சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.
-----------------------------------------------
ஆண்டொன்று கழிகிறது, இன்னொன்று மலர்கிறது.
நாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.
ஒவ்வொரு விடியலிலும் மீண்டும் உயிர்க்கிறோம்
புலரியில் புள்ளினங்கள் பறக்கும்போது அவை
நேற்றை நினைக்கின்றனவா ?. இன்றைக்கென்று புதுப்
பிரமாணங்கள் எடுக்கின்றனவா ?..மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த
இன்று, நேற்று, நாளையெல்லாம் .ஓ......! அவனுக்கு ஓரறிவு கூட
இருப்பதாலா. இருக்கட்டும். நேற்றின் நாளையாம் இன்று பற்றி
நேற்றே கவலை கொண்ட அவன் இன்றின் நாளையைப் பற்றி
சிந்திக்காமல் இருப்பானா. சிந்திக்கட்டும் சிந்திக்க
வேண்டும்
நாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.
ஒவ்வொரு நாளும் சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.
வாழ்க்கைப் பயணம் தொடர்வோம் . புத்தாண்டில் புது
சிகரம் தொடப் பிரமாணம் எடுப்போம்.
(ஒரு இழப்பின் வேதனையில் என்னையே தேற்றிக் கொள்ள
எழுதிய வரிகள். எல்லோருக்கும் பொருந்தும்தானே.)
(ஒரு இழப்பின் வேதனையில் என்னையே தேற்றிக் கொள்ள
எழுதிய வரிகள். எல்லோருக்கும் பொருந்தும்தானே.)
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDelete"சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.
நம்பிக்கை அளிக்கும் பொன் வரிகள்...பாராட்டுக்கள் ஐயா..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
ReplyDeleteதலைப்பு அற்புதம். சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு தான் முயற்சிப்போம் .
//புத்தாண்டில் புது
சிகரம் தொடப் பிரமாணம் எடுப்போம்.//
நல்ல பிரமாணம் தான்.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteGMB Sir,
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அழகான வாழ்த்து. என் வலைப்பூவிலும் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteதாங்கள் என்று பட்டமளிப்பார்கள் என்று என் வலைப்பூவில் கேட்டுள்ளீர்கள். வாய்மொழித்தேர்வு அன்றே முனைவர் என்று அறிவித்து வாழ்த்து சொல்லி விடுவார்கள். பரிந்துரை என்பதே அறிவிப்புதான். அறிவித்து விட்டார்கள். அதிலிருந்து ஒரு வாரத்திற்குள் ப்ரொவிஷனல் தருவார்கள்.
பட்டம் (கான்வகேஷன்) (பட்டமளிப்பு விழா) அன்று கொடுப்பார்கள்.
ஆய்வேடு ஒப்படைத்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ளது.
எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிந்தனைக்கு விருந்தான
ReplyDeleteசிறப்புப் பதிவு வெகு சிறப்பு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Past has gone
ReplyDeleteFuture will come
PRESENT is a GIFT infront us.
We will enjoy every moment of it.
HAPPY NEW YEAR Shri Bala Sir.
ReplyDeleteவருகை தந்து வாழ்த்தியவர்களுக்கும் கருத்து எழுதி ஊக்குவித்தவர்க்கும் என் நன்றி.