே;-பதிவின் நொக்கம் எது ?
பதில் :- கடவுள் பற்றிப் பேசப்படுவதை சரியாய்ப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே
கே:- சரி கடவுள் பற்றி புரிய வைக்க முடிந்ததா?
பதில்:- நானே புரிந்து கொண்டால்தானே புரிய வைக்க முடியும். கடவுள் என்பதே ஒரு concept. என்பவருக்கு இந்த கேள்வி தேவையில்லை! கடவுள் என்பது கருத்தியல்! கருத்து உங்கள் நினப்பு ! இவை மூளையின் நடவடிக்கை ! function of brain ! a few micro miilli of protein,nuron,electric charge etc ! pure matter ! matter is primary ! பொருள் முதல் வாதம் ! பொருள் இல்லையேல் எதுவும் இல்லை ! கடவுள் உண்டு,இல்லை என்று நினைப்பதற்கு மனிதன் வேண்டுமே ! அறிவு உணர்வு என்பதெல்லாம் அதற்குப் பின்தானே என்றது ஒரு பின்னூட்டம் ஆக முதலில் கடவுள் பற்றி நான் நினைப்பதையும் கூறிவிட வேண்டும்.
கே:- சரி கடவுள் என்பது யார் அல்லது என்ன.?
பதில்:- தெரியாது
கே:- கடவுள் என்பவர் இருக்கிறாரா?
பதில்:- தெரியாது
கே:- இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாதபோது அது பற்றி எழுதியோ விவாதித்தோ என்ன கிடைக்கப் போகிறது.?
பதில் பெரும்பாலானோர்கள் புரிந்து கொள்வதில் புரிதல் சரி இல்லை என்று தோன்றியதால் வந்த விளைவே இப்பதிவு.
மனதும் அறிவும் உணர்வும் புத்தியும்
வினவிடும் எவர்க்கும் வந்திடும் தொல்லையே
அனைத்தும் விடுத்து அகத்துள் நிறைந்து
வினைப்பயன் அறுக்கும் வழியினைத் தெரிந்து
சொல்லும் செயலும் எல்லாம் அறுத்து
சும்மா இருப்பதே சுகமிங் கெனக்கு
என்றொரு பின்னூட்டமும் இருந்தது! எனக்கு இந்த வினைப்பயன் போன்றசொற்றொடர்கள் தெரியாதஒன்றை தெரிந்தமாதிரிக் காட்டும் உபாயமே என்று தோன்றியது.
கே.:- இன்னும் சற்று விளக்கமாகவே கூற முயற்சி செய்யேன்
பதில்:-நான் சில நாட்களுக்கு முன் கீதையின் 18 அத்தியாயங்களையும் தமிழ்ப் பதவுரையாக வெளியிட்டேன்.ஒரு தலைப்பு பற்றிக் கருத்து கூறும் முன் அது பற்றிய ஓரளவாவது working knowledge ஆவது இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் நான். பதவுரைகளில் என் கருத்து என்று ஏதும் எழுதவில்லை. ஆனால் பதிவுகளை முடித்தபின் என் கருத்துக்கள் சிலவற்றை வெளியிட்டேன். கீதை பெரும்பாலும் ஆத்மா என்றும் அது பற்றிய புரிதலை ஞானம் என்றும் கூறுகிறது. அது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பகரப் பட்டதாக நம்ப்பப்படுவதால் அதற்கு கூடுதல் sanctityகொடுக்கப் பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டவை எல்லாம் ஒரு CONCEPTஐ தழுவியே இருந்தது. உயிர் பற்றியும் ஆத்மா பற்றியும் நிறையவே சொல்கிறது. அத்தனையும் ஊர்ஜிதப்படுத்தப்படாத கூற்றுகளே. “இருண்ட அறையில் . ஒரு அமாவாசை இரவில் இல்லாத ஒரு கறுப்புப் பூனையைத் தேடுவதுபோல் எனக்குப் பட்டது. நீ யார் என்னும் கேள்விக்கு நான் இன்னாருக்குப்பிறந்தவன் பெயர் இன்னது என்றுதான் கூறுகிறோம் கூறமுடியும். அதை விட்டு நீ நீயல்ல உன் ஆத்மா அது அழியாதது என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே பயமுறுத்தி வேண்டாத நம்பிக்கைகளை விளைத்து விட்டிருக்கின்றனர்.ஆத்மா பிறப்பது மில்லை இறப்பதுமில்லை என்றெல்லாம் கூறுகிறவர்கள் அதை எப்பொழுதாவது உணர்ந்து இருக்கிறார்களா?உடலுக்கு உபாதை என்று வந்து விட்டால் அதனால் ஆத்மாவுக்கு பாதிப்பிலை என்று சமாதானப்படுத்தி ஒதுக்க முடிகிறதாஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது.ஒரு சிறுவன் ஒரு வண்ணத்துப் பூச்சியைப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தானாம் அங்கே வந்த ஒரு பெரியவர் ‘வண்ணத்துப் பூச்சியைத் தொந்தரவு செய்யாதே .உன் அடுத்தபிறவியில் நீ வண்ணத்துப் பூச்சியாகவும் இந்தப் பூச்சி நீயாகவும் மாறி அதன் கையால் நீ அவதிப் படுவாய் ’ என்றாராம். அதற்கு அச்சிறுவன் ‘உங்களுக்குத் தெரியவில்லை; போனபிறவியில் நான் வண்ணத்துப் பூச்சியாகவும் இது நானாகவும் இருந்திருக வேண்டும். அதனால்தான் இப்போது இது என் கையில் என்றானாம் joke apart நீ நீயல்ல என்று சொல்வது அபத்தமாகப்படுகிறது.
கே: - அப்போது இந்தக் கதைகள் எல்லாம் பொய்யா?
பதில் :- பொய் என்று சொல்வதைவிட புனைவு என்று சொல்லலாம். இம்மாதிரிப் புனைவுகளால் வாழும் வரை ஒருவனை நல்லவனாக இருக்கக் கூறப்பயன்படும் அச்சுறுத்தல்களே இவை என்று தோன்றுகிறது.
கே: -இவற்றுக்கும் உன் பதிவுக்கும் என்ன சம்பந்தம். ?
பதில்:-இந்த மாதிரியான ஆதார எண்ணங்களைக் கொண்டே நான்சொல்ல வந்ததைச் சொல்லும் யுக்தி அது.
கே:- சொல்ல முடிந்ததா?
பதில் :- சொல்ல முடிந்ததா என்று கேட்பதைவிட இலக்கு நோக்கிச் சென்றதா என்று கேட்டிருக்கவேண்டும் நான் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் தேடல் என்னும் பதத்தை உபயோகிக்கக் காண்கிறேன் தேடும் பொருளுக்கோ விஷயத்துக்கோ ஏதாவது உருவகம் இருக்கிறதா?வெறுமே abstract ஆகத் தேடுவது பல நேரங்களில் விளங்குவதில்லை. எனக்கு நாம் தேடுவது நம்முள் இருப்பதைக் கண்டறியவும் வெளிக் கொணரவும் இருக்க வேண்டுமே தவிர இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது போல் இருக்கக் கூடாது.என் பதிவில் தேடலாக என் கேள்விகளும் என்னிலிருந்தே வந்த பதில்களும் எழுதி இருந்தேன். அனைவரையும் நேசிக்கவேண்டுவதே தேடலின் ஆதாரம் என்று என் பாணியில் முடித்திருந்தேன்
மற்றபடி நான் ஆத்திகனா நாத்திகனா இல்லை ஒரு bundle of contradictions ஆ என்பதை அவரவர் யூகத்துக்கும் கணிப்புக்கும் விட்டு விடுகிறேன்                 


Thursday, October 25, 2018

பேரன் திருமணம்(தொடர்ச்சி)



                                 பேரன்  திருமணம்  (தொடர்ச்சி )
                                 -------------------------------------------------
மணமக்கள்
வீட்டின் முகப்பு

 இம்மாதிரி  திருமணங்களில் சம்பிரதயங்களை விட்டுக் கொடுக்கும்   மனப்பான்மை வேண்டும்  என் திருமணத்தில் எனக்கு எந்த சம்பிரதாய விருப்பும் இருக்கவில்லை ஓரளவு கேரள வழக்கம் கடை பிடிக்கப்பட்டது  எங்கள் மகன்கள் கல்யாணம்அக்னி சாட்சியுடன் தாலி கட்டல் நடந்தது என் பேரனின் திருமணத்தில்   இரு வீட்டாரும்பேசியபடி  இரு முறைகளும்  கடை பிடிக்கப்பட்டன  திருமணத்துக்குப் போகும் முன் பெரியவர்களிடம்  தட்சிணை  கொடுத்து ஆசிர்வாதம்வாங்க வேண்டும்

தாத்தா  பாட்டியிடம்  ஆசி பெறல் 

சித்தப்பாவின்  அணைப்பில் 



 பிள்ளையை வரவேற்க  பெண் வீட்டார் தாலபொலி வுடன் வரவேற்பு (காசியாத்திரை போல்) 
 காணொளி                 


காணொளி 



 காலையில்பெண்வீட்டார் கௌரி பூஜை  மற்றும்  தாலிகட்டும் முன்   திரை யிட்டுசில சடங்குகளுக்குப் பின்  தாலி கட்டல்  என்றுகடை பிடிக்கப்பட்டது  அவர்கள் சப்தபதி யுடன்  அருந்ததி பார்க்க வேண்டும்  என்று விரும்பினர்   கடைசியில் பெண்ணின் தந்தை பாணிக்கிரணமும் செய்ய இனிதாகத் திருமணம் நடந்தது

 இப்போதெல்லாம் பெண்கிடைப்பதுகஷ்டமாக இருப்பது ஒன்று ஜாதகப் பொருத்தம்மற்றும் சில விஷ்யங்களில் மிக கண்டிப்பாய் இருப்பது போன்றவை தான் என்று நினைக்கிறேன்  மேலும்   ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் என்னும் மனப் பான்மை இன்னும்  போகவில்லை  என்றும்நினக்கிறேன்
 திருமணங்களில்தான் பல உறவுகளை  சந்திக்க முடிகிறது நான் திருச்சியில் இருந்தபோது சிறுவர் சிறுமிகளாக இருந்தவர் என்னைப்பார்த்து அங்கிள் சுகமா என்று கேட்டது  மகிழ்ச்சி தந்தது 

தங்கையுடன்   ரிலாக்சாக 

என் பெரிய அண்ணாவுடன் 
          


அத்தைகளுடன் 


18ம் தேதி மாலையில் 


மாமா குடும்பத்துடன்  
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்  18 ம் தேதி மாலை 
நண்பர்கள் குழாம் 
எங்கள் குடும்பம் 
பாலும் பழமும்

திருமணத்துக்கு வருகை புரிந்தவர்களில் பதிவுலகில் இருந்து வந்திருந்த பானுமதி குறிப்பிடத்தக்கவர் அவரே எனக்கு அடுத்த பதிவு எழுத உத்தி தந்தவர்





Monday, October 22, 2018

பேரனின் திருமணம்


பேரனின்   திருமணம்
----------------------------------




சும்மாவா   சொல்லிச் சென்றார்கள் நம் முன்னோர் வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம்செய்துபார்  என்று  இரண்டுமே மன உளைச்சல் முத்லில் தருபவை என்மூத்தமகனின்  மகனுக்கு  19ம் தேதி திருமணம்   இனிதே நடந்தது பதிவுலக நண்பர்களூக்கு  தெரிந்ததே

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
ஆனால் எந்தப் பொருத்தமும் பார்க்காமல் மனப் பொருத்தமொன்றே போதும் என்று கருதி  பெற்றோர்களுக்கும்  யாருக்கு எந்த கவலையும் கொடுக்காமல் என்பேரன் அவன் இஷ்டப்பட்ட  பெண்ணை மணக்க  அனுமதிகேட்டான் (அந்த அளவில் அனுமதியாவதுகேட்டானே என்னும்  திருப்தி எங்களுக்கு பெண்ணை வீட்டுக்கு கூட்டி வந்து அறிமுகம் செய்து வைத்தான்  எங்களுக்குத்திருப்தி பெண் IIM  BANGALORE ல் படித்த எம் பி ஏ ப்ட்டதாரி  யு பி எஸ்  சி தேர்வில் பாசாகி இருக்கிறாள்  நேர் முகத்தேர்வு  நடக்க வேண்டும் பெண்ணைஎங்களுக்குப் பிடித்திருந்தது இப்போதெல்லாம் திருமணத்திற்கு  பெண்கிடைப்பதே க‌ஷ்டமாயிருக்கிறது என்று வலையில் படித்த நினைவு  பெற்றோருக்கு எந்தகஷ்டமும் கொடுக்காமல் தனக்குப் ப்;டித்த  பெண்ணைபேரன் தேர்வு செய்தது மகிழ்ச்சியே
 இந்தகல்யாணம்  இன்னும்  சிறப்பாய் இருந்தது நானும்  என் மனைவியும்  வேறுவேறு தாய் மொழியினர்  பேரன் தேர்ந்தெடுத்டபெண்ணும் தமிழ் மலையாளம்இல்லாமல் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவள்  எங்கள் வீடு ஒரு மினி  பாரதவிலாசாக மாறிவருகிறது
 இந்தத் திருமணத்தால் பல உறவுகளையும் நட்புகளையும்சந்திக்கமுடிந்தது  திருமணமும்   இருவழி சம்பிரதாயத்துடன்  நடந்தது திருமணத்துக்கு மு ந்தினம் அதாவது 18ம் டேடி மாலை  சங்கீத் என்னும் நிகழ்ச்சி  அது என்னவோ சங்கீத் மாதிரி தெரியலை என்பேர  சொன்னது போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்  பத்திரிகையில் அதுபற்றி குறிப்பிடவில்லை மிகவு நெருங்கிய நட்புகளையும்   இளைய தலைமுறை  உறவுக்சளுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டது எல்லாப் பெண்மணிகளுக்கும்மெஹ்ந்தி போடப்பட்டது  ஒரு வருக்கு இருகைகளிலும் இட ரூ350  என்றார் என்பேரனின்  மனைவி யாகவர இருந்தவள் கைகளின் மெஹ்ந்தியில் அவன் பெயர் இடப்பட்டிருந்ததுஎன்பேத்தி நடனமாடினாள்  இன்னும்சிலருமாடினர்கள்   பேரனி  நண்பர்கள்  சரியான குத்தாட்ட மிட்டு ஆடினார்கள் கடைசியாக அனைவரும்சேர்ந்து நடனம் என்னும் பெயரில் அவரவர் விருப்பப்படி  ஆடினார்கள்  என்கால்கள் சரியாக இருந்திருந்தால் நானும் ஆடியிருக்கலாம்          

  மறுநாள் திருமண வைபவம்  ப்திவும் தொடரும்     
காணொளியில்  என்பேத்தியின்  நடனம் அதை மூன்றுபகுதிகளாகத்தான் பதிவிட முடிந்தது நீளம் காரணமாக  

 









Tuesday, October 16, 2018

உங்கள் வயதென்ன



                                          உங்கள் வயதென்ன
                                          -------------------------------

வயதாவது பற்றி  யோசித்திருக்கிறீர்களா? வயதாவதை நாம் விரும்புவது நாம் குழந்தைகளாக இருந்தபோது தான்  பத்து வயதுக்குட்பட்டவரிடம் வயதைக் கேளுங்கள். பளிச்சென்று பதில் வரும் நாலரை. ஆறரை ஏழரை என்றெல்லாம் வரும் அடுத்தவயதுக்குத் தாவும் அவசரம் அந்தப் பிராயத்தில்தான் இருக்கும் பதினம வயதுகளில் வயதைக் கூட்டித்தான் சொல்வோம் குறைக்கமாட்டொம் பதினாறு பதினேழு வயதிலேயே  நாம் முதிர்ந்தவர்களாக உணர்வோம் (நான் வளர்ந்து விட்டேன் என்னையும் கணக்கில் சேர்க்க வேண்டும்) 21 வயது ஆகிவிட்டால் எனக்கும் எல்லாம் தெரியும்  என்னும் நினைப்பும் கூடவே வரும் முப்பதுகளில் ஏதோ கனவு காண்பது போல்  உணர்வோம்  நாற்பதுக்கு நாட்களைத் தள்ளுவோம் சந்தேகங்கள் கூடவே வரும்  அப்படி இப்படி என்று ஐம்பதை அடைகிறோம் அறுப்துக்கு வந்து சேருகிறோம்  வந்தவேகம் எழுபதில் புலப்படும்  எண்பதுகளில் எல்லாவற்றிலும் ஒரு சுழற்சி இருக்கும் தொண்ணூறுகளில்  எல்லாமே இப்போது நடந்தது போல் இருக்கும் வந்து போன 1980 ல் இது அப்படி அது இப்படி என்றே எண்ணம் தோன்றும் .  நூறு ஆயிற்றென்றால்  மீண்டும் வயது என்ன என்று  சொல்லும்போது நூறரை நூற்றி ஒன்றரை என்று ஆகும்
என்றும் இளமையாய் இருப்பது எப்படி.? இந்த எண்களைத் தூக்கிக் கடாசுங்கள்.நல்ல நட்புகளை நாடுங்கள். எதையும் கற்றுக்கொள்ளும் முனைப்போடு இருங்கள் சோம்பிப் போகாதீர்கள் எதையாவது செய்துகொண்டிருங்கள் ஆங்கிலத்தில் An idle mind is a devil’s den என்பார்கள் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவியுங்கள் கண்ணிர்தரும் நேரங்களையும் எதிர் நோக்குங்கள்  இதம் தரும் சூழ்நிலையை உருவாக்குங்கள் உடல் நலம் பேணுங்கள், மனம் விரும்பும் இடங்களுக்குச்சென்று வாருங்கள் எந்தக் குற்ற உணர்வும் வேண்டாம் அன்பைப் பகிருங்கள். நினைவிருக்கட்டும்  வாழ்வு என்பது நாம் விடும் மூச்சுக்காற்றில் இல்லை நாம் அனுபவிப்பதில்தான் இருக்கிறது.
அவ்வப்போது நான் எழுதிய முதுமை என்பது ஒரு வரம் என்னும் பதிவைப்படியுங்கள்.தெளிவும் கிடைக்கும்

(வீட்டில் விசேஷம்   சில நாட்கள் பதிவுலகுக்கு ஓய்வு கொடுக்க எண்ணம் ) 
விடுப்புக்கு முன் 
boy friend ---- I love you 
girl friend ----- me too
boy friend -----ஐயோ...!

Sunday, October 14, 2018

கேள்வியும் நானே பதிலும் நானே



                                                              கேள்வியும் நானே பதிலும்  நானே                                                                                          -------------------------------------------------------
என்னவெல்லாமோ எழுதுகிறேன் ஆனால் பெரும்பாலும்  பல செய்திகளும் சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே போகின்றன  நன்  எழுதுவது எல்லாமேஏதோ சிந்தனைகளின்  அடிப்படையிலேயே நன் எந்த ஸ்க்ரிப்சர்களையும்  துணைக்கழைக்க வில்லை  என் அனுபவத்தில் தோன்றும்  எண்ணங்களின் வெளிப்பாடே   
இந்தப்பதிவை கேள்வி பதிலாக இடுகிறேன் இதையே சிந்தனைகளின் பரிணாமம் எனலாமா
 
கேள்வி:- சிந்தனைப் பரிணாமங்கள் என்று நீ சொல்ல வருவதுதான் என்ன.?
பதில்:-   உலகில் எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன.எல்லா நிகழ்வுகளுக்குப் பின்னாலும் ஏதோ காரணம் இருக்கும். பெரும்பாலும் அந்தக் காரணங்களின் பின் புலத்தில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, சிலரதோ பலரதோ சிந்தனைகள் இருக்கும். இந்த சிந்தனைகளின் காரணங்களைக் கொஞ்சம் விவாதிக்கலாம் என்றுதான் சொல்ல வந்தேன்..

கேள்வி:- நிகழ்வுகளுக்குக் காரணம் சிந்தனை. சிந்தனைகளுக்குக் காரணம் என்று தொடர்ந்து குழப்ப மாட்டாயே..?

பதில்:-   சில புரியாத விஷயங்கள் குழப்பம் போலத் தோன்றும். ஆனால் குழப்பும் எண்ணம் நிச்சயம் எனக்கில்லை.

கேள்வி:- சரி, எந்த நிகழ்வுக்கு எந்த சிந்தனை என்று குழப்பப் போகிறாய், மன்னிக்கவும் விளக்கப் போகிறாய்.?
பதில்::-   பல காலமாக என் மனசில் இருந்து வரும் ,நம்முள் இருக்கும் ஏற்ற தாழ்வுகள், நிகழ்பவை என்றும், அதற்குக் காரணம் காணும் முயற்சியே இது என்றும் சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி:- ஏற்ற தாழ்வென்று எதைச் சொல்கிறாய்.?

பதில்:-   பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் ஒரு போலத்தான். ஆனால் வளரும்போது, வளர்க்கப் படும்போது ஏற்ற தாழ்வுகள் பல ரூபங்களில் தென்படுகின்றன.

கேள்வி:- பிறக்கும்போதே குழந்தைகள் ஏற்ற தாழ்வுடன் தானே பிறக்கின்றன, வசதியான குடும்பம், வசதி இல்லாத குடும்பம், படித்த குடும்பம், படிக்காத குடும்பம் என்ற பாகுபாடு இருக்கத்தானே செய்கிறது.இதற்கான காரணங்களை ஆராயப் போய், விடை காண முடியாமல் அவரவர் விதி, பூர்வ ஜென்மபலன் என்று எதையாவது சொல்லித் தப்பிக்காதே. இதற்கும் மேற்பட்ட காரணங்களை கண்டு பிடித்துச் சொல்லப் போகிறாயா.?

பதில்:-  விடை காண முடியாத கேள்விகள் என்று கூறித் தப்பித்துக் கொண்டால், இதற்குத் தீர்வு இருக்க முடியாதே. இத்தனை வருட வாழ்விலும்,அனுபவத்திலும் நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்ல முயற்சிக்கிறேன். பிறக்கும்போது இல்லாத சமத்துவத்தை வளரும்போது ஏற்படுத்திக் கொடுத்தால் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் போகலாம்.

கேள்வி:- அது நடக்கக்கூடிய காரியமா.?

பதில்:-   அதைத்தான் சிந்தனைகளின் பரிணாமத்தை அறிந்து கொள்வதன் மூலம் தீர்க்கலாம் என்கிறேன்.

கேள்வி:- சரி, காரண காரியங்கள் என்று எதைச் சொல்கிறாய்.?

பதில்:-   இதற்கு நாம் கொஞ்சம் பழைய காலங்களில் சஞ்சரிக்க வேண்டும். மனிதன் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக மாறிய காலத்துக்குச் செல்வோம். உலகின் பல பாகங்களில் மனிதனின் தோற்றம் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். நம் புரிதலுக்கு அது தேவை இல்லாதது. மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபட்டு, குழுக்களாக மாறி வசிக்கத் தொடங்கிய காலத்தில் எதிர்பட வேண்டிய இடர்கள் ஏராளம் இருந்தன. உணவின்றி ,உடையின்றி எக்காலமும் அதற்காகப் போராடிக் கொண்டிருந்தான். விலங்குகளை வேட்டையாடி காய் கனி குருக்களை உண்டு வாழ்க்கை நடத்தியவனுக்கு இயற்கையே எதிரியாகத் தோற்றமளித்தது. மழையும் பனியும் வெயிலும் அவனுக்குப் புரியாததாயிருந்தது. அந்தப் புரியாத காரியங்களை நிகழ்த்துபவனுக்கு ப்ரீதி செய்ய வேட்டையாடி, பொறுக்கிக் கண்டெடுத்த பொருட்களை, இனம் தெரியாத , முகம் தெரியாதவனுக்குப் படைத்தளித்தனர். அவன் மகிழ்ந்து இன்னல்களைத் தவிர்ப்பான் என்று நம்பினர்.

கேள்வி:- சிந்தனைகளின் பரிணாமம் என்று தொடங்கி மனிதனின் பரிணாமம் பற்றிக் கூறுகிறாயோ.?

பதில்:-   ஆதிகால மனிதனின் சிந்தனைகள் எவ்வாறு செயல்பட்டு, பிற்காலத்திய நிகழ்வுகளுக்கு அஸ்திவார மிட்டது என்று சொல்ல வரும்போது,மனித இனத்தின் பரிணாமம் கூறாமல் விளக்கினால் விளங்காது

கேள்வி:- சொல்ல வருவதை முடிந்தவரை சுருக்கமாய்ச் சொல். கேட்பதற்கும் படிப்பதற்கும் பொறுமை உள்ளவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

பதில்:-   புரிந்து கொள்ள முடியாத,புதிரான நிகழ்வுகளை நிகழ்த்துபவனை வணங்கவும் வழிபடவும், அவனுக்கு உருவம் தேவைப் பட்டது. ஆதியில் இருந்த உருவங்கள் அநேகமாக பயமுறுத்தும் வகையில் இருந்திருக்கும். பல இடங்களில் பிற்காலத்தில் விலங்குகளின் உருவத்தை மீன், ஆமை. பன்றி, குரங்கு, சிங்கம்,பாம்பு ,மற்றும் விலங்கும்மனிதனும் கலந்த உருவம் என்றும்.பிறகு காலப் போக்கில் நலம் செய்யும் மனித உருவத்துடனும் வழிபட்டனர். சுருங்கச் சொன்னால் உலகின் எல்லா ஜீவ ராசிகளும் கடவுள் அந்தஸ்தைப் பெற்றன. அவற்றை திருப்தி செய்ய அவற்றுக்குப் பலிகள் கொடுத்து ப்ரீதி செய்தனர். திருப்தி செய்யாவிட்டால் அவை நம்மை அழித்துவிடும்,என்று நம்பினர். இந்த ரீதியிலான சிந்தனைகள் மதங்கள் தோன்றுவதற்கு அடி கோலியிருக்கும். அண்மைக் காலம் வரை இந்த பலி கொடுக்கும் வழக்கம் புழக்கத்தில் இருந்தது. இதுவே சற்று மேம்பட்டு கடவுள்களை சாத்வீகமாக அணுகிய போது, நிவேதனம் படைப்பதாக மாறி இருக்கக் கூடும்.

கேள்வி:-  பயத்தின் விளைவே மதங்களின் தோற்றம் என்றா கூறுகிறாய்.?

பதில்:-    கிட்டத்தட்ட அப்படித்தான். மதங்களும் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் எல்லா மதங்களும் தவறு செய்தால் தண்டிக்கப் படுவாய் என்று முக்காலும் பறை சாற்றுகின்றன. தண்டனைக்கு எதிர்ப்பு பரிசு என்ற விதத்தில் நரகம், சொர்க்கம் போன்ற சிந்தனைகள் உருவாகி இருக்க வேண்டும். அதேபோல், இனங்காண முடியாத அழிக்கும் சக்தி இருப்பது போல் ஆக்கும் சக்தியும் இருக்கும் என்று நம்பி, நல்லது செய்யும் கடவுள்களையும் மனிதன் படைத்தான்.

கேள்வி:- அந்தக் காலத்திலேயே எந்த வினைக்கும் எதிரான ,நிகரான செயல் நடக்கும் என்பதைச் சொல்லாமலேயே ஆதிமனிதன் தெரியப் படுத்தினான் என்கிறாயா.?

பதில்:- பரவாயில்லையே. கொஞ்சம் புரிந்து கொள்கிறாய்.ஆதிமனிதன் தனியாக வேட்டையாடி உணவு தேடி வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப் பட்டான். குழுக்களாக இருந்து செயல் பட்டால் திறமை அதிகரித்து கஷ்டங்கள் குறைவதை உணர்ந்தான். எதேச்சையாக தீ வளர்க்கவும் சமைத்து உண்ணவும் கற்றவன், எறும்புகளிடம் இருந்து வேளாண்மை பற்றி அரிச்சுவடிப் பாடம் கற்றிருக்கலாம் என்று எங்கோ படித்தேன். எறும்புகள் நிலத்தை உழுது, விதை விதைத்து அறுவடை செய்யவில்லை. எறும்புகள் உண்ணும் விதைகள் உள்ள செடிகளைச் சுற்றி இருக்கும் புற்களை அகற்றி அச்செடி வளர உதவுவதைக் கண்ட மனிதன், நீண்ட காலக் கணிப்பில், வேளாண்மை குறித்து அறிந்து விதை விதைத்துப் பயிரிடத் துவங்கி இருக்கலாம்.

கேள்வி:- எதையும் திட்ட வட்டமாகக் கூறாமல் இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று கூறுவது சொல்ல வந்த விஷயத்தைச் சுற்றி செல்கிற மாதிரித் தெரிகிறது.

பதில்:-   ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையிலும் சில அனுமானங்களின் அடிப்படையிலும்தான் இருக்க முடியும்


 கேள்வி:- இதில் சிந்தனையின் பரிணாமம் எங்கு வந்தது.?

பதில்:-   ஆதிமனிதன் குழுக்களாகக் கூடிப் பயிரிட்டு, வேட்டையாடி வசித்தபோது, அதே மாதிரி பல குழுக்கள் இருந்திருக்கும். அதைக் கொண்டு நடத்தத் தலைவன் ஒருவன் தேவைப் பட்டான். ஆதியில் குழுக்களின் அளவு சிறிய தாய் இருந்தபோது, தலைவனும் எல்லாப் பணிகளிலும் ஈடுபட்டான். குழுக்களின் அளவு பெரிதாகிப் போனபோது அதை நிர்வகிக்கவே நேரம் போதாமல், தலைவன் அரசனாக்கப்பட்டான்.அவனுக்கு அதிகாரம் தேவைப் பட்டு அநேக உதவியாளர்களுடன் குழுக்களைக் காப்பதே பணி என்றாகிவிட்டது. அவனுக்கு உதவி செய்பவர் பெரும்பாலும் அவனது உறவினராகவே இர்ந்தனர்.

கேள்வி:- மனிதன் குழுக்களாக வசித்ததும், வேளாண் தொழிலில் ஈடுபட்டதும்  செய்யும் தொழிலிலும் மாற்றம் வந்ததா.?

பதில்.:-  ஆம். தனிமனிதனாக வேட்டையாடி உண்டவரை, அவன் தேவைக்கு மேல் எதையும் சேர்த்துக் கொள்ள முடியாத நிலை.ஆனால் குழுக்களாக சேர்ந்து வேளாண்  தொழிலில் ஈடுபட்ட போது, தேவைக்கு மீறி விளைந்த பொருட்களைக் காக்கவும், பூர்த்தியடையாத மற்ற குழுக்களுக்குக் கொடுக்கவும் வியாபாரம் தொடங்கி இருக்க வேண்டும். ஆக நிலத்தில் வேலை செய்து பயிரிட சிலர்,குழுக்களைக் காக்க சிலர், என்று வேலைகள் பங்கிடப் பட்டன. ஆக செய்யும் தொழிலைப் பிரித்துப் பங்கு போட்டுக் கொண்டவர்கள் அத்தொழில் செய்வதற்கென்றே அடையாளப் படுத்தப் பட்டனர். ஆதியில் இனந்தெரியாத சக்தியைத் திருப்தி படுத்த ஏற்பட்ட இடங்கள் கோயில்களாகவும், அந்த வேலையில் ஈடுபட்டவர்கள் பூசாரிகள், அந்தணர்கள் என்று அறியப் பட்டு சக்தி மிகுந்தவர்களாக விளங்கினர். ஆனால் குழுக்களை நிர்வகிக்கத் தலைவன் தேவைப் பட்டபோது, அவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலைக்கு மாறினர். ஆக மனித இனம், நான்கு குழுக்களாகப் பாகு படுத்தப் பட்டு, க்ஷத்திரியர், பிராம்ணர், வைசியர் , சூத்திரர் 
என்று அறியப் பட்டனர்.


கேள்வி:- அப்படிச் செய்யும் தொழில் மூலம் அடையாளப் படுத்தப் பட்டதில் உள் நோக்கம் இருந்ததா.? இல்லை இந்த முறையே தவறாக இருந்ததா.?

பதில்:-   இரண்டும் இல்லை. ஆனால் மனிதனின் சிந்தனைப் பரிணாமங்கள் சரியான திக்கை நோக்கிப் பயணப் பட்டதா என்பதே கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ஆதியில் குழுக்களுக்குத் தலைவனாய் இருந்தவன் சகல அதிகாரங்களையும் எடுத்துக் கொண்டு, குழுவில் இருந்த மற்றவர்களை அடக்கி ஆண்டான். பாதுகாப்புக் கருதி மற்றவர்களும் அடங்கி இருந்தனர். மக்களின் அறியாமையைப் பகடையாகப் பயன் படுத்தி இனங் காண முடியாத சக்தியை திருப்திப் படுத்தவென்றே, சில சடங்கு சம்பிரதாயங்களை ஏற்படுத்தி மற்றையோரை பயமுறுத்தியே, சக்தி பெற்ற பூசாரிகளும் அந்தணர்களும், பலம் படைத்த அவர்களுடன் கூட்டு சேர்ந்து, மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக நினைக்கத் துவங்கினர். அடக்கி ஆள்வதும், பிறரது அறியாமையில் பலம் கொள்வதுமாக இருந்த இந்த இருவகைப் பிரிவினர், மற்றவர்கள் மேலே வர இயலாத அளவுக்கு அதிகாரப் பிரயோகம் செய்தனர். விளைந்த  மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை விற்று, அரசுக்குப் பங்கு கொடுத்து, காண இயலாத சக்திகளை, திருப்தி செய்ய, உதவி, தங்களுக்கென ஒரு இடம் மூன்றாவது பிரிவினர் தக்க வைத்துக் கொண்டனர்..இதில் எதிலுமே அடங்காத நான்காவது பிரிவு, தானாக சிந்திக்காமல், சிந்திக்க முடியாமல், உழைத்து உருக்குலைந்து, குழுக்களின் அடிமட்டத்திலேயே இருந்தனர்.

கேள்வி:- எல்லோருமே ஒப்புக் கொண்ட ஒரு முறை எப்படித் தவறாகும்.?

பதில்:-   இங்குதான் சிந்தனைப் பரிணாமங்களின் வளர்ச்சியையோ, தேக்க நிலையையோ காண முடியும்.. எவனாவது சிந்திக்கத் துவங்கி விட்டால், தம் நிலைக்கு ஆபத்து என்று உணர்ந்து, சிந்திக்க இயலாத கட்டுப்பாடுகளை நடை முறைப் படுத்தி, பிறர் மேல் ஆண்டவர், ஆண்டை அடிமை என்று ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

கேள்வி:- இன்ன வேலை இன்னவனுக்கு என்று நடைமுறைப் படுத்தப் பட்ட பிறகு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் எங்கிருந்து வரும்.?

பதில்:-   சரியான கேள்வி. ஆனால் ஆதியில் தற்செயலாக அமைந்த பாகு பாடுகள் ,மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருந்திருந்தால், யார் வேண்டுமானாலும் எந்த நிலைக்கு வேண்டு மானாலும் உயரலாம். ஆனால் தற்செயலாகப் பிரிக்கப்பட்ட, ஏற்படுத்தப் பட்ட பாகு பாடுகளை, ஏதோ இனம் காண முடியாத சக்தியின் சித்தம் என்று ஒரு கோட்பாட்டை மற்றவர்கள் மேல் திணித்து, தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டார்கள். இதை கேள்வி கேட்க சிந்திக்க வேண்டும்.ஆனால் ஒரு சாராருடைய சிந்தனைகளை வளர விடாமல், மழுங்கடித்து, அவர்களது வளர்ச்சியைக் கட்டுப் படுத்த ஆதிக்கச் சக்திகள், மதம் என்றும், கடவுள் என்றும் ,சாஸ்திரம் என்றும் பலவாறு கூறி, எண்ணவே விடாமல் செய்தது. ஒரு விதச் சிந்தனைப் பரிணாமம் வளர்ச்சி என்றால், அதில் அடங்கிப் போனது இன்னொரு பரிணாமம்.

கேள்வி:- என்னதான் சொல்ல வருகிறாய் என்பதைக் கொஞ்சம் தெளிவு படுத்து.

பதில்:-  மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிய போது நிகழ்ந்த மாற்றங்கள் அண்மைய சரித்திர நிகழ்ச்சிகள். அரசுகளும் அரசர்களும் காணாமல் போய் விட்டனர். கேள்வி கேட்பதால்தானே மாற்றங்கள் வருகின்றன. கேள்வியே கேட்க முடியாதபடி செய்து விட்டால், கேள்வி கேட்பதற்குரிய கல்வியறிவை மறுதளித்து விட்டால்......இருக்கும் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளலாமே.

கேள்வி: தற்காலத்திலும் இந்தப் பிரிவுகள் இருப்பது ( பிறப்பினால் வருவது ) தேவையில்லாததுதானே. எல்லோரும் எல்லா வேலைகளும் செய்கிறார்களே இந்தப் பிரிவுகளுக்கு இப்போது அர்த்தம் இருக்கிறதா.?

பதில்:- மேலோட்டமாகப் பார்க்கும்போது உண்மை போல் தோன்றலாம். ஆனாலும் மக்கள் மனசளவில், ஏற்ற தாழ்வுகளை இன்னும் பார்க்கிறார்கள்.

கேள்வி:- இதற்குத் தீர்வுதான் என்ன.?

பதில்-   கல்வியறிவு. எல்லோருக்கும் கல்வியறிவு. நடைமுறையில் நடப்பது போல் தோன்றினாலும், உண்மையில் நடை முறைப் படுத்தப் படாதது. நடைமுறைப் படுத்த சாத்தியப் படாதது.

கேள்வி:-ஏன் யார் வேண்டுமானாலும் கல்வியறிவு பெறலாமே.

பதில்:-  உண்மைதான். ஆனால் இது ஒரு மாயத் தோற்றம். கல்வியறிவு என்பது வெறுமே எழுதப் படிக்கத் தெரிவது மட்டுமல்ல. சிந்திக்கத் தூண்டுவதாய் இருக்க வேண்டும். எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லல் படுபவன், பசியாறுவதைப் பற்றி சிந்திப்பானா, ஏற்ற தாழ்வற்ற கல்வி பற்றி சிந்திப்பானா. கிடைக்கும் கல்வியறிவிலேயே எவ்வளவு வித்தியாசம்.இரண்டு விதக் குழந்தைகள் பள்ளி செல்வதைப் பார்த்தாலேயே தெரிந்து விடுமே கல்வியில் உள்ள ஏற்ற தாழ்வுகள். ஒரு குழந்தை மற்றதை சமமாகப் பாவிக்கச் சந்த்ர்ப்பமே இருக்காதே.

கேள்வி:-இதையெல்லாம் நீ சிந்திப்பது போல் அரசாங்கம் சிந்திக்காதா.?
பதில்:- நிச்சயம் சிந்திக்கிறது. முதலில் வயிற்றுப் பசி அடங்கினால்தான் கல்விக் கண் திறக்கும் என்று அறிந்துதான் இலவச மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.கற்பிக்கும் கல்வியின் தரம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றால், எல்லாக் கல்வி நிறுவனங்களும் ஒரே பாட திட்டம் கொள்ள வேண்டும்.இன்னும் ஒருபடி மேலே போய் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதையும் அமல் படுத்த சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.

கேள்வி:- பின் பிரச்சனைதான் என்ன .?

பதில்:-  கல்வி வியாபார மாகிவிட்ட நிலையில் கல்வி வியாபாரிகள் இவற்றை நடைமுறைப் படுத்த எல்லா முட்டுக் கட்டைகளையும் போடுகிறார்கள்..வங்கிகளை நாட்டுடைமை ஆக்கியவர்கள் கல்வி கற்பிப்பதையும் அவர்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அரசே எல்லோருக்கும் இலவச கல்வி, சமகல்வி கட்டாய மதிய உணவு அளிக்க வேண்டும். பணம் கொடுத்துப் படிப்பவன், சலுகைகளில் படிப்பவன், சாதாரணமாகப் படிப்பவன், என்ற பாகு பாடுகள் ஒழிய வேண்டும். அப்போதுதான், வளரும் பிள்ளைகள் மனசில் சிந்தனை மாற்றங்கள் துவங்கும். எல்லோரும் சமம் என்ற எண்ணம் மேலோங்கும். குறைந்தது அடுத்த தலைமுறைகளிலாவது ஏற்ற தாழ்வுகள் இருக்காது.அடிப்படைக் காரணங்களைக் கூறி விட்டேன். ஓரளவுக்குத் தீர்வையும் கூறி இருக்கிறேன்.நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்........!  

(பதிவு நீண்டு விட்டதோ? பொறுமையாய்ப் படித்தால்  பல விஷயங்கள் விளங்கலாம்)