Monday, January 6, 2014

A MARRIAGE WITH A DIFFERENCE...!


                       A MARRIAGE WITH A DIFFERENCE.
                       -------------------------------------------



வெகுநாட்களாகவே திருமணம் வேண்டாம் என்று சொல்லி வந்த பெண்,- நண்பரின் உறவினர்- கல்யாணத்துக்கு அழைப்பு இருந்தது. டிசம்பர் 26-ம் நாள் காலை 11 மணிக்கு மைசூர் செல்லும் சதாப்தியில் பயணம். மதியம் ஒரு மணிக்கு மைசூர் சேர்ந்தோம். ரயில் நிலையத்துக்கே வந்து எங்களை அழைத்துச் சென்றார்கள். நேரே டைனிங் ஹால்-விருந்து- முடிந்ததும் எங்களுக்காக புக் செய்யப்பட்டிருந்த ஹோட்டல் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். திருமண சம்பந்த நிகழ்ச்சிகள் மாலை ஆறு மணி அளவில் துவங்கும் என்றும் அதுவரை ஓய்வெடுக்கலாம் என்றும் கூறினார்கள்.சற்று ஓய்வுக்குப் பிறகு என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி தத்தாத்த்ரேயர் கோவிலுக்குச் சென்று வந்தோம்.
திருமணத்துக்கு வந்திருந்தவர்களை நோட்டம் விட்ட போது , இந்தத் திருமணம் –it is going to be different –என்று தோன்றியது. பூர்வீகம் கேரளாவிலிருந்து மைசூர் வந்து செட்டில் ஆன தமிழ்க் குடும்பம். கல்யாணப் பத்திரிக்கையே ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் இருந்தது. பத்திரிக்கை பழைய மோஸ்தரில் மஞ்சள் ரோஜா வண்ணத்தில் சமயத் தலைவர்களின் ஆசியுடன் என்று இருந்தது..
மாப்பிள்ளை அழைப்பு , ஜானவாசம் போன்றவை இல்லாமல் அவர்களின் முன்னோர் காலத்தில் இருந்தபடி திருமணத்துக்கு முதல் நாள் மாலையில், 20 .30. வேதவிற்பன்னர்களின் வேத கோஷங்களுடன் தொடங்கியது. சுமார் ஒன்றரை மணிநெரம் நான்கு வேதங்களையும் கோஷித்தார்கள். சற்றே வித்தியாசமான ஒலியுடன் கூடியதை சாமவேதம் என்று அடையாளப் படுத்த முடிந்தது. வேத கோஷங்களொலித்துக் கொண்டிருந்த போது தத்தாத்ரேயர் கோவில் தரிசனம் முடித்து நாங்கள் வந்து சேர்ந்தோம். அதன் பிறகு பிராம்மண சமூக வழக்கப் படி நிச்சயதார்த்தம் ( என்று நினைக்கிறேன் ) நடந்தது.அதன் பின் விருந்து.
மறுநாள் காலை முஹூர்த்தம். காசியாத்திரை , மாலை மாற்றல், ஊஞ்சல் எல்லாம் கிரமப்படி(?) நடந்தது, மணப்பெண்ணையும் மணமகனையும் தோளில் சுமந்து மாலை மாற்றச் செய்தார்கள்...! ஊஞ்சலின் போது கல்யாண வைபோகமே என்று பாட்டெல்லாம் பாடினார்கள். திருஷ்டி சுற்றும்போது எல்லாதிசைகளிலும் போடும் அன்ன உருண்டைகள் சுற்றி இருப்பவர்களைக் கவனிக்காமல் போடப் பட்டன. நல்ல வேளை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தத் திருமணத்தின் போது சில நல்ல விஷயங்கள் அனுஷ்டிக்கப் பட்டன. மணமெடையில் நெருங்கிய உறவினர்களே இருந்தனர். மேடை சற்று உயரமாக இருந்தது. வந்திருந்தவர்கள் அமர நாற்காலிகள் போடப் பட்டிருந்தது. மண நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலிருந்தே காண்முடிந்தது. திருமாங்கல்யம் வந்திருந்தோரின் ஆசிர்வாதத்துக்காக சுற்று வரப்பட்டபோதே ஆசிர்வாத அட்சதைகளும் வினியோகிக்கப் பட்டது. மாங்கல்யதாரணம் நடக்கும் போது அட்சதையை வீசித் தூவாமல் இருக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். மணமக்களை வாழ்த்தி கொடுக்கப் பட்ட அட்சதையைப் பெற்றுக் கொள்ள வேறு சிலர் வந்தனர். இந்த அட்சதைகளை யாரும் மேடைக்கருகே வராமலேயே மணமக்கள் மேல் தூவ ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மேடையில் நின்று ஒருவர் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்டுக் கொண்டிருந்தார். மணமகனுக்கு அவரது வருங்கால மாமனார் பாத பூசை செய்ததை ஆங்கிலத்தில் விளக்கியவர், வயதில் பெரியவர் ஒரு இளைஞனுக்கு பாத பூசை செய்வது சரியா என்று தோன்றலாம். திருமண விரதம் இருக்கும் வரனும் வதுவும் பரமேஸ்வரன் பார்வதிக்குச் சமம் “ என்றொரு விளக்கம் கொடுத்தார்,! அதே போல் மாங்கல்யதாரணம் முடிந்த உடனே வாழ்த்துச் சொல்ல மேடைக்கு வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார். சப்தபதி சடங்கு முடிந்தபிறகே வாழ்த்துச் சொல்லவும் கை கொடுக்கவும் அனுமதி என்றார்.  ஆக சாதாரணமாகக் காணப்படும் தல்லுமுல்லுகள் தவிர்க்கப் பட்டன,. திருமணம் இனிதே முடிந்தது.
இதில் பதிவிட என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றலாம் இந்தத் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்களில் பலரும் inter-caste inter-religion, inter-state   inter-language  மற்றும் inter-national  திருமணங்கள் செய்து கொண்டவர்கள்போல் தோன்றிையது.ஊஞ்சலின் போது திருஷ்டி சுற்றி அன்ன உருண்டைகள் போட்டவரில் அயல் நாட்டினரும் இருந்தது  added  a colour  to the ceremony. நான் சென்றிருக்கும் திருமணங்களில் ஹிந்து ஆங்கிலேயத் திருமணம் ஆர்ய சமாஜ் நடத்திவைக்கக் கண்டிருக்கிறேன். சாதி மாறிய திருமணங்களும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரே குடும்பத்தில் இத்தனை வேறுபாடுகளையும் உள்ளடக்கிய உறவினர்கள் கலந்து கொண்ட திருமணம் பார்ப்பது இதுவே முதல் தடவை.  அதுவும் சம்பிரதாயங்கள் அதிகம் மாற்றப்படாமல் நடந்த திருமணம் என்று நினைக்கிறேன் A MARRIAGE WITH A DIFFERENCE.!
திருமணம் முடிந்த கையோடு வெற்றிலை பாக்கு தேங்காய் முதலியவற்றை காகிதப் பைகளில் போட்டுக் கொடுத்தனர். இந்தக் காகிதப் பைகள் ASSOCIATION FOR THE WELFARE OF THE MENTALLY DISABLED ( AWMD )  மூலம் செய்விக்கப் பட்டவை. இந்த சமூக அக்கறை போற்றத்தக்கது. இதல்லாமல் சிறிய கைவினைப் பொருட்களும் வினியோகிக்கப்பட்டது.
முதல் பந்தியில் உணவு உட்கொண்டு மதியம் மைசூரில் இருந்து புறப்படும் சதாப்தி ரயிலில் பெங்களூர் வந்தோம்.

18 comments:

  1. இப்போதெல்லாம் எல்லாக் கல்யாணங்களிலும் வைதிகத்தை முன்னிறுத்திப் பல விஷயங்களை முன் கூட்டியே சொல்கின்றனர். உதாரணமாக சப்தபதி முடியும் முன்னர் கை குலுக்க வேண்டாம், பரிசளிக்க வேண்டாம் என்பதும், அக்ஷதையை இருந்த இடத்தில் இருந்தே போட வேண்டாம் என்பதும், திருமங்கல்யம் சுற்றி வருகையிலேயே அக்ஷதை, பூக்கள் வழங்குவது என்பதும் அநேகமாக எல்லாக் கல்யாணங்களிலும் பார்க்க முடியும். மாலை மாற்றும்போதும் மாமாக்கள் இப்போதெல்லாம் பெண்ணோ, பிள்ளையோ எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் தோள் தூக்குகின்றனர். பார்க்கக் கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். :)))) பழமையும், புதுமையும் கலந்த கல்யாணங்கள்! :))))

    ReplyDelete
  2. பாத பூசை செய்வது இங்கும், இன்னும் இருக்கிறதே...

    இந்த திருமணம் மிகவும் வித்தியாசமாகத் தான் இருக்கு ஐயா...

    ReplyDelete
  3. திருமண சடங்கு முறைகள் மற்றும் பல் செய்திகளை விளக்கமாய் சொல்லி திருமண விழாவில் கலந்து கொண்ட அனுபவம் கிடைக்க செய்தீர்கள்.

    ReplyDelete
  4. தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல
    வித்தியாசமான திருமணம் தான்
    தங்கள் பதிவு நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
    அனுபவத்தைத் தந்தது
    பெற்றோர் சம்மதிக்க நடக்கும் பல
    காதல் திருமணங்கள் .இப்போதெல்லாம்
    சம்பிரதாய முறைப்படித்தான் நடக்கின்றன
    வேறு வேறு ஜாதியாக இருந்தாலும்....

    ReplyDelete
  5. பழமையும் புதுமையும் கலந்த, நீங்கள் வகைப்படுத்தியது போல, ஒரு வித்தியாசமான திருமணம்தான். வரிசைக் கிரமமாக எழுதி இருக்கிறீர்கள்!

    ReplyDelete
  6. வித்தியாசமான அனுபவம் தான்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  7. ஒரு வித்தியாசமான திருமனத்தப் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  8. ஐயா, இவ்வளவு நிகழ்வுகளையும் தாங்கள் நேரில் கண்டு உணர்ந்து அதே சமயம் நமது பண்பாட்டுக்கூறுகளையும் இணைத்து எழுதி எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வித்தியாசமான திருமணம் மட்டுமல்ல. வித்தியாசமான பதிவும் கூட.

    ReplyDelete
  9. ”வயதில் பெரியவர் ஒரு இளைஞனுக்கு பாத பூசை செய்வது சரியா என்று தோன்றலாம். //

    ஒரு திருமணத்தில் நானும் பார்த்தேன் ..

    சமூக அக்கறையுள்ள செயல்கள் மகிழ்ச்சியளிக்கின்றன..!

    ReplyDelete
  10. //”வயதில் பெரியவர் ஒரு இளைஞனுக்கு பாத பூசை செய்வது சரியா என்று தோன்றலாம்.//

    இன்றைக்கும் மாப்பிள்ளை வயதில் சிறியவராய் இருந்தாலும் பெண்ணின் பெற்றோர் அவரை மரியாதையோடு அழைப்பதுதானே வழக்கம். இது தொன்றுதொட்டு வரும் பழக்கம். இதற்கு காரணம் புரியாமல் இருந்தது. தங்கள் பதிவின் மூலம் விளக்கம் பெற்றேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  11. உண்மையில் இது ஒரு வித்தியாசமான திருமணம்தான். சம்பிரதாயங்களும் மதிப்பு கொடுத்து அதை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமும் கொடுத்தது மற்ற திருமணங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டியுள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  12. @ கீதா சாம்பசிவம்
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ கோமதி அரசு
    @ ரமணி
    @ தமிழ் இளங்கோ
    @ வெங்கட் நாகராஜ்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ Dr.Jambulingam
    @ இராஜராஜேஸ்வரி
    @ வே.நடனசபாபதி
    @ டி.பி.ஆர்.ஜோசப்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. நான் வேண்டுமென்றே சம்பந்தப்பட்டவர்களின் ஐடெண்டிடியைக் குறிப்பிடவில்லை. ஆனால் இந்தத் திருமணம் குறித்து நான் சரியான commentary ஆக எழுதியது குறித்து சிலாகித்து மணமகளின் உறவினர் ஒருவர் கடிதம் (மின் அஞ்சல்) அனுப்பி இருந்தார்.

    ReplyDelete
  13. கல்யாணத்தை நேரில் கண்ட திருப்தி, மணமக்கள் பல்லாண்டு வாழ்க.

    ReplyDelete
  14. வித்தியாசமான திருமண வைபவத்தை பாராட்டும் விதமாக எழுதியது நிஜமாகவே பாராட்டத்தக்கது .

    ReplyDelete
  15. இதுபோலவே தாங்கள் சென்றுவரும் ஒவ்வொரு வித்தியாசமான நிகழ்ச்சிகளையும் பதிவிடவேண்டுகிறேன்.

    ReplyDelete
  16. அஷ்டபதி கேள்விப்பட்டிருக்கிறேன், சப்தபதி? ஏழு மலைகள்? ஏழு கணவர்கள்? ஏழு தலைவர்கள்? ஹ்ம்ம்ம்.. என்ன இது?

    மோஸ்தர் - இது என்ன சொல்? சுத்தமாகக் கேள்விப்பட்டதில்லை சார்!

    ஏதோ சாப்பாடு போட்டார்களே.. சமீபத்தில் நான் போக நேர்ந்த கல்யாண ரிசப்ஷனில் அங்கங்கே theme கணக்கில் பந்தல் போட்டு.. என்னென்னவோ செஞ்சு.. கல்யாண சாப்பாட்டை ஒரு வழி பண்ணிட்டாங்க.

    சரியாப் போச்சுனு நொந்து போய் அடுத்த வாரம் இன்னொரு நண்பர் வீட்டுக்குப் போனேன். ஓணம் விருந்து என்று வாழையிலையில் பத்தாயிரம் வெரைடி போட்டார்கள். வெட்கமேயில்லாமல் உண்டு களித்தேன்.

    ReplyDelete
  17. //அஷ்டபதி கேள்விப்பட்டிருக்கிறேன், சப்தபதி? ஏழு மலைகள்? ஏழு கணவர்கள்? ஏழு தலைவர்கள்? ஹ்ம்ம்ம்.. என்ன இது?//

    @அப்பாதுரை,

    என்ன இது அநியாயமா இல்லையோ? இந்த சப்தபதி முடிந்தால் தான் சட்டரீதியாக ஹிந்துத் திருமணங்கள் பூர்த்தி அடைந்ததாக இந்துத் திருமணச் சட்டம் சொல்கிறது. தாலி கட்டியதும் கல்யாணம் ஆயிடுச்சுனு எல்லாம் சொல்ல முடியாது, தெரியுமா? :))))) அதனால் தான் கோவிலில் வைத்துத் தாலி மட்டும் கட்டிக்கொள்ளும் தம்பதிகள் கட்டாயமாய் அதைப் பதிவு பண்ணியே ஆகவேண்டும். முன்னெல்லாம் சப்தபதி ஆனாலே போதும், பதிவு பண்ண வேண்டாம் என்று தான் இருந்தார்கள். ஆனால் இப்போது அதிகம் வெளிநாடுகளுக்குப் போவதால் பதிவும் பண்ணிவிடுகிறார்கள். :)))) சப்தபதி மந்திரங்கள் குறித்து ஒரு பதிவே போட்டிருக்கேனே! பார்க்கலை?? :))))
    http://sivamgss.blogspot.in/2013/10/blog-post.html

    ReplyDelete
  18. மோஸ்தர் என்பது வட்டார வழக்குச் சொல்னு சொல்லலாமோ? பொதுவா நகைகளில் புது மோஸ்தர், புடைவைகளில் புது மோஸ்தர் என்பார்கள். அந்தக் கால தேவன் கதைகளிலும், அந்தக்கால எழுத்தாளர்கள் பலர் கதைகளிலும் மோஸ்தர் என்னும் சொல்லை நிறையவே பார்க்க முடியும்.

    புதியதொரு டிசைன் என்று கொள்ளலாம்.

    ReplyDelete