சில அனுமானங்கள்
--------------------------------
எனக்கு மனிதர்களைப் படிப்பதில் ஒரு ஆர்வம் உண்டு. நாம் காண்பவர்கள் , பேசுபவர்கள், பழகுபவர்கள்
என்று பலரது குணாதிசயங்களை ஆராயும்போது இன்னின்ன பேர் இப்படியிப்படி இருநதால் இன்னின்ன குணங்களைக் கொண்டிருப்பார்கள் என்று ஓரளவு சரியாகக் கணிக்க முடிந்தது கண்டு எனக்கு என் மேலேயே கொஞ்சம் பெருமிதம் தோன்றுவதுண்டு. முகம் பார்த்து மனிதர்களைப் படிப்பதில் ஏற்பட்ட நம்பிக்கை முகம் காணாதவர்களை ஏதாவது முறையில்
கணித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தியதன் விளைவே இந்தப் பதிவு. வலையுலக நண்பர்களை, அவர்களின் எழுத்தின் மூலம் கணிக்க முயற்சிக்கிறேன். பெயர் கூறாமல் அவர்களைப் பற்றிய என் அநுமானங்கள், படிப்பவர்களுக்குப் புரிந்து, சரியாக இருப்பதாகத் தோன்றினால் நான் ஓரளவு வெற்றி பெற்றவனாவேன். ஆனால் அறிந்து கொள்வதுதான் எப்படி.? எப்படியானாலும் ஒரு பதிவுக்கு விஷயம் கிடைத்து விட்டது. இவர்களின் எழுத்தின் மூலம், நான் இவர்களைப் பற்றி கொண்டுள்ள அனுமானங்களே
இதே
தலைப்பில் 2011-ன் ஆரம்பத்திலேயே எழுதி இருக்கிறேன் ஆனால் அதில் அனுமானிக்கப்பட்டவர்கள் சிலர் வலை
உலகில் எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்கள் இன்னும் தொடர்ந்து எழுதுபவர்களைப் பற்றிய
கணிப்பை மாற்றாமல் அப்படியே பதிவிடுகிறேன் எழுதியதை நிறுத்தியவர்களுக்குப் பதில்
இப்போது எழுதும் சிலரைச் சேர்த்து எழுதுகிறேன் யார் பற்றிய அனுமானம் எது என்று
கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்களேன்
1) இவர் எப்படியோ..
.. ஆனால் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று எண்ணுபவர். இவர் செய்வதற்கும் சொல்வதற்கும், எதிர்ப்பு இருநதால் விரும்பாதவர். தனக்குத் தெரியாத விஷயங்கள் மிகவும் குறைந்ததே என்ற எண்ணம் கொண்டவர். ஒருவரை முன்னிலைப் படுத்தவோ கீழிறக்கவோ தன்னால் முடியும் என்று நம்புபவர். கஷ்ட நஷ்டங்கள் அதிகம் அறியாதவர்.முகஸ்துதிக்கு மயங்குபவர் (மயங்காதவர் அநேகமாக யாருமில்லை.)மொத்தத்தில் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர். இப்போதும் அனுபவித்துக்கொண்டிருக்க வேண்டும்.
2) இவர் குழந்தை உள்ளம் கொண்டவர். மிக எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக்கூடியவர். எல்லோருடைய குணத்திலும் நல்லதையே காண்பவர். யார் மனமும் புண்படாமல் இருக்க பிரத்தியேக முயற்சிகள் எடுக்கக்கூடியவர். நிறையத் தெரிந்தவர். இருந்தாலும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை கொண்டவராயிருப்பாரோ என்ற சந்தேகம் எனக்குண்டு. நான் தவறாக இருக்கலாம். தவறாக இருக்க வேண்டும்.
3 தான் உண்டு தன் பணி உண்டு ,தன் உலகுண்டு என்று ஒரு வட்டத்துக்குள் இருப்பவர் இவர். இவருக்கு யாரையாவது பிடித்துப் போனால் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுபவர். செய்கிறாரோ இல்லையோ என்பது வேறு விஷயம். சின்னச்சின்ன விஷயங்கள் கூட இவருக்குப் பிரமாதமாகத் தெரியலாம். மொத்தத்தில் ஒரு QUIET AND GOOD MAN. இவரால்
யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது
4) இவருக்குத்
தெரிந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர். தெரிந்ததை நன்றாக அறிந்தவர். தெரியாததை சில சமயம் தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ளத்துடிக்கும் குணம் ,மற்றவரிடம் அதைக் காணும்போது அடிபணியும் தன்மையும் கொண்டவராக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்குள்ளது. குடத்திலிட்ட விளக்குபோல் பிரகாசிக்கும் இவர் குன்றின் மேல் வைத்தால் அணைந்து விடக் கூடாதே என்ற பரிதவிப்பு எனக்குண்டு. தன் திறன் தானறிந்து பிறரை அறியும் குணத்தையும் இவர் வளர்த்துக்கொண்டால் இவர் வெகு தூரம் செல்ல வாய்ப்புள்ளது.
5 சுருங்கச் சொல்வது என்றால் என்ன என்றே
தெரியாதவர் எப்படிப்பதிவிட்டாலும் குறை என்று சொல்ல மாட்டார் அதேபோல் குறை
சொன்னாலும் மசியாதவர் பல துறைகள் பற்றியும் எழுதுவார் அதற்காக ஆராய்ச்சி எல்லாம்
செய்வார்எனக்கு என்னவோ இவர் பலருக்கும் ஓவர் மரியாதை தருகிறாரோ என்னும் சந்தேகம்
உண்டு. அது உண்மையிலேயே மரியாதைதானா
என்றும் புரிவதில்லை
6. சில எண்ணங்களை உடும்புப் பிடியாகப்
பிடித்துக் கொண்டிருப்பவர் சிலரை வெகுவாக சிலாகிப்பார் மறதி அதிகம் அல்லது
மறதிஎன்று கூறுவது ஆதாயமாக இருக்கலாம் சில நேரங்களில் நினைத்துப் பார்க்க இயலாதவரை
பிரமாதமாக எழுதுவார் இவருக்கு என்று சில சித்தாந்தங்கள் இருந்தாலும் அதை
தெரிவிக்காதவர்
7. பல விஷயங்களில் துறைபோகியவர் என்று
கருதப்படுபவர்இவர் எழுதாத விஷயங்களே இல்லை எனலாம் இவர் எழுதுவன எல்லாம்
எல்லோருக்கும் புரியும் என்று எண்ணுவார். சில விஷயங்களில் விட்டுக் கொடுக்காதவர்.
எந்த விஷயம் கூறினாலும் அதில் அவருக்கும் அனுபவம் உண்டு என்று கூற முயல்பவர்
பொதுவாக ஒரு பிள்ளைப் பூச்சி எனலாம்
8 இவர் என்ன எழுதினாலும் சிலாகிக்கவே ஒரு
கூட்டம் உண்டு இன்னதுதான் எழுதுவார் என்று சொல்ல இயலாதுசில விஷயங்களில் அதீதப்
பற்றும் சில விஷயங்களில் அதீத வெறுப்பும் காட்டுவார் ஏனோ ஒரு தாழ்வு மனப்பான்மை
என்று கூடத் தோன்றுகிறதுஅவர் எழுதுவது எல்லாம் எல்லோரும் படிக்க வேண்டும் என்னும்
விருப்பம் உள்ளவர் ( எல்லோருக்கும்
அப்படித்தானே)
9.ஒரு புத்தகப் பிரியர். தனக்கென ஒரு இடம்
வகுத்துக் கொள்ள முயன்றால் நிச்சயம் முடியும் ஆனால் இவர் மட்டும் பல விஷயங்களைத்
தெரிந்து கொண்டாலும் தன் கருத்து இதுதான் என்று சொல்லத் தயங்குபவர்( வலையுலகில்
பெரும்பாலோர் அப்படித்தானே இருக்கிறார்கள்) எனக்கென்னவோ ஏதோ ஒரு தாழ்வுணர்ச்சியே
அவரை முன்னிலைப் படுத்திக் கொள்ளதயங்க வைக்கிறது என்று தோன்றுகிறது
10 ஒரு தனிக்காட்டு ராஜா என்னும் எண்ணமே இவரை நினைத்தால் எழுகிறதுஇவரது
மதிப்பீடுகள்தான் சரி என்று எண்ணம் கொண்டவரோ என்றும்தோன்றுகிறதுநிறையவே
தனித்திறமைகள் உள்ளவர் என்றாலும் அதுவே இவரது சுபீரியர் காம்ப்லெக்ஸுக்கு வழி
வகுக்கிறதோ என்றும் தோன்றுகிறது தான்
செய்வதே சரி என்றும் அதை ஆமோதிக்க பலரும் இருக்கிறார்கள் என்னும் எண்ணமும் உள்ளவர்
சிலரைப் பற்றி எழுதி இருப்பது குறைகள் போலத் தோன்றினாலும் குறைகளே இல்லாத மனிதரே இல்லை என்று திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டுகிறேன்
என்ன
வாசகர்களே இந்தமட்டும் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?இது ஒருவகையான குத்துமதிப்பீடுதான்
யாரையும் நோகடிக்கும் எண்ணம் இல்லை. இதில் கூறப்பட்டவர்கள் யார் யார் என்று
அனுமானிக்க முடிகிறதா. முயற்சி செய்துபாருங்களேன் ஒரு க்லூ. முதல் நான்குபேர்
முதலில்எழுதிய பதிவிலேயே இடம் பிடித்தவர்கள் ஏனையோர் பற்றிய கணிப்பு புதிது.


