பதிவுலகில் இரண்டு வருடங்கள்
---------------------------------------------
( திரும்பிப் பார்க்கிறேன். )
2010-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 28-ம் நாள் என் பேரன் எனக்கு இந்த வலைப் பூவை அமைத்துக் கொடுத்தான். ஆயிற்று இரண்டு வருடங்கள்.
இந்த இரண்டு ஆண்டு காலத்தில் சுமார் 250 இடுகைகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன். கொஞ்சம் சுய புராணம் தேவைப் படுகிறது. பதிவுலகம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நான் இப்போது ஓரளவுக்குப் பலராலும் அறிந்தவனாக இருக்கிறேன். ஆரம்பத்தில் ,என் இளவயதில் என் ஆத்ம திருப்திக்காக எழுதி வைத்திருந்த சில கவிதைகள், கட்டுரைகள், கதைகள் போன்றவற்றைப் பதிவிட்டேன். எழுதுவதில் ஒரு வெரைட்டி இருக்க வேண்டும் என்பதிலும், எழுதுவது என் உள்ளக்கிடக்கைகளைக் கடத்துவதற்குப் பயன்பட வேண்டும் என்பதிலும், குறியாய் இருந்தேன். பல பதிவுகள் என் கற்பனை என்றாலும்சில பதிவுகள் நான் படித்து மகிழ்ந்ததை தமிழாக்கம் செய்ததாலும் உருக் கொண்டதாகும். சில கதைகளைக் கவிதை வடிவில் கொடுத்திருக்கிறேன். பலருக்கும் தெரிந்த அவதாரக் கதைகளை எழுதி இருக்கிறேன். ‘ சாதாரணன் ராமாயணம் ‘என்ற தலைப்பில் ராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன். கிருஷ்ணனின் கதையைக் ’கிருஷ்ணாயணம் ‘என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். முருகனிடம் உரிமை எடுத்துக் கொண்டு எனக்கு அவனை ஏன் பிடிக்கும் என்றும், எனக்கென்ன செய்தாய் என்று கோபித்துக் கொண்டும் எழுதி இருக்கிறேன். என் மனைவியைப் பற்றி மூன்று நான்கு பதிவுகள் எழுதி இருக்கிறேன். அதில் ஒன்று ‘பாவைக்கு ஒரு பாமாலை’என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் வகையில் அந்தாதியாக எழுதி இருக்கிறேன்.
பல பதிவுகளில் என் ஆதங்கங்கள் முன் நிற்கும். நம்முள் காணும் ஏற்ற தாழ்வுகள் என்னுள் ஒரு அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அதற்குக் காரணங்கள் என்றும் தீர்வுகள் என்னவாக இருக்கலாம் என்றும் எழுதி வருகிறேன்.
வாழ்க்கையில் பல உணர்வுகளைச் சந்தித்த வகையில் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். என் அனுபவங்கள் பலவற்றைத் தொகுத்திருக்கிறேன். அந்த நாளில் எழுதிய நாவல் ஒன்றைத் தொடராக வெளியிட்டிருக்கிறேன்
இந்த நேரத்தில் ஒன்றைக் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும். ஆரம்ப காலத்தில் என் பதிவுகள் சீந்துவாரின்றிக் கிடந்தது. அது என் எழுத்தின் குறையல்ல. கணினி அறிவு அறவே இல்லாதவன் நான். எனக்கு எழுத மட்டுமே தெரியும்.(இப்பொழுது மட்டும் என்ன வாழ்ந்ததாம்.?)தமிழ் மணத்தில் இணைக்க நான் பட்ட பாடு!.தமிழ் தெரியாதவர்கள் உதவியோடு எப்படியோ இணைத்து விட்டேன். சித்ரன், டாக்டர் கந்தசாமி,சக்திபிரபா,காளிதாஸ்போன்றோர் மட்டுமே என் வாசகர்களாய் இருந்தனர். நான் பல தளங்களுக்குச் சென்று பிறருடைய வாசகனாகி பின்னூட்டம் இடத் தொடங்கியபோது,மேலும் பலர் என் பதிவுகளைப் படிக்கத் தொடங்கினர். நான் அப்போது படித்த சில தளங்களில் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொந்தளிக்கக் கண்டேன். வெறுப்பைக் காட்டாமல் சொல்ல வருவதை மனம் நோகாமல் சொல்லலாமே என்று என் பதிவில் எழுதி இருக்கிறேன். என்னைக் குறைந்த கால அவகாசத்தில்பிரபல பதிவராக்க முடியும் என்ற கருத்துக்கு எதிராக என் இடுகைகளின் பலத்தால் பலரும் வாசகர்களாவார்கள் என்று நம்பினேன்.
பலரும் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் கருத்திடுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதற்கு முக்கியமாக நான் பலரது பதிவுகளுக்குச் சென்று கருத்திடாததும் காரணமாயிருக்கலாம். கருத்திடுவது பற்றி என் எண்ணம் வேறு. பலரும் கருத்துகளைப் பார்வையிட்ட பிறகே பிரசுரிக்க அனுமதிக்கிறார்கள். ஒரு சமயம் குறை சொல்லிக் கருத்துக்கள் வந்தால் ஒதுக்கிவிட வாய்ப்பிருப்பதாலோ என்னவோ. இங்கொன்றும் அங்கொன்றுமாக எங்கோ சிலரது பதிவுகளுக்குப் பின்னூட்டமாக மாறுபட்ட கருத்துக்கள் வருகின்றன. பொதுவாக இந்திரன் சந்திரன் என்றும், உங்களைப்போல் எழுதுபவர் இல்லையென்றும், எப்படி உங்களால் மட்டும் இப்படி நன்றாக எழுத முடிகிறது என்பன போன்ற கருத்துக்கள் அதிகம். என் பதிவுகளின் கருத்துக்களோடு எல்லோரும் ஒத்துப் போக வேண்டும் என்று நான் எண்ணுவதில்லை. நன்றாக இருக்கிறது ,நன்றாக இல்லைஎன்று மட்டும் சொல்லாமல் அபிப்பிராயங்களையும் தாராளமாகக் கூறலாம் என்று பல முறை எழுதி இருக்கிறேன். நாம் எழுதுவது வாசிப்பவருக்குப் புரிய வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்கள் ABSTRACT -ஆக இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். எழுதுபவர் நினைக்காத கோணத்தில் பொருள் கொண்டு பின்னூட்டமிடுவதையும் காண்கிறேன்.
கவிதை என்னும் பெயரில் பல பதிவுகள் நான் எழுதி இருந்தாலும் முறையாக மரபுக் கவிதை பற்றி ஏதும் தெரியாதவனாகவே இருக்கிறேன். வெண்பா இலக்கணம் கற்று எழுத முயற்சித்தேன். அது சரியாக வந்ததா என்ற என் கேள்விக்குப் பதிலே கிடைக்க வில்லை. அந்த வகையில் திருவெழுக்கூற்றிருக்கை என்னும் ரத பந்தனக் கவிதை பற்றி விளக்கம் கேட்டு எழுதி இருந்தேன், முற்றிலும் புரியும்படியான விடை கிடைக்க வில்லை. பல வலைத்தளங்களுக்குச் சென்று அண்மையில் ஒரு பதிவு எழுதினேன். மனதுக்கு நிறைவாக இருந்தது. எங்கிருந்து கற்றுக் கொண்டேனோ அங்கிருந்தே பின்னூட்டமும் கிடைத்தது. நம்மில் பலரும் தமிழ் கற்றவர்களே. இருந்தாலும் நம் தமிழ் ஞானம் எவ்வளவு என்று நமக்கே தெரிவதில்லை. அநேக பாடல்களுக்குப் பொருளே தெரிவதில்லை. நான் என்னையே அளவுகோலாக எடுத்துக் கொண்டு தெரிவிக்கும் இக்கருத்து மற்றவருக்குப் பொருந்தவில்லை என்றால் மன்னிக்கவும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக எழுதுகிறார்கள். வெறுமே பொழுது போக்க எழுதுபவர் குறைவாகவே இருப்பர். கணினி நமக்குக் கிடைத்த வரம். இருந்த இடத்தில் இருந்தே நம்மை தெரியப் படுத்திக் கொள்ள உதவும் இந்த அற்புத வாய்ப்பை வீணாக்காமல் பல விஷயங்களில் விவாதிக்க, தெளிவாக்க, ஒத்தக் கருத்து உருவாக்க எனப் பயன் படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். ஆனால் நாம் சிறந்தது என்று எழுதுவது அதே கருத்தில் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. ஆக எழுதுவது ஏன் யாருக்காக என்பதில் தெளிவு இருந்தால்தான் பதிவுலகில் தொடர்ந்து எழுதத் தோன்றும். இந்தக் கருத்து என் பதிவுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை வைத்து எழுந்தது. நான் சிறப்பாக அமைந்தது எனக் கருதும் பதிவுகளுக்கு வரும் வாசக்ர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் அள்வைவிடக் குறைவாய் இருப்பதும், சுமார் எனக் கருதும் பதிவுகள் அதிக வாசகர்களை ஈர்ப்பதும் என்னால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை..
எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் சீரியஸாக அணுகும் என் குணம் என்னை இந்த மாதிரி எல்லாம் சிந்திக்கச் செய்து எழுத வைக்கிறதோ. ? .
ஐயா! இன்னும் பல்லாண்டு நீங்கள் தொடர்ந்து பல நூறு இடுகைகள் எழுதி எங்களை வழிநடத்த வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDelete//பதிவுலகில் இரண்டு வருடங்கள்//
ReplyDeleteதங்களின் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள் ஐயா!
மனமார்ந்த வாழ்த்துகள்.
இரண்டு வருடங்கள் அலுக்காமல் தொடர்ந்து எழுதுவது சாதாரண விசயமில்லை வாழ்த்துக்கள்!
ReplyDeleteபின்னூட்ட விசயத்தில் உங்கள் கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியதே!
இரண்டு வருடங்கள், 250 க்கும் மேல் பதிவுகள். தங்களின் அனுபவ மழை தொடரட்டும்...
ReplyDeleteஇரண்டு வருடங்கள், 250 க்கும் மேல் பதிவுகள். தங்களின் அனுபவ மழை தொடரட்டும்...
ReplyDeleteதொடருங்கள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி...
வலையுலகில் தொடரும் மூன்றாமாண்டுக்கு வாழ்த்துக்கள். தங்கள் பதிவுகள் பல ஆழமான செய்திகளையும் அழுத்தமான அனுபவப் பகிர்வுகளையும் கொண்டவை. சில பதிவுகளின் கருத்தாழம் கண்டு வியந்திருக்கிறேன். பின்னூட்டங்களிலும் தங்களுடைய முத்திரை தவறாமல் காண்கிறேன். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteCongrats on completing 2 years at the blogsville!
ReplyDeleteI can very well understand the enthusiasm and commitment it takes to write continuously on a blog.
The post was a kind of self-analysis. I think that itself shows the commitment you have towards the blog. Listing out what you had attempted new and the concern that you did not get your questions answered- shows that you genuinely want to make your blog space, not only meaningful for you but also- you want to make it a documentation of your self-identity for the readers. It is truly commendable!
I would not brag that I have read all of your posts. I have not read many of them. It is- as I have been saying to many- due to lack of time. There are just few blogs I visit regularly. I hope, this phase of my life gets over soon and I can organise myself better. But so far, whatever I have read- I have enjoyed reading them. I have expressed my remarks on the comments...
I am also happy to recollect our meeting in Chennai. me and my father were both eager to make your acquaintance. I am happy that it happened. It was a thrill, to meet you- see a "blogger" in person!
I have been pestering my dad for many years, to write down his thoughts in a blog. I have been citing you as an example- telling him that he must take a leaf out of your passion towards documenting your thoughts in your blog. Any man (or woman)- has a unique experience with life. It is like going for an interview and asking the candidate before you about his experience in the interview. Even though- the experience may differ- each one learns something from the other. That is what blogs are too... Documentations of a life-experience...
Please keep writing... I wish you all luck...
PS: English-- ! Never been able to think and write all that in tamil! Sorry!
உங்கள் வயதில் நான் பதிவுகள் எழுதினால் ஆச்சரியமே. உங்களைப் போன்றவர்களின் அனுபவம் பதிவுலகத்திற்கு தேவை.
ReplyDeleteBest wishes Sir.
ReplyDeleteஅடுத்த வருட ஆரம்பம் அட்டகாசமாக இருக்கட்டும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇரண்டாண்டுகளாக வலைப்பூக்களில் வலம்வந்த அனுபவத்தை இரு பக்கங்களில் அழகுற நிரப்பி, சுவைபடத் தந்திருக்கிறீர்கள். படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது அனுபவங்கள் ஒன்றும் புதிதல்ல! பொதுவாகப் பல பதிவர்களும் ஆரம்ப காலத்தில் அனுபவித்த[??!!] ஒன்றுதான்! ஆண்டுவிழா கொண்டாடும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
ReplyDeleteசிறப்பாகக் குறிப்பிட்டிருக்கும் [ராமாயணம், கிருஷ்ணாயணம் போன்ற] சில பதிவுகளுக்கான சுட்டிகளையோ, அல்லது வெளியான நாளையோ கொடுத்திருந்தால், என்னைப் போன்ற, புதிதாக வருபவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும்.
வணக்கம்.
முருகனருள் முன்னிற்கும்!
ReplyDelete@ சேட்டைக்காரன்,கோபு சார், வரலாற்றுச் சுவடுகள், கரந்தை ஜெயக்குமார், திண்டுக்கல் தனபாலன், மாதங்கி மாலி, கீதமஞ்சரி,ஜோதிஜி திருப்பூர், ஜீவி, ரவிச்சந்திரன்,வீ.எஸ்.கே---உங்கள் வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றி. என் எழுத்தின் இனம் கண்டு கொள்ளும் கீதமஞ்சரி போன்றோரின் ஆதரவே எனக்குக் கிரியா ஊக்கி. எல்லா எழுத்துக்களும் எல்லோராலும் வரவேற்கப்படுவதில்லை என்பதும் எனக்குத் தெரியும். முடிந்தவரை வெரைட்டியாக எழுதுகிறேன்.என் எண்ணங்கள் கடத்தப்பட வேண்டும் என்னும் ஆர்வமே என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. முதல்(?) வருகை தரும் ஜோதிஜிக்கு தொடர்ந்து வந்து ஆதரவு தர வேண்டுகிறேன். திரு.வீ.எஸ்.கே. கேட்டுக்கொண்டதற்கு இணங்கி என் ராமாயணம் பதிவு ஜூன் 2011-லும், கிருஷ்ணாயணம் பதிவு அக்டோபர் 2011-லும் எழுதியது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து ஆதரவு தர வேண்டி மீண்டும் நன்றியுடன்
வாழ்த்துக்கள் .
ReplyDeleteகணினி நமக்குக் கிடைத்த வரம். இருந்த இடத்தில் இருந்தே நம்மை தெரியப் படுத்திக் கொள்ள உதவும் இந்த அற்புத வாய்ப்பை வீணாக்காமல் பல விஷயங்களில் விவாதிக்க, தெளிவாக்க, ஒத்தக் கருத்து உருவாக்க எனப் பயன் படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.
ReplyDeleteஉங்கள் அபிப்பிராயம் மிகச்சரி.
வாழ்த்துக்கள் மூன்றாம் ஆண்டுக்கு.
உங்கள் நாவலை படிப்பதாய் சொல்லி இருக்கிறேன்.
ஓடிக் கொண்டே இருக்கிறேன்.
எப்படியும் கூடிய விரைவில் படித்து விடுவேன் என நம்புகிறேன்.
உங்கள் எழுத்துப் பணி சிறப்பாய் தொடர வாழ்த்துக்கள்.
ஊரிலிருந்து பேரன், மருமகள் வந்து இருக்கிறார்கள். அதனால் தொடர முடியவில்லை பதிவுகளை நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாய் எல்லாவற்றையும் படித்து விடுவேன்.
இரண்டு வருடம் ஆனதுக்கு முதலில் வாழ்த்துகள். நீங்கள் உங்கள் பதிவுகளுக்குப் பின்னூட்டம் வராததற்குச் சொல்லும் காரணம் எனக்கும் பொருந்தும்.
ReplyDelete//பலரும் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் கருத்திடுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதற்கு முக்கியமாக நான் பலரது பதிவுகளுக்குச் சென்று கருத்திடாததும் காரணமாயிருக்கலாம். கருத்திடுவது பற்றி என் எண்ணம் வேறு. பலரும் கருத்துகளைப் பார்வையிட்ட பிறகே பிரசுரிக்க அனுமதிக்கிறார்கள். ஒரு சமயம் குறை சொல்லிக் கருத்துக்கள் வந்தால் ஒதுக்கிவிட வாய்ப்பிருப்பதாலோ என்னவோ. இங்கொன்றும் அங்கொன்றுமாக எங்கோ சிலரது பதிவுகளுக்குப் பின்னூட்டமாக மாறுபட்ட கருத்துக்கள் வருகின்றன. பொதுவாக இந்திரன் சந்திரன் என்றும், உங்களைப்போல் எழுதுபவர் இல்லையென்றும், எப்படி உங்களால் மட்டும் இப்படி நன்றாக எழுத முடிகிறது என்பன போன்ற கருத்துக்கள் அதிகம்.//
இந்த விஷயத்தில் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன். பலரும் படிப்பது புரிந்தாலும் பின்னூட்டங்கள் குறைவே. அதுக்குக் காரணம் நான் அதிகம் யாருடைய பதிவுக்கும் போகாதது தான். உங்கள் பதிவுக்கே பல மாதங்கள் கழித்து இப்போது தான் வர முடிந்தது. சில சமயம் சிலர் பதிவுகளைப் படித்தாலும் பின்னூட்டம் கொடுப்பதில்லை.
உங்கள் கிருஷ்ணாயனம், மற்றும் நாவலின் சுட்டி கொடுங்க. படிக்கிறேன். நன்றி.
ReplyDeleteகிருஷ்ணாயனம் அக்டோபர் 2011 என இப்போது அறிந்து கொண்டேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் G.N.B Sir
ReplyDelete