மடியில் கனம்
------------------------
காட்சி 1
பாத்திரங்கள் ---
நவநீதம் வேதா பாண்டி
இடம் நவநீதத்தின்
வீடு
திரை உயரும்போது நவநீதம்
வீட்டின் ஹாலில் சோஃபாமேல் சோகத்துடன் வீற்றிருக்கிறான் அவன் மனைவி
வேதா---- என்ன ஆச்சு
உங்களுக்கு ஏதோ கப்பல் கவுந்தாப்புல
உட்கார்ந்து இருக்கீங்க
நவநீதம்--- சத்தமா பேசாதே
வேதா. உனக்குத் தெரியுமா பட்டாசுக்கடை பரமசிவத்தின் கடையில் பட்டாசுகள் திருட்டுப்
போச்சாம்
வேதா----- அதுக்குஅவர்தானே
கவலைப் படணும் உங்களுக்கென்னாச்சு
நவநீதம் --- அவன் போலீசுல
புகார் கொடுத்திருக்கானாம்
வேதா --- அதுக்கு என்ன
இப்ப அதுதானே முறை
நவநீதம் ---
போலீசிலிருந்து மோப்ப நாய் வருமா எனக்கு
பயமா இருக்கு
வேதா – உங்களுக்கு ஏன்
பயம் நீங்கள் திருடினீங்களா
நவநீதம் – ( அலறிக் கொண்டே)ஐயோ நான் திருடலை எனக்கேன்
பயம்னா அவன் கடையில நான் கொஞ்ச நேரம்
உட்கார்ந்திருந்தேன் நாய் என்னை மோப்பம்பிடித்து காட்டிக் கொடுத்தாலோ அதுதான்,,,,,
வேதா----- மடியில கனமிருந்தாத்தானே பயம் உங்களூக்கு என்ன
நவநீதம்
---நாய்க்குத்தெரியணுமே என்னை காட்டிடுத்துன்னா அஞ்சறிவுதானேஅதற்கு (வெளியில் நாய் குரைக்கும் சத்தம்
நவநீதம் அலறி பின் கட்டுக்கு ஓடுகிறான் )
காட்சி _2
பாத்திரங்கள்
நவநீதம் பாண்டி வேதா-- குடுகுடுப்பைக்காரன்
திரை உயரும்போது
குடு குடுப்பைக்காரன்-- –ஐயாவுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது நல்லகாலம் பிறக்கப்போவுது கவலை எல்லாம் நீங்கி சந்தோஷப்படப் போறார்
நவநீதம்........( வீட்டின்
பின்புறத்திலிருந்து)டேய் பாண்டி என்படுக்கைமேல் நான் சுருட்டி
வைத்திருக்கும் வேட்டி சட்டையை அந்தக்
குடுகுடுப்பைக்காரனுக்கு கொடுத்து போகச்சொல் ( மனதுக்குள்..நாய் மோப்பம் பிடித்தாலும் குடுகுடுப்பைக் காரனிடம்தானேபோகும்
) வெளியே நாய் குரைக்கும் சத்தம்
ஆஅ ஐயோ நாய் நாய் !! …
(வீட்டின் பின்புறத்தில் இருக்கும் மரத்தில் ஏறிக் கொள்கிறார்
வேதா (அங்கு வந்து)இது
என்ன கூத்து மரத்தின் மேலே ஏறி என்ன
செய்கிறீர்
நவநீதம் --- நாய் வந்ததா
குரைக்கும் சத்தம் கேட்டதே
வேதா –அதுஅந்தக் குடு
குடுப்பை காரனை பார்த்து குரைத்தது என்ன ஆச்சு உங்களுக்கு வர வர நடவடிக்கையே சரியில்லையே
நவநீதம்—வேதா நாய்
மரம் ஏறி வந்து பிடிக்குமா( நாய் குரைப்பது
கேட்டு )ஐயோ வேதா அது போலிஸ் நாயா அதை விரட்டேன் பயம்மா இருக்கு
வேதா ---உங்களுக்கு
என்னவோ ஆகியிருக்கு
காட்சி –3
பாத்திரங்கள் ---நவ
நீதம் வேதா பாண்டி
பாண்டி – அப்பா எவ்வளவு
நேரம் மரத்தின் மேல் இருந்தீர்கள்
குடுகுடுப்பைக்கு உங்கள் வேட்டி சொக்காய் எல்லாம்
கொடுத்தேன் சண்ட்க்ஹோஷமாய்
வாழ்த்திச் சென்றான் அப்பா உங்களுக்கு ஒரு சந்தோஷ சமாச்சாரம் பட்டாசு பரமசிவம் புகாரை வாபஸ் வாங்கி விட்டாராம் ஏதோகணக்கில் தவறு இருந்ததாம் கவனிக்காமல்
போலீசில் புகார் கொடுத்தாராம் போலீஸ் நாட்க்கு
இனி பயப்படத்தேவை இல்லை ஆனால் நல்ல வேட்டி
சொக்காய் குடுகுடுப்பைக்கு லாபம்
வேதா –இண்ட மனுஷன்
செய்ததைப் பார்த்து எனக்கே இவர்தான் பட்டாசு திருடினாரோ என்று சந்தேகம் வந்தது
நவநீதம் – நான் தீபாவளிக்கு நண்பன் கடையில் இருந்து சில வெடிகள்
எடுத்துவந்தேன் அதுக்குத்தான் பரமசிவம்
புகார் கொடுத்தானோ என்றுபயம் வந்தது இனி எந்த நாய்க்கும் பயப்படப்போவதில்லை ஹஹஹா
திரை –சுபம் –முற்றும்
--------------------------------------