Friday, March 8, 2013

மகளிர் தின நினைவுகள்


                                   மகளிர் தின நினைவுகள்.
                                  ----------------------------------


மகளிர் தினத்தில் பேரும் புகழும் பெற்ற மகளிரைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் வழக்கமாகிவிட, எனக்கு மனசில் தோன்றியதைப் பதிவிடுகிறேன். ஆண்டவன் படைப்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்கக் கூறினாலும், எங்கோ  உள்ளத்தின் அடியில் பெண்களை சமமாக நினைக்கவும், நடத்தவும் இந்த ஆணாதிக்க சமுதாயம் தயாராயில்லை என்பதையே அண்மைய நிகழ்வுகள் தெளிவு படுத்துகின்றன. பெண் எனப் படுபவள் ஒரு உடைமைப் பொருள் என்றே கருதப் படுகிறாள். இல்லை என்று காட்டத்தானோ என்னவோ இந்த மாதிரி மகளிர் தின நினைவுகள் ஒரு பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப் படுகின்றன.எடுத்துக்காட்டாக புகழ் பெற்ற மகளிரைப் பற்றி பேசுகிறோம். பெண்களின் பெருமையைப் பற்றிப் எழுத நான் எடுத்துக்கொள்ளப் போவது எனக்கு நன்கு பரிச்சயமான, என்னைத்தெரிந்த பெண்களில் சிலரைத்தான். பெண் என்றாலேயே எனக்கு நினைவுக்கு வருவது என் மனைவியைத்தான்.அவள் பட்டம் பெற்றவள் அல்ல. பணிக்குச் செல்பவளும் அல்ல. எனக்காக செய்து வந்த பணியையும் துறந்து எனக்காகவே வாழ்பவள். என்னை விட அவளை நான் நேசிக்கிறேன். இது எல்லாக் கணவர்களும் சொல்வது தான் என்பதுபோல் தோன்றினாலும், நான் எழுதுவது ‘அக்மார்க்உண்மை. நான் பார்த்துப் பொறாமைப் படும் பெண்களும் இருக்கிறார்கள்.பதிவுலகில் என்னை பிரமிக்க வைக்கும் பெண்மணிகளின் ஒரு பட்டியலையே தருகிறேன்.

1)       தன்னை ஒரு 23 வயது தற்கால சமூகத்தின் பிரதிநிதியாக அறிமுகப் படுத்திக் கொண்டவர் “ மைத்துளிகள்வலை ஆசிரியர் மாதங்கி மாலி. அவரது வயதுக்கு மீறி ஆழ்ந்து சிந்திப்பவர். என்னுடைய ஒரு பதிவில் ஆண்டவனின் கர்ப்பக் கிரகத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் ஆண்டவனின் உருவத்தைக் காண்பது சிரமமாக இருக்கிறது என்று எழுதி இருந்தேன். உருவமில்லா ஆண்டவனின் எந்த உருவமும் உருவகப் படுத்தியதுதானே என்ற பொருளில் அவர் பின்னூட்டம் எழுதி இருந்தார். அப்போது நான் ஒரு சில நொடிகள் என் பேதைமையை உணர்ந்தேன். தீர்க்கமாக சிந்திப்பவர் வாழ்வில் ஒரு சாதனையாளராவார் என்று நம்புகிறேன்.
 

2)       கோவையில் இருந்து கொண்டு ஆஸ்திரேலியா பற்றிய விஷயங்களை எப்படித் துல்லிய மாகப் பதிவிடுகிறார் என்று ஒரு முறை அவரிடம் எழுதிக் கேட்டேன். அவர் கோவையில் இருந்தாலும் உள்ளம் அயல்நாட்டில் இருக்கும் தன் மகனிடமே இருக்கிறது என்று எழுதிய திருமதி. இராஜராஜேஸ்வரி என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறார். அவரது பதிவுகளைப் பார்க்கும்போது ஒரு பதிவுத் தொழிற்சாலையையே இயக்குகிறார் என்று எண்ணத்தோன்றும். வண்ணப் புகைப்படங்கள் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ. சுருங்கச் சொல்லப் போனால் அவரது பதிவுகள் ஒரு ஆன்மீக என்சைக்கிளோபீடியா.ஒரு முறை ஒரு கடினமான சுடோகு தீர்வு கேட்டு பதிவிட்டிருந்தேன். அதைஅவர் சரியாக  தீர்வு செய்ய மகிழ்ந்து அவருக்கு ஜீனியஸ் என்று பட்டமளித்து மகிழ்ந்தேன். திரு ஜீவியும், திரு அப்பாதுரையும் இரா இரா (பெயர்ச் சுருக்கம்) வுக்குத் தெரியாத விஷயங்களே இல்லையோ என்று வியந்திருக்கின்றனர்.
3)       1500 பதிவு கண்ட திருமதி. கீதா சாம்பசிவம் இன்னொரு பெண்மணி. என்னை வியப்பில் ஆழ்த்துபவர். வெகு காலமாக பதிவு எழுதி வருபவர். கூகிளில் சில விஷயங்கள் தேடும்போது சில பதிவுகள் அவர் எழுதி இருப்பது கண்டிருக்கிறேன். என் பதிவுகளை அவர் படித்துக் கருத்துக் கூற வலியவே அழைத்திருக்கிறேன். சரி என்று அவருக்குப் பட்டதைக் கூறுவார் என்று நம்பிக்கைதான் காரணம். நம் பாரம்பரியங்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர். 

4)       அயல் நாட்டில் இருந்து கொண்டு மரபுக் கவிதைகளை எழுதும் அருணாசெல்வம், தென்றலாகக் கவிதையில் அசத்தும் சசிகலா, முனைவர் பட்டம் பெற்று பள்ளிப் பணியாற்றும் ஆதிரா, தானாகப் பதிவுகள் அதிகம் எழுதாவிட்டாலும் , மற்றவரின் பதிவுகளையும் மிஞ்சும் விததில் அலசும் மஞ்சு பாஷிணி. என்று பலரும் நினைவில் வருகிறார்கள்.                        
   அரசியல் மருத்துவம், கலைகள் தொண்டு என்று பலதுறைப் பெண்களை அநேகமாக எல்லோரும் நினைவு கூறும்போது, எனக்கு மட்டும் அவர்கள் பற்றித் தெரியாதா என்ன.? இருந்தாலும் குடத்தில் இருக்கும் விளக்குகளை குன்றில் ஏற்றிப் பார்க்கத் தோன்றியது.இவர்களிடம் குறை என்று நான் காண்பது .... வேண்டாமே.... எல்லாமே நிறைவுதான்.....!  
------------------------------------------------------------------
 

25 comments:

  1. வலையக பெண்மணிகளை அறிமுகம் செய்து அவர்களின் நற்குணங்களை வெளிப்படுத்தி விளக்கியமை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  2. ஞாபகம் வைத்து பல சிறப்பானவர்களை எழுதியமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  3. //பெண் என்றாலேயே எனக்கு நினைவுக்கு வருவது என் மனைவியைத்தான்.//

    //“ மைத்துளிகள்”வலை ஆசிரியர் மாதங்கி மாலி.//

    // அவர் கோவையில் இருந்தாலும் உள்ளம் அயல்நாட்டில் இருக்கும் தன் மகனிடமே இருக்கிறது என்று எழுதிய திருமதி. இராஜராஜேஸ்வரி //

    // 1500 பதிவு கண்ட திருமதி. கீதா சாம்பசிவம் இன்னொரு பெண்மணி.//

    // அயல் நாட்டில் இருந்து கொண்டு மரபுக் கவிதைகளை எழுதும் அருணாசெல்வம்//

    // தென்றலாகக் கவிதையில் அசத்தும் சசிகலா //

    //முனைவர் பட்டம் பெற்று பள்ளிப் பணியாற்றும் ஆதிரா //

    // தானாகப் பதிவுகள் அதிகம் எழுதாவிட்டாலும் , மற்றவரின் பதிவுகளையும் மிஞ்சும் விததில் அலசும் மஞ்சு பாஷிணி //

    உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு ஒரு சிறப்பு பதிவு! மகளிர் சிறப்பாகவே உள்ளது.! வாழ்த்துக்கள்!






    ReplyDelete
  4. ம்களிர்தினத்தில் வியக்கவைக்கும் பகிர்வுகள் அளித்து பெருமைப்படுத்தியதற்கு
    மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  5. நான் சில மாதங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி மகன்களுடன் இடையறாத சுற்றுப்பயணம் செய்தேன் ..

    மருமகள்களையும் கண்டெடுத்து
    மகிழ்ச்சியுற்றேன் ..
    இனிய மலரும் நினைவுகள் ..

    ReplyDelete
  6. மனைவியை மதிக்க தெரிந்த மனிதர்களை நான் வணங்குகிறேன். மனைவி என்றாலே அடிமை என்ற கருத்தே இருக்கும் நிலையில் தங்கள் பகிர்வு வியக்க வைத்தது. தென்றலையும் நினைவுபடுத்தி வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. //முனைவர் பட்டம் பெற்று பள்ளிப் பணியாற்றும் ஆதிரா //
    ஐயா வணக்கம். தங்கள் வலைப்பூவில் உங்களைப் போன்ற பெரியவர்கள் என்னையும் பாராட்டியமை என்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது. மனமார்ந்த நன்றிகள்.

    ஐயா இப்போது நான் கல்லூரியில் பணிபுரிகிறேன். இது தகவலுக்காக மட்டும்.

    ReplyDelete
  8. நீங்கள் பாராட்டியுள்ள மாதர்களுக்கு என் பாராட்டும் உரித்தாகுக.
    உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மகளிர்தினத்தில் அருமையாக மனைவியைப் பற்றி பகிர்ந்து கொண்டது சிறப்பு.

    நீங்கள் பாராட்டியவர்கள் சிறந்த பெண்மணிகள் தான் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.
    உங்கள் வாழ்க்கைதுணைக்கும்,மகளிருக்கு பெருமை சேர்க்கும் சிறந்த பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மாதங்கி நிறைய சாதிப்பார் என்றே நானும் நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. மாதங்கி நிறைய சாதிப்பார் என்றே நானும் நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. சென்ற முறை சந்திக்க நினைத்த பவளசங்கரி, ராமலக்ஷ்மி, இராரா, ஷைலஜா, நிலாமகள்.. எவரையுமே சந்திக்க முடியாமல் போனது வருத்தமே.
    எத்தனையோ வருத்தங்களைச் சுமந்தபடி தொடர்ந்து தமிழெழுதும் ஹேமா (சுவிஸ்) மனங்கவர்ந்தவர்..மனங்கவர்ந்த இன்னொரு பதிவர் சக்திப்ரபா.. மறுபடி எழுத வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
    நீங்கள் இதற்காகவே பதிவெழுதியது மகிழ்ச்சி.
    என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்க்கிறேன்.. உங்கள் வாலைப் பிடித்தபடி.

    ReplyDelete

  13. @ சுரேஷ்
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ தி.தமிழ் இளங்கோ
    @ இராஜராஜேஸ்வரி
    @ சசிகலா
    @ பானு ( ஆதிரா.?)
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்,
    @ கோமதி அரசு,
    @ அப்பாதுரை
    எல்லோருடைய வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. அப்பாதுரை குறிப்பிட்டுள்ள பெண்மணிகள் பதிவுகளை நான் தேடிப் படிக்க வேண்டும். சில பதிவர்களிடம் எனக்கு சிறிது வருத்தமுண்டு. கையை நீட்டிக்கொண்டு நான் பாதி தூரம் சென்றாலும் அவர்களுடைய கைகள் நீள்வதே இல்லை.நிறைய பெண்பதிவர்கள் பெயர் விட்டுப் போயிருக்கலாம். எழுதும் போது நினைவுக்கு வந்தவர்களே பதிவில். என் குறைதான் அது. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  14. நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆதிரா தவிர அனைவரையுமே நானும் படித்து வியந்திருக்கிறேன். அப்பாதுரை சொல்லியிருப்பது போல போல ராமலக்ஷ்மி, ஹேமாவையும் இந்த லிஸ்ட்டில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயதைப் பதிவுகள் எழுதும் காமாட்சிப் பாட்டி, அப்புறம் சற்றே வயதில் குறைந்த ரஞ்சனி நாராயணன், கோமதி அரசு, வல்லிம்மா.. இன்னும் இருக்கிறார்கள் லிஸ்ட் போட!

    ReplyDelete

  15. மகளிர் தின நினைவுகளில், பெண் பதிவர்கள் பலரது பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம். அதனால் யாரையும் குறைத்து மதிப்பிட்டு விடவில்லை. நான் எழுதியுள்ளதுபோல் எழுதும் போது நினைவில் வந்தவர்களைப் பற்றியே குறிப்பாக எழுதி இருந்தேன். அது என் குறைதான் என்று மீண்டும் கூறுகிறேன். நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  16. மகளிர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடியிருக்கிறீர்களே!

    திருமதி இராஜராஜேஸ்வரி சம்பந்தப்பட்ட மறக்கவே முடியாத நினைவு ஒன்று எனக்குண்டு.

    கேரளத்தில் ரொம்ப வருஷங்களுக்கு முன்பு என் நெருங்கிய நண்பர் தன்னுடன் தன் ஊர் திருவிழா ஒன்றிற்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார். இரண்டு நாட்கள் அவர் ஊரில் அவர் வீட்டில் தங்கியிருந்தேன் ஊர் ஒட்டி ஓடிய ஆறும், ஆற்றங்கரையில் இருந்த சிவன் கோயிலும், அந்த சிவன் கோயில் நுழைவாயிலில் ஒரு மரத்திண்டில் திரட்டி வைக்கப்பட்டிருந்த சந்தன உருண்டையும், நீராடியவுடனே சந்தனக்கீற்றிட்டு கோயிலில் வழிப்பட்டுத் திரும்புவோருமாய்-- இப்பொழுதும் அந்த ஊரும், ஆறு சார்ந்த அந்த இடமும் என் மன நினைவுகளில் பதிந்திருக்கின்றன.

    மாலையில் நடந்த திருவிழாக் காட்சி மறக்க முடியாதது. குறுகிய தெரு போன்ற தார்ச்சாலையில் அதி வேகத்துடன் பாயும் குதிரைகள், ஆரோகணித்து அவற்றைச் செலுத்திவந்த இளைஞர்கள் என்று ஒரு வீர விளையாட்டை கோயில் திருவிழாவுடன் இணைத்திருந்தனர்.

    அந்த ஊர் பாலக்காடு பக்கத்தில் இருக்கிறது. ஊரை ஒட்டிய ஆறும் ஆறு சம்பந்தப்பட்ட சித்தூர் என்ற ஊரின் பெயரும் நினைவிருந்தது. இவ்வளவும் நினைவிருக்கிறதே தவிர அந்த திருவிழா நடந்த கிராமம் போன்ற ஊரின் பெயர் மட்டும் மறந்து விட்டது. பல தடவைகள் இது பற்றி யோசித்திருக்கிறேன். ஊரின் பெயர் மட்டும் நினைவுக்கு வந்ததில்லை.

    கேரளம் சம்பந்தப்பட்ட உங்கள் பழைய பதிவு ஒன்றில் தான் பின்னூட்டத்தில் அந்த தார்ச்சாலை குதிரை விளையாட்டைச் சொல்லி அந்த எந்த ஊர் என்று கேட்டிருந்தேன்.

    அடுத்த சில மணி நேரத்திற்குள் இராஜ ராஜேஸ்வரி மேடத்திடமிருந்து படக்கென்று பதில் வந்தது. அந்த ஊரின் பெயர், 'தத்தமங்கலம்' என்று.
    ஒரு சிறு குறிப்பொன்றை வைத்துக் கொண்டு எவ்வளவு சரியாக எனக்கு நினைவுபடுத்தி விட்டார்கள் என்று அசந்தே போனேன்.

    அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இவ்வளவு நினைவுக்கு வந்தும் அந்த ஊர்ப்பெயர் நினைவுக்கு வரவில்லையே என்ற குறை எனக்கிருந்தது. அது ராஜி மேடத்தின் நினைவாற்றலால் மறைந்தது.

    எல்லாத் தகவல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பது எப்படி இவருக்கு மட்டும் சாத்தியப்பட்டிருக் கிறது என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.




    ReplyDelete
  17. தாங்கள் குறிப்பிட்ட அத்தனை போரையும் நானும் வியந்திருக்கின்றேன்.

    பகிர்வுக்கு நன்றி அய்யா

    ReplyDelete
  18. குழந்தைக் கவிஞர் கவிநயா, தனித்துவம் மிக்க ஷக்திப் பிரபா,
    சிலப்பதிகாரத்தை செம்மாந்த நடையில் கவிதையில் வார்த்தெடுத்து வழங்கும் பாசமலர், எங்கே இவரைக் காணோம் என்று அடிக்கடி நான் தேடும் கிருத்திகா
    என்று இணையத்தில் தங்கள் தடம் பதிக்கும் பதிவர்கள் நிறைய. நான் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பேரும் மிகச் சிறந்த படைப்பாளிகள் என்பது தான் இதில் விசேஷமே.

    ReplyDelete
  19. மனதில் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே ஆப்ட்டாக மன உச்சரிப்பு சகிதமாய் எழுத்தில் வரிகளாக்குவது மிகவும் சிரமமான காரியம். இந்தக் கலையில் வெற்றிக்கொடி நாட்டிய படைப்பாளி மாதங்கி அவர்கள். இவ்வளவுக்கும் தமிழ் நூல்களை படிக்கவும், மன ஆக்கங்களை தமிழில் எழுதவும் சமீபத்தில் தான் கற்றுக் கொண்டவர். அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. மனம் நினைப்பதோடு தளராத முயற்சியும் சேரும் போது எவ்வளவு கடினமான காரியமும் நடைமுறை சாத்தியமாகும் என்பதற்கு அவர் உதாரணப் பெண்மணி.

    ReplyDelete
  20. வியக்கவைக்கும் பகிர்வுகள் அளித்து பெருமைப்படுத்தியதற்கு
    மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  21. @ பானு ( ஆதிரா.?)
    ஐயா மன்னிக்கனும். என் பெயர் பானுமதி. வலைத்தளத்தில் ஆதிராவாக உலா வருகிறேன்.

    முகப்புத்தகத்தில் ஆதிரா முல்லை. அங்கு ஆதிரா என்னும் பெயரில் பதிவர் இருப்பதாகக் காட்டியதால்.

    பதிவு ஏதோ நினைவில் அந்த (பானு) மின்னஞ்சலில் இருந்து பதிவு போட்டு விட்டேன்.

    என் மின்னஞ்சல் முகவரி
    bhanumathichen@gmail.com
    innilaa.mullai@gmail.com

    ReplyDelete
  22. ஏன் ஸ்ரீராம்.. ஆதிரா படித்து வியக்கவில்லையா? (பாருங்க ஆதிரா.. உங்களை பத்தி ஸ்ரீராம் என்ன சொல்றாருனு.. அவரு கூடயும் இனி பேசாதீங்க:)

    ஜீவி.. நீங்கள் பெற்ற இன்பம் யானும் vicariously. இராராக்கள் வாழ்க.

    ReplyDelete
  23. அன்பின் ஐயா,

    வணக்கம். எத்தனையோ தடைகளையும், சிரமங்களையும் தாண்டி பெண்கள் முன்னேறத் துடிப்பது தங்களைப் போன்ற நல்லிதயம் கொண்ட சிலரால் உணர முடிவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியது. அந்த வகையில் இந்த மகளிர் தின சிறப்புப் பதிவில் பல பெண் பதிவர்களை தாங்கள் வாழ்த்திப் பாராட்டியிருப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள். அப்பாதுரை சார் குறிப்பிட்டிருந்தபடி அவர் வருகைக்காக மிக ஆவலாக காத்திருந்தேன். அவரால் வரமுடியாமல் போனது வருத்தமே. ஆனால் அவருடைய உற்சாகம் அளிக்கும் வாழ்த்துக்கள் எழுதுபவர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுப்பவை. அவருடைய ஆழ்ந்த வாசிப்பு ஆச்சரியமேற்படுத்துபவை. மிக்க மகிழ்ச்சி. தங்கள் அரும்பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா. நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete