Thursday, July 11, 2013

அமெரிக்கனினும் பெரிய அமெரிக்கன்...!


                    அமெரிக்கனினும் பெரிய அமெரிக்கன்....!
                      ---------------------------------------------------



சில நாட்களுக்கு முன் துக்கடாக்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில்ஒரு பகுதியில் நான் இந்தியன் (இங்கே சுட்டவும்) என்ற தலைப்பில் நம் மவரின் சில குணாதிசயங்களை குறிப்பிட்டிருந்தேன் நம்மவரில் சிலர் பணி நிமித்தமாகவோ, தாங்களை மேம்படுத்திக் கொள்ளவோ மேலை நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்கா செல்கிறார்கள்.அங்கு சென்று அங்கேயே தங்க நேரும்போது சில அமெரிக்கப் பழக்க வழக்கங்கள் இவர்களிடம் வர வாய்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் இவர்கள் தங்கள் வேர்களைத் தொலைக்கிறார்களோ என்னும் அங்கலாய்ப்பில் ”வேர்கள் எங்கே” (இதில் சுட்டவும்) என்று ஒரு பதிவும் எழுதி இருந்தேன். இந்தப் பதிவு இவை இரண்டுக்கும் இடைப் பட்டது.இங்கிருந்து மகனையோ, மகளையோ பார்க்கவும் அங்கு சில நாட்கள் தங்கவும் செல்பவர்கள் திரும்பி வந்தால் சில மாற்றங்களுடன் வருகிறார்கள். என் கண்ணுக்கும் மனதுக்கும் தோன்றியதை எழுதுகிறேன். எக்செப்ஷன்ஸ் இருக்கலாம். இவர்களை அடையாளம் காண்பிக்கும் சில விஷயங்களைப் பகிர்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.


1)       கணவன் மனைவி இருவரையும் BERMUDAS-ல் காணலாம். பெரும்பாலும் NIKE ஷூக்கள அணிந்திருப்பர்.
2)      தாபாக்களில் உணவு அருந்திவிட்டு CREDIT கார்டில் பணம் செலுத்த முயல்வார்கள்.
3)      மினெரல் வாட்டர் பாட்டிலுடன் இருப்பார்கள்.
4)      தாராளமாக DEODARENT உபயோகிப்பார்கள்.
5)      யாராவது தும்மினால் GOD BLESS  என்பார்கள்.
6)      ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும்போது HEY அல்லது HI என்பார்கள்.
7)      தயிர் என்பதற்கு யோகர்ட் என்பார்கள்.
8)      டாக்சி என்பதற்கு பதில் CAB என்பார்கள்.
9)      சாக்கலெட் அல்லது மிட்டாய்க்கு CANDY என்பார்கள்
10)  பிஸ்கட் என்பதற்கு குக்கி என்பார்கள்.
11)  HAVE TO GO என்பதற்கு GOTTA GO என்பார்கள்.
12)  ஜீரோ என்று வருமிடங்களை ஓ என்பார்கள். (உ-ம் 204 என்பதை டூஓஃபோர் என்பார்கள்.)
13)  தூரங்களை மைலில் சொல்வார்கள்
14)  எண்களை மில்லியன்களில் சொல்வார்கள்.
15)  சுற்றுப்புறம், வெயில் எல்லாவற்றையும் குறைபட்டுக் கொள்வார்கள்.
16)  பால் கவர்களில் பாலில் எவ்வளவு % FAT இருக்கிறது என்பதை கவனமுடன் பார்ப்பார்கள்.
17)  நாளைக் குறிப்பிடும்போது மாதம் தேதி வருடம் (MM/DD/YYYY) என்றுதான் எழுதுவார்கள். தேதி மாதம் வருடம் என்று குறிப்பது பிரிட்டீஷ் வழக்கம் என்று கேலியாக சொல்வார்கள்.
18)  COKE குடிக்கும்போது கவனமாக DIET COKE தான் குடிப்பார்கள்.
19)  ஊருக்கு வந்து ஒரு மாதம் ஆனாலும் JET LAG பற்றி குறை கூறுவார்கள்.
20)  இந்தியாவின் எல்லாவற்றையும் குறைவாகவே மதிப்பார்கள்.
21)  தங்கள் பயணத்தின்போது சூட்கேசில் கட்டப்படும் விமான சர்வீஸாரின் TAG களை எடுக்கவே மாட்டார்கள்.
22)  SCHEDULE என்பதை SKEJULE என்றும் MODULE என்பதை MOJULE என்றும் உச்சரிப்பார்கள்.
23)  கடைசியாக..? பெரும்பாலும் உரையாடலின் போது “ அமெரிக்காவில்அல்லது நான் அமெரிக்காவில் இருந்தபோது என்று அடிக்கடி கூறுவார்கள்.

( எனக்கு வந்த ஒரு மின் அஞ்சலின் சாராம்சமே தமிழ்படுத்தி எழுதி இருக்கிறேன். ....அப்பாடா.. நான் தப்பித்துக் கொள்கிறேன் .....!) 

என் மனைவியின் அனுமதியுடன் பதிவிடுகிறேன்......!!!

 இப்படியும் இருக்கிறதா.?நல்ல முன்னேற்றம்...,!






 

18 comments:

  1. உங்கள் இளமையின் ரகஸ்யம் இதுதான் பாலு சார்.இந்த ரசனை எந்நாளும் உங்களுடன் தங்கியிருக்கட்டும்.

    இது மாதிரியான பதிவுகள் வாசிக்கும் போது இந்தப் பாணியில் எழுதவேண்டுமென நினைத்துக் கொள்வேன்.அப்புறம் அது நிறைவேறாமலேயே,கையெட்டும் தொலைவில் காத்தபடியே இருக்கும்.

    ReplyDelete
  2. இங்கிருந்து மகனையோ, மகளையோ பார்க்கவும் அங்கு சில நாட்கள் தங்கவும் செல்பவர்கள் திரும்பி வந்தால் சில மாற்றங்களுடன் வருகிறார்கள்.

    ரசிக்கவைத்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. ரசிக்க வைக்கும் கவனிப்புக்கள்....

    ReplyDelete

  4. சுந்தர்ஜி எனக்கு உங்களைமாதிரி எழுத வருவதில்லையே என்ற ஏக்கம்.என் ரசனையைப் பாராட்டியதற்கு என் நன்றி. நான் வெகு சீரியசாக எழுதும் பதிவுகள் நான் எதிர்பார்க்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதே நிஜம். இருந்தாலும் எங்காவது, யாரிடமாவது சிறிதாயினும் சலசலப்பை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையில் தொடருகிறேன். உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இட ஏதோ பிரச்சனை இருக்கிறதே.

    ReplyDelete

  5. @ இராஜராஜேஸ்வரி
    @ திண்டுக்கல் தனபாலன்.
    வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

    ReplyDelete
  6. அமெரிக்க நாட்டின் தாக்கத்தை நன்று கவனித்து ரசித்து பதிவிட்டுள்ளீர்கள் அய்யா நன்றி.சிங்கம் படம் அருமை. சிங்கமே இப்படியென்றால், நாமெல்லாம்?

    ReplyDelete
  7. நன்றாகவே கவனித்துள்ளீர்கள் மேலை நாட்டு returned பெற்றோர்களை.

    ReplyDelete
  8. சிங்கத்தின் படமும் அதைத் தொடர்ந்து
    சுருட்டி வைக்கிற படத்தையும் பார்த்து மிகவும்
    சந்தோஷம் மட்டும் இல்லை ஏக்கமும் கொண்டேன்
    (இது மனைவிக்குத் தெரியாமல் இடப்பட்ட பின்னூட்டம்
    உங்கள் தைரியம் வர ஆண்டவன் அனைவருக்கும்
    அருள்வானாக )

    ReplyDelete
  9. வடக்கே சென்று வந்தாலே வார்த்தைக்கு வார்த்தை ”அச்சா” சொல்லாதவர்கள் கிடையாது...:))(பத்து வருடங்கள் தில்லியில் இருந்தாலும் அவசியத்திற்கு தவிர நான் உபயோகித்தது இல்லை)

    அப்படியிருக்கும் போது மேலைநாடு என்றால் சும்மாவா....:))

    ReplyDelete
  10. ஹாஹாஹா, நீங்கள் சொல்லி இருப்பதில் எதுவுமே இல்லை என்பது நான் தெரிவிக்கும் விஷயம். அங்கே இருக்கையிலும் கூட முள்ளின் மேல் அமர்ந்திருக்கிறாப் போல் தான் உணர்வோம். முக்கியமாய்ப் பத்திரிகைகள் எதுவும்கிடைக்காது. எனக்கோ தினம் படிக்கணும். என்னதான் லைப்ரரியில் தமிழ்ப்புத்தகங்கள் வாங்கி வந்து படிச்சாலும் துக்ளக், கல்கி, சக்திவிகடன், பக்தி போன்ற புத்தகங்களைப் படிக்கிறாப்போல் வருமா? தினசரிப் பேப்பரும் படிக்க முடியாது. இணையத்தில் படிப்போம் தான். அது எல்லாம் வீட்டிற்குப் பேப்பர் வந்து படிக்கிறாப்போல் வருமா?

    அதோடு கவர் பால் வாங்குவதும் இல்லை. குறைந்த கொழுப்பு உள்ள பாலைப் பயன்படுத்துவதும் இல்லை. அது உடல்நலனுக்குக் கேடு எனப் பலரும் சொல்கின்றனர். ஏனெனில் கொழுப்பை எடுத்த பால் பயன்படுத்த லாயக்கற்றது என அமெரிக்காவிலேயே பலரும் சொல்வது.

    ReplyDelete
  11. வட மாநிலங்களில் இருந்தப்போ முதலில் அவர்களின் ஹிந்தி உச்சரிப்புக்கும், நம்ம உச்சரிப்புக்கும் உள்ள மாறுபாட்டில் எதுக்கெடுத்தாலும் "அச்சா" சொல்லிச் சமாளிச்சு, இப்போ நாங்க யாருமே அச்சா சொல்லாமல் பேசுவதில்லை. :))))) ஆனால் தமிழ்நாட்டில் இப்போது பெரும்பாலானோர் பெயரோடு "ஜி" சேர்த்து அழைப்பதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர். :))))

    ReplyDelete
  12. அங்கே நாங்கள் பயன்படுத்தியது ஹாஃப் அன்ட் ஹாஃப் எனப்படும் கொழுப்புச் சத்து உள்ள பால் தான். யோகர்ட் வாங்கினாலும் தயிரை உறை ஊத்தியே அதை மோராக்கிக் கரைத்துச் சாப்பிடுவோம். :)))) நம்ம வழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. க்ரெடிட் கார்டெல்லாம் வைச்சுக்கிற வழக்கமும் இல்லை. செல்போனே இப்போத் தான் இரண்டு மூன்று வருடங்களாகக் குழந்தைகள் தொடர்பு கொள்ள வசதிக்காக வைத்திருக்கோம்.

    ReplyDelete
  13. அடுத்த பதிவுக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் ஜிஎம்பீ சாருக்கு..

    ............

    ReplyDelete
  14. அமெரிக்க ரிட்டர்ன் மக்கள் தங்களைத் தாங்களே கோமாளியாக்கிக்கிறாங்க.பெண் சிங்கம் டான்ஸ் அருமை. காத்து நிரம்பிய மனைவி பொம்மை எங்க கிடைக்கும்?

    ReplyDelete

  15. @கரந்தை ஜெயக்குமார்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ ரமணி
    @ கோவை2தில்லி
    @ கீதா சாம்பசிவம்
    @ ஜீவி
    @ உமேஷ் ஸ்ரீனிவாசன்
    அனைவருக்கும் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  16. இங்கிருந்து மகனையோ, மகளையோ பார்க்கவும் அங்கு சில நாட்கள் தங்கவும் செல்பவர்கள் திரும்பி வந்தால் சில மாற்றங்களுடன் வருகிறார்கள்.//

    அடுத்த முறை கவனிக்க வேண்டும் இவையில் ஏதாவது தொற்றிக் கொண்டு இருக்கா என்று!
    பகிர்வு அருமை.

    ReplyDelete
  17. // அமெரிக்கனினும் பெரிய அமெரிக்கன்....! //

    நல்லாத்தான் சொன்னீங்க!

    // இப்படியும் இருக்கிறதா.?நல்ல முன்னேற்றம்...,! //

    அந்த ஆசாமி, “பொறந்தாலும் ஆம்ப்பிள்ளையா பொறக்ககூடாது
    அய்யா பொறந்து விட்டா பொம்ப்பிள்ளைய நினைக்க கூடாது” என்ற ரகம் போலிருக்கிறது.
    ( என்னுடைய பையன் அறையில்தான் கம்ப்யூட்டர் இருக்கிறது. இந்த பொம்மையை இன்றுதான் காண நேரம் கிடைத்தது )

    ReplyDelete
  18. இந்த மாதிரி ஆட்களை நானும் பார்த்திருக்கிறேன்.

    நான் தூத்துக்குடியில் பணியாற்றியபோது (1985-86) அங்கு அயல்நாட்டு வணிக கப்பல்களில் (Merchant ships) பணியாற்றிவிட்டு விடுமுறைக்கு ஊர் திரும்பும் இளைஞர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். நான் மேலாளராக இருந்த வங்கிக் கிளையிலும் இத்தகைய பல வாடிக்கையாளர்கள் இருந்தனர். விடுமுறைக்கு வந்து ஒரு சில வாரங்களாவது வெயில் தாங்கல சார், என்ன புழுக்கமாருக்கு, எப்படி சார் நீங்க ஏசி கூட இல்லாம என்றெல்லாம் புலம்புவார்கள். ஹிப்பி ஸ்டைலில் குடுமி, கையில் எப்போதும் புகையும் 555 சிகரெட், பெர்முடாஸ் அல்லது ஜீன்ஸ், வெளிப்படையான வாசகங்கள் பொறித்த டீஷர்ட், ஆடம்பரமான கைக்கடிகாரம், ஷூ என்று வலம் வருவார்கள். வரும்போது ஷூவுக்கு அடியில் வைத்து கடத்தி வரும் டாலர்களை பணமாக்கி கணக்கில் செலுத்துவார்கள். ஒரு மாதத்தில் மீண்டும் கப்பலுக்கு ஆர்டர் வந்துரும் என்ற நினைப்பில் கொண்டு வந்த பணம் முழுவதையும் நகை, ஆடை என்று செலவழித்துவிட்டு ஆறு மாதம் ஆகியும் ஆர்டர் வராமல் கைச் செலவுக்குக் கூட திண்டாடி புதிதாய் வாங்கிய நகைகளையே வங்கியில் அடகு வைக்க வந்து நிற்பார்கள்!

    ReplyDelete