Saturday, August 13, 2011

தகுதிக் கேற்றபடி.....

தகுதிக்கேற்றபடி....
-----------------------

சாதாரணமாக எனக்கு அரசியல் பற்றி எழுதுவதில் ஈடுபாடு
கிடையாது. ஏனென்றால் இப்போதெல்லாம் அரசியல் கொள்கை
சார்ந்து நடத்தப் படுவது இல்லை.சந்தர்ப்ப வாதிகள் லாப நோக்கம்
கொண்டே அரசியலில் ஈடுபடுகிறார்கள்.மக்கள் சேவை மகேசன்
சேவை என்பதெல்லாம் வெறும் பித்தலாட்ட கோஷமே. அரசியல்
முழுக்க முழுக்க சுயலாபத்தை எண்ணியே நடத்தப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் ஆட்சி நடை
பெறுவதாக அரசியல் சாசனப்படிஇருக்கவேண்டும் பிரதிநிதிகளை
தேர்ந்தெடுக்க ஓட்டுப் போடுவது வெறும்50%க்கும் குறைவானவர்
களே.( சராசரி )தேர்தலுக்கு நிற்பவர் எண்ணிக்கை சட்டமன்றம்
என்றால் ஏழெட்டுபேருக்கும் அதிகமாகவே இருக்கிறார்கள். 50%
ஓட்டு இந்த ஏழெட்டு பேர்களுக்குள் பிரிக்கப்பட்டு 25% ஓட்டு
வாங்கினவர்வெற்றி பெருகிறார் இவர் எப்படிமற்ற75% பேர்களால்
ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்சட்டமன்ற தேர்தலுக்கு நிற்க வெற்றி
பெறவோ, தோல்வியடையவோ செய்யப்படும் செலவு தலை
கிறுகிறுக்கவைக்கிறது இவ்வளவு பணம் செலவுசெய்து தேர்தல்
நிற்பவர் இதை ஒரு முதலீட்டாகவே கருதி லாபமடைய நினைக்
கிறார்சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு சம்பளமாகக் கிடைக்கும் பணம்
அவர்கள் செலவு செய்ததில் ஒரு சதவீதம் கூடத் தேறாது.இங்கே
ஊழலுக்கான விதை ஊன்றி விதைக்கப் படுகிறது. போட்ட பணம்
திரும்ப எடுப்பதிலும் லாபம் சம்பாதிப்பதிலுமே எல்லா முயற்சி
களும் நடைபெறும்.இவர்களாவது மக்கள் சேவை பற்றி
சிந்திப்பதாவது..!

தன் வாழ்வில் சம்பாதித்த பணம் அத்தனையும் நாட்டுக்காகக்
கொடுத்த நேரு குடும்பத்தினர் போலவோ, தனக்கென எதையுமே
வைத்துக்கொள்ளாத காமராசர் போலவோ இக்காலத்தில்
அரசியல்வாதிகள் இருப்பது மிகவும் அரிது. அப்படியிருக்கும்
ஒன்றிரண்டு பேரும் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின்
கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டு நல்லது எதுவும் செய்ய இயலாத
கண்ணுகளாக இருக்கிறார்கள்.

அடிப்படையே இப்படித் தவறாக இருக்கும்போது அறிவிக்கப்படும்
அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் தானே இவர்கள் சம்பாதிக்க
கைகொடுக்கும் ஆதாரங்கள்.?அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள்
ஒழுங்காக நிறைவேற்றப்பட்டால் பலனடைவது நிச்சயம் அதன்
தேவை உணர்ந்தவனாகவே இருப்பான். இலவசங்கள் முதல் ,
மதிய உணவு திட்டம் முதல்கொண்டு குறைந்த பட்ச வருமான
உறுதி திட்டம்வரை , மக்களுக்குச் சேருவது என்னவோ,
அரசியல் வாதி யுடையவும் ,அதிகாரிகளுடையவும் புறங் கையில்
இருந்து வழிவதுதானே.

லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்கள்
தவறு செய்ய வழிமுறைகளை வாரி வழங்கி விட்டு ,குற்றம்
செய்ய அனுமதித்துவிட்டு ,நாற்சந்தியில் மடக்கும் காவ்லாளிகள்
போல்தான் இருக்கிறார்கள். குற்றம் நிகழ்வதை எப்படித் தடுப்பது
என்பதே முக்கியம். அதைவிட்டு குற்றம் இழைக்க வழி வகுத்து
தண்டிக்க வழிமுறைகள் நாடுவது, எதிர்பார்க்கும் பலன் தராது.
நம்மிடையே ஒரு சொலவடை உண்டு. “கோலத்தில் போனால்
தடுக்கில் போவதும் ,தடுக்கில் போனால் கோலத்தில் போவது
போல” என்பார்கள். நம் மக்கள் அதில் நன்றாகவே தேர்ச்சி
பெற்றிருக்கிறார்கள்.

ஆண்டவனுக்கே லஞ்சம் கொடுத்து காரியங்கள் சாதித்துக்
கொள்வதைத் தவறாகக் கருதாத நாம்,மற்றவர்களால் காரியம்
நடக்க லஞ்சம் கொடுப்பதைப் பெரிய தவறாகக் கருதாதவர்கள்.

இந்த நிலையில் நாட்டையே லஞ்ச லாவண்யத்திலிருந்து
காப்பாற்ற வென்றே அவதரித்தவர்கள் போல் எண்ணுபவர்கள்
உண்மையிலேயே அந்த எண்ணம் கொண்டிருந்தால் நான்
என்ற அகந்தையும் மமதையும் இல்லாமல் உண்மையை
விளங்கும் விதத்தில் பேசி, சுமூகமான ஒரு முடிவுக்கல்லவா
வரவேண்டும்.?சரியோ தவறோ நாம் இப்போது இருக்கும்
அரசியல் சட்டத்துக்குள்தான் செயல்பட வேண்டும். நம்மால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் சட்டமியற்றி செயல்படுத்த
வேண்டும். அதற்கும் மீறிய செயல்களை கட்டாயப்படுத்தி
நிறைவேற்ற ,மக்களுக்கு உண்மை நிலையைப் புரிவிக்காமல்
அவர்களைத் தூண்டிவிட்டு, காந்தி அவதாரமெடுத்தவராகக்
காட்டிக் கொள்ளுதல் பச்சோந்தித்தனம் ஆகும். இவர்களுக்கு
ஆதரவாகக்குரல் கொடுக்கும் கட்சிகளோ, பிரதமர் இந்த
சட்டத்தின் பிடியில் இருப்பவராக இருந்தால் போதும் என்று
நினைக்கிறார்கள்அதற்கு மாறாகக் கூறப்படும் கருத்துக்களை
காது கொடுத்துக் கேட்கவும் இவர்கள் தயாராயில்லை. எதிர்க்
கட்சிகள் என்றைக்கும் எதிலும் எதிரிக் கட்சிகள்தானா.?

நமது சமூக அமைப்பே, கலாச்சாரக் காரணங்களே இப்போது
நிலவும் அவலங்களுக்கு அடிப்படைக் காரணம் என்று என்னை
என்றைக்கோ சமாதானப் படுத்திக் கொண்டு விட்டேன். WE GET
WHAT WE DESERVE. THAT"S ALL.
---------------------------------------------------------------------

        

16 comments:

  1. சுதந்திரதின வாழ்த்துகள் ஐயா!

    //அப்படியிருக்கும் ஒன்றிரண்டு பேரும் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டு நல்லது எதுவும் செய்ய இயலாத
    கண்ணுகளாக இருக்கிறார்கள்.//

    மம்தா பானர்ஜீ, வி.எஸ்.அச்சுதானந்தன், ஏ.கே.அந்தோணி போன்றோர்களும் இன்னும் தீவிர அரசியலில் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல்.

    //குற்றம் நிகழ்வதை எப்படித் தடுப்பது என்பதே முக்கியம். அதைவிட்டு குற்றம் இழைக்க வழி வகுத்து தண்டிக்க வழிமுறைகள் நாடுவது, எதிர்பார்க்கும் பலன் தராது.//

    அதே! இருக்கிற சட்டங்களை பயன்படுத்தி நீதி கிடைப்பதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தி, தாமதங்களைக் குறைத்தாலே போதும்.


    அப்புறம், இப்போது கள்ள ஓட்டுப்போடுவது ஏறக்குறைய தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் மிக அரிதாகியிருக்கிறது என்பதும் ஒரு சின்ன ஆறுதல்.

    நல்ல பகிர்வு ஐயா!

    ReplyDelete
  2. முத்தாய்ப்பான வரிகள்
    //நமது சமூக அமைப்பே, கலாச்சாரக் காரணங்களே இப்போது
    நிலவும் அவலங்களுக்கு அடிப்படைக் காரணம் என்று என்னை
    என்றைக்கோ சமாதானப் படுத்திக் கொண்டு விட்டேன். WE GET
    WHAT WE DESERVE. THAT"S ALL.//

    சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. “கோலத்தில் போனால்
    தடுக்கில் போவதும் ,தடுக்கில் போனால் கோலத்தில் போவது
    போல” என்பார்கள். நம் மக்கள் அதில் நன்றாகவே தேர்ச்சி
    பெற்றிருக்கிறார்கள்.

    அருமையான பதிவு. நாம் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  4. சொல்லுபவன் சரியா
    சொல்லுவது சரியா
    என்கிற குழப்பம் பரவலாக இருக்கிறது
    சொல்லுபவன் எப்படியிருந்தாலும்
    சொல்லுவது சரியாக இருக்கும் பட்சத்த்தில்
    அவரை ஆதரிக்கலாம்
    சொல்லுவது சரியில்லாத பட்சத்தில்
    சொல்லுபவன் எவ்வளவு நல்லவனாக வல்லவனாக
    இருந்தாலும் புறக்கணித்து விடலாம்
    ஸீஸரின் மனைவிகள் எல்லாம் இப்போது
    சந்தேகப்படும்படியாகவே இருப்பதால்
    ஹஸாரே கோருவது எனக்குத் தவறாகப் படவில்லை
    சிந்தனையை தூண்டிச் செல்லும் பதிவு
    பதிவிட்டமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நமது சமூக அமைப்பே, கலாச்சாரக் காரணங்களே இப்போது
    நிலவும் அவலங்களுக்கு அடிப்படைக் காரணம் என்று என்னை
    என்றைக்கோ சமாதானப் படுத்திக் கொண்டு விட்டேன்.

    சமாதானமே வாழ்க்கையாகி போய் விட்டது , எல்லாம் மாறனும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

    ReplyDelete
  6. அரசியலில் ஆர்வமே இல்வை என்பது எனது பதில், ஆனாலும் வாசித்தேன். நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  7. சுதந்திர தின வாழ்த்துக்கள். //WE GET
    WHAT WE DESERVE. THAT"S ALL.//
    சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. ஐயா , தங்களைப் பின்னூட்டத்தின் மூலம் தெரிந்து உங்கள் வலைப்பூவுக்கு வந்தேன் . மிக்க மகிழ்ச்சி. தங்களின் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களைப் போன்றவர்கள் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறீர்கள். நன்றி , மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  9. நமதுசமூக அமைப்பே தவறு செய்ய தூண்டும் படியாக ... உண்மையில் இந்த பதிவு பாராட்டப்பட வேண்டியவை .உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி .

    ReplyDelete
  10. தங்கள் கருத்தை நான் முற்றிலும்
    ஏற்றுக் கொள்கிறேன்
    நடக்கும் அரசியல் நாடகத்தில்
    அவரும் வரு பாத்திரமே!

    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. @ரமணி எல்லோரும் சொல்கிறோம் ஊழல் ஒழிய வேண்டும் என்று. தன்னை ஒரு தலைவனாகப் பாவித்துக் கொண்டு சொல்பவன் எல்லா சாத்தியக் கூறுகளையும் சிந்திக்க வேண்டும். தான் சொல்வதுதான் சரி என்று முரட்டுப் பிடிவாதம் கூடாது. நம் மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். அதை தெரிந்து கொண்டுதான் இத்தனை தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.மக்களும் புரிந்து கொண்டுள்ளார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    @சேட்டைக்காரன் இந்த பதில் எழுதும் போது தலைவரைக் காவலில் எடுத்திருக்கிறார்கள். மக்கள் உண்மையை அவதானிக்க வேண்டும்.

    @ராஜராஜேஸ்வரி, ரத்னவேல்,ஸ்பார்க் கார்த்தி, கவிதை, கோபு சார், மாலதி, புலவர் ராமாநுசம் ,மற்றும் ரஜனி ப்ரதாப்சிங் அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  12. Anna Hazare appears to be a well – meaning , good ,citizen ; but he is too naïve to believe , that creating another institution of judiciary, will solve all our problems of corruption, little realizing that the entire judiciary in this country has already been derailed; he is childish , to say the least; I am only amused; We shall see, that the “ CORRUPT ” will have the last laugh…



    V. Mawley.

    ReplyDelete
  13. //நமது சமூக அமைப்பே, கலாச்சாரக் காரணங்களே இப்போது
    நிலவும் அவலங்களுக்கு அடிப்படைக் காரணம் என்று என்னை
    என்றைக்கோ சமாதானப் படுத்திக் கொண்டு விட்டேன். WE GET
    WHAT WE DESERVE. THAT"S ALL.//அற்புத வரிகள். உண்மை நிலையை விருப்பு வெறுப்பின்றி எழுதி உள்ளீர்கள்.
    சமுக அமைப்பு மாறி யாரும் யாருக்கும் தாழ்வனவர் இல்லை என்ற நிலை முதலில் வர வேண்டும்.
    படைப்பில் அனைவரும் சமம் என்ற புரிதல் வேண்டும். கடவுளுக்கு கூட இந்த புரிதல் வேண்டும்.
    அவர் நான் தான் மக்களிடையே ஏற்ற தாழ்வு கற்பித்தார் என்று கூறப்படுகிறது.
    அவராக கூறியதை பல நூற்றாண்டுகளில் யாரும் கேட்டதில்லை. இங்குள்ள மாற்றங்களை அவருக்கு தெரிவித்தால் அவரே அனைவரும் சமம் என்று மாற்றி எழுதி விடுவார்.

    ReplyDelete

  14. @ ssk உங்களுக்கு பதில் எழுத உங்கள் முகவரி கிடைக்காததால் இதிலேயே பதில். இது ஒரு பழைய பதிவென்பதால் நீங்க்ள் வாசிப்பீர்களோ தெரியாது. உங்கள் வலையிலிருந்து உங்களை பற்றி ஏதும் தெரியவில்லை. இதை நீங்கள் படித்தீர்களானால் தயவு செய்து உங்கள் முகவரி கொடுங்கள். நன்றி.

    ReplyDelete
  15. இரண்டு நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து கொண்டுள்ளேன்.
    எனக்கு வலை தளம் இல்லை. சமயங்களில் கருத்து தெரிவிப்பேன்.
    தொடர்ந்து வலை தளம் பார்ப்பது இல்லை. அதனால் இவ்வளவு நாளாக உங்களை காணமல் இருந்தேன்.
    சில ஒற்றுமைகள் திருச்சி, பெல், குன்னூர், சமத்துவ மனம்,...
    நூறாவது ஆளாக உங்கள் வலை பூவில் சேர முடிந்தது எதோ ஒரு ஒத்திசைவு.
    எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

  16. தொடர்ந்து படித்துக் கருத்து எழுதியதற்கு நன்றி. முகவரி தரவும் காலம் வரவேண்டும் என்று புரிந்து கொள்ளவா. நன்றி ssk. பல தலைப்புகளில் எழுதி இருக்கிறேன். நிறையவே படிக்க இருக்கிறது. வாருங்கள் படியுங்கள், கருத்திடுங்கள்.

    ReplyDelete