அரசியல் ஒரு சிறு அலசல்
--------------------------------------------
அரசியல்
பற்றி எழுதக் கூடாது என்றிருந்தேன் ஆனால் நடக்கும் நிகழ்வுகளைக்காணும் போது
எழுதாமல் இருக்க முடியவில்லை
நம்மை
நாம் ஒரு ஜனநாயக அரசு என்று கூறிக் கொள்கிறோம் அதாவது பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளால் நம் ஆட்சி
நடைபெறுகிறது என்று சொல்லிக் கொள்கிறோம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்
என்றாலும் எல்லோரும் அரசாள முடியாது
குறிப்பிட்ட கொள்கை உடையவர்கள் ஒன்று சேர்ந்து கட்சி எனும் பெயரில் போட்டியிட, பாவம், நாமும் நம்
பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம் இதிலென்ன தவறு.?நல்லது தானே …!ஆனால் கட்சி
என்று சொல்லும் போது ஒரு கட்டுக் கோப்பான கொள்கையும் இருக்க வேண்டும் நாடு சுதந்திரம் அடையும் முன்பு அயலானை அகற்றுவதே குறிக்கோளாக
இருந்தது நாட்டை அடிமைத் தளையிலிருந்து மீட்டால்
விடுதலை அடைந்த நாடு இன்னவாறு இருக்க வேண்டும் என்னும் ஏகோபித்த கருத்து
உருவாகி இருந்தது நம்மை ஆண்ட பிரதிநிதிகள் சுயநலமற்று இருந்தனர் இருந்தாலும் பிரதி நிதிகளைத்
தேர்ந்தெடுக்கும் முறையைச் செவ்வனே செய்யவில்லையோ என்று தோன்றுகிறது
நம்மால் தேர்ந்தெடுக்கப் படுபவர் மக்களில்
பெரும்பானமையினரின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும் . ஆனால் இப்போது இருக்கும் நடைமுறையில் இது
சாத்தியமாகத் தோன்றவில்லை. ஓட்டுப்போடும் உரிமை உள்ளவர்களில் 60 சதவிகிதம் பேர்
ஓட்டுப் போடுவதாக வைத்துக் கொள்வோம் போட்டிக்கு நான்கு கட்சிகளோ கூட்டணிகளோ இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம் அறுபது
சத வீத ஓட்டுக்கள்
நான்கு அணிகளுக்கும்
அளிக்கப் படுகிறது அளித்த ஓட்டுகளில் அதிகம் ஒட்டு பெற்றவர் வெற்றி
பெற்றவராக அறிவிக்கப் படுகிறார் அதாவது
அளிக்கப் பட்டுள்ள ஓட்டுகளில்அதிகம் ஓட்டுகளைப் பெற்றவர் வெற்றி பெறுகிறார். ஆனால்
இவர் ஓட்டுப்போடாத 40 சதவிகித்ததோரால் ஏற்றுக் கொள்ளப் பட்டவரா ? எங்கேயோ தவறு
தெரியவில்லையா?விழுந்த ஓட்டுகளில் 40 சதம்
வாங்கி இருந்தாலும் இவரது ஓட்டு எண்ணிக்கை மற்றவர்களதை விட அதிகமாக இருந்தால்
வெற்றி பெறுகிறார் இதையே கணக்குப் போட்டுப்பார்த்தால் இவரை இருக்கும் மொத்த
ஓட்டாளர்களில் 24 சதவிகிதம் பேரே தேர்ந்தெடுக்கின்றனர் மற்ற
76 சதவீதம் ஓட்டாளர்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை இதைத்தான் நான்
தேர்ந்தெடுக்கும் முறையே சரியில்லையோ என்றேன்
சரி இதற்குத் தீர்வுதான் என்ன ?ஒன்று
தேர்ந்தெடுக்கப்படுபவர் இருக்கும் மொத்த
ஓட்டாளர்களின் 50 சதவிகிதம் பேருடைய ஆதரவாவது பெற்றிருக்க வேண்டும் என்னும் சட்டம் வர வேண்டும்இல்லை என்றால் அதற்கு ஏற்றபடி சட்டங்கள்திருத்தப்பட வேண்டும் இப்போது இருக்கும்
நிலையில் தேர்வு செய்து வெற்றி பெறுபவரை விடவெற்றி பெற்றவரை அங்கீகரிக்காதவர்களே
அதிகம்
தமிழ் நாட்டில் இன்றிருக்கும் நிலையில் போட்டி போடுபவர் யாரையுமே தேர்வு செய்ய மக்கள்
விரும்புவதில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களும் சரியான மாற்றம் செய்ய
முடியாததால் இருப்பவரில் யாருக்கோ ஓட்டுப் போடுகிறார்கள்
எந்தக் கட்சிக்குமே ஒரு கொள்கை கிடையாது திமுக
அதிமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மற்றபடி கூட்டு சேர்ந்திருப்பவர்கள்
மக்களின் அதிருப்தியில் குளிர் காய
விரும்புகிறார்கள் ஒரு பாரம் பரியம் மிகுந்த அகில இந்தியக் கட்சியாக இருந்த
காங்கிர்சும் முகவரி தெரியாமல் போய்
இருக்கிறது
மதுவிலக்கு
அமலில் இருந்தபோது ஒன்றிரண்டு தலைமுறையினருக்கு மதுவின் பழக்கமே இருக்கவில்லை.1970களின் கடைசியில் மது விலக்கை
நீக்கினார்கள் அதன் மூலம் தங்கள் பைகளை நிரப்பத் தொடங்கினார்கள் இன்னும் சிறிது
காலத்தில் அரசே மது விற்பனையைக் கைகொண்டு கஜானாவையும் தங்கள் பைகளையும்
நிரப்பினார்கள் அண்மையில் மது விலக்குக்கு ஆதரவாக பெண்மணிகள் இறங்கிய போது
கட்சிகள் மது விலக்குக் கொள்கையை மீண்டும் அமல் படுத்தலாமா என்று பரிசீலிக்கத் தொடங்கி விட்டார்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வைக்கப் படும் மதுவிலக்கை
நீக்கியதால் ஆதாயம் பெற்றவர்கள் மாற்றுக் கருத்துக்கு செவி சாய்ப்பார்களா என்பதே
சந்தேகம்
மக்களின் நிலைதான் பரிதாபமானது இருக்கும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது என்று தேர்வு
செய்ய வேண்டும் இப்போது இருக்கும் நிலையில் அரசியல் வாதிகள் எல்லோருமே அரசியல்
வியாதிகளாக இருப்பதே அவலம்
தேர்தல் நடத்துவது என்பது அரசுக்கு அதிகம் செலவு வைக்கிறது இந்நிலையில் அவ்வப்போது ஏதாவது மாநிலத்தில் ஏதாவது தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறதுஇதை நீக்க மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வைப்பது சிந்திக்க வேண்டியது ஐந்தாண்டு காலம் அரசு நடப்பது என்பது பிரதிநிதிகள் பெரும்பான்மை வாக்குகள் அதாவது ஐம்பது சதவீதத்துக்கும் மேல் வாங்கியவர்களாக இருந்தால், சாத்தியக் கூறுகள் அதிகம் அதற்கேற்ப தகுந்த சட்ட திருத்தங்கள் கொண்டுவருவதும் பரிசீலிக்க வேண்டியதே
வாசகர்கள் படித்து அவர்கள் மேலான கருத்துக்களை எழுதுவது மிக முக்கியம் .
தேர்தல் நடத்துவது என்பது அரசுக்கு அதிகம் செலவு வைக்கிறது இந்நிலையில் அவ்வப்போது ஏதாவது மாநிலத்தில் ஏதாவது தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறதுஇதை நீக்க மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வைப்பது சிந்திக்க வேண்டியது ஐந்தாண்டு காலம் அரசு நடப்பது என்பது பிரதிநிதிகள் பெரும்பான்மை வாக்குகள் அதாவது ஐம்பது சதவீதத்துக்கும் மேல் வாங்கியவர்களாக இருந்தால், சாத்தியக் கூறுகள் அதிகம் அதற்கேற்ப தகுந்த சட்ட திருத்தங்கள் கொண்டுவருவதும் பரிசீலிக்க வேண்டியதே
வாசகர்கள் படித்து அவர்கள் மேலான கருத்துக்களை எழுதுவது மிக முக்கியம் .




