![]() |
| நான் வரைந்த முருகன் கண்ணாடி ஓவியம் |
![]() |
| வெண்ணை தின்னும் கண்ணன் |
![]() |
| ராதா கிருஷ்ணன் கண்ணாடி ஓவியம் முதன் முதலில் முயன்றது |
![]() |
| சமயபுரம் மாரியம்மன் இந்த ஓவியங்கள் ஒரு சாம்பிளுக்கே இப்போதெல்லாம் கண்களும் கைகளும் ஓவியம் வரைய ஒத்துழைப்பதில்லை பதிவுக்கு முன் வாசகர்கள் பார்வைக்கு |
திருமணங்கள்
சில எண்ணங்களும் நினைவுகளும்
சில அனுபவ வரிகள் வலையில் எழுதப்படும்போது ரசிக்கப் படுகின்றன; சில உதாசீனப்
படுத்தப் படுகின்றன; சில வழி காட்டும் படிப்பினைகளாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.
ஒருவராவது ரசிக்கிறார் என்றாலும் தொடர்ந்து எழுதும்படி எனக்கு ஆலோசனைகளும்
வந்திருக்கிறது. திருமணம் பற்றி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் இருந்தது. பதிவு எழுத
பொருள் தேடிக் கொண்டிருந்தபோது வந்ததால் இந்தத் தலைப்பிலேயே எழுதுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வம்ச விருத்தி
செய்ய ஊரும் உலகமும் அளிக்கும் அனுமதியே. அனைத்து ஜீவராசிகளும் தங்கள் இனப்
பெருக்கத்துக்கென்றே வாழுகின்றன என்று நான் கருத்து சொன்னால் அநேகம் பேர்
எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.அதன் தாக்கத்தை சிறிது குறைக்க உண்ணவும் உறங்கவும்
என்றும் சேர்த்துக் கொள்கிறேன். ஆறறிவு படைத்த மனிதன் தன் பரிணாம வளர்ச்சியில்
தனக்கு விதித்துக் கொண்ட கட்டுப் பாடுகளில் திருமண பந்தமும் ஒன்றாகிறது.
திருமணம் பண்டைக்காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல
பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து
திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே
உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
இப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள்
பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில்
உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம்
கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து
பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள்
நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில்ACCOUNTABILITY
---GUARANTEED என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும்
பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும்
திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு
அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஜாதகப் பொருத்தம் சரியாக அமையாததால் பல ஆண்டுகளாக திருமணம் நடக்காமல் முதிர்
கன்னிகளாக இருக்கும் சில பெண்களையும் எனக்குத்தெரியும்.
ஆனால் தற்காலத்தில் நடைபெறும் பல திருமணங்களில் பெற்றோருக்கு எந்த உரிமையும்
கொடுக்கப் படுவதில்லை. ஆணும் பெண்ணும் சந்திக்கிறார்கள். ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்
படுகிறார்கள் (பெரும்பாலும் இனக் கவர்ச்சியால்) திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
ஆனால் சில நாட்களிலேயே தவறான முடிவால் பிரிகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தருபவரும்
இல்லாமல் போகிறார்கள்
இதைக் கூறும்போது ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது
நண்பர் ஒருவரின் மகள் வேற்று மொழி.
சாதிப்பையனை விரும்பி காதலித்து இருக்கிறாள் பெற்றோர் வழக்கம் போல் அதை
ஏற்கவில்லை. பிற்காலத்தில் கஷ்டப்படுவாய்
என்று கூறி இருக்கிறார்கள் அதற்கு அந்தப்
பெண் ஜீஎம்பி அங்கிள் அப்படித்தானே கல்யாணம் செய்து இருக்கிறார் அவர்கள் இத்தனை
ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இல்லையா என்று
வாதாடி சம்மதம் வாங்கினாளாம் நண்பர் என்னிடம் கூறியது இது
எது எப்படி இருந்தாலும் திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட வேண்டும்.
பதிவு செய்யப் பட வேண்டும். இல்லையென்றால் திருமணத்தால் கிடைக்கும் உரிமைகள் இழக்க
நேரலாம்.
இருமனம் இணைந்து நடக்கும் திருமணங்களில் கணவனும் மனைவியும் இரட்டை மாட்டு வண்டி போல் வாழ்க்கை சுமையையும் சுகங்களையும் இழுக்க வேண்டும். உற்றாரும் உறவினரும் கூடி நின்று வாழ்த்தி நடத்தும் திருமணங்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமே.
திருமண நிகழ்வுகள் பல நினைவலைகளை மீட்டுச் செல்கின்றன
பல நண்பர்களது திருமணத்துக்குச் சென்று
வந்திருக்கிறேன்..அவற்றில் சில மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நாங்கள் திருச்சியில் இருந்த காலம். நண்பர் ஒருவருக்கு வடுகூரில் ( வழுதூர் ?)
திருமணம். நானும் இன்னொரு நண்பரும் முதல் நாள் மாலையே திருமணத்துக்குப் போக
திட்டமிட்டிருந்தோம். அலுவலகப் பணி முடிந்து மாலை ஐந்து மணி அளவில் அவருடைய ஷெர்பா
மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம். இரண்டு மணி நேரப் பயணம் இருக்கும் என்று
கணக்கிட்டோம். போகும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. மழை நிற்கக் காத்திருக்கும்போதே
இருட்ட ஆரம்பித்து விட்டது. எங்களுக்கு வழியும் சரியாகத் தெரியாது. சமயம் பார்த்து
வண்டியின் ஹெட் லைட் எரியாமல் மக்கர் செய்தது. நான் பில்லியனில் அமர்ந்து கையில்
ஒரு டார்ச் விளக்கைப் பிடித்துக் கொண்டு முன்னால் அடிக்க நண்பன் வண்டி ஓட்டிக்
கொண்டு போனான். எதிரில் வரும் லாரிகளின் வெளிச்சம் கண்கூச வைத்து மேலே போக
முடியாமல் அவன் வண்டியை நிறுத்தினான். நல்ல வேளை.! மேலே சென்றிருந்தால் அருகிலேயே
ஓடிக் கொண்டிருந்த ஆற்றுக்குள் போயிருப்போம்.கையில் டார்ச்சுடன் நான் ஒளிகாட்ட அதிர்ஷ்ட வசமாக விபத்து நேராமல் தப்பித்த அந்த நிகழ்ச்சி மறக்க முடியாதது, அன்று ஒரு
வழியாக திருமண வீட்டை அடைந்த போது இரவு பத்து மணியாகிவிட்டது. மழையில் சகதியான
சாலையில் இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக தள்ளிக் கொண்டே சென்றோம்
.
திருவனந்தபுரத்தில் ஒரு நண்பருக்குக் கலியாணம். ஒரு பேரூந்து ஏற்பாடு செய்து நாங்கள் சென்றோம். நண்பன் வீடு நாகர்கோயிலில் இருந்தது என் இரண்டாம் மகன் பிறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. போகும் வழியில் குற்றாலத்தில் குளித்துவிட்டுப் போனோம். முதன்முதல் குற்றாலக் குளியல் அனுபவம் கைக் குழந்தை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு குளித்தது மறக்க முடியாத அனுபவம். திருமணச் சடங்காக மாப்பிள்ளைக்கு உறவினர் தலைப்பாகை கட்டுகின்றனர் கட்டுகின்றனர் கட்டிக் கொண்டே இருக்கின்றனர் . அதுவே சுமார் முப்பது நாற்பது பேர்கள் கட்டி முடிப்பதற்குள் பசியில் பாதி உயிர் போய்விட்டது. ஒரு வழியாய் இந்த சடங்கெல்லாம் முடிந்து பந்தியில் உட்காரப் போகும் நேரம் நாங்கள் தடுத்து நிறுத்தப் பட்டோம். முதலில் பெண்கள் என்றனர்.பெண்ணுரிமை , முன்னுரிமை என்ன என்று அப்போது தெரிந்து கொண்டோம்
. நண்பனின் உறவினர்கள் “ பெண்ணு கொள்ளாமோ “ என்று கேட்டனர். எங்கள் குழுவில் இருந்த பெண்கள் “ சேச்சே.. நாங்கள் இங்கிருந்தெல்லாம் பெண்கள் கொள்வதில்லை “ என்று பதில் கூறினர். அவர்கள் மலையாள வழக்கில் பெண் அழகாய் இருக்கிறாளா எனக் கேட்க அது புரியாமல் பெண் எடுப்பதில்லை என்று பதில் கூறி இருக்கின்றனர்.நாங்கள் மணம் முடிந்த பிறகு ‘திருச்சி’ போவோம் என்றதை நாங்கள் கோபித்துக் கொண்டு திரும்பிப் போவோம் என்று புரிந்து கொண்டு பரிதவித்தது மறக்க முடியாத அனுபவம்.
கும்பகோணத்தில் ஒரு நண்பன் திருமணத்தில் ஒரு சடங்காக ஆர்த்தி எடுக்க வேண்டும் என்று கூறி சுமார் அரை மணிநேரம் அவனை வீதியில் காக்க வைத்தசம்பவம் இன்றும் அவனைப் பார்க்கும் போது கேலி செய்ய உதவும்
.
கோவையில் ஒரு நண்பன் திருமணத்தில் அவனை கோயில் கோயிலாக
அழைத்துச் சென்று வந்ததும் இப்படியெல்லாம் வழக்கங்களா என்று நினைக்க வைத்தது.
மனைவியின் உறவினர் மகளுக்கு மும்பையில் திருமணம். என் மனைவி
அதற்கு முன் மும்பை பார்த்ததில்லை. என் நெருங்கிய உறவினர் மும்பையில் இருந்தார்.
அவருக்குக் கடிதம் எழுதி நாங்கள் அவர் வீட்டுக்கு வந்து இருக்கலாமா என்று
கேட்டிருந்தேன். அவரும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எங்களை எதிர்பார்பதாகவும்
பதிலளித்தார். பெண் வீடு உல்லாஸ்நகர். அங்கு இறங்கி மாதுங்காவில் திருமணம் முடிந்த
பிறகு என் உறவினர் வீட்டுக்குப் போவதாக ஏற்பாடு. திருமண வைபவங்கள் முடிந்து உணவு
அருந்தப் போகும் சமயம் என் உறவினர் அங்கு வந்தார். எங்களை அழைத்துக் கொண்டு
போகத்தான் வந்திருக்கிறார் என்று மகிழ்ந்து அவரையும் விருந்துக்குக் கூட்டிச்
சென்றேன் அவர் நாங்கள் அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்தவே வந்திருந்தார். அவருடைய சம்பந்திகள் அவர் வீட்டுக்கு வந்திருப்பதால் நாங்கள் அங்கு வருவது உசிதமல்ல
என்று சொல்லவே வந்திருந்தார். முன் பின் தெரியாத இடத்தில் எதிர்பாராத விதத்தில்
சங்கடப் படுத்தப் பட்டோம். நல்ல வேளை என் நண்பன் ஒருவன் விலாசம் என்னிடம் இருக்க
சமாளித்து விட்டோம். மூன்று நாட்கள் மும்பையில் தங்கி எல்லா இடங்களையும் பார்த்துப் பின் அந்த உறவினர் வீட்டையும் விசிட் செய்தோம்
.
உறவினர் ஒருவருடைய மகள் ஒரு ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டார். எல்லாருடைய சம்மதத்துடன் நடந்த திருமணம் ஆர்ய சமாஜ் குழுவினரால் நடத்தி வைக்கப் பட்டது. இந்திய முறைப்படி மந்திரங்கள் ஓதி மங்கல நாண் கட்டப்பட்டது. ஒவ்வொரு மந்திரம் உச்சரிக்கப் பட்டதும் அதன் பொருள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு திருமணம் நடத்தப் பட்டது. அது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது
உறவினர் ஒருவருடைய மகள் ஒரு ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டார். எல்லாருடைய சம்மதத்துடன் நடந்த திருமணம் ஆர்ய சமாஜ் குழுவினரால் நடத்தி வைக்கப் பட்டது. இந்திய முறைப்படி மந்திரங்கள் ஓதி மங்கல நாண் கட்டப்பட்டது. ஒவ்வொரு மந்திரம் உச்சரிக்கப் பட்டதும் அதன் பொருள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு திருமணம் நடத்தப் பட்டது. அது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது
ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு அனுபவம்.மன்னார்குடியில் நண்பன் ஒருவன் திருமணம். திருமணம் முடிந்து என்னை அவன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான். பெண் கிராமத்தில் இருந்து வந்தவள். என்று தெரியும். அறிமுகம் ஆனவுடன் கை கூப்பி வணக்கம் தெரிவித்தேன். ஆனால் அந்தப் பெண் கை
குலுக்கக் கை
நீட்ட , அது கண்டு நானும் நீட்ட, அவள் கை கூப்ப ஒரே தமாஷாகி விட்டது.
ஒரு திருமண விழாவுக்குச் சென்றபோது , முதலில் எனக்கு ஏதுமே விளங்கவில்லை. திருமணம் நடத்திவைக்கும் புரோகிதர் கழுத்தில் மாலையுடன் நின்றிருந்தார். கூட்டத்தில் நாங்கள் பின்னால் நின்றிருந்தோம். பிறகு பார்த்தால் புரோகிதரே பெண்ணுக்குத் தாலியும் கட்டினார். அப்புறம்தான் தெரிந்தது. அவர் புரோகிதர் அல்ல. அவர்தான் மாப்பிள்ளை என்று. .அந்த மாப்பிள்ளை இன்றைய ( அல்ல நாளைய ) சமுதாயத்தின் பிரதிநிதி என்று, குடுமி வைத்து, தாடியுடன் கடுக்கன் எல்லா அணிந்திருந்த அவர் ஒரு MNC-ல் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்று.Appearances can be deceptive என்று விளங்குகிறது.நேற்றைய வழக்கங்கள் இன்றைய ஃபாஷனோ.?
எது எப்படி இருந்தாலும் திருமணங்களில் தான் உறவுகளை சந்திக்க
முடிகிறது பழைய தலைமுறையின் எச்சங்களாக இருக்கும் நம்மை அறிமுகப்படுத்தும்போது
அவர்களின் ரியாக்ஷன் நான் ரசிப்பது அதன் பிறகு அவர்கள் நம்மைக் கண்டு கொள்ளவே
மாட்டார்கள் இன்னும் என்னென்னவோ நினைவுகள் நீளம்கருதி
முடிக்கிறேன்
ஒரு திருமணப்படமில்லாமலா நன்றி விக்கி பீடியா
ஒரு திருமணப்படமில்லாமலா நன்றி விக்கி பீடியா
.




