மீண்டும் சில அனுமானங்கள்.
--------------------------------------------
நான் கேட்டால் ஏன் இந்த சுணக்கம் ?”என்று எழுதி
இருந்தேன். அதை எப்படி புரிந்து கொள்ள முடிகிறது என்று அப்பாதுரை கேட்டிருந்தார்.
இர்ண்டு மூன்று வருட வலையுலக அனுபவம் ப்ளஸ் இந்த வயதின் அனுபவம் ஒரு உணர்வாய்
தெரியப் படுத்துகிறது என்று நினைக்கிறேன். மேலும் வலையில் எழுதுபவர்களை நானும்
படித்துக் கொண்டு வருகிறேன். அவர்கள் எழுத்தை வைத்தும் அவர்கள் இடும்
பின்னூட்டங்கள் வைத்தும் இன்னார் இன்ன மாதிரி என்று ஓரளவு அனுமானிக்கிறேன் . இந்த
ரீதியில் அனுமானங்கள் என்னும் ஒரு பதிவே
எழுதி இருந்தேன்.
ஒரு விஷயம் எனக்கு நன்றாக விளங்குகிறது.
என்னிடம் நட்பு பாராட்ட பலரும் தயங்குகிறார்கள். அதற்கு என்னால் இரண்டு காரணங்கள்
அனுமானிக்க முடிகிறது. ஒன்று என் வயது. கிழவனுடன் நட்பு பாராட்டபலரும் விரும்புவதில்லை.
எண்ணங்களில் தலைமுறை இடைவெளி இருக்கும் என்று எண்ணலாம். ஆனால் வயதில் முதியவனாய்
இருப்பினும் எண்ணங்களில் இன்றும் இளைஞன்தான் , இரண்டு என் எண்ண ஓட்டங்கள் பலரும் எண்ணுவதுபோல்
இல்லாதிருப்பது. நான் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது எனக்கே தெரியும் அதுதான் என் பலமும்
பல வீனமும்.
மேலும் பதிவுலகில் பலரும் முகமூடி
அணிந்தவர்களாக இருக்கிறார்களோ என்றும் சந்தேகம் எழுகிறது. எழுதுபவர்கள் ஆணா
பெண்ணா, வயது என்ன அவர்களது பின்னணி என்ன என்று தெரிந்து கொள்வதும்
அரிதாயிருக்கிறது. நட்பு பாராட்ட நாம் பாதி தூரம் கடக்கலாம். அவர்களும் பாதி தூரம்
வந்தால்தானே இதமாய் இருக்கும்.. திருச்சியில் ஒரு பதிவரைப் சந்திக்க விருப்பம்
தெரிவித்து அவரது பதில் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தது குறித்து. ஒரு முறை எழுதி
இருந்தேன். என் பதிவுகளின் தொடர்பாளராக இருந்தவர்கள் விலகிக் கொள்கிறார்கள்.
எனக்கு ஒரு முறை ஒரே பதிவர் இரண்டு பெயர்களில் பின்னூட்டம் இடுகிறாரோ
என்னும்சந்தேகம் . புகைப் படங்களால் வந்தது.விளக்கம் கேட்டிருந்தேன். இல்லை என்று
பதில் கிடைத்தது. இப்போது பார்த்தால் இருவரும் என் பதிவுகளில் தொடர்பாளகள் அல்ல
என்று அறிகிறேன். இவ்வளவையும் நான் குறிப்பிடக் காரணம் எல்லோரையும் ஒரு
அனுமானத்துடன்தான் அணுக வேண்டி இருக்கிறது. அப்படி அணுகும்போது யார் என்
எழுத்துக்களை விரும்பிப் படிக்கிறார்கள், யார் படிக்கும்போது சுணங்குகிறார்கள்
என்றும் அனுமானிக்க முடிகிறது.
என்னுடைய இன்னொரு அனுமானம் பதிவுலகில் (
நான் பார்த்த/ படித்த வரையில் ) நான் எழுதுவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் ஏற்றுக்
கொள்ள முடியாதபடி இருக்கிறதோ என்பதுதான். நான் உயர்வு தாழ்வு , சம வாய்ப்பு
இல்லாமை என்று எழுதுவதும் அதற்குக் காரணமாக நமது சமுகப் பின்னணியை குறை கூறுவதும்
காரணமாக இருக்கலாம். நான் விருப்பு வெறுப்பு இல்லாமல்தான் என் எண்ணங்களின்
அடிப்படையில் எழுதுகிறேன். என்னவோ ஏதோ எழுதுகிறோம் என்பதைவிட என்ன எழுதுகிறோம்
என்பதில் கவனம் செலுத்துகிறேன். வெறும் பொழுது போக்காகவோ என் எழுத்தாற்றலைக் காண்பிக்கவோ மட்டும் நான்
எழுதுவதில்லை. பலமுறை நான் கூறி உள்ளதுபோல் என் எண்ணங்களைக் கடத்தவும் வலையை நான்
உபயோகிக்கிறேன். அவற்றையே கதைகளாக கவிதைகளாக கட்டுரைகளாக எழுதுகிறேன். அப்படி
எழுதுவதன் தாக்கம் என்ன என்று அறியவே நான் பின்னூட்டங்களைப் பார்க்கிறேன். நண்பர்
ஒருவர் நான் பின்னூட்டங்களுக்காக ஏங்குகிறேன் என்று எழுதி இருந்தார். ஆம். நான்
பின்னூட்டங்களை ஆர்வத்துடன் பார்க்கிறேன், பலரும் என்னை, என் எழுத்தைப்
புகழுகிறார்களா என்று பார்க்க அல்ல. என் எழுத்தின் தாக்கம் என்ன என்று அறியவேதான்.
எழுதுவது எழுதுவதன் நிமித்தம் , படிப்பது
படிப்பதன் நிமித்தம் ஆனால் அந்த நிமித்தங்கள்தான் எவ்வளவு வேறுபடுகின்றன, ஒருவரைப்
படிக்கும்போது இன்ன ரசனைக்காக இவரைப் படிக்கிறோம் என்பதே முக்காலும் உண்மை. சிலரது
எழுத்து என்னைப் பொறாமைப் படுத்தும். நடையும் எழுத்தும் மொழியின் ஆளுமையும் வலை
உலகில் பலரிடம் அபரிமிதமாக இருப்பதைக் காண முடிகிறது. சரளமான நடையில் ஆர்வத்தைத் தூண்டும்
எழுத்து அப்பாதுரையுடையது. அவரைப் பற்றிய என் எண்ணங்கள் அவர் என் வீட்டிற்கு வருகை
தந்து என்னை சந்தித்ததில், அவருடன் உரையாடியதில் சரி என்று நினைக்க வைத்தது.அவருக்கு
என்று சமூக மற்றும் MORAL கண்ணோட்டங்கள் இருந்தாலும் அதை யார் மேலும்
திணிக்கும் ( எனக்கு நேர் எதிர்? ) எண்ணம் கிஞ்சித்தும் இல்லாதவர். அயல் நாட்டில்
இருந்து கொண்டு தமிழில் இவ்வளவு அழகாக எழுதுபவர் அவருக்குத் தெரியாததை
ஒப்புக்கொள்ளும் குணம் எனக்குப் பிடிக்கும். இந்தப் பதிவுக்கு முக்கிய காரண
கர்த்தாவே அவர்தான்.
நேர் எதிர்மறைகளின் நடுவே சராசரி மனிதனின்
எண்ணங்களை கவிதைகளாக எழுதும் ரம்ணி அவர்களின் எழுத்து எனக்குப் பிடிக்கும்.
அவற்றுக்கு நான் எழுதும் பின்னூட்டங்கள் அவருக்குப் பிடிக்குமோ தெரியாது, சில
கருத்துக்களை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வதும் கண்டிருக்கிறேன். ஆனால் அவரது
பின்னூட்டங்கள் எல்லாம் நிறைவாகவே இருக்கும். என் பதிவுக்கு மட்டுமல்ல. யாருடைய
பதிவிற்கும் அவர் இடும் பின்னூட்டம்
குறையே சொல்லாது. ஒரு முறை அவர் எழுதியதாக நினைவு. “ ஒருவரை மகா புத்திசாலி என்று
புகழ்ந்தால் , அவர் உங்களை புத்திசாலி என்றாவது ஏற்றுக் கொள்வார் “( இதே
வார்த்தைகள் இல்லாவிட்டாலும் இதே ரீதியில் இருந்தது.)
சிறுகதை எழுதுவதில் பலர் பல பாணிகளைக் கடை
பிடிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை சிறுகதை சம்பவங்களுக்காக பாத்திரம் அமைப்பது,
இல்லையென்றால் பாத்திரங்களுக்காக சம்பவங்கள் அமைப்பது. இதில் வேறு பட்ட
கருத்துக்கள் இருக்கலாம்.
சிலர் ஆன்மீக விஷயங்களை மட்டுமே பதிவாக
இடுகிறார்கள். திருமதி இராஜராஜேஸ்வரி அருமையான படங்களுடன் இறைவன் சம்பந்தப்பட்ட
பதிவுகளே அதிகம் இடுகிறார். என்னைப் போன்றவர்கள் படங்களை ரசிப்பதும் அவருடைய
வேகத்தைக் கண்டு ஆச்சரியப் படுவது மட்டுமே செய்ய முடியும்..சில கேட்டிராத கதைகளும்
கிடைக்கலாம்.
ஒரு வேகத்துடன் பதிவுலகில் எழுதிக்
கொண்டிருந்த சுந்தர்ஜியின் எழுத்துக்களில் திசை மாற்றம் தெரிகிறது. அவர் பாராட்டி
எழுதும் பின்னூட்டங்கள் டானிக் மாதிரி இருக்கும். அவரும் எதிர்மறைக் கருத்துக்கள்
கூறுவதை தவிர்ப்பவர்.
பதிவுலகில் பலரும் பலவிதம். திடீரென்று
ஒருவர் எதிர்பாராத கருத்தை தெரிவிப்பார். பின் அவரைக் காணவே முடியாதிருக்கும்.
நான் கவிச்சோலைக் கவிதைப் போட்டிக்கு ஒரு கவிதை “மெட்ராஸ் “ தமிழில் எழுதி
இருந்தேன். சொற்குற்றம் பொருட்குற்றம் என்று எழுதி திணர அடித்தார் அமெரிக்காவில்
இருந்து பின்னூட்டம் எழுதிய ‘பாரதசாரி ’..என்பவர். பாரதத்துக்கு சாரி சொல்லவே அந்தப்
பெயர் என்றும் எழுதி இருந்தார்.
வித்தியாசமாகப் பதிவர்களைப் பற்றிய
அனுமானங்களாகி விட்டது இந்தப் பதிவு. நான் அறிந்த எல்லாப் பதிவர்களைப் பற்றியும்
எழுதலாம். பதிவின் நீளம் கூடும். மேலும் அது விரும்பப் படுமா தெரிய வில்லை
முன்பொரு முறை எழுதி இருந்தேன். பதிவுலகில்
I ALSO RUN..
! பதிவுலகத்தில் பொழுது போக்கவோ திறமையைத்
தீட்டவோ பலரும் SUDOKU சால்வ் செய்யும் பழக்கம் உடையவர்களாக
இருக்கலாம். கீழே நான் கொடுத்திருக்கும் சுடோகோ சால்வ் செய்ய முடிந்தால் தெரியப்
படுத்துங்கள். ஒரு பட்டமே தரக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
சுடோகு விதி முறைகள் தெரியும் என்று
நம்புகிறேன். நான் கொடுத்திருக்கும் 81 சிறிய கட்ட சதுரங்களை ஒன்பது ஒன்பது கட்டச் சதுரங்களாக் எடுத்துக் கொள்ளவும்
எனக்கு அவற்றை SHADEசெய்து காட்டத் தெரியவில்லை. SUDOKU SOLVE செய்பவர்களுக்குப் புரியும்.
. .
5
|
3
|
|||||||
8
|
2
|
|||||||
7
|
1
|
5
|
||||||
4
|
5
|
3
|
||||||
1
|
7
|
6
|
||||||
3
|
2
|
8
|
||||||
6
|
5
|
9
|
||||||
4
|
3
|
|||||||
9
|
7
|
சிலர் ஆன்மீக விஷயங்களை மட்டுமே பதிவாக இடுகிறார்கள். திருமதி இராஜராஜேஸ்வரி அருமையான படங்களுடன் இறைவன் சம்பந்தப்பட்ட பதிவுகளே அதிகம் இடுகிறார். என்னைப் போன்றவர்கள் படங்களை ரசிப்பதும் அவருடைய வேகத்தைக் கண்டு ஆச்சரியப் படுவது மட்டுமே செய்ய முடியும்..சில கேட்டிராத கதைகளும் கிடைக்கலாம்./
ReplyDeleteஎமது பதிவையும் அருமையாய் அறிமுகம் செய்திருப்பதற்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா...
எனக்கென்னவோ நீங்களாகவே கேள்வியைக் கேட்டு பதிலையும் சொல்லிக்கறீங்களோனு தோணுதே சார்?
ReplyDeleteஇராராவின் பதிவுகள் எனக்கும் பெரிய ஆச்சரியம். 'கோவில் சாமி பற்றி இவரால் எவ்வளவு நாள் தான் எழுதமுடியும்?' என்று நான் நினைத்ததுண்டு - இப்போது நினைப்பதை நிறுத்திக் கொண்டு விட்டேன். இராஜராஜேஸ்வரி எப்படியோ எங்கிருந்தோ கோவில்/கடவுள் பற்றி எழுதிவிடுகிறார். அதைவிட, பதிவில் படங்களுடன் வெளியிட நிறைய உழைக்க வேண்டும் - தினமும் செய்வதென்றால் கேட்கவே வேண்டாம். அவரால் எப்படித்தான் முடிகிறதோ!
//ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கிறதோ
ReplyDeletethat is a king size assumption.
sudoku என்ன பட்டம் தரதா இருக்கீங்க?
ReplyDeleteரமணியின் பிறபதிவுப் பின்னூட்டங்கள் மட்டுமல்ல - அவருடைய பதிவிலும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லும் நேர்மை என்னை அயர வைக்கும்.
ReplyDelete
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி-உங்கள் பதிவின் அறிமுகம் என்பது சரியல்ல மேடம். அதுபற்றி ஆச்சரியப் படுவதால் எழுதியது. இதில் நான் தனியல்ல. அப்பாதுரையும் ஆமோதிக்கிறார். தொடர்க உம் ஆர்வமுடனான பதிவுகள்/
@ அப்பாதுரை. என் பதிவின் தலைப்பே அனுமானங்கள் தானே சார்.I am betting on my gut feelings and I would certainly be pleased to be wrong on my king sized assumption.
sudoku நான் சுடோகு சால்வ் செய்யும் hobby உடையவன் என்னால் கிட்டவே நெருங்க முடியாதபடி இருக்கிறது இது This is supposed to be one of the toughest . என்ன பட்டம் வேண்டுமானாலும் தரலாம். இதுவரை ஒருவர் கூட respond செய்யவில்லை. நீங்கள் எப்படி.?
நீங்கள் குறிப்பிட்டவர்கள் ஆச்சரியப்பட வைப்பவர்கள்.
ReplyDeleteநீங்கள் கூறியதுபோல இன்னும் பலரும் பதிவுலகில் இருக்கின்றார்கள்.
//இராஜராஜேஸ்வரி எப்படியோ எங்கிருந்தோ கோவில்/கடவுள் பற்றி எழுதிவிடுகிறார். அதைவிட, பதிவில் படங்களுடன் வெளியிட நிறைய உழைக்க வேண்டும் - தினமும் செய்வதென்றால்... //
ReplyDeleteஅத்துடன் அரிய தகவல்களையும் அந்தந்த இடங்களில் அழகாகச் சேர்த்து. பண்டிகை, திருநாள் என்று ஒன்றையும் விட்டு விடாமல் அதற்கேற்ற மாதிரி பதிவுகளுக்கும் சார்ட் போட்டு.. நான் இவரிடமிருந்து இந்த விஷயத்தில் தெரிந்து கொண்டவை ஏராளம்!
நன்றி, இராரா.. (பெயர் சுருக்க உபயம்: அப்பாஜி)
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களைப் பற்றி நானும் உங்களை போல் தான் ஆச்சிரியப்பட்டு இருக்கிறேன்.
ReplyDeleteதினம் ஆன்மீக கட்டுரைகள் மட்டும் அல்ல பதிவர்கள் எல்லோர் தளங்களுக்கும் சென்று பின்னூட்டம் வேறு செய்து விடுவார் மறக்காமல் .
படங்களை தேடி தேடி தருவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்.
அப்பாதுரை அவர்களும் எப்படி ஒரே பதிவில் இவ்வளவு விஷயங்களை சொல்கிறார். திறமைகள் கொட்டி கிடக்கிறது அவரிடம்.
ரமணி சாரும் அப்படித்தான் .
நீங்கள் நினைப்ப்து போல் தான் நானும் நினைக்கிறேன் வலைத்தளத்தில் எவ்வளவு பேர் தங்கள் எண்ணங்களை அழகாய் , வெளிப்படுத்துகிறார்கள்!
ReplyDeleteஇந்தப் பின்னூட்டங்கள் எதுவும் என் எழுத்தின் மையக் கருத்தை கண்டு கொள்ளவே இல்லையே. அதுவே என் அனுமானங்கள் சரியோ என்று எண்ண வைக்கிறது. கோமதி அரசு என்னைப் போல் நினைக்கிறாரா.?
மையக்கருத்து - trick question? அனுமானம் என்றால் "அதான் சொன்னேனே அனுமானம் என்று" சுலபமாக கழன்று கொள்ளலாம் :)
ReplyDeletesudoku - இன்னிக்கு ட்ரை பண்ணப்போறேன். சும்மா ஹோட்டல் ரூமில் டிவி பார்ப்பதற்கு பதிலாக.
ReplyDeleteஅப்பாதுரை சார் எந்த trick question -உம் இல்லையே. தெளிவாய்த்தான் இருக்கிறது. தெரியாததுபோல் சொன்னால் நான் என்ன செய்வது. பிறரது மனதில் இருப்பதைக் கூறும்போது அனுமானமாகத்தானே இருக்க முடியும். நான் எதற்கு தப்பித்துக் கொள்ள வேண்டும்.?சுடோகு சால்வ் செய்ய என் வாழ்த்துக்கள்.!
sudoku பிரபலமாக இருந்தபோது இருந்த சுறுசுறுப்பும் ஆர்வமும் இப்போது இல்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல இது சிக்கலான புதிர் தான். நிறையவே இழுத்துவிட்டது.
ReplyDeletesudoku பதில் தங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன் ஐயா.
ReplyDeleteசரி பாருங்கள்..