Monday, April 29, 2013

வயது முதுமை சில விளக்கங்கள்.


                   வயது, முதுமை , -சில விளக்கங்கள்.
                  ---------------------------------------------------


மனம் நினைத்ததைச் செய்ய உடல் ஒத்துழைக்க வில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடேசெய்யாத குற்றம் எனும் பதிவும்  ஏன் ஏன் என்ற பதிவும்.திண்டுக்கல் தனபாலனுக்கு, எனக்கு மனதளவில் வயோதிகம் ஞாபகத்துக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம்.  முதுமை எனக்கு  ஒரு பொருட்டே அல்ல. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இது மீள்பதிவாகிறது என்றால், மனதோடு உடலின் ஒத்துழைப்பு குறைகிறது என்றே பொருள். கோமதி அரசு, முதுமையை நான் சாபம் என்று எண்ணுகிறேனோ என்று கேட்கிறார்  .இல்லை  . தண்டனையோ என்பதுதான் என் கேள்வி. முதுமை பற்றிய எனது இன்னொரு பதிவும் நீங்கள் படித்தால் புரியும். உண்மையில் என் வாழ்விலேயே நான் மகிழ்வாயிருப்பதாகக் கருதுவது இப்போதுதான். இந்தியர்களின் சராசரி வயதையும் தாண்டி வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாக அனுபவிக்கிறேன். கிடைத்த அனுபவங்கள் ஏராளம். . பல செய்திகளை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்



ஏன் என்று பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. எல்லாம் தெரிந்ததுபோல் நினைக்கவும் முடியவில்லை. வலைத்தளம் ஒரு வரம். நினைப்பதை பகிர முடிகிறது. நான் சொல்ல வருவது சில சமயங்களில் சென்றடைகிறதா என்ற சந்தேகம் வரும். அதைப் பற்றியெல்லாம் இப்போது அதிகம் கவலை கொள்வதில்லை.


இதில் எங்கெல்லாம் தன்னிலையில் நான் என்று கூறுகிறேனோ அது என்னொத்த வயதுடையோருக்கும் பொருந்தும்.என்று நம்புகிறேன்
 இப்போது நான் மீள் பதிவுடும் முதுமையின் பரிசு எல்லோருக்கும் பொருந்துமா , தெரியவில்லை. முதுமையின் பரிசு என்னவென்றறிய  சொடுக்குங்கள் இங்கே

  
 

12 comments:

  1. /// நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
    கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    என் இளமையின் சிரிப்பே என்
    முகச் சுருக்கத்தின் அடையாளம்
    சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
    இருந்து இறந்தோர் ஏராளம். ///

    அந்தப் பதிவில் சிறப்பான வரிகள்...

    இந்தப் பதிவையும் எவ்வளவு சந்தோசமாக அனுபவித்து எழுதி உள்ளீர்கள் என்பது வரிகளில் புரிகிறது... ஒளிவு மறைவு இல்லாமல், அனைத்தையும் சொல்லுவதும் பேசுவதும் இப்போது தான் முடியும் என்பதும் உண்மை...

    "பாபா" படத்தில் ஒரு பாடலின் வரிகள் ஞாபகம் வந்தது :

    முதுமை முதுமை வயசு...
    அது முழுசாய் வாழ்ந்த வயசு...

    நண்பர் பகைவர் யார் வந்தாலும்
    அன்பாய் பார்க்கும் மனசு...

    குடும்ப பாரம் கடந்து கடந்து
    ஆசை துறந்து வாழ்கவே...

    மௌனமாக இருந்து...
    ஞானமெல்லாம் வளர்த்து...
    வந்த வேலை முடிந்து...

    இன்று வந்த தலைமுறைக்கு
    வாழ்த்து சொல்லி வாழ்கவே...

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. முதுமையின் உடல் நோவு அதிகம் இருந்தால் முதுமை தண்டனையாகத் தெரியும். நம்மால் நம் வேலையைச் செய்து கொண்டு இருக்க முடிந்தால் போதும். மனம் இளமையாக இருந்தாலே போதுமானது.

    ReplyDelete
  3. வயதின் அனுபவங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள். இந்த அனுபவங்கள் வரம். நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில் மேல் பூனை. இன்று என்பது கையில் உள்ள வீணை என்பார்கள். அந்த 'இன்று'தான் என்றுமே விசேஷம். நாளை பற்றி நாளை பார்த்துக் கொள்ளலாம்.

    ReplyDelete

  4. @ திண்டுக்கல் தனபாலன்
    ரசித்துப் படித்தீர்கள் என்று நினைக்கிறேன். சந்தோஷம். பாபா படம் பார்த்ததில்லை. பாடலும் கேட்டதில்லை.

    @ கீதா சாம்பசிவம். -முதுமையின் பெரிய தொல்லையே. நம் உடல் உறுப்புக்கள் எல்லாம் அவற்றின் இருப்பை எப்போதும் பறை சாற்றிக் கொண்டிருப்பதுதான்.

    @ ஸ்ரீராம்---சரியாகச் சொன்னீர்கள். முதுமையின் பரிசைப் படித்தீர்களா. ?பின்னூட்டம் சந்தேகம் தருகிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. கோமதி அரசு, முதுமையை நான் சாபம் என்று எண்ணுகிறேனோ என்று கேட்கிறார் .இல்லை . தண்டனையோ என்பதுதான் என் கேள்வி.//


    நீங்கள் முதுமையை சாபம் என்று நினைப்பதாய் சொல்லவில்லை. சிலர் முதுமையை சாபம் என்று நினைப்பார்கள் என்கிறேன்.
    அவர்களுக்கு உடல் துனபம், பணக்கஷ்டம்,மனக்கஷ்டம் இருக்கும் என்கிறேன்.
    முதுமையிலும் அழகாய் தெளிவாய் நினைத்ததை எழுத நினைவாற்றல் இருப்பதே வரம் தான். உங்கள் வயதில் நாங்கள் இப்படி இருக்க நீங்கள் ஆசிர்வதிக வேண்டும்.

    ReplyDelete
  6. முதுமை உடல் துன்பம் தணடனை அல்ல. முதுமை என்றால் உடல் தளர்ச்சி அடைவது இயற்கை அதை மருந்துகளால் சரி செய்து கொள்ளலாம். நாள் தோறும் செல்கள் அழிந்துகொண்டே தான் இருக்கிறது.
    வயது ஆக ஆக செல்கள் வளர்ச்சி குறையும்.
    கவலை படாமல் இருந்தாலே போதுமானது.



    ReplyDelete
  7. மீணடும் படித்துத் தெளிந்தேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. /உங்கள் வயதில் நாங்கள் இப்படி இருக்க நீங்கள் ஆசிர்வதிக வேண்டும்./

    கோமதிம்மா சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  9. G.M.B சார்! மனம் தோட்ட பதிவு. ஸ்ரீராம் கருத்தை அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  10. இயற்கையின் நிகழ்வுகளை ஏற்றுக்கொளவதே மனமுதிர்ச்சி. மனதை சோர்வுறாமல் வைத்துக்கொண்டால் போதும்.

    ReplyDelete

  11. @ கோமதி அரசு
    நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் எல்லாம் சரியே. நானும் அறிந்ததே. இருந்தாலும் சில நேரங்களில் ஏன் என்ற கேள்வி ஆதங்கமாய் வெளிப்படுகிறது. சில நேரங்களில் முதுமையின் advantages மனதை உற்சாகப்படுத்த உதவுகிறது. நாணயத்தின் இரு பக்கங்களையுமே எழுதுகிறேன். நன்றி.

    ReplyDelete

  12. @ ரமணி வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
    @ ராமலக்ஷ்மி.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதல்லாமல் வேறொன்றும் அறியேன் ......வாழ்த்துக்கள்.
    @ மோகன் ஜி வெகு நாளைக்குப் பின் உங்கள் பின்னூட்டம். ஒவ்வொரு நாளும் புதிதாய் உயிர்க்கிறேன் என்றே எண்ணுகிறேன். நாளை பற்றி நினைப்பதே இல்லை. நன்றி
    @ டாக்டர் கந்தசாமி. உங்களிடம் இருந்து நிறையவே கற்றுக் கொள்கிறென்நன்றி.

    ReplyDelete