நம்பிக்கை...
----------------
நிலந்திருத்தி விதைக்கும் விதை ,கிளர்ந்தெழு மரமாகிக்
கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.
மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில்
உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை.
பயணச் சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறிச் சேருமிடம்
சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை.
பாலூட்டிச் சீராட்டிப் பெற்றெடுத்த பிள்ளைகள் பிற்காலத்தில்
நம்மைப் பேணுவர் என்பது நம்பிக்கை.
நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர்
பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை.
நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி
பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
.
நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
கைவிடமாட்டான் என்பது நம்பிக்கை
.
வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.
நம்பிக்கைகள் பலவிதம்;இருப்பினும்
தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
தலையாய நம்பிக்கை.
-----------------------------------------------------------------
----------------
நிலந்திருத்தி விதைக்கும் விதை ,கிளர்ந்தெழு மரமாகிக்
கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.
மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில்
உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை.
பயணச் சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறிச் சேருமிடம்
சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை.
பாலூட்டிச் சீராட்டிப் பெற்றெடுத்த பிள்ளைகள் பிற்காலத்தில்
நம்மைப் பேணுவர் என்பது நம்பிக்கை.
நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர்
பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை.
நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி
பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
.
நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
கைவிடமாட்டான் என்பது நம்பிக்கை
.
வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.
நம்பிக்கைகள் பலவிதம்;இருப்பினும்
தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
தலையாய நம்பிக்கை.
-----------------------------------------------------------------
நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி
ReplyDeleteபெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
.
நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
கைவிடமாட்டான் என்பது நம்பிக்கை
நான் ரசித்தவரிகள்.
//நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
ReplyDeleteகைவிடமாட்டான் என்பது நம்பிக்கை//
அங்கு நம் மீது உள்ள நம்பிக்கை தொலைந்து விடுகிறது...
//தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
தலையாய நம்பிக்கை.//
தன் பிள்ளைகள் என்று கடினமாய் உழைத்து அவர்களை முன்னுக்கு கொண்டு வருவது தந்தை தன் மனைவியின் மீது வைத்த நம்பிக்கை
//தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
ReplyDeleteதலையாய நம்பிக்கை.//
நம்பிக்கை தான் வாழ்க்கை.
நம்பினார் கெடுவதில்லை!
ReplyDeleteயானையின் பலம் தும்பிக்கையில்
மனிதனின் பலம் நம்பிக்கையில்..
நல்ல நம்பிக்கையுடன் கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வரிகள். அருமை. vgk
ReplyDeleteதாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே தலையாய நம்பிக்கை./
ReplyDeleteதலையாய நம்பிக்கை --
தரமான நம்பிக்கைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
அருமை அருமை
ReplyDeleteஆயிரம் நம்பிக்கைகள் நம்முள் வளர்ந்தாலும்
வளர்க்கப்பட்டாலும் நிச்சயமாக
தலையாய நம்பிக்கை தந்தைதான்
அதை சொல்லிப்போனவிதம்
மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நம்பிக்கை தரும் நற்கவிதை!
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கடைசி இரண்டு வரிகளுக்கு எந்த நம்பிக்கையும் தேவையில்லை.
ReplyDeleteஎல்லாம் தானாகத் தெரிந்து கொள்வது தான். சீராட்டலும், கொஞ்சலும், குலாவலும் அந்த தெரிந்து கொள்ளலுக்கு உரமூட்டும்.
நம்பிக்கைகள் குறித்து மனதில் பட்டதை எழுதினேன்.ஆண்டவன் மீது கொள்ளும் நம்பிக்கை நம் மீதுள்ள நம்பிக்கையை தொலைத்துவிடும்,என்று சூர்யஜீவா சொல்கிறார். நம் மீதே நம்பிக்கை கொண்டவர்கள் ஆண்டவன் மேல் நம்பிக்கை அற்றவர்களா என்று கேள்வி எழுகிறதே. தாய் சொல்லி தந்தை என்றறியப்படுவது, நிதர்சனமான உண்மை. தந்தை பிள்ளைகளை வளர்ப்பது மனைவி மீது வைத்த நம்பிக்கை என்பது நெருடலாகத் தெரிய வில்லையா.
ReplyDeleteஜீவி சொல்வது , தானாகத் தெரிவது என்கிறார். கொஞ்சலும் சீராட்டலும் இல்லையென்றாலும் தந்தை தந்தைதான். தாய் சொல்லி அறிவது என்பது உண்மையை உரக்கக் கூறல் என்றுதான் கொள்ள வேண்டும். அனைவருடைய வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் என் மனமார்ந்த நன்றி.
\\தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
ReplyDeleteதலையாய நம்பிக்கை.///
வெளிநாட்டு கலாச்சாரத்துக்கு இது வெகுவாகப் பொருந்தும். ஜீவி சொல்வது போல் இது தானாய் தெரிவது வெளிப்படுவது.
கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை தான் தலையாயது என்று சொல்லலாம்,
பக்தனின் இறை நம்பிக்கை. தலைவனின் மீது தொண்டனின் நம்பிக்கை. காதலன் மீது காதலியின் நம்பிக்கை... இப்படி.
தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
ReplyDeleteதலையாய நம்பிக்கை.
அருமை ..அருமையாக உணர்த்திநீர்கள் ஐயா .
நம்பிக்கைதான் வாழ்க்கை அதை இந்த உலகம் உணரவேண்டும் .மிக்க நன்றி ஐயா அனுபவங்களுடன்
எழுதப்பட்ட பயனுள்ள ஆக்கத்திற்கு .......
//வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.
ReplyDeleteநம்பிக்கைகள் பலவிதம்;இருப்பினும்
தாய் சொல்லித் தந்தை என்றறியப் படுவதே
தலையாய நம்பிக்கை.//
நம்பிக்கைச் சக்கரம் நன்றாகச் சுழன்று இருக்கிறது. அச்சாணியான வரிகள் இவை. அருமை
வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.//
ReplyDeleteநம்பிக்கை பற்றிய பகிர்வு சிந்திக்க வைக்கிறது. மிக்க நன்றி
நம்பிக்கைதானே, ஸார் வாழ்க்கை. அதுதான் நம்மை ஓட்டிச் செல்கிறது. நம்பிக்கை இல்லை என்றால் தளர்ந்துவிடுவோம்தானே!
ReplyDeleteவரிகள் அத்தனையும் அருமை
கீதா