தேர்தலில் வாக்களிக்கும் முன் சிந்திக்க
----------------------------------------------------------
தேர்தல்
நெருங்குகிறது .நாட்டு மக்கள் அவரவர் வாக்குகளை அளித்து ஜனநாயகக் கடமையை செய்ய
வேண்டியவராகிறோம் நம்முடைய இந்த வாக்கு நம்மை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்தியில்
இருந்து நம்மை ஆள்பவரைத் தீர்மானிக்கும். நம்மை ஆளப் போவது
தனி மனிதரா இல்லை கொள்கை கோட்பாடுகள் கொண்ட கட்சியா? . இந்தப் பெரிய பொறுப்பு தனிமனிதரால் முடியாது. ஆகவே
சுயேட்சையாக எந்த தனி மனிதர் ( அவர் எவ்வளவோ நல்ல மனிதராயிருந்தாலும் ) தேர்தலுக்கு நின்றாலும் கண்ணை மூடிக் கொண்டு
தவிர்த்துவிட வேண்டும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி என்று முழங்கி
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மத்தியக் கூட்டாட்சியில் அவரவர் நலங்கருதி எந்த
உருப்படியான செயலையும் செய்ய விடாமல் தடுக்கிறார்கள் இம்மாதிரி பல மாநிலக்
கட்சிகள் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் போது பொதுவாக சில குறைந்த பட்ச
நற்காரியங்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் அது என்ன என்று தேர்தலுக்கு முன்
கூட்டியே ஒப்பந்தம் செய்து கொண்டு தேர்தலில் இறங்க வேண்டும் . இம்மாதிரி குறைந்த
பட்ச பொது செயல்பாடுகள் நடக்க இவர்களுக்குள் ஒத்த policies இருக்க வேண்டும்
இம்மாதிரி ஒருமித்த கருத்து மக்கள் நலத் திட்டங்களுக்காக இருக்க வேண்டும் மக்கள்
நலத் திட்டங்கள் என்று எதைக் கூறலாம் பொதுவாக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர
வேண்டும் வாழ்க்கைத்தரம் உய்ர அவர்களுக்கு நிலையான ஊதியம் தரும் தொழிலோ பணியோ
இருக்க வேண்டும் திட்டங்கள் இவற்றை அடைய என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது அதை
எப்படி செயல் படுத்துவது என்பதில் ஒத்தகருத்துக்கள் இருக்கவேண்டும் அடிப்படைக்
கல்வி சுகாதாரம் இவற்றில் நிலவிவரும் குறைகள் அறியப் பட்டு அவற்றைச் சீர்செய்யும்
வழிமுறைகள் கண்டறியப் படவேண்டும்
கடந்த அரசு
பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது அவற்றின் செயல்பாடுகளில் சில
குறைகள் இருக்கலாம் முக்கியமாக வருடத்தில் நூறு நாட்களுக்கு ஊதியம் தரும் திட்டம் , தகவல்
அறியும் சட்டம் . ஏழைகளுக்கு நல்ல கல்விதர விழையும் 25% ஒதுக்கீடு சட்டம்
அனைவருக்கும் உணவுக்கு வழிவகை செய்யும் திட்டம் பிற்படுத்தப் பட்டோருக்கு
ஒதுக்கீடு தரும் சட்டம் என்று பலதும்
சொல்லிக் கொண்டே போகலாம் நம் மக்களின் வாழ்க்கைத்தரம் நிச்சயம் உயர்ந்திருக்கிறது ஆனால்
இவையெல்லாம் இன்னும் மேம்பட்டுச் செயல் படுத்தி இருக்கலாம் திட்டங்களை நிறைவேற்ற
சட்டங்கள் அவசியம் ஆனால் சட்டம் இயற்றப் பட வேண்டிய நாடாளு மன்றத்தையே சிலரால்
செயலிழக்கச் செய்ய முடிகிறது என்றால் மத்தியில் அறுதிப் பெரும்பானமை கொண்ட அரசு
இல்லாததுதான் என்பது தெளிவாகிறது ஆகவே இந்தத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் கட்சி
பெரும்பான்மை பலம் பெற்று விளங்க வேண்டும் என்பது கண்கூடு. ஆனால் இந்த சாத்தியக்
கூறு நடக்க வழி இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பான்மை பலம் தேவை என்பது அரசியல்
கட்சிகளுக்கும் தெரியும் இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர்களது
சாயத்தைக் காட்டுகிறது மக்கள் நலம் ஒன்றுதான் கட்சிகளின் கொள்கை என்று இருந்தால்
அதை நிறைவேற்ற எடுக்கப்படும் வழிமுறைகளும் முக்கியம் THE MEANS TO ACHIEVE THE PARTY;S ENDS ARE
ALSO IMPORTANT. ஊழல் குற்றச்
சாட்டுகளில் மூழ்கி இருக்கும் சிலரை அவர்களது இனம் சாதி சார்ந்த பலத்துக்காக
கட்சியில் பல ஆண்டுகளாக விசுவாசிகளாக இருந்த பலரைப் புறக் கணித்து தேர்தலில் நிற்க
வைப்பவர்களுக்கு கொள்கை என்பதே இருக்க வாய்ப்பில்லை.
கட்சியின்
கொள்கைகள் ஓரளவுக்கு நமக்கு நல்லது என்று படும்படியாக இருந்தால் தேவலை. இந்த
நாட்டில் ஏறத்தாழ 20 சதவீதம் பேர் சிறுபான்மை யினோர். அவர்களை ஒதுக்கி
பெரும்பான்மையினரின் நலம் என்று கருதி கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அதrகேற்ப மாற்றுவது ஜனநாயகத்துக்கு
ஒவ்வாதது,
நான் பதிவில்
எழுதி இருப்பது மக்கள் நம்மை ஆள்பவரைத் தேர்ந்தெடுக்க சிந்திக்க வேண்டிய சில
விஷயங்களே. பதினெட்டு வயதானாலேயே வாக்குப் பதிவு செய்யும் உரிமையைப் பெற்றோர்
சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் என் அனுபவப் படி அரசியலும்
கட்சிகளும் சுய லாபத்துக்காக செயல் படுகின்றன, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள். அதில் எந்த மட்டை சிறந்தது என்று தேர்வு செய்வது கடினம் இருந்தாலும் நம்
வாழ்க்கையில் சில நெறிமுறைகளும் மதிப்பீடுகளும் சிறந்தது என்று புகட்டி வளர்க்கப்
பட்டிருப்போம் அதோடு ஓரளவுக்காவது
ஒத்துவரும் கட்சியைத் தேர்வு செய்வோம்
ஓரளவுக்கு ஒத்து வரும் கட்சியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் ஐயா.
ReplyDeleteவெறு வழி
தெரிவு செய்வது என்பது சற்றுச் சிரமம் தான். இருப்பினும் வேறு வழியில்லை.
ReplyDeleteகட்சியின் கொள்கைகளா! அவர்களுக்கே அப்படி என்றால் என்ன என்று தெரியாது! அதே போலத்தான் தேர்தல் அறிக்கைகளும்! அவரவர் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் தனிப்பட்ட குணங்களைப் பார்த்து முடிவு செய்ய வேண்டியதுதான். பெரும்பான்மை இல்லாத அரசு அமைவது இந்திய பாதுகாப்புக்கு உகந்ததல்ல! :))
ReplyDeleteஅன்புள்ள ஐயா.
ReplyDeleteவணக்கம். சற்று சிரமமான காரியம்தான்.
தேர்தலுக்கு நிற்கிற வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கணக்குகளைத் தந்திருப்பது செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. எல்லாம் கோடிகளில் இருக்கிறது. இது குறித்து அவர் எந்த வயதில் இருந்து சம்பாதிக்க ஆரம்பித்தார். இத்தனை கோடிகளுக்கான ஆதாரங்கள். இது சாத்தியமா? அவருக்கு வருவாய்க்கான வழி என்ன? அவற்றின் வழி இவ்வளவு கோடி சம்பாதிக்க முடியுமா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை வேண்டும். அவற்றுக்கு கட்டிய வருமானவரி போன்ற விவரங்களைத் தாகக்ல் செய்யவேண்டும். இதெல்லாம் நடக்காதவதை நாம் வாக்கு அளிப்பது என்பது செல்லாத ஓட்டுதான். செல்லாத ஓட்டுக்களும் செல்லாக் காசுகளாய் வாக்காளர்களும் இருக்கிற சூழல் மாறும்வரை அவர்கள் ஜெயித்துக் கொண்டே
யிருப்பார்கள்.
வருத்தமாக இருக்கிறது ஐயா.
வேறு வழியில்லை.
நீங்கள் சொல்வது சரிதான்
ReplyDeleteநல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு
நமக்கு இல்லைதான்
இருக்கும் மோசமானவர்களில் சுமார்
மோசமானவர்களைத் தேர்ந்தெடுக்கத்தான்
நம்மால் முடியும்
என்ன செய்வது நம் நாட்டின் நிலைமை அப்படி
இருப்பதில் எவர் நல்லவர்...? அவ்வளவே இன்றைக்கு முடிவு...!
ReplyDelete//நம் வாழ்க்கையில் சில நெறிமுறைகளும் மதிப்பீடுகளும் சிறந்தது என்று புகட்டி வளர்க்கப் பட்டிருப்போம் அதோடு ஓரளவுக்காவது ஒத்துவரும் கட்சியைத் தேர்வு செய்வோம்.//
ReplyDeleteதுரதிர்ஷ்டவசமாக எந்த வகையிலும் ஒத்துவரும் கட்சிகள் இப்போது இல்லை என்பதுதான் உண்மை.
democrazy என்கிறார்கள் பாருக்குள்ளே நல்ல நாட்டை.
ReplyDeleteமத்தியில் எப்போது கூட்டாட்சி என்ற நிலை ஏற்பட்டதோ அன்றிலிருந்தே தொல்லைகள்தான். நாட்டு நலனைக் கருதாமல் தன் கட்சி நலனையே பிரதானமாக கருதும் பிராந்திய கட்சிகள் ஆளும் கட்சிக்கு கொடுத்த தொல்லைகளால்தான் எத்தனை நல்ல திட்டங்களை செயல்படுத்தினாலும் அவை நாட்டு மக்களை சென்றடையாமலே போய்விட்டன. ஒரு கட்சிக்கு அறுதி பெரும்பான்மை அளிப்பது நம் கையில்தான் உள்ளது. அது காங்கிரசோ அல்லது பிஜேபியோ இவர்கள் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் இம்முறை வாக்களிக்க வேண்டும். இவ்விரு கட்சிகளும் எந்த மாநில கட்சிகளிடமும் சென்று கையேந்தாத நிலையை நம்மால்தான் உண்டாக்க முடியும். செய்வோமா?
ReplyDelete
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
/ ஓரளவுக்கு ஒத்து வரும் கட்சியைதான் தேர்வு செய்ய வேண்டும்/ அவர்களும் மத்தியில் ஏதாவது நல்லது செய்ய முடியவேண்டும் நாடாளுமன்றத் தேர்வுக்கு பிராந்தியக் கட்சிகள் சரியில்லை என்பதும் என் கருத்து.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது சிரமப் பட்டு சிந்திப்போமே, வருகைக்கு நன்றி
ReplyDelete@ ஸ்ரீராம்
என் பதிவின் நோக்கமே தனிப்பட்ட முறையில் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் கட்சியை மீறி அவர்களால் செயல்பட முடியாது கொள்கைகள் இல்லாத கட்சி கிடையாது. அந்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் ஹர்டில்ஸ் இருக்கலாம் மதவாதம் என்பது ஒரு கட்சியின் முக்கிய கொள்கை அது சரி என்று பட்டால் அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். சரியில்லை என்றால் அவர்கள் ஆட்சிக்கு வரக் கூடாது மற்றபடிமக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் செயல் படுவதில்தான் இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete@ ஹரணி
அன்பின் ஐயா, உங்கள் வருகையும் கருத்துப் பதிவும் மகிழ்ச்சி அளிக்கிறது தேர்வு செய்வது கடினமானதுதான். அதனால்தான் என் எழுத்துக்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவர வாய்ப்பில்லை என்று தெரிந்தும் எழுதுகிறேன் ஐயா நாடாளுமன்றத் தேர்தலில் பங்கெடுக்க வேட்பாளர்கள் ( கட்சி செய்யும் செலவு தவிர)செய்யும்செலவு நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. என் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவரின் பெண் ( கைநாட்டு ) கார்ப்பொரேஷன் தேர்தலுக்கு நிற்க விரும்பினார். அவரை நிறுத்தலாமா கூடாதா என்று பரிசீலனை செய்ய ரூ. 50000/ கேட்டார்களாம் அப்படிக் கொடுத்து தெரிவு செய்யப் படவில்லை என்றால் கொடுத்த பணம் போயே போகும் இப்படி செலவு செய்து தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய வருவார்களா போட்ட முதலை எடுக்க விரும்புவார்களா. தேனை எடுப்பவன் முழங்கையை நக்கமல் விடமாட்டான். ஆனால் மக்களுக்கு முழங்கையில் வழிவதுதான் கிடைக்கிறது. இப்படி நிலைமை இருக்கையில் நாம் கொஞ்சம் ரியலிஸ்டிக்காக எண்ண வேண்டும் அதைத்தான் நம் கொள்கைகளோடு ஒத்துப் போகும் கட்சிக்கு வாக்களிக்கக் கோருகிறேன் இருக்கும் இரு பெரும் கட்சிகளில் கொள்கையளவில் மாறுபாடு தெரிவது மதவாதத்தில்தான் அதில் நம் கருத்துக்கு ஒத்துப் போகும் கட்சிக்கு வாக்களித்து மத்தியில் நிலையான அரசு அமைய வேண்டி சிந்திக்க வேண்டுகிறேன்
ReplyDelete@ ரமணி
நல்லவர்கள் /அல்லாதவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். ஆக இருப்பதில் நல்ல கட்சிக்கு என்று பொருள் கொள்கிறேன் வருகைக்கு நன்றி.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
இருப்பதில் நல்லவர்.? நல்ல கட்சி? வருகைக்கு நன்றி.
ReplyDelete@ வே. நடனசபாபதி
எனக்கு மக்களில் ஏற்ற தாழ்வு என்பது பிடிக்காது. அதற்குத் துணைபோகும் மதவாதம் பிடிக்காது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete@ அப்பாதுரை
மக்கள் எல்லா நாட்டிலும் ஒருபோலத்தான் crazy ஆக இருந்தாலும் டெமாக்ரஸி அல்லவா. நீண்ட இடைவெளிக்குப் பின் பின்னூட்டம் காண்பதில் மகிழ்ச்சி.
ReplyDelete@ டி.பி.ஆர் ஜோசப்
நாம் ஒரே மாதிரி சிந்திக்கிறோமோ.? வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
இரண்டு அல்லது மூன்று கட்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் - சின்னச் சின்ன, மாநில வாரியான கட்சிகள் பலவற்றை வைத்துக் கொண்டு, அவர்கள் தரும் ஆதரவு எனும் கேரட் துண்டிற்காக, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கும் மத்திய அரசு இருக்கும் வரை பிரச்சனைகள் தான்.
ReplyDeleteஎந்த ஒரு முடிவினையும் எடுக்க முடியாது, வலப் பக்கம் போனால் அவர் ஆதரவு தர மாட்டார், இடப் பக்கம் போனால் இன்னொருவர் ஆதரவு தரமாட்டார் என்று யோசித்து யோசித்து ஐந்து வருடங்களை இழுத்து விடுகிறார்கள்.
இந்த தேர்தலிலும் இதே நிலை தான் இருக்கப் போகிறது என்று தோன்றுகிறது.
நல்ல முடிவை மக்கள் எடுக்கட்டும்.
சரியான கருத்துக்கள்.
ReplyDeleteகஷ்டமான வேலை. எங்க தொகுதியிலே யார் நிற்கிறாங்கனே தெரியலை. இணையம் மூலம் பார்த்தால் ஆளும் கட்சி ஆளின் பெயர் மட்டுமே வருது. இன்னும் இங்கே தேர்தல் சூடு பிடிக்கலை. பார்க்கலாம். அப்பாதுரை சொல்வது சரியே. க்ரேசி தான். :))))
ReplyDeleteதொடர
ReplyDeleteஅன்பின் இனிய புத்தாண்டு
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!..
அன்பின் இனிய புத்தாண்டு
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!..