அரசியல் நாடகம்.( கூத்து.?)
-----------------------------------------
சில அரசியல் நிகழ்வுகளை அலசும்போது,சில காய் நகர்த்தல்களைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.அண்மையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நடப்பவற்றை எல்லாம் நேரான அர்த்தத்தில் காண முடிவதில்லை. மிகச் சிறந்த, சாணக்கியத்தனமான
ராஜதந்திரங்கள் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஜனாதிபதி தேர்த லுக்கான வேட்பாளர் இந்த அகண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் எல் லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர் இல்லையா.? வேட்பாளருக்கான தகுதிகள்தான் என்ன.? வெறுமே ரப்பர் ஸ்டாம்பாக செயல் படாதவர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருக்க முடியாது.2014--ம் ஆண்டுவர இருக்கும் பொதுத் தேர்தலில் அரசு அமைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கும் கட்சி என்று எதுவும் தென்படவில்லை.கிச்சடி அரசாங்கம் தான் அமையும். அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருக்கும்போது எரிகிற வீட்டில் பிடுங்குகிற கொள்ளி ஆதாயம் என்றே அரசியல் கட்சிகள் செயல் படுகின்றன.
இருப்பவற்றில் தேசீயக் கட்சிகள் என்று பெயர் கொண்ட இந்திய தேசியக் காங்கிரஸ்,பாரதிய ஜனதாக் கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்பான்மை பலம் பெறும் நிலையில் தங்களை செயல் படுத்திக் கொள்ள வில்லை. ஒரு கிச்சடி அரசாங்கம் அமைந்து அந்தக் கிச்சடியில் சேர்க்கப்படும் காய் ,எண்ணை, கடுகு,மிளகு, உப்பு என்றுதான் பிராந்தியக் கட்சிகாள் இருக்கின்றன. எல்லாம் அளவோடு ருசித்தால் கிச்சடி அரசாங்கம் சுவையாக இருக்கும். அதிக காரமாக உப்பாக தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டால் உண்பவனுக்குத்தான் ( சாதாரணக் குடி மகனுக்கு ) பிரச்சினை. .இருந்தால் என்ன.? அவர்கள் இருப்பது தெர்ய வேண்டும் அல்லவா . அந்த தூக்கல் சுவையில் கெட்டுப்போகப் போவதுகிச்சடிதானே.
மம்தா பானர்ஜி, முலாயம் சிங் சோனியாகாந்தி, போன்றோரின் நடவடிக்கைகள் கவனத்தை ஈர்க்கின்றன. எனக்கொரு சந்தேகம். நடக்க இருக்கும் தேர்தல் நாடகத்துக்கு தங்களுக்குண்டான பாத்திரத்தையும் பங்கையும் பெற, மேடைக்கதை வசனம் எல்லாம் எழுதப் பட்டு, ஒத்திகைதான் நடந்ததோ என்று ஐயம் எழுகிறது.
இன்றிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி அரசாங்கம் அமைக்க்க வாய்ப்பு குறைவு என்று உணர்ந்த மம்தாவும் முலாயமும், தங்கள் முக்கியத்துவத்தைஉறுதி செய்ய ,சோனியாவின் சொந்த அபிலாக்ஷைகளுக்கு
கூட்டு போகிறார்கள் என்றே தோன்றுகிறது. பல் பிடுங்கப்பட்ட பிரதம மந்திரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கச்செய்த முயற்சி சோனியாவின் ஆசியுடனேயே நடை பெற்றதாகத் தோன்றுகிறது.வருகிற தேர்தலில் பிரதம மந்திரி பதவிக்குத் தகுதியானவர் மன்மோஹன் சிங் அல்ல என்று அவருக்கு உணர்த்தவே இந்த நாடகமோ என்று தோன்றுகிறது. அவரை விட்டால் பிரணாப் முகர்ஜி காங்கிரசின் மூத்த தலைவர் பிரதம மந்திரி பதவிக்குத் தகுதியானவர் என்று கருதப் படுபவர், அவரையே தேர்ந்தெடுக்கப்படும் கட்டாயத்துக்கு சோனியா தள்ளப்படலாம் .ஆனால் அவரை வலி தெரியாம்மல் பாதையில் இருந்து அகற்றி விட்டால், இளைய தலைமுறை ,அரசியல் மற்றும் குடும்ப வாரிசு,ராகுல்காந்திக்கு ராஜபாட்டைஅமைத்துக் கொடுத்து, இடைப்பட்ட காலத்தை, அவருக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முயலும் ராஜ தந்திரம்தான் இது என்று தோன்றுகிறது. ஆனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறிது ஓவர் ஆக்டிங் செய்து மம்தா பானர்ஜி சொதப்பி விட்டாரோ என்றும்தோன்றுகிறது. முலாயம் சிங் உறவுக்குப் பரிசாகக் கொடுக்கப்படவேண்டிய கோடிகளைக் கேட்கத் துவங்கி விட்டார்.
முலாயமோ மம்தாவோ பிரதம மந்திரியாக வாய்ப்பு கிஞ்சித்தும் இல்லை என்ற நிலையில் நன்றாகவே விளையாடுகிறார்கள்,.ராஜமாதாவோ எப்போதும் போல் பதவி ஆசை இல்லாதவராக,,ஆனால் எல்லா அதிகாரமும் கையில் இருக்கும் விதமாக, நடத்தும் நாடகமே பிரணாப் தாதாவின் எலிவேஷன். அது உண்மையில் ஏற்றமதானா இல்லை பிரணாப் தாதா வெறுமே ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்று உறுதிப் படுத்துவாரா. ?
மோடியை முன் நிறுத்தும் முயற்சியில் பாஜக சிதறுண்டு போகும் வாய்ப்பே அதிகம் என்று தோன்றுகிறது. நாடக மேடையில் சுவை சேர்க்க ஜெயலலிதாவுக்கும் நவீன் பட்னாய்க்குக்கும் கிடைத்த விதூஷகன்தான் சங்மா.ஆதிவாசிகளின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி உள்ளவர் என்று முழங்கும் இவர் ஆசைப்படுவதில் தவறு ஒன்றுமில்லையே. சீக்கியர், இஸ்லாமியர், தமிழர் தெலுங்கர், தாழ்த்தப் பட்டவர், என்றெல்லோரும் ஜனாதிபதி ஆகி விட்டார்கள்.ஒரு ஆதிவாசி ஆகக் கூடாதா,?
இதெல்லாவற்றையும் பார்க்கும்போது, சோனியாவின் காய் நகர்த்தல் கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை. யார் எப்படி வேண்டுமானாலும் நடிக்கட்டும் நடக்கட்டும்.இந்தியக் குடிமகன் தான் பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவ பெருமான்போல் ஆகிவிட்டான்.--பாவம் !
. ,