திருமணம் லாட்டரியாகிறது
-----------------------------------------------
திருமணம்பற்றிய கருத்துகள் சில பதிவுகளில் காண்கிறேன் பல வகை திருமணங்களுக்குச்சென்று
வந்திருக்கிறேன் அவை பற்றி எழுதியுமிருக்கிறேன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதுபற்றி கில்லர்ஜியும்
அண்மையில் எழுதி இருந்தார் இது பற்றி அலசும்
முன் பண்டை காலத்தில் சங்க இலக்கியம் தொல்காப்பியத்தில்
கூறி இருப்பது இப்போது நினைவு கொள்ளத்தக்கது
திருமணம்
பண்டைக்காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில்
அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள்
நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.
”பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு,
நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது
வகையே” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
இப்பொழுதும்,
இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான்
திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே
நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர்
,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு
வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத்
திருமணத்தில்ACCOUNTABILITY
---GUARANTEED என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில்
பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில்
விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க
வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஆனல்
இந்தக்காலத்தில் பெண்கள் படித்து வேலைக்குப் போகிறார்கள் ஃபைனான்ஷியல் சுதந்திரம்
அடைந்து விட்டதாக எண்ணுகிறார்கள் திருமணத்தில் அவர்களது ஒப்பினியனும் இருக்க
வேண்டும் என்று நினைக்கிறார்கள் நல்லது/
ஆனால் அது சில நேரங்களில் அத்து மீறி போவதையே இப்பதிவில் சொல்ல வருகிறேன் இப்போதெல்லாம்
திருமணம் ஒரு லாட்டரி யாகவே இருக்கிறது
ஒரு
சில பதிவுகளில் மணப் பெண்கிடைப்பதே அரிதாகக் கூறுகிறார்கள் ஒருவனுக்கு மணம்பேசும் வயது வந்து விட்டால் அவனுக்கான பெண் எங்கோ பிறந்திருக்கவேண்டும்
நானறிந்த
சில சம்பவங்கள் திருமணமென்பதையே கேலிக் கூத்தாக்கி விட்டதைக் காட்டுகிறது
என்
நண்பரொருவர் அவரது மகனுக்குக் கல்யாணம்
என்று பத்திரிக்கை கொடுத்திருந்தார்
ஆனால் என்னால் போக முடியவில்லை
பையன் படித்து அமெரிக்காவில் வேலையில் இருந்தான் வழக்கப்படி பெண் பார்த்து
சம்மதம்கூறி இரு வீட்டாரும் ஒப்புக் கொண்டபடி மணம் நிச்சயமாயிற்று திருமண நாளுக்கு முந்தைய தினம் பெண் வீட்டை விட்டு ஓடிப் போயிருந்தாள்
எல்லோருக்கும் வருத்தமும் அவமானமும் நல்ல
வேளைநான் அந்தத் திருமணத்துக்குச்செல்ல
வில்லை
இன்னொரு
திருமணத்தில் திருமணம்முடிந்து பெண் கணவனுடன்
அமெரிக்க சென்றாள் ஆனால் அமெரிக்காவில் அவளது காதலன் வந்திருந்து அவளைக் கூட்டிக் கொண்டுபோய் விட்டான் இந்த திருமணம்
அவளுக்கு வீசா பெற்றுக்கொடுத்ததுதான்பலன் அதற்காகவே அந்தத் திருமணம் என்றாளாம்
அண்மையில்
ஒரு கல்யாணம் நடந்தது மணமகன்
ஏகப்பட்டஎதிர்பார்ப்புகளுடன் மனை
வியுடன் குடித்தனம் செய்ய ஒரு மூன்றுபடுக்கயறையுடன் கூடிய வீடு வாங்கி
இருந்தான் அவளுடன்சில நாட்கள் குடித்தனமும்
நடத்தினான் ஒரு நாள் அவன் மனைவி
ஒரு கடிதம் எழுதி வைத்து அவள் கொண்டுவந்திருந்த் நகைகளைக் கேட்டு வந்தாள்
அவள் ஏற்கனவே ஒருவனுடன் காதலில் இருந்ததாகவும் அங்கே செல்லப் போவதுமாய்க் கூறி
இருந்தாள் பெண்ணின் தாய்க்கு
இந்தவிஷயம்முன்பேதெரியுமாம் பையனின் கல்யாணக்
கனவுகள் தகர்ந்தது
இன்னொரு
திருமணம் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்பட்டது கல்யாணத்துக்கு முன்பே
மணப் பெண்ணும்பையனும் நன்கு பேசிப்பழகி
இருக்கிறார்கள் திருமணம் முடிந்த சிலநாட்களிலேயே பெண் விவாகரத்து கோரி
இருந்தாள் கணவனுக்கு மனநிலை சரி இல்லை
என்று கூறிவிவாக ரத்து கேட்டாள் இத்தனைக்கும்
அவனுடன் திருமணத்துக்கு முன்பே பேசிப்பழகி இருந்தாள் சிலமாத காத்திருப்புக்குப்பின் விவாகம் ரத்தானது அந்தமணமகன் இப்போது
இன்னொருபெண்ணை மணமுடித்து அமெரிக்காவில் வேலையில் இருக்கிறான்
இன்னும்
எத்தனையோ திருமணங்கள் நினைவுக்கு வருகிறது
இதையெல்லாம்
பார்க்கும்போது இப்போதைய திருமணங்கள் ஒரு லாட்டரி என்றே நினைக்கத் தோன்றுகிறது
.
ஆமாம் ஜி.எம்.பி சார்.. சில (சில) திருமணங்கள் லாட்டரிமாதிரிதான் ஆகிவிடுகிறது. காரணங்கள்தான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
ReplyDelete'ஓடிப்போவது', 'திருமணம் முடிந்ததும் கழன்று கொள்வது' போன்றவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருமணம் நிச்சயம் செய்யும்போதே இந்தத் தைரியம் வந்திருக்கலாமே. பெண்தான் குற்றவாளியாக எனக்குத் தோன்றுகிறாள். அவளின் அப்பா செய்த தவறுக்கு, சம்பந்தமே இல்லாதவர்களைத் தண்டிப்பது எந்த விதத்தில் சரி?
அப்பாவுக்கே தெரியாது என்றால்? யாராலுமேற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லையே
Deleteகாலம் கலிகாலம்.
ReplyDeleteஎப்படியோ சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான்
Deleteஇதுக்கு மூணு தரம் கருத்தைக் கொடுத்தும் போகவில்லை. இணையம் பிரச்னை! பொதுவாக ஜாதகம் பார்த்தோ, பார்க்கமலோ காதல் திருமணமோ எதுவானாலும் பின்னால் பிரிவதைப் பார்க்கிறோம். எங்க உறவுகளிலேயே சில பெண்கள் காதல் திருமணம் செய்தும் பிரிந்திருக்கின்றனர். ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்தும் பிரிந்திருக்கின்றனர். அவரவருக்கு விதித்த விதி என்றே இதைச் சொல்ல வேண்டும்.
ReplyDeleteஎனக்கு என்னவோ பெண்கள் அதிக சுதந்திரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது
Deleteசமீப காலமாக இந்த மணமுறிவுகள் அதிகமாகிட்டே போகுது .. ஆரம்பத்திலேயே சொல்லலாமே இந்த பெண்கள் .சரி அப்பா அம்மா மிரட்டினாங்க அது இதுன்னு சொன்னாலும் மணமேடை வந்து மற்றொரு குடும்பத்தை அவமானப்படுத்துவது நியாயமா :(
ReplyDeleteஇப்போதான் போன் முதல் பல விஷயங்கள் இருக்கே திருமணம் நிச்சயமானதும் சம்பந்தப்பட்டோருடன் பேசி தீர்வு காணலாம் .
ஆனால் இதைத்தானே சினிமா டிவி சீரியல்ஸ் மற்றும் இன்ஸ்டன்ட் புரட்சியாளர்களும் செய்கிறார்கள் :( அதை முன்னோடியாக role models aaga பார்த்து அரைகுறைகளும் கெட்டுப்போறாங்க .யாருக்கும் நிதானமாக சிந்திக்க அவகாசமில்லை .
பலரும் வாழ்க்கையின் வால்யூஸ் பற்றி நினைப்பதில்லை
Deleteஆமாம். நானும் சில சம்பவங்கள் அறிவேன்.
ReplyDeleteஅறிந்ததைதான் எழுதுகிறேன்
Deleteபெண் சுதந்திரம் என்ற பெயரில் பலரும் முறையற்ற பாதையில் செல்கின்றார்கள் ஐயா.
ReplyDeleteஆணோ, பெண்ணோ விருப்பம் இல்லையெனில் முன்பே கூறுவதே உத்தமம். இதில் சில பெண்களுக்கு திருமணம் முடிந்த பிறகே பேசும் தைரியம் பிறக்கிறது.
பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி ஐயா.
மணம் ரென்பது இருமனம் இணைவதுதானே இணைய வாய்ப்புஇல்லாதபோது டிருமணமென்னும்நாடகம் எதற்கு
Deleteஇதில் நீங்கள் கூறியிருக்கும் சம்பவங்கள் அத்தனையும் நானும் கேள்விப்பட்டேன், இலங்கைப் பெண் ஒருவரும் ரெஜிஸ்டர் பண்ணி.. திருமணம் அல்ல, கணவனின் ஸ்பொன்சரில், கனடா வந்திறங்கி எயார்போர்ட்டில் வரவேற்கப் போன கணவன் பார்த்து நிற்க.. மற்றப்பக்கம் பார்த்தபடி காதலனோடு போய் விட்டாவாம்... ஆனா இப்படி அநியாயம் செய்வோர் எல்லாம் எப்படி நல்லா இருக்க முடியும்.. கடவுள் அவர்களுக்கு தீர்ப்புச் சொல்வார்,.
ReplyDeleteஆனா திருமணம் நிட்சயிக்கப்பட்ட பின் ஓடிப்போவது பற்றியும் நிறைய அறிகிறேன்.. அதுக்கு முழுக்க முழுக்க காரணம் பெற்றோரே... பெற்ரோருக்கு எவ்ளோ சொல்லி அழுது குழறியும் அவர்கள் கேட்காமல் சட்டுப்பட்டென இன்னொருவரை ஆயத்தம் செய்து திருமணத்துக்கு திகதி குறித்து விட்டால் அப்பெண் என்ன செய்வார்.. ஓடுவதைத்தவிர வேறு வழி?..
ஒரு தப்பான காதல் உருவாகி விட்டதெனில்.. அதை நிறுத்தச் சொல்லி .. கால அவகாசம் கொடுக்க வேண்டும்... காலம் போயும் அக்காதல் மாறவில்லை எனில் கையை விட்டுவிட வேண்டும்.. கட்டாயதிருமணம் செய்து வைத்தால்.. பின்பு எப்போதாவது காதலனைக் கண்டால்கூட மனம் பிரண்டு விடும் வாய்ப்பு அதிகம்.
இதுக்கெல்லாம் காரணம் பெண்ணின் பெற்றோர் ஒளிச்சு மறைச்சு, பெண்ணையும் பேச விடாமல் திருமணத்தை முடித்து வைக்க வெளிக்கிடுகிறார்கள்... நிறையச் சொல்லலாம் வேண்டாம் இத்தோடு நிறுத்தி விடுகிறேன்...
ஓடிப்போகும் கேஸ்களில் வேண்டுமானால் பெற்றோரின்குறை இருக்கலாம் ஆலால் ப்ளாண்ட் செயல்கள் அவர்களின் அதீத சுதந்திரம் எடுத்துக் கொள்வதைக் காட்டுகிறது காதல் இருந்ததென்றால் போராடி இருக்கவேண்டும்
Delete/இதையெல்லாம் பார்க்கும்போது இப்போதைய திருமணங்கள் ஒரு லாட்டரி என்றே நினைக்கத் தோன்றுகிறது//
ReplyDeleteசொல்லப்பட்ட சம்பவங்களில் மணமகளே முறிவிற்கு காரணம் என தோன்றுகிறது. காரணிகள் என்று எடுத்தால் அத்தகு பெண்களின் வளர்ப்புமுறை சூழல்களில் இருந்து அவர்கள் தேர்ந்து எடுக்கும் கருத்துக்கள்/அறிவுரைகள் போன்றவைதான்.
இதில் எதுவும் லாட்டரியின் பண்புகளோடு தொடர்பு உடையாதாக தெரியவில்லை.
கடமைகளை விட உரிமைகட்கு (அவை நியாயமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ) முன்னுரிமை கொடுப்பதும், தான் என்ற கர்வமும்தான் அடிப்படை காரணிகள்.
பெரும்பாலான விவாக ரத்துகள்/ முறிவுகள் தவிர்க்க முடியாதவை அல்ல,
லாட்டரி என்பது வாழ்க்கையில் எடுக்கும்சான்ஸ் போல ஆகிவிட்டதுஎன்பதை குறிக்கவே நினைத்தது
Deleteஇன்றைய தேதியில், நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகளில் அதிகமானவை விவாகரத்து வழக்குகள் என்று அண்மையில் படித்தேன் வேதனை
ReplyDeleteதிருமணங்கள் லாட்டரிபோலத்தான் ஆகிவிட்டன
மனமொவ்வாத திருமணங்கள் என்றே கூற வேண்டும்
Deleteஉண்மைதான் ஐயா. தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டு, பிறரையும் ஏமாற்றும் ஒரு நாடகமாகவே அமைகிறது தற்போது.
ReplyDeleteதங்களையாரோ ஏமாற்றுகிறார்கள் என்னும்நினைப்பே அவர்களின் செயல்களுக்குக் காரணம் என்பதுபோல் இருக்கிறது
Deleteபொருந்தா திருமணங்கள் அதிகரிச்சுடுச்சான்னு தெரில. முன்னலாம் அப்பா , அம்மா, குழந்தை, குடும்பம், கௌரவம்ன்னு எதேதோ காரணங்களுக்காக சேர்ந்திருந்தாங்க,
ReplyDeleteஇப்ப, தனிமனித சுதந்தரம் தேவை அதிகமாயிட்டதால விவாகரத்தும் அதிகமாகிடுச்சு
விவாக ரத்தாவது தேவலை ஆனால்திருமணபந்தத்தில் ஈடுபட்டு விட்டு ஏமாற்றுவதற்குபெயர் பெண்சுதந்திரமா தெரியவில்லை
ReplyDeleteநீங்கள் சொன்ன சம்பவங்களை ஒரு ஆண் செய்திருந்தால் டிவி செய்தித்தாள் என்று செய்தி வந்து முகநூலில் போராளிகள் பெண்ணுக்கு வரிந்துகட்டிக்கொண்டு வந்திருப்பார்கள்.
ReplyDeleteஅதே வேலையை பெண் செய்தால் அவள் பாரதி கண்ட புதுமைப்பெண் என்று கொடி பிடிப்பர்ர்கள்.
ஆணோ பெண்ணோ இப்படி திருமனதின்போதோ அதன் பிறகோ திட்டமிட்டு ஏமாற்றுகிறவர்களை தண்டிக்க ஒரு சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் சில பேராவது திருந்துவார்கள்.
மனம் விரும்பாததைக் கட்டாயப் படுத்த முடியாது
Deleteஇதைப்போன்ற விஷயங்களை நானும் கேள்விப் படுகிறேன். உறவினர் ஒருவர் இப்போதெல்லாம் திருமணங்களில் மொய் எழுதவே தயக்கமாக இருக்கிறது. நாம் கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து பரிசுகள் வாங்குகிறோம். அதை வாங்கி கொள்பவர்கள் சேர்ந்து வாழாமல் பிரிந்து விட்டால்...? எனறார்.
ReplyDeleteஅவரவர்க்கு அவரவர் கவலை
Deleteநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாபா கோவில் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கிறதே அதுவா?
ReplyDeleteஅது வேறு பதிவில் உள்ள கோவில் பழைய மாமல்ல புரம்சாலையில் இருக்கிறது
Delete