எல்லோரும் நல்லவரே
----------------------------------------------
இன்று காலையில் எழுந்ததும் மனம் உற்சாகமாக இருந்ததுஒரு
விஷயம் பலரும் அனுபவித்து இருக்கலாம்
எத்தனை கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலை யை
எட்டி இருக்கிறோம் தெரியுமா சாதாரணமாக கேட்கும்டயலாக் தான் ஆனால் இம்மாதிரியான எண்ணங்கள் எல்லாமே அந்த வயசில் தோன்றி இருக்காது அதுதான் வாழ்வின்
நியதி என்று சொல்லாமலே தெரிந்திருக்கும்
நான் பள்ளியில் படிக்கும் போது ஃபௌண்டன் பேனாவை உபயோகித்ததுஇல்லை இல்லையெ என்னும் எண்ணமிருந்ததெ இல்லை ஆனால் கடந்த அந்தகாலநினைவுகளை அசை போடும்போது மிகவும்
கஷ்டப்பட்டதுபோல் இப்போது தோன்றும் அப்போதெல்லாம் வாழ்வில் இதெல்லாம் சகஜமென்ற எண்ணமிருந்திருக்கும் நான் முதலில் வேலைக்குப் போகபோகிறேன் என்றபோதுதான் முதன்முதலில்
காலணி என்க்கு கிடைத்தது அதையே இன்றுநினக்கும்போதுநான்
இழந்த்து அதிகம் போல் தோன்றுகிறது இப்படி நீட்டிமுழக்கி நான்கூறுவதேகஷ்டம் சுகம் என்பது
எல்லாம் ரிலேடிவ் விஷயங்கள் என்று தெரிவிக்கவே
அது சரி என்மனம் காலையிலேயே உற்சாகமாக இருக்கக் காரணம் நம்மைசுற்றி இருப்போரெல்லாம் நல்லவர்களே நாம் தான் அனாவசியமாக குறை பட்டுக் கொள்கிறோம்
எது எப்படியோ என்னைச் சுற்றி நல்லவர்களே இருக்கிறார்கள்
நிறைய எம்பதி உள்ளவர்கள் வயதான என்னையும் என் குறைகளையும் கண்டுகொள்வதில்லை எனக்குத்தான் என் குறைகள் பூதாகாரமாகத் தோன்றுகிறது
சின்னச் சின்ன வேலைகளை எனக்காக் செய்கின்றனர் ஒரு முறை பதிவில் என்வயதை போட்டுக் கொள்வது எனக்கு ஏதோ ஐயா ஸ்தானத்தை எனக்குக் கொடுக்கவா என்று
ஒரு நண்பர் கூறி இருந்தார் என்வீட்டு வேலைகளுக்கு நான் அதிகம் சிரமப்படுவதில்லை பிஎச்
இ எல்லுக்கு மாதம் ஒருமுறை மருந்து வாங்கப்போகவேண்டும் என்னை கண்டதும் பிஎச் இ எல் கேட்டை திற்ப்பார்கள் நான் போகும் ஆட்டோவுக்கு
தனிபெர்மிஷன் தென்னை மரத்தில் இருந்துதேங்காய்பறிக்க வருபவர் என் வீட்டுக்கே வந்து தாமதத்துக்குமன்னிப்புகேட்டார் மா மர்த்திலிருந்து மாங்காய்பறிக்க வருபவரும் குறையின்றி செய்துவிட்டுப்போவார் எனக்கு முடி வெட்ட வீட்டுக்கே வந்து வெட்டி விடுவார்
எனக்கு அங்கும் இங்கும் செல்ல முடியாது என்குறை தெரிந்து உதவுபவர் பலருண்டு எனக்குஇந்தகணினி
மூலம்பணம் பரிவர்த்தனைசெய்வது சிரமமாய்இருக்கிறது
என் மகன் அந்தக் குறை தெரியாமல் செய்து
விடுகிறான் இப்போதெல்லாம் நானென் குறைகளை பெரிது படுத்துவதை குறைத்துக் கொண்டுவிட்டேன்நல்லவன் எனக்கு நானே நல்லவ