Sunday, September 12, 2010

MARATHY POTRUVOM

                                                       மறதி       போற்றுவோம்                                                               
      அங்கிங்கெனாதபடி    எங்கும்    அவலங்கள்         
ஆனால்   நமக்கோ   அவை -- வெறும்    நிகழ்வுகள்   செய்திகள் 
       அண்டை  வீட்டுக்காரன்   மண்டையைப   போட்டால்
நமக்கென்ன  பாதிப்பு   ?
       ஊரில்   உலகில்   ஆயிரம்   சாவுகள்
வெள்ளத்தால்   மழையால்    மண்சரிவால்
        பூகம்பத்தால்  சுனாமியால்   கொடிய   நோய்களால்
ஒரே  நொடியில்  கோடீஸ்வரன்  ஒட்டாண்டியாகிறான்
        மாடு   மனை   வாசல்   எல்லாம் துறக்கிறான்
எண்ணவே   இயலாத   அவலங்கள்
        அரை   நொடியில்   மண்ணில்   நிகழ்வது  நிஜம் .
எங்கோ  குண்டு   வெடிக்கிறது
        மரண ஓலங்களும்   வலியின்  வேதனைகளும்
நமக்கென்ன   தெரியும்  ? அவை வெறும் செய்திகள்தானே .
        மூக்கறுந்த  பெண்ணும்   ஈ   மொய்க்கும்   குழந்தைகளும்
பத்திரிகையில்   செய்திகள்  தொலைக்காட்சிப்  படங்கள்
        என்ன செய்வது   , எல்லாம்  தலை  எழுத்து
நாம்  என்ன செய்ய ,--ஐயோபாவம்    என்று
       " ஊச் "  கொட்டுவோம் .
இழப்பு   நமக்கு   நேர்ந்தால்  தெரியும்
        வலியும் வேதனையும்
ஊர்  கூட்டிக் கதறி  ஒப்பாரி ஓலமிட்டு
        காட்டுவோம்    உலகிற்கு
நமக்கு   நேரும்  இழப்பும்   வலியுமே
        காலத்தின்  போக்கில்  மறக்கும்   நமக்கு
மாற்றானின்   வலியும்   வேதனையும்
         வெறும்  நிகழ்வுதானே   செய்திதானே
மறப்பது   மனசுக்குள்ள  மருந்து
        காலம்  நமக்கு   கொடுத்த     வரம்
எதுவும்    கடந்து   போகும்
        மறதி     போற்றுவோம்   !

2 comments:

  1. ஐயா, தங்களின் மறதியைப் போற்றுவோம் கவிதையைப் படித்தேன். அன்றாட நிகழ்வுகளை, ஒவ்வொருவரும் எதிர்கொள்வனவற்றைத் தாங்கள் சிந்தித்து கவிதை நடையில் தந்துள்ளமை சிறப்பாக இருக்கிறது. வாழ்வின் யதார்த்தத்தையும் இக்கட்டுரை தெளிவிக்கிறது. நன்றி.

    ReplyDelete
  2. நன்றி சார். மறக்க முடியாதவற்றை மறக்க வேண்டாம் போற்றிப் பாதுகாக்கலாம். இப்பொதைய மேஷிய விமான அடுத்த சில நாட்களில் மற்றோர் செய்தியால் மறக்கப் படும்.

    ReplyDelete