Friday, June 26, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் நாடகம் முடிக்கப்போட்டி

                             கடைசில சில பக்கங்கள் மிஸ்ஸீங்                           
                             ---------------------------------------------------------
நாடகத்தை  தொடர்ந்து படியுங்கள் நாடகம்போகும்  போக்கு புரியலாம் எழுதி முடித்து போட்டியில் பங்கு பெறுங்கள்  நன்றி 

காட்சி –2
இடம் ---அருணா மாளிகை
இருப்போர்—அருணா தாத்தாசபாபதி  கனக சபை நவ கோடி
தாத்தா தாத்தா இங்கே வாங்க இதைக்கொஞ்சம்  கேளுங்க
”தலைவி அவர்களே ----தோழியர்களே
தாத்தா---இது என்ன நாடகம் அருணா ?
அருணா --- நாடகமில்லை  பேசாமகேளுங்களேன் தலைவி அவர்களே தோழியர்களே கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன் என்று பழமொழி இருக்கும்போது
மண் என்றாலும் மனைவி புழுதி என்றாலும் பெண்டாட்டி என்று பழமொழி இருக்கிறதா  மண்ணைவிட கேவலமாகபெண்களை  மதிக்கும் ஆண்களை நாம்பகிஷ்காரம் செய்ய வேண்டும்மாங்கல்யமே பெண் அடிமையின் சின்னம்நாயைக்கட்ட  சங்கிலி  கிளியை அடைக்ககூண்டு பெண்களை அடிமை  செய்ய  மாங்கல்யம்  கல்யாணம்  என்ன நீதி இது பெண்களாகிய நாம்கல்யாணம் வேண்டாதார் சங்கம் அமைத்து உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துய்  ஆண்வர்க்கத்தை  எதிர்த்து போராட வேண்டும்கலயாணம் செய்து கொள்ள வில்லைஎன்று சபதம் செய்ய வேண்டும் இதற்கு முன்னோடியாகநான் திருமணம்செய்து கொள்ளப்போவதில்லை  என்று உங்களிடையே ஆணையிட்டுக் கூறுகிறேன் (தாத்தாவிடம்)என்ன தாத்தா எப்படி பேச்சு  இன்னிக்கி சங்கத்திலே ஒரே ஆரவாரம்தான் என்னைத்தொடர்ந்து எல்லாப்பெண்களும் இதே மாதிரி சபத்ம்செஞ்சிருக்காங்க எங்க சங்கத்தை பலப்படுத்த வீடு வீடாப்போய் நன்கொடை வசூல் செய்யப்போறோம்
 தாத்தா === நீ என்னவேணும்னாலும் சொல்லு அருணா ஆனா ஒன்னு மயில் கழுத்தை விட அழகான கழுத்து ஒருபெண்ணுக்கு இருந்தாலும் அதிலமஞ்சக் கயிறும் மாங்கல்யமும் இருந்தாத்தான்மா மகிமை
 அருணா---போ  தாத்தா ---நீ ஒரு கர்நாடகம்
தாத்தா--- இருகட்டும் அருணா  இதுக்குப்போய் நீ வீடு வீடா கையேந்தவேண்டாம் உனக்கும் வயசு பதினெட்டாச்சு உங்கப்பா சொத்தெல்லாம்  உனக்குவரப்போகுது
அருணா --- ஆமா எனக்கு வயசு பதினெட்டாச்சு  நான்மேஜராயிட்டேன் ட்ரஸ்டிகளை கூப்பிட்டுசொத்தெல்லாம் வாங்கிக்கணும்
தாத்தா--- கூட நீ காலா காலத்துல ஒரு கல்யாணம் செய்துகுடியும் குடித்தனமுமா  ஊர் மெச்ச வாழணும் இதுதாம்மா என் ஆசை
(கனகசபை சபாபதி வருகின்ற்னர்)
கனக –உங்க ஆசைகட்டாயம் நிறைவேறும்  நானு அதுவிஷயமாத்தானே வந்தேன் (நவகோடி வருகை)
நவகோடி – எந்த விஷயமானாலும் நானுமிருந்தாத்தானே பூர்த்தி அடையும் 
கனக---- (சபாப்தியிடம் )பார்த்தியா  மனுஷனுக்கு மூக்குலவேர்க்குது  மோப்பம் பிடிச்சு வந்துட்டான்
 அருணா—நீங்கஎதுக்கு  வந்தாலும்  சரி நானே உங்களைப்பார்க்கணும்னு இருந்தேன்  வந்துட்டீங்க
உயிலப் பற்றி எல்லா சமாச்சாரமும் எனக்கு தெரிஞ்ச்சுக்கணும்
சபா---உயில் ……உங்கப்பா சாகும்போது எழுதினது அது கைக்கு வரதுக்கு முன்னாடி  எங்கப்பா பாரதம் படிப்பார் நவகோடிபகவத்கீதா படிப்பாரு  உயில் கைக்கு  வந்தபிற்பாடு இரண்டுபேரும் உயில் பாராயணம்பண்றாங்க
நவகோடி ---இல்லன்னா இவ்வள்வு நாள்சீறும் சிறப்புமா நிர்வகிக்க முடியுமா
கனக—முடியாதுபோகட்டுமந்தபொறுப்பு  கஷ்டமெல்லாமுனக்கு மெதுவா டெரியட்டுமே
அருணா – எனக்கு வயசு பதினெட்டு முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு மாமாஉங்களத்தான்மாமா
கனக--- ஆங் என்னையா மாமான்னும்கூப்பிட்டேஏய் சபாபதி அருணா என்னை மாமான்னு  கூப்பிடுதடா
சபா ---- கவனிச்சேன்
நவ --- வயசிலபெர்யவங்கள் மாமன்னு கூப்பிடறது சகஜந்தானே
 கனக – அப்படீன்னாஉன்னை ஏன்யா கூப்பிடல
 நவ --- உங்கவீட்டு மருமகள அ வரப்போறோமென்னு உஅ மாமான்னு கூப்பிடுது 
சபா --- அ மைதி அமைதி  பிள்ளையும் பெண்ணும் நாங்கைருக்கும்போதுஎங்கள் கல்யாணத்ட்க்ஹைப்பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் என்ன அருணா எபடிப்போட்டேன் பாரு ஒருபோடு
 அருணா --- கல்யாஅம்கல்யாணம்கல்யாணம்  சேச்சே ஒரு பொண்ணாலகல்யாணம் செய்யாம வாழமுடியாதா ஆண்களோடசரி நிகர் சமானமாக வாழ முடியதா என் சொத்டை எனக்கே நிர்வகிக்க முடியாதா நல்லது கெட்டது எல்லாம் எனக்கும் தெரியும்
நவ --- அருணா நீச்சல் தெரிஞ்சவங்களையேகூட வெள்ளம் அடிச்சூட்டுப்போயிடும்உதாரணமா என்னையே டௌன்  பண்ணி கட் பண்ணப்பாக்குறாங்க
அருணா ----என்சொத்டை மட்டும் யாருமடிச்சூடுப் போக முடியாதுன்னு நான்சொல்றேன்
சபா----- –உனக்குகல்யாணம்செய்துவெக்கிற கடமை அவருதுன்னு அப்பாநெனைக்கிறார்
கனக --- சொத்தை  மாப்பிளைட்டதான் ஒப்படைக்கணூம்னு நான்நெனக்கிறேன்
அருணா – க்சல்யாணமே செய்துக்க போறதில்லன்னுசபதம்செஞ்சிருக்கேன்னு நான் சொல்றேன் 

 நவ--- அப்போ நாங்க நெனச்சாலும்  உன் சொத்த உங்கிட்டஒப்படைக்க முடியாது
அருணா---- என்
சபா---  உனக்கு கல்யாணத்துக்கப்புற்ம்தான் சொத்துன்னு உங்கப்பா உயில்லஎழுதி இருக்காரு ---- சொல்லுங்கப்பா ……
உங்கப்பா என்ன சாமான்யமா திரிகாலமுண்ர்ந்த  ஞானி தலையில மட்டுல்ல உடம்பெல்லாம் மூளை இல்லன்னா இப்படி ஒரு உயில் எழுத முடியுமா
அருணா--- அப்பா……
நவ--- இருந்தாலும் என்னம்மா ஒரு நல்ல பையனாப் பார்த்து  கல்யாணம்பண்ணிக்க எல்லாரையும் நல்லவங்கன்னு நெனச்சு ஏமாறதே(போகிறார் )
கனக---நாங்களும்வரோம் அருணா  யோசிக்காதே எல்லாம் நல்லதுக்குத்தான்(கனகசபை சபாபதி போகிறார்கள்)
 அருணா  ---தாத்தா …. அப்பா என்னை ஏமாத்திட்டார்தாத்தா  எனக்காக இவ்வளவு சொத்தை சேர்த்தும்அதை எங்கிட்டஎப்படிஒப்படைக்கணும்னு  அப்பாவுக்கு தெரியாமபோச்சே தாத்தா ( அழுகிறாள் ) அப்பாநீங்க உங்க மகளூக்கு மன்னிக்க முடியாததுரோகம்  செய்துட்டீங்க  என் எதிர்லமட்டும்  நீங்க இருந்தீங்கன்னா
தாத்தா--- என்ன அருணா இது உங்கப்பா மேலயே வஞ்சம் தீர்க்கற்மாதிரி  பேசலாமா
அருணா—அப்பா என் லட்சியதையே  நொறுக்கிட்டாரே இந்த சொத்துக்காக என்விருப்பத்துக்கு  மாறாஒருத்தனுக்கு  அடிமையா  இருக்கணுமா
தாத்தா--- ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டாஅடிமை வாழ்வுனு ஏம்மா தப்பா எண்ற
2அருணா ---- தாத்தாஉங்களுக்குத் தெரியாது வெளியே அடிபட்டு மிதிபட்டு வாழும் கோழைகள்பெண்டாட்டியை அடிச்சு உதசிப்பதை நான் பார்த்திருக்கேன்மாப்பிள்ளைன்னா  ஒரு சிறு துரும்பையும்கிள்ளிப்ப்;போட்டாஅது குட துள்ளிக் குடிக்கும்னு சும்மாவா  சொல்றாங்க
தத்தா---உன் இஷ்டம அருணாசின்ன வயசிலேயே உன் குடும்பத்துலஒட்டிக்கிட்டைந்தகிழவனுக்கு  உன்னை விட்டா வேற கதியில்லநீ எங்கிருந்தாலும்   சொத்து இருந்தாலும்  இல்லாவிட்டாலுமிந்தவேலைக்கார கிழவனை மட்டும் விட்டுடாதேம்மா
அருணா – இல்லை தாத்தா இல்லை தனியா விட்டுட மாட்டேன்  இந்த ஆஸ்தியைக்கொண்ஊ ஏஆலவோ நல்லகாரியங்கள்செய்யலாம் இல்லேன்னா இந்த சொத்தை பங்காளிக்கழுகுகள்கொத்திண்டுபோயிடும்
தாத்தா- அப்படீன்னா நீ யாருக்காவது வாழ்க்கைப்பட்டுதானாகணும்மா
அருணா –வேற வழியே இல்லயா தாத்தா
தாத்தா --- எனக்கு ஒண்ணும் புரியலியே
அருணா ---ஹூம் (போகிறாள்) தாத்தாவும் உள்ளே போகிறார்
                                    திரை
 காட்சி 3


இடம் –சாலை
பாத்திரங்கள்--- மாணிக்கம்  சந்துரு அருணா
குமரேசனை தூக்கிலிடஇன்னும்  ஏழே தினங்கள் இருப்பதாக மாணிககமும்  சந்துருவும்  பாடிக்கொண்டே பிரசுரம்  விற்கிறார்கள் அவ்வழியே வரும் அருணா

அவ்வழியே வரும் அருணா ஏதோ யோசித்தபடியே  அங்கு நிற்கிறாள்
                               ----------------------------

    



   





      

20 comments:

  1. மண் என்றாலும் மனைவி....வித்தியாசமாக உள்ளதே ஐயா.

    ReplyDelete
  2. தொடர்ந்து படியுங்க்ள் போட்டியில் பங்கு பெறுங்கள்

    ReplyDelete
  3. வசனம் ரசிக்க வைத்தன ஐயா.

    //மண்ணானாலும் மனைவி துரும்பானாலும் துணைவி//
    என்று 2014 பதிவில் எழுதி இருந்த நினைவு வருகிறது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதி இருந்தேனாநினைவுக்கு வரவில்லை

      Delete
  4. Replies
    1. யோசிக்க என்ன இருக்கிறது படித்துக் கொண்டு வாருங்கள் கடைசியில்நடக்க இருக்கும் போட்டியில் பங்கு பெறுங்கள்

      Delete
  5. ஒண்ணும் புரியலை. மறுபடி படிச்சுப் பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. நாடகமெழுத துவங்கி இருக்க்கிறேன் சென்ற பதிவைப் படித்திருந்தால் புரியும்

      Delete
  6. அங்கங்கே punctuation marks இருந்தால் தேவலை. படிப்பது சிரமமாயிருக்கிறது. (எனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது அல்லவா?)

    ReplyDelete
  7. உங்களுக்கு வயதாகிக் கொண்டு இருக்கிறதா எழுதும்போது வரும் எழுத்துப்பிழைகளை சரிசெய்யவே நேரமெடுக்கிறடு அட்ஜஸ்ட்செய்யுங்கள்சார்

    ReplyDelete
  8. படித்து வருகிறேன்.  குமரேசன் யார், அவரை ஏன் தூக்கிலிட வேண்டும் என்று நினைவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இப்போதுதனே துவஇருக்கிற்து எப்படி நினைவு வரும் தொடர்ந்து வந்து படியுங்கள்

      Delete
  9. நாடகம் அப்போவே நல்லா எழுதியிருக்கீங்க, பெண்ணுரிமைச் சிந்தனையோடு. தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பாரட்டுக்கு நன்றி 1960 களிலேயே நாடகங்கள்எழுதி மேடை ஏற்றி இருக்கிறேன் அதுபற்றி பதிவுகளும் எழுதி இருக்கிறேன் இரண்டு நாடகங்கள் பதிவுமாகி இருக்கிறது

      Delete
  10. 'கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்' நல்ல தலைப்பு. இதை எங்கோ கேட்ட மாதிரி நினைவு. எங்கே என்று தான் ஞாபகத்திற்கு வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. 1962ல் மேடை யேற்றியபோது இதன் பெயர் முப்ப்[அது நாட்கள் பழையதை தூசு தட்டி இடுகிறேன் இதன் முந்தைய பதிவில் டலைப்புக்கு காரணம் தெரியும்

      Delete
  11. Replies
    1. தொடருங்க்ள் போட்டியில்பங்குபெறுங்கள்

      Delete
  12. நல்லாருக்கு சார். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    இப்ப குமரேசன் யார் நாடகத்தில் அப்பெயர் வரக் காரணம் என்ன? மாணிக்கம், சந்துரு எல்லாம் இப்பகுதியில் புதிய கதாபாத்திரங்கள் அவர்கள் யார் என்று அறிய தொடர்கிறேன் சார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாடகம் டொடங்கி இரு பதிவுகள் தானே ஆகிறது போகப்போக கதை விரியும்கடைசியில் சில பக்கங்கள் இருக்காது அதனால் ஒரு வேளை நீங்களே முடிக்க வேண்டி இருக்கும் நன்கு முடிப்பவர் ஆயிரம்ரூபாய் பரிசு வெல்லலாம்

      Delete