நானும் நகைச்சுவையும்
----------------------------------
ரயில்வே நிலையத்தில் டிக்கெட்
முன் பதிவு செய்யப் போன அனுபவம் இருக்கிறதா.?அங்கு மூன்றோ நான்கோ கவுண்டர்கள்
இருக்கும். நிறைய நாற்காலிகள் போட்டிருப்பார்கள். வரிசைப்படி வந்தவர்கள்
நாற்காலிகளில் முறைப்படி அமர்ந்து கொள்ளவேண்டும் கவுண்டருக்குச் சென்று முன் பதிவு
செய்து கொள்பவர் முடித்ததும்காலியாகும் கவுண்டருக்குச் சென்று முன் பதிவு
செய்யலாம். இந்த முறைப்படி ஒரு ஆர்டராக தள்ளு முள்ளு இல்லாமல் முன் பதிவு
செய்யலாம். நான் என் மனைவி மற்றும் என் மகனுடன் ஒரு நாள் முன் பதிவு செய்யும்
இடத்துக்குப் போய் வரிசைப்படி நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம். வரிசையில்
நாங்கள்தான் கடைசி. எங்கள் முறை வந்தபோது கவுண்டரில் இருந்தவர் சற்றே ரிலாக்ஸாக
இருந்தார். நானும் என் மனைவியும் ( எங்கும் எப்போதும் என் கூட வருபவள்;) இம்முறை
கூடவே என் மகனும் .கவுண்டரில் இருப்பவர் இன்னும் யாரும் இல்லை என்று நிச்சயப்
படுத்திக் கொண்டு எங்களை சிரித்த முகத்துடன் அன்பாகப் பார்த்தார். பிறகு கேட்டாரே
ஒரு கேள்வி.”
உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” என்னைப் பார்த்தும் இந்தக் கேள்வி. நான்
“ஆம் ஆகிவிட்டது. இதோ இவர்தான் என் மனைவி” என்றேன்.. அவர் உடனே வாய்சிட்டுச்
சிரிக்கத் தொடங்கினார் நீங்களே சொல்லுங்கள் இதில் சிரிக்க என்ன இருக்கிறது. சற்று
நேரம் சிரித்தவர் என் மனைவியைப் பார்த்து உங்கள் திருமணம் லவ் மேரேஜா என்று
கேட்டார். நாங்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு” ஆம் லவ்
மேரேஜ்தான்” என்றோம்.
ஏதோ உலக அதிசயம் பார்ப்பது போல் எங்களைப்
பார்த்து விட்டு முன்னைவிட அதிகமாகக் குலுங்கிக் குலுங்கி நகைக்கத் தொடங்கினார்.
எனக்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது. முன் பதிவு செய்யும் படிவங்களைப் பார்த்தோமா
டிக்கெட் கொடுத்தோமா என்றில்லாமல் வேண்டாத கேள்விகள் கேட்டு அதற்குப் பதில் சொன்னால்
விழுந்து விழுந்து சிரிக்கிறார். நான் கோபமாக எங்களுக்குத் திருமணமாகி இதோ
நிற்கிறானே இவனையும் பெற்றாயிற்று “என்றேன்
அவர் ஓரளவுக்குச் சிரிப்பை குறைத்துக் கொண்டு “இவருக்கும் திருமணம் ஆகி
விட்டதா?” என்று
கேட்டார். “ ஐயா, இவருக்கும் திருமணமாகி ஒரு பெண் பிறந்து காலேஜுக்கும் போகிறாள்” என்றேன் .
இதைக்கேட்டவுடன் அந்த குமாஸ்தா ஏதோ கேட்டே இருக்காத நகைச்சுவையை கேட்டது போல்
மீண்டும் ஹோ ஹோ ஹோ என்று சிரிக்க ஆரம்பித்து விட்டார். இதற்குள் அந்தப் பதிவறையில்
இருந்த வேறு சிலர் வந்து அவரை சமாதானப் படுத்தி அப்புறப் படுத்தினர். பிறகு
தெரிந்து கொண்டோம். அவருக்குத் திருமண முடற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து ஒரு
டிப்ப்ரெஷன் மூடுக்கு அவ்வப்போது போய் விடுவாராம்
( எனக்கு நகைச் சுவை எழுத வராது என்னும் குறை போக்க
என் கனவு சம்பவம் இதோ எழுத்தில். இந்தக் கனவை நினைவில் கொண்டு எழுதுவதற்குள்
போதும் போதுமென்றாகிவிட்டது.)
உங்களுக்கு நகைச்சுவையாக எழுத வராது போலருக்கே :))
ReplyDeleteஇப்படியும் ஒரு டிப்ரஷனா
ReplyDeleteஅவருக்குத் திருமண முடற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து ஒரு டிப்ப்ரெஷன் மூடுக்கு அவ்வப்போது போய் விடுவாராம்//
ReplyDeleteஉள்ளே அழுகை..
வெளியே சிரிப்பு...!!
ஹா... ஹா...
ReplyDeleteகனவுகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDelete@ டி.பி.ஆர்.ஜோசப்
/ உங்களுக்கு நகைச்சுவையாக எழுத வராது போலிருக்கே/ யார் சொன்னது. இந்தப் பதிவிலேயே எத்தனை சிரிப்புகள். ஐயா கண்ட கனவை தூங்கி எழுந்தபின் அப்படியே நினைவுக்கு வருமா.?என்ழ்க்கு நகைச்சுவையாக எழுத வராதே தவிர நல்ல நகைச்சுவை உணர்வூண்டு. வருகைக்கு நன்றி.
@ கரந்தை ஜெயக்குமார்
கனவில் அதை டிப்ரெஷன் என்றுதான் சொன்னார்கள்..! வருகைக்கு நன்றி
@ இராஜராஜேஸ்வரி
மேடம் உங்கள் கமெண்ட் ரசித்தேன். வருகைக்கு நன்றி
@ திண்டுக்கல் தனபாலன்
வரும் கனவுகள் நினைவில் தங்க வாழ்த்துங்கள் நன்றி
இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம்.
ReplyDelete“சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
ReplyDeleteநான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்”
என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது தங்கள் பதிவைப் படித்தபின். பகிர்ந்தமைக்கு நன்றி!
அட கனவா?.....
ReplyDelete