Tuesday, August 14, 2012

பணம் பொருட்டே...MONEY MATTERS


                                பணம் பொருட்டே....MONEY MATTERS.
                                --------------------------------------------------


அஞ்சு ரூபா நோட்டு கொஞ்சம் முன்னே மாத்தி, மிச்சமில்லெ, காசு மிச்சமில்லெ” “கத்திரிக்கா விலெ கூடக் கட்டுப்படியாகலே, காலங் கெட்டுப் போச்சு “இந்த பாடல் வரிகள் இப்போது கேட்கும்போது நகைச்சுவை போல் தோன்றினாலும் காலம் மாறியும் காசின் மதிப்பு குறைவது குறையவில்லை. என்பது நன்றாக விளங்குகிறது. வயதான காலத்தில் மனசுக்குத் தெம்பு கொடுக்க கையில் காசு அவசியம். ஆனால் பெரும்பாலான வயது முதிர்ந்தவர்கள் அது இல்லாமல் அவதிக்கு உள்ளாகிறார்கள். இள வயதிலேயே அரை வயிற்றுக்கு அவதிப் படுபவர் எப்படி வயதான காலத்தைப் பற்றி சிந்திக்க முடியும். வயதான காலத்துக்கு சேமிக்க வேண்டும் என்னும் ஆலோசனை சரியே. சேமிக்க முடிபவர்கள் எப்படி சில விஷய ஞானம் இல்லாமல் கோட்டை விடுகிறார்கள் என்பதையாவது சொல்லலாமே என்னும் நோக்கம்தான் இப்பதிவு.

அன்றைக்கு நூறு ரூபாய் சம்பாதித்தால் சுமாராக இருவர் அடங்கிய குடும்பம் ஒப்பேற்றிவிடும். ஆனால் இன்றோ.... எண்ணிப் பார்க்க முடியுமா.?அன்றைய ரூபாயால் வாங்க முடிந்த பொருள்கள் இன்றைக்கு முடியுமா. அன்றைக்கு சம்பாதித்ததைப் போல் பல மடங்கு இன்று சம்பாதிக்கிறார்கள். இருந்தும் ஏன் இந்த நிலை. இங்குதான் நமக்குப் பண வீக்கம் பற்றிய தெளிவு அவசியமாகிறது.


கிடைக்கும் சேவைக்கும், வாங்கும் பொருளின் விலைக்கும் கொடுக்க வேண்டிய அதிக பணமே பண வீக்கத்தின் காரணத்தால் விளைவது என்று கொள்ளலாமா.?பணவீக்கம்  விலை ஏற்றத்தையோ பணத்தின் மதிப்புக் குறைவையோ குறிக்கும் குறியீடு  வாரம் ,மாதம் வருடம் என்று ஒப்பிடப்பட்டுக் கணக்கிடப் படுகிறது. இதை கணக்கிட குறிப்பிட்ட தேவையான பொருட்களின் விலை ஏற்றமோ குறைவோ குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்கப் பட்டு ஒப்பிடப்பட்டு பண வீக்கம் கணக்கிடப் படுகிறது.

பணவீக்கத்தின் மாற்றத்துக்கு ஏற்ப ரூபாயின் (கரன்சி )மதிப்பும் மாறும். பணவீக்கம் 10% என்றால், ஒரு ரூபாய்க்கு வாங்கிய பொருளுக்கு ஒரு ரூபாய் பத்து காசு கொடுக்க வேண்டி இருக்கும். பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது பணவீக்கம் இன்றியமையாதது என்று கருதப் படுகிறது.

பணவீக்கத்தின் காரணம் இரண்டு வகையாக கருதப் அடுகிறது. 1) DEMAND PULL INFLATION. 2.) COST PUSH INFLATION  அருகிய பொருளை அதிகம் பேர் துரத்துவதால் ஏற்படுவது முந்தையது.( Demand is more than the supply. ) உற்பத்தி செலவு அதிகரிப்பால் ஏற்படுவது பிந்தையது.


DEFLATION, STAGFLATION, HYPER INFLATION   என்றும் பொருளாதார நிலைகள் இருக்கும். பணவீக்கம் குறைவது, எந்த மாற்றமும் இல்லாது இருப்பது, கட்டுப்பாடு இல்லாமல் பணவீக்கம் ஏறுவது போன்றவையும் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல.

பணவீக்கம் பலரை பல விதமாக பாதிக்கிறது. அன்றாட செலவுகளுக்கு கஷ்டப் படும் ஏழைகள் அத்தியாவசிய செலவுகளுக்குக் கடன் வாங்க வேண்டி இருக்கும் சில்லறை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், அதிக விலையை ஈடுகட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை சமாளிக்க அதிக சம்பளம் , அதை ஈடுகட்ட வங்கிக் கடன் அதிகமாகத் தேவைப் பட வட்டிவிகிதம் அதிகம் என்று சுழற்சியாக எல்லோரையும் பாதிக்கிறது பண வீக்கம்.

இந்த நிலையில் ஓய்வு காலத்துக்காக சேமித்தல் அவசியம் நான் ஓய்வு பெற விரும்பி வேலையை விட்டபோது யூனிட் ட்ரஸ்டில் 15% வட்டி சேமிப்புக்குக் கிடைத்தது. இப்போது ஒரு இலக்க வட்டி வீதமே கிடைக்கிறது. மாதம் 5000 ரூபாய் இருந்தால் மிகவும் சௌகரியமாக இருக்கலாம் என்று கணக்குப் போட்ட என்னால் இப்போது மிகவும் அவசியமான செலவு கூட சிந்திக்க வைக்கிறது. வரவு கூடாமல் செலவு அதிகமாகும் நிலையை ஓய்வு காலத்தில் அனுபவிக்கிறேன். இது அநேகமாக எல்லா முதியவர்களுக்கும் பொருந்தும். டாக்டர் கந்தசாமி ஐயா அவர்கள், சேமிப்பின் அவசியத்தை இரண்டு மூன்று பதிவுகளில் எழுதி இருக்கிறார். நான் ஆரம்பத்திலேயே சொன்னபடி கைக்கும் வாய்க்கும் ஈடுகட்டவே கஷ்டப் படுபவர் சேமிப்பு பற்றி எப்படி யோசிப்பது. ஏதாவது செய்து அதிக வருவாய் ஈட்டத்தான் வேண்டும் அனாவசிய செலவினங்கள் குறைக்கப் பட வேண்டும் இதிலும் அவசியம் எது அனாவசியம் எது என்பதிலும் அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம் . இருந்தாலும் தவிர்க்கப் படக் கூடியதற்கு செய்யும் செலவு அனாவசியம். வெளியே உண்பது, நடந்து போகக் கூடிய தூரத்துக்கு ஆட்டோ என்றும் டாக்சி என்றும் செலவு செய்வது போன்றவை தவிர்க்கக் கூடியதே. இங்கு காந்திஜியின் ஒரு வாக்கு நினைவுக்கு வருகிறது. தேவைக்கு மீறி செலவு செய்பவன் எங்கோ ஓர் ஏழை அல்லது திருடனை உருவாக்குகிறான்.

சேமிப்பது என்று தீர்மானித்து விட்டால் , சேமிக்க வேண்டிய தொகையும் கணக்கில் கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும் பொருளுக்கு ஒருவர் ஓய்வு பெரும்போது என்ன மதிப்பு இருக்கும் என்று ஓரளவாவது கணக்கில் கொள்ள வேண்டும் பணவீக்கம் இப்போதெல்லாம் இரண்டு இலக்கத்தில் இருக்கிறது. ஏதோ சேமிக்கிறேன் என்று இருந்தால் போதாது. எல்லாக் காலத்தையும்  சமாளிக்கும் வகையில் இருத்தல் அவசியம். இதெல்லாம் நல்ல ஆரோக்கியம் இருக்கும் வரை தான் செலாவணியாகும். நோய்நொடி என்று வந்து விட்டால் எல்லாக் கணக்கும் பணால்

எனக்கு வெகு நாட்களாக ஒரு ஆலோசனை. யார் மணி கட்டுவது.? வங்கிகளில் காசோலை வசதி இருக்க  குறைந்த அளவு  இவ்வளவு பணம் இருப்பில் இருக்க வேண்டும் என்பது விதி. அந்தப் பணத்துக்கும் சேமிப்பு வட்டியாக 4- லிருந்து 5 சதவீதமே கொடுக்கிறார்கள். அந்தப் பணத்துக்கு ஏன் அதிக வட்டி FIXED DEPOSIT –க்கு             
தருவதுபோல் கொடுக்கக் கூடாது. ?               










10 comments:

  1. யோசிக்க வைக்கும் விஷயம் தான்...
    நன்றி ஐயா...

    ReplyDelete
  2. நடந்து போகக் கூடிய தூரத்துக்கு ஆட்டோ என்றும் டாக்சி என்றும் செலவு செய்வது போன்றவை தவிர்க்கக் கூடியதே. இங்கு காந்திஜியின் ஒரு வாக்கு நினைவுக்கு வருகிறது. தேவைக்கு மீறி செலவு செய்பவன் எங்கோ ஓர் ஏழை அல்லது திருடனை உருவாக்குகிறான்.//

    நீங்கள் சொல்வது உண்மை.
    அவசிய செலவுகளை செய்து அனாவசிய செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகமாக்கினால் வயதானகாலத்தில் கவலை இல்லாமல் இருக்கலாம்.

    நாள் ஆக ஆக அவசிய தேவைகள் அதிகமாகி கொண்டு போகிறது.
    இது இல்லாமல் வாழ முடியாதா முடியுமா என நம்மை கேட்டுக் கொள்ளவேண்டி உள்ளது.

    நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  3. GMB Sir,
    எனக்கும் பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. பணம் பொருட்டே....MONEY MATTERS.

    சிந்திக்கவைக்கும் சிறப்பான அனுபவப் பகிர்வுகள்..

    ReplyDelete
  5. இந்த சமூகத்தில் மட்டுமல்ல எந்த சமூகத்திலும் கண்ணுக்குத் தெரியாத கௌரவம் என்னும் பேய் நம்மை ஆட்கொண்டிருப்பதே மிக முக்கியமான காரணம்.

    இரண்டாவது பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான குறிப்பிட்ட செலவினங்களை நாடிச் செல்வது.

    மூன்றாவது சேவைகளுக்கு நாம் அதிகம் செலவு செய்யத் தொடங்கியிருக்கிறோம்.

    நான்காவது முதியவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து யோசிக்காது பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பற்ற அரசு.

    வாழ்க்கை முழுதும் கஷ்டப்பட்டு தன் பொறுப்புக்களிலிருந்து திக்குமுக்காடிக் கரையேறிய பின்னும், முதுமை, நோய், பாதுகாப்பு, அரவணைப்பு போன்றவை இல்லாமலும், நிரந்தரமான வருவாயில் நிரந்தரமில்லா செலவு என்பதும் அரசின் பார்வைக்குப் படாத ஈவிரக்கமில்லா நிலை.

    பொறுப்பு மிக்க பதிவு பாலு சார்.

    ReplyDelete
  6. யோசிக்க வைக்கும் பொறுப்பு மிக்க பதிவு

    ReplyDelete
  7. அருமையான விழிபுணர்வூட்டிப்போகும் பதிவு
    விழித்துக் கொள்வோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்
    இதை அலட்சியம் செய்வோர் எல்லாம் நிச்சயம்
    அவதிப்படுவார்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. உழைப்பை குறைக்கும் அத்தனை வழிகளிலும் பயன்படுத்தப் படுகிறது பணம் உழைப்பின் உன்னதம் உணர்ந்தால் தேவைகள் குறைந்து போகும் என்பது என் கருத்து. சிந்திக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete