Tuesday, March 11, 2014

காதல் காதல் காதல் காதல் போயின் .( மீதிக் கதை)


காதல் காதல் காதல் காதல்  போயின் ( திடங்கொண்டு போராடு )
   -------------------------------------------------------------------------------------
என் பதிவில்/ இப்படிக்கண்டதும் காதல் என்பதில் உனக்கு உடன் பாடாஎன்று பாபு
கேட்டான். அந்த நிமிஷத்தில் அவன் வாயில் சனி இருந்திருக்க வேண்டும் என்று முடித்திருந்தேன்


( தொடர்ச்சி)



இல்லை.  கண்டதும் காதல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை
பின் என்னைச் சந்திக்க ஓடோடி வந்தாயே .. ஏன்.
உங்கள் மேல் காதல் கொண்டு ஓடி வந்தேன் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பாக முடியுமா
சந்தியா நான் ஆர்ர்வத்துடன் எழுதிக் கொடுத்த கடிதத்தை ஆவலுடன் வாசித்தாயே  அது பொய்யா.?
 வாசித்தேன் என்பது உண்மை. ஆவலுடன் வாசித்தேன் என்று எப்படி கூறுகிறீர்கள்
பாபுவுக்கு சங்கடமாக இருந்தது. அழைப்பு விடுத்ததும் முன் பின் அறியாத பெண் ஏன் என்னைப் பார்க்க வந்தாள் என்று தெரிந்து கொண்டிருக்க வேண்டாமா. கண்டவுடன் காதல் என்று எப்படி தீர்மானித்தேன் என்று மனம்புழுங்கினான் இவன்மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே உணர்ந்து கொண்ட சந்தியா
பிறகு ஏன் வந்தேன் என்று எண்ணுகிறீர்கள் இல்லையா. பெண்கள் என்றாலே உங்களுக்கு எப்படியாவது அடைந்து விடலாம் என்ற எண்ணம். அதெப்படிக் கண்டதும் காதல்வரும் அதுவும் பெயர் கூடத்தெரியாத பெண்ணைக் காதல் என்று கூறி மயக்கலாம் என்று எண்ணுகிறீர்களா?நீங்கள் யரென்றே தெரியாத நான் உங்களை எப்படி விரும்ப முடியும்?இனக் கவர்ச்சி என்பது ஆண்களுக்கே உண்டு. பெண்கள் ஆழமானவர்கள்.  ஆழ்ந்தெரியாமல் காலைவிட்டு அவதிப்படும் காலம் அல்ல இது
சந்தியா பேசப் பேச பாபுவுக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. சந்தியா கேட்டதிலும் இருந்த நியாயம் அவனை நிலைகுலைத்தது. உண்மையில் அவன் இனக் கவர்ச்சியால் ஈர்ப்பு கொண்டு சந்தியாவை நாடியிருந்தால் அவ்வளவு கவலைப் பட்டிருக்க மாட்டான் சந்தியாவிடம் தனக்கு ஏற்பட்டது புனிதமான காதல் என்று எப்படி அவளுக்குப் புரிய வைக்க முடியும்
“ சந்தியா என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாய். அது உனக்கும் தெரியும் இருமனம் இணைந்தால் திருமணம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இருமனதிலும் இணைப்பு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவல்லவா உன்னை வரச் சொல்லிக் கூப்பிட்டேன். நீ வந்திருக்காவிட்டாலும் வருந்தி இருக்க மாட்டேன். ஆனால் வந்து என் புனிதமான அன்பைக் கொச்சைப் படுத்திப் பேசுகிறாயே அதைத்தான் தாங்க முடியவில்லை “ என்று கூறிக் கண்ணீர் வடித்தான்
“ அதெப்படி பாபு இருமனம் இணைந்தால் திருமணம் என்கிறீர்கள். நீங்கள் படித்தவர் என்றே எண்ணுகிறேன் தொல்காப்பியர் காலத்திலேயே சொல்லப் பட்டதை உங்களுக்குக் கூறுகிறேன்
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
 இப்பொழுதும் இளமை வனப்பு வளமை கல்வி அறிவு எனப் பல பொருத்தங்களும் சேர்ந்த மண வாழ்வுதான் சிறக்கிறது இருமனம் இணைந்தால் திருமணம் என்பதே தவறான கான்செப்ட். நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளவே இங்கு வந்தேன். ஆனால் கண்டதும் காதல் என்று கூறி என் மயக்கம் தெளிவித்தீர்கள் குட் பை. நான் வருகிறேன்“
என்று சொல்லி அவ்விடம் விட்டகன்றாள்

அவள் அங்கிருந்து போனதும் பாபுவுக்கு இருட்டிக் கொண்டு வருவது போல் தடுமாற்றம் அவள் வராமலேயே இருந்திருக்கலாம் வந்து தன் காதலைக் கொச்சைப் படுத்திப் பேசியதை அவனால் தாங்க முடியவில்லைகடைசியில் தன் காதல் அரை அமர காதல்தானா என்று  தட்டுத்தடுமாறி வீடு போய்ச் சேர்ந்தான். சந்தியாவின் பேச்சு அவானை ஒரு முடிவுக்குத் துரத்தியது

அளவுக்கு மீறிய தூக்க மாத்திரைகளை விழுங்கி அவன் நித்திரையிலிருந்து எழவே இல்லை.....

.

(என் விளக்கம்

சிறு கதை என்பது கற்பனையில் தோன்றும் நிகழ்வுகளைச் சொல்லிப் போவது. கற்பனை என்பது கட்டுக்குள் அடங்காதது. ஆனாலும் கதைகளை சொல்லும்போது கற்பனையிலும் ஒரு யதார்த்தம் வேண்டும்.நிகழ்வுகளை குறிக்கும் போது கதாபாத்திரங்களின் மனோபாவம் வெளிப்பட்டிருக்க வேண்டும் கதைகளை இப்படித்தான் தொடங்கி இப்படித்தான் முடிக்க வேண்டும் என்ற விதிகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கதாபாத்திரங்களைப் படம் பிடித்துக் காட்டும்போது இவர்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என்று யூகிக்க இடமுண்டு. இவர்களின் நடவடிக்கைகள் இப்படியும் நடக்குமா என்பதை விட இப்படியும் நடக்கலாம் என்று சிந்தித்தே “காதல்,காதல், காதல், காதல் போயின்என்னும் என் சிறுகதையின் முடிவை நிர்ணயித்தேன், இப்படி சிந்திப்பவர் இருக்கிறார்களா என்று அறியவே மீதிக்கதை எழுத வாசக நண்பர்களைக் கேட்டுக்கொண்டேன். நான் கதையில் பாபுவை எதையும் சிந்தித்து செயல் படாத ஒரு கோழை மனம் படைத்தவனாகக் காட்டினேன். கூடவே இக்காலப் பெண்கள் யதார்த்த வாதிகள் என்றும் கோடிகாட்டினேன். கதைகளை படித்துக் காதலுக்குப் புனிதத் தன்மை தரும் இளஞன் பாபு அப்படி அது நிறைவேறப் போவதில்லை என்று தெரிந்ததும் ஒரு தவறான முடிவை எடுக்கிறான் என்றும் முடித்திருக்கிறேன்  BOYS ARE IMPULSIVE: GIRLS ARE PRAGMATIC.) 

என் கதையைப் படித்து மீதிக்கதை எழுதி அனுப்பிய அனைவருக்கும் என் நன்றிகள், வாழ்த்துக்கள்...!
திரு. பாலகணேஷ் என்ன சொல்கிறார் பார்ப்போம்.  


16 comments:

  1. ஒரு பெண் காதலிக்கவில்லை எனில் உலகமே இருண்டு விடுமா? சூரியனே உதிக்காதா? கோழை பாபு! :((((((

    ReplyDelete
  2. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ஐயா... மற்ற பதிவர்களின் முடிவுகள் மிகவும் பிடித்திருந்தது... முக்கியமாக அம்பாளடியாள் அம்மா அவர்களும், சகோதரி கீதமஞ்சரி அவர்களும்...

    காதல்,காதல், காதல், காதல் போயின்... போயினும் "எங்கிருந்தாலும் வாழ்க...!"

    ReplyDelete
  3. டிடியோட பின்னூட்டத்தைப் பார்த்ததும், இருவரின் முடிவையும் சென்று படித்தேன். கீத மஞ்சரியின் முடிவு நன்றாக இருக்கிறது. அடுத்து அம்பாளடியாள்.

    ReplyDelete
  4. மொத்தத்தில் தங்களின் உணர்வோடு ஓரளவேனும் ஒன்றிப் போயுள்ளேன்
    என்று எண்ணும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா .மிக்க நன்றி சகோதரா மிக்க நன்றி சகோதரி இருவரின் இனிய நற் கருத்திற்கும் .மிக்க நன்றி ஐயா இப் பகிர்வுக்கு என்னையும் அழைத்தமைக்கு .

    ReplyDelete

  5. வந்த இரு பின்னூட்டங்களும் என் விளக்கத்தில் நான் எழுதியவற்றையே பிரதிபலிக்கிறது girls are pragmatic, boys are impulsive. எல்லாக் கதைகளும் சிறப்பாய் இருந்தன.கதையின் முடிவு பிடித்ததா இல்லையா என்பது கேள்வி அல்ல. கதாபாத்திரங்களின் குணாதிசயப்படி இப்படியும் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதே என் முடிவு.

    ReplyDelete
  6. ஒரு கதையின் கருவை வித்தியாசமான முறையில் பதிவு செய்து நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு ஒப்புநோக்கி முடிவுகாணும் தங்களின் முயற்சி சிந்திக்கவைக்கிறது. பிறரையும் எழுதவைக்கும் தங்களுக்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  7. அழகாக முடித்துள்ளீர்கள் ஐயா. இக்கதையின் முடிவினை எழுத நல்லதொரு வாய்ப்பினை நல்கிய தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  8. ஜி எம் பி ஸார் ஆண்கள் இப்படி(க்கூட) இருக்கிறார் என்று சொல்ல வந்தாலும் இதற்காக தற்கொலை செய்துகொள்ளும் முடிவு (என்) மனதுக்கு ஏற்றதாயில்லை என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டிய கடமை எனக்கிருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்ளும் அதே நேரம் மற்றவர்கள் கற்பனைகளும் நன்றாகவே இருந்தன என்பதையும் இங்கு சுட்டிக் காட்டிக் கொள்வதோடு பால கணேஷ் என்ன சொல்லப் போகிறார் என்பதை நானும் தெரிந்துகொள்ள ஆவலாகவே இருக்கிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்! :))))

    ReplyDelete
  9. மற்ற பதிவர்களின் முடிவுகள் மிகவும் பிடித்திருந்தது
    பால கணேஷ் என்ன சொல்லப் போகிறார் என்பதை நானும் தெரிந்துகொள்ள ஆவலாகவே இருக்கிறேன்

    ReplyDelete
  10. கதையின் முடிவு கண்டு கொஞ்சம் அதிர்ச்சி + வருத்தம். தாங்கள் குறிப்பிட்டுள்ள குணாதிசயங்களின் படி தங்கள் கதையின் முடிவு ஏற்கத்தக்கதே. தொல்காப்பியத்தோடு இன்றைய யதார்த்தத்தையும் விளக்கும் பெண்ணின் பேச்சு ரசிக்கத்தக்கதாக உள்ளது. பாராட்டுகள் ஐயா.

    சும்மா ஒரு மாறுதலுக்காக நான் அந்த மாதிரி ஒரு முடிவை எழுதினேன். ஆனால் பலரும் அதை ரசித்திருப்பதை பின்னூட்டங்கள் கண்டு அறிகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி நண்பர்களே.

    ReplyDelete

  11. மீதிக்கதை குறித்து வந்த பின்னூட்டங்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. கதையின் முடிவு குறித்து நான் விளக்கம் எழுதியும் இந்த மாதிரிப் பின்னூட்டங்கள் சற்று சிந்திக்க வைத்தன. மீண்டும் ஒரு முறை என் விளக்கத்தைப் படித்துப் பாருங்கள்
    / இவர்களின் நடவடிக்கைகள் இப்படியும் நடக்குமா என்பதை விட இப்படியும் நடக்கலாம் என்று சிந்தித்தே “காதல்,காதல், காதல், காதல் போயின்” என்னும் என் சிறுகதையின் முடிவை நிர்ணயித்தேன், இப்படி சிந்திப்பவர் இருக்கிறார்களா என்று அறியவே மீதிக்கதை எழுத வாசக நண்பர்களைக் கேட்டுக் கொண்டேன்/ஆனால் வித்தியாசமாகச் சிந்திப்பதையோ மாறான விதத்தில் முடிவதையோ வலையில் வாசகர்கள் விரும்புவதில்லை என்று புரிகிறது. இந்தக் கதைக்கு மீதிக்கதை எழுதியவர்கள் மிகவும் சிறப்பாக முடித்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை என்ன..? பெரும்பாலோர் கன்வென்ஷனலாகவே சிந்தித்து எழுதி இருக்கிறார்கள். இவர்கள் எழுத்தில் நான் சொன்னது சரியே ( boys are impulsiv: girls are pragmatic )என்பது தெளிவாகிறது. எல்லோர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  12. கதையின் முடிவில் அனைவருக்கும் உடன்பாடு இருக்க வேண்டும் என்ற நியதி ஏதும் இல்லை. கதை என்பதே ஒருவருடைய மனதில் எழும் கற்பனைதான். அதில் வரும் கதாபாத்திரங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கதாசிரியர் விரும்புகிறாரோ அப்படித்தான் செய்வார்கள். சிறுகதைகளைப் பொருத்தவரை துவக்கமும் முடிவும் எழுதுவதற்கு முன்பே முடிவு செய்யப்படுபவை. உங்களுடைய பார்வையில் நாயகன் இப்படித்தான் முடிவெடுத்திருப்பான். ஆனால் மற்றவர்கள் பார்வையில் இருந்து இது மாறுபடலாம். அதில் தவறேதும் இல்லை. எது சரி எது தவறு என்பது அவரவர் பார்வையில் உள்ளது.

    ReplyDelete
  13. boys are impulsiv: girls are pragmatic//

    அப்படி ஜெனரலைஸ் செய்துவிட முடியாது. பெண்களிலும் இம்பல்சிவாக முடிவெடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். என்னுடைய அனுபவத்தில் பல பொருத்தமில்லாத காதல்களையும் திருமணத்தையும் பார்த்திருக்கிறேன். சேரனின் ராமன் தேடிய சீதையிலும் ஒரு கதாபாத்திரம் வருமே. நிஜவாழ்க்கையில் தான் காணும் நபர்களை வைத்தே ஒரு கதாசிரியன் தன் கதைகளுக்கான பாத்திரங்களை வடிக்கிறான். உங்கள் கதையில் வருபவள் ப்ராக்ட்டிகலான பெண். அவ்வளவே. ஆனால் அனைத்துப் பெண்களுமே அப்படித்தான் என்ற முடிவுக்கு வருவது சரியல்ல என்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete
  14. கதைக்காக கூட தற்கொலை வேண்டாம் என்பது என் கருத்து. இந்த சந்தியா இல்லையெனில் இன்னொரு பெண் பாபுவை விரும்பிவிட்டுப் போகிறாள்.
    பார்க்கலாம் பால்கனேஷ் சார் என்ன தீர்ப்பு வழங்குகிறார் என்று பார்ப்போம்.
    நான் லேட்டா? பரிசுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாரா?

    ReplyDelete
  15. என்னதான் கதை என்றாலும் தற்கொலை முடிவு கொஞ்சம் வருத்தம் தான்......

    ReplyDelete
  16. வித்தியாசமான தங்களின் சிந்தனை
    சுவையான பல கதைகளாகப் பரிணமித்து ரசிக்கவைக்கிறது..!

    ReplyDelete