படித்து அறிந்ததும் பார்த்து ரசித்ததும்
---------------------------------------------------
படித்ததில் அறிந்து கொண்டது
----------------------------.
ஆய கலைகள்64 என்கிறார்களே, அவையாவன—அக்கர இலக்கணம்,-இலிகிதம்,-கணிதம்,-
வேதம்,-புராணம்,- வியாகரணம் ,-நீதி சாஸ்திரம்,-ஜோதிட சாஸ்திரம்,-தர்ம சாஸ்திரம்-
யோக சாஸ்திரம், - மந்திர சாஸ்திரம்,-சகுன சாஸ்திரம்,-சிற்பசாஸ்திரம்,-வைத்திய
சாஸ்திரம் ,- உருவ சாஸ்திரம்,- இதிகாசம்,- காவியம்,-அலங்காரம் ,- மதுரபாடனம்,-
நாடகம்,- நிருத்தம்,-சத்த பிரமம்,-வீணை,- வேணு,- மிருதங்கம்,-தாளம்,- அத்திரப் பரீக்ஷை,-
கனகப் பரீக்ஷை,-இரதப் பரீக்ஷை,- கஜபரீக்ஷை,-அஸ்வப் பரீக்ஷை,- ரத்தினப் பரீக்ஷை,-
பூபரிக்ஷை,-சங்கிராம இலக்கணம்,- மல்ல யுத்தம்,- ஆகருக்ஷணம்.-உச்சாடனம்,-
வித்துவேஷணம்,-மதன சாஸ்திரம்,-மோகனம்,- வசீகரணம்,-இரசவாதம்,- காந்தர்வ வாதம்,-பைபீல
வாதம்,- கௌத்துகவாதம்,-தாது வாதம்,-காருடம்,- நட்டம்,- முட்டி,-ஆகாயப்
பிரவேசம்,-ஆதாயகமனம்,- பரகாயப் பிரவேசம்,-அதிரிச்யம்,- இந்திரஜாலம்,- மகேந்திர
ஜாலம்,-அக்னிதம்பம்,- ஜலஸ்தம்பம்,- வாயுத்தம்பம்,-திட்டித் தம்பம்,-
வாக்குத்தம்பம்,- சுக்கிலத்தம்பம்,-கன்னத் தம்பம்,- கட்கத் தம்பம்,- அவத்தைப்
பிரயோகம்
சத்தியமாகச் சொல்கிறேன், பெயர்கள்தான் எழுதிவிட்டேனே
அல்லாமல் அவை என்ன என்று தெரியாது ‘அபிதான சிந்தாமணியில்’ கலைஞானம் 64
என்னும் தலைப்பில் கொடுக்கப் பட்டவை என்று சொல்லப் படுகிறது
படித்ததில் ரசித்தது,
--------------------
கேள்வி:- இரண்டுபேர் சிம்னியில் இருந்து இறங்கி
வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறதுமற்றவருடைய முகம் அழுக்காக
இருக்கிறது. இருவரில் யார் முகத்தை கழுவுவார்கள். ?
பதில்:- அழுக்கான முகத்தோடு இருப்பவரே கழுவுவார்,
தவறு,! தூய்மையான முகத்தை உடையவரே கழுவுவார்.
யோசித்துப்பார். அழுக்கான முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன்
இருப்பவரைப்பார்த்து தன் முகமும் அதேபோல் இருப்பதாக நினைத்துக் கொள்வார். சுத்தமாக
இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வார்.எனவே சுத்தமான முகம்
உடையவரே முகத்தைக் கழுவுவார்...!
மிகவும் சாமர்த்தியமான பதில்தான் இன்னொரு கேள்வி கேளுங்கள்...
கேள்வி:- இரண்டுபேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள்.
ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறதுமற்றவரது முகம் அழுக்காக இருக்கிறது யார்
முகத்தைக் கழுவுவார்.?
பதில்:- மீண்டும் அதே கேள்வியா?இதற்கான பதில்
தெரிந்ததுதானே. தூய்மையான முகத்துடன் இருப்பவர்தான் கழுவுவார்.
தவறு, .! இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள். ஒரு
சின்ன லாஜிக்கை நினைத்துப் பார். அழுக்கு முகத்துடன் இருப்பவர் சுத்தமான
முகத்துடன் இருப்பவரைப் பார்ப்பார். எனவே தனது முகமும் சுத்தமாக இருப்பதாக
நினைப்பார். சுத்தமான முகத்தை உடையவர் ச்ழுக்கான முகமுடையவரைப் பார்த்து தன்
முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக் தன் முகத்தை கழுவுவார். அதைப் பார்த்து
அழுக்கான முகமுடையவரும் தன் முகத்தைக் கழுவுவார்.எனவே இருவருமே தங்கள் முகத்தைக்
கழுவுவார்கள்.
நான் இதை யோசித்துப்பார்க்கவில்லை. எனது தர்க்கத்தில்
இப்படிஒரு தவறா.?
மீண்டும் கேள்வி கேளுங்கள்
கேள்வி:- இரண்டு பேர் சிம்னியில் இருந்து இறங்கி
வருகிறார்கள்.ஒருவர்
முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவருடையது அழுக்காக
இருக்கிறது. யார் முகத்தை கழுவுவார்.?
பதில்:- மீண்டும் அதே கேள்வி....! இருவருமே முகத்தைக்
கழுவுவார்கள்.
தவறு. இருவருமே கழுவ மாட்டார்கள். அழுக்கான முகமுடையவர்
சுத்தமான முகம் இருப்பவரைப்பார்த்துத் தன் முகமும் சுத்தமாக இருப்பதாகநினைத்துக்
கொள்வார். சுத்தமான முகமுடையவர் மற்றவரைப் பார்த்துத் தன் முகமும் அழுக்காக இருப்பதாக
நினைத்துக் கொள்வார். ஆனால் அழுக்கான முகமுடையவர் தன் முகத்தைக் கழுவாதது
பார்த்துத் தானும் கழுவமாட்டார். எனவே இருவருமே கழுவ மாட்டார்கள்
தயவு செது இன்னொரு முறை தேர்வு வையுங்கள்
கேள்வி:- இரண்டுபேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள்.
ஒருவர் முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவர் முகம் அழுக்காக இருக்கிறதுயார்
முகத்தைக் கழுவுவார்கள்.?
பதில்:- இருவருமே கழுவ மாட்டார்கள்....!
தவறு.இரண்டுபேர் சிம்னியிலிருந்து கீழே வரும்போது ஒருவர்
மட்டும் தூய்மையான முகத்துடனும் மற்றவர் அழுக்கான முகத்துடனும் எப்படி இருக்க
முடியும் .எனவே கேள்வியே முட்டாள்தனமானது. முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில்
சொல்ல முயன்றால் விடைகளும் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்.
யூத மதத்தைச் சார்ந்த
ராபி ஷ்வார்ட்ஸிடம் ஸீன் கோல்ட்ஸ்டீன் என்ற 20 வயது இளைஞன் தான் தத்துவத்தில் பட்டம் பெற்றிருப்பதாகவும்
சாக்ரடீஸின் தர்க்கத்திலும் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதாகவும் கூறி தால்மத்
பற்றிப் படிக்கக் கருதுவதாகவும் தெரிவித்தான்
.
அதற்கு ராபி வைக்கும் பரிசோதனையில் வெற்றி பெற்றால் அதைச்
சொல்லித் தருவதாகக் கூறி வைத்த பரீட்சையே மேலே படித்தது.
உண்மையைத் தேடுவதுதான் முக்கியமே தவிர விடையைக்கண்டுபிடிப்பது முக்கியமல்ல. அண்மையில்
இறையன்பு அவர்கள் எழுதி இருந்ததைப் படித்ததில் இருந்து
.
இன்னொரு பகுதி
காலை நேரத்தில் ஒருவர் புத்தரிடம் வந்து ”கடவுள்
இருக்கிறார் அல்லவா “ என்று கேட்டார்.
புத்தர் ” இல்லை” என்றார்
மதியம் ஒருவர் வந்து கேட்டார்” கடவுள்
இல்லைதானே”
புத்தர் “ இருக்கிறார் “ என்று கூறினார்.
மாலையில் ஒருவர் வந்து “ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று
எனக்குத் தெரியவில்லை “ என்றார்.
உடனே புத்தர் “ நீ சரியான கேள்வியைக் கேட்கிறாய்” என்றார்.
புத்தருக்கு அருகில் இருந்தவருக்கு குழப்பமாகி விட்டது. “
நீங்கள் ஒரே கேள்விக்கு மூன்று விதமான பதில்களைச்சொல்கிறீர்களே ஏன் “ என்று
கேட்டார்.
கேள்வி கேட்டவர்களுக்கு ஏற்ற மாதிரி பதில் இருந்தது
“என்றார் புத்தர்.
“காலையில் வந்தவர் கடவுள் இருக்கிறார் என்று ஏற்கனவே முடிவு
செய்து கொண்டு வந்து என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். நான்’ இல்லை’ என்று சொன்னேன்.
அதனால் அவர் சுயமாகத் தேடத் துவங்குவார். மதியம் வந்தவர் ‘கடவுளில்லை’ என்று முடிவு செய்துவிட்டு
என்னிடம்வந்து கேட்டார்..அவரிடம் இருக்கிறார் என்று சொன்னால்தான் தானாகத் தேடலைத்
தொடங்குவார். மூன்றாம் நபரோ ஏற்கனவே தேடிக்கொண்டிருக்கிறார் எனவே அவர் பார்வை
சரியானது என்று விளக்கினேன். கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.கேள்வி
கேட்பவரைப் பொறுத்தே பதில் அளிக்கிறேன் “ என்றார்.
கல்வி படிப்பு தேர்ச்சி, மதிப்பெண்கள் இவை பற்றிய கண்ணோட்டங்கள் காணொளியில் கண்டு ரசித்தது.
ஆசிரியர்களும் பெற்றோர்களும் உடன் படுகிறார்களா.? படிக்காதவர் எல்லோரும் மேதைகள் ஆக முடியுமா.?
படிப்பதற்கு மிக, மிக சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.
ReplyDeleteவியக்கவைத்த ரசனைகள்..
ReplyDeleteஇறையன்புவின் எழுத்துப் பகிர்வு பிரமாதம். 64 கலைகள் - தலை சுற்றுகிறது. எதிர்பார்க்கும் பதிலைச் சொல்வது நல்ல குருவுக்கு அழகா! :)))
ReplyDeleteநல்ல சிந்தனை.
ReplyDeleteஆகா
ReplyDeleteஒரே கேள்விக்கு
எத்தனை பதில்கள்
அருமை ஐயா
நன்றி
ஒரே கேள்விக்கு பல பதில்களை கொடுத்து குழப்பி கடைசியில் முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயன்றால் விடைகளும் முட்டாள்தனமாகத்தான் இருக்கும் என்று தெளிவுபடுத்திவிட்டீர்கள்.
ReplyDeleteஇரண்டு காணொளிகளும் சிந்திக்கவைத்தன. பகிர்ந்தமைக்கு நன்றி.
ஐயா நீங்களும் ஒரு பத்து கேள்விகள் கொண்ட ஒரு தொடரை ஆரம்பியுங்கள்...
ReplyDeleteஅதானே பார்த்தேன். .என்னடா இது.. கேள்வியே தப்புனு இன்னும் வரலியேனு கவனிச்சா.. வந்தது.
ReplyDeleteமேதை என்பதற்கான பொருள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலான அறிவைப் பெறுவது - படிக்காதவர்கள் மேதை ஆவது மிக மிகக் கடினம். படிக்காதவர்கள் என்பது புத்தகம் எடுத்து படிக்காதவர்கள் என்ற பொருளில் அல்ல. தொழிலில் வித்தை கற்றுக் கொள்வதும் படிப்பு தான். ஆனால் படிக்காமல் சோம்பித் திரிபவர்கள் மேதையாவது இயலாத செயல் - சோம்பேறித்தனத்தில் வேண்டுமானால் மேதையாகலாம் :-)
ReplyDelete
ReplyDelete@ டி.பி.ஆர். ஜோசப்
அதற்குத்தானே முயற்சி எல்லாம். பாராட்டுக்கு நன்றி சார்.
ReplyDelete@ டி.பி.ஆர். ஜோசப்
அதற்குத்தானே முயற்சி எல்லாம். பாராட்டுக்கு நன்றி சார்.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி.
/ வியக்க வைத்த ரசனைகள்/ நான் ரசிப்பது பலரும் ரசிப்பார்கள் என்னும் நம்பிக்கை வீண்போகவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்
ReplyDelete@ ஸ்ரீராம்
நான் ரசித்ததைப் பகிர்ந்தேன் எதிர்பார்க்கும் பதிலைச் சொன்னால் அவர் குருவாக மாட்டாரே. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஸ்ரீ.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
பாராட்டுக்கு நன்றி சார்.
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
/ ஒரே கேள்விக்கு எத்தனை பதில்கள்
/ ஆனால் குரு திருப்தி அடையவில்லையே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
ReplyDelete@ வே. நடனசபாபதி.
ரசித்துப் படித்ததற்கு நன்றி ஐயா.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
எனக்கும் தொடர்பதிவுகளுக்கும் ராசியில்லை டிடி. உறவுகள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி விருப்பமுள்ளவர்கள் தொடரலாம் என்று எழுதி இருந்தேன். யாருமே சீந்தவில்லை.! வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ A.Durai
என் முந்தைய பதிவையும் படித்து இருக்கிறீர்கள் என்று தெரிகிறது . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDelete@ அப்பாதுரை
ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது” படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு. படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு.” வந்து க்ருத்திட்டதற்கு நன்றி சார்.
பகிர்வுகள் அனிஅஹ்த்டும் அருமை ஐயா!
ReplyDeleteஇது நானும் படிச்சிருக்கேன். :) காணொளி தெரியலை. பின்னர் முயன்று பார்க்கிறேன்.
ReplyDelete'அபிதான சிந்தாமணி'யின் ஆசிரியர்,தமிழாசிரியர் ஆ.சிங்காரவேலு முதலியார்.
ReplyDeleteஇவர் இந்த நூலை பதிப்பிக்க பட்ட பாடு, கண்ணீரை வரவழைக்கும் வரலாறு. ஒருவழியாக 1910-ல் முதல் பதிப்பு கண்டது.
இன்றும் ஆத்மார்த்தமாக எழுதுவோர்
தம் படைப்புகளை அச்சில் காண படும் சிரமங்கள் சொல்லி மாளாத கதைகளாய்த் தான் தொடருகின்றன.
ReplyDelete@ ராஜி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
காணொளியையும் பாருங்கள். அவை சிந்திக்க வித்திடும். வருகைக்கு நன்றி மேடம்
ReplyDelete@ ஜீவி
அபிதான சிந்தாமணியின் ஆசிரியர் தமிழாசிரியர் ஆ, சிங்காரவேலு முதலியார் என்னும் செய்தி தந்ததற்கு நன்றி சார்.
Dear Admin,
ReplyDeleteYou Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/
To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/
நன்றிகள் பல...
நம் குரல்
ஐயா! ரொம்பவே ரசித்துப் ப்டித்தோம் தங்களின் பதிவை! அதுவும் இறையன்பு அவர்களின் பகிர்வுகள் பல விசயங்களைக் கற்றுத் தருகின்றது! கேள்விகளுக்கு எப்படிப் பதில் அளிக்கவேண்டும் என்று! நல்ல ஒரு பாடம் ஐயா! காணொளிக்ள் நல்ல சிந்தனையைத் தூண்டுகின்றன.....
ReplyDeleteஆய கலைகள் 64?!! ஐயா ....நாங்கள் ரொம்பச் சின்னவங்க....(புத்தியில்) 64 ந்னு தெரியும் ஆனால் அவை முழுவதும் இன்றுதான் தெரிந்து கொண்டோம்...ஆனா....எங்கள் சிறிய புத்திக்கு எட்டா கனிகள்!
ReplyDelete
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
ஆசிரியரான உங்களுக்கு காணொளிகளில் சொல்ல முயன்றிருப்பது நன்கு புரிந்திருக்கும். ஆய கலைகள் 64-ல் பலருக்கும் அவர்கள் அறியாமலேயே பல கலைகள் தெரிந்திருக்கும். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.
ஆழமான பதிவை வழங்கினீர்கள் ஐயா! மிகவும் நன்றி!
ReplyDeleteமாணவர்களுக்கு வாழ்க்கைப் பாடத்தில் தேர்ச்சிபெறக் கற்றுத்தராத எந்தக் கல்வியும் பயனற்றதே. பகிர்ந்த கருத்தும் காணொளியும் மிகவும் அருமை. நன்றி ஐயா.
ReplyDelete64 கலைகளைப் பற்றி அறிந்தோம். நன்றி. புத்தரைப் பற்றிய பதிவு நன்கு சிந்திக்க வைத்தது. மொத்தத்தில் சுவாரஸ்யமான பதிவு.
ReplyDelete