கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்
===================================
நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன் இருக்கும் வரை பதிவிடுவது கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக முடிக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம் என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும் கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும்
கட்சி 18
இடம் குமரேசன் வீடு
பாத்திரங்கள் அருணா குமரேசன்
மாணிக்கம் சந்துரு
கும---- சந்துரு அருணா அருணா (பதில் ஏது மில்லாத போது அங்கு வரும் அருணாவைப்பார்த்து)வாம்மா
வா பணக்கார வீட்டுப்பெண் என்பதை காட்டிவிட்டாயே என்பேச்சுக்கு அவ்வளவு
மதிப்பு உனக்கு இங்கே இடம் கிடையாது
அருணா --- முதல்ல என்ன என்று சொல்லுங்கள்
கும--- போதுமம்மா போதும் செய்த
தப்புக்கு சமாதானமும் சப்பைக்கட்டும் தேவை
இல்லை நீ இந்த வீட்டில் இருக்க இடம்கேட்டப்போ
உன் காரை எடுக்க்க் கூடாதுஎன்று நான் சோன்னேனா இல்லையா
அருணா--- சொன்னீங்க நான்சொல்றதையும்கேளுங்க
கும--- இந்த நிபந்தனையை நீ எப்போ
மீற்னாலும் இந்த விட்டை விட்டு போக வேண்டும் என்று சொன்னேனா இல்லையா
அருணா---அதெல்லாம் இல்லை என்று
நான் சொல்லலீங்க வந்து---
குமரேசன் --உங்கிட்ட பேசிட்டிருகக எனக்குஇஷ்டமிலைநேரமுமில்லைபோ
அருணா போ உனக்கு இங்குஇனி இடமில்லை
அருணா—உயிருக்கு ஆபத்து என்றபோதுவண்டி
எடுத்தா தப்பு இல்லேன்னு நான் நெனச்சேன்
கும—ஹாஹாஹா சாதாரண ஜலதோஷ்ம்வந்தாலே உங்களூக்கு உயிருக்கு ஆபத்துபேசாமப் போயிடு என்னை மிருகமாக்காதே எப்போ என் நிபந்தனையைஈ மீறினாயோ அப்போதே உனக்கு இங்கு இடமில்லை
அருணா –நான் நாதியத்துபோய் இங்கு
வரலை தீர விசாரிக்காமல் வீட்டைவிட்டெ துறத்துர
உங்களை நம்பி என் ஆயுசு பூரா வாழ்க்கை நடத்தணும்னு நெனைக்கவுமில்லை நான் வரேன் எப்பவாவது
இதுக்காக நீங்கள்வருத்தப்படுவீங்க நான் வரேன் (போகிறாள்)
குமரேசன்===அருணா அருணா விளையாட்டா
மெரட்டினா அதுவே வெனையாகுதே ம்ம்ம்
(அங்கு மாலையுடன் வரும்மாணிக்கம் )
மாணிக்கம் –அண்ணே அண்ணே எங்கேண்ணே
அண்ணி அவங்க இந்த பேட்டைக்கே வந்தஒரு தெய்வப்பிறவி
யண்ணே
கும---புருஷன் வார்த்தையைமீறி நடக்கிற பெண்ணை தெயப்பிறவின்னு இனிமேதான்
சொல்லணும் கேள் மாணிக்கம் கார் எடுக்கக் கூடாதுன்ற
என் நிப்ந்தனையை மீறி கார் எடுத்திருக்கிறாள்
வீட்டைவிட்டு வெரட்டிட்டேன்
ஒரு உயிரைக்காப்பாத்தறது குத்தம்னு
இனிதான்சொல்லணும் சொல்லணும்வீதியிலே விளையாடிட்டு இருந்த பிள்ளைமீது கார் ஏத்திட்டான்னு
நான் சொல்லி வாய் மூடும்முன் காரில் ஏத்தி ஆசுபத்திரிக்கு கொண்டுபோய் உயிர் பிச்சை கொடுத்த
உத்தமி அண்ணே அவஙக மாலைபோட்டு மரியாதை செய்யவேண்டியபெண்ணை துரத்திட்டியே அண்ணே உன்புத்தி ஏனண்ணே இப்படிப்போச்சு போ அண்ணே கையைக்காலைப்பிடிச்சுஅவங்களை சமாதானப்
படுத்தி கூட்டிவாண்ணே
கும---மாணிக்கம் நீ இவ்வளவு தூரம்
சொல்றதுனால போனவவ திரும்பி வந்தா தடுக்கமாட்டேன்
அதுக்காகநான் போய் அவளைக்கூப்பிட மாட்டேன்
மாணி--- கூட்டிட்டு வந்தாமட்டும்போதாதுஅண்ணே
கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாலும் போதாது
கும--- மாணிக்கம் இது எங்கசொந்தவிஷயம்
மாணிக்கம் ---அதுக்காக அந்தபுண்ணியவதியை
வீட்டை விட்டு வெராட்டறதா
கும – நீ இவ்வளவு தூரம்சொல்றதால அந்தபுண்யவதி படமெங்காவது இருந்தா மாலை போட்டு கும்பிடு நான் வரேன்
திரை
ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்ற, அந்த புண்யவதி படமெங்காவது இருந்தா மாலை போட்டு கும்பிடு... என்ற வரிகளை அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteநாடகம்முடியும் கட்டத்ட்க்ஹில் இருக்கிறது ஆனல் வாசிக்கத்தான் யாருமில்லை ஒரு வேளை நாடகம்முடிக்கும்பணியில் இருக்கிறார் களோ
Deleteகுமரேசனா...?. குமரோசனா...?
ReplyDeleteநீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்
Deleteதொடர்கிறேன்...
ReplyDeleteரசிக்கும் வசனங்கள்.
முடியும் கட்டத்துக்கு வந்து விட்டது
Deleteதொடர்கிறேன் ஐயா
ReplyDeleteதொடர் வருகைக்கு நன்றி சார்
Deleteஇன்றுதான் வாசித்தேன். சின்ன விஷயத்துக்குப் போய் கோபிக்கிறாரே குமரேசன். அருணாவின் மனிதாபிமானத்தை மதிக்கிறேன்.
ReplyDeleteஒருவர் குணா திசயம் தெரிய முன்பிருந்தே வாசிக்க வேண்டும்
Delete