பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும்
-----------------------------------------------------------
( சீரியஸ் அல்ல சிரித்துப் போக)
----------------------------------------
ஜோக்காளி தளத்தில் பகவான்ஜி
தினமும் நகைச் சுவையாகவே பதிவிடுகிறார். அவருடைய ஒரு பதிவின் பின்னூட்டத்தில்
சுட்டாலும் என்னால் நகைச் சுவையாக எழுத முடியவில்லை என்று எழுதினேன். இந்த
சுட்டாலும் வார்த்தைக்கு இன்னொரு பொருள் படி பல இடங்களில் படித்த அல்லது சில இடங்களில்
இருந்து சுட்ட சில செய்திகள் கொண்டு முன்பு ஓரிரு பதிவுகள் எழுதியது நினைவுக்கு
வந்தது. அதற்கு வந்த ஒரு பின்னூட்டமொன்றில் இது மாதிரி பதிவுகள் என் இயல்புக்கு
மாறியதாக ஒரு நண்பர் சரியாகக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு நகைச் சுவையாக எழுத
வராதே தவிர நகைச் சுவை எழுத்தை நன்கு ரசிப்பேன். அதுவு பெண்களை மையப்படுத்தி எழுதி
இருந்தால் ரசனை இன்னும் கூடும்.
வாழ்க்கையில் என்றாவது ஒருவன்
திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் வாழ்வில் எப்போதும்
மகிழ்ச்சியை நாடுவது முடியாத காரியம்.
--- யாரோ ---
பிரம்மச்சாரிகளிடம் அதிக வரி வசூல்
செய்யவேண்டும் .சிலர் மட்டும் அதிக சந்தோஷத்துடன் இருப்பது நியாயமல்ல. --- ஆஸ்கர் வைல்ட்.---
பணத்திற்காக திருமணம் செய்யாதே.
அதைவிட எளிதில் கடன் கிடைக்கும்
---ஸ்காட்டிஷ் பழமொழி---
நான் தீவிரவாதிகள் பற்றிக் கவலைப்
படமாட்டேன். எனக்குத் திருமணமாகி இரண்டு வருடமாகிறது. -----சாம் கினிசன்—
பெண்களைவிட ஆண்களுக்கு நல்ல காலம்
அதிகம். அவர்கள் தாமதமாகத் திருமணம் செய்கிறார்கள். . பெண்களை விட சீக்கிரம்
இறக்கிறார்கள்,
---எச்.
எல் .மென்கென் ---
புது மணத் தம்பதிகள்
புன்னகைக்கும்போது ஏன் என்று புரியும்.பத்தாண்டுத் தம்பதியர் புன்னகைக்கும்போது
ஏன் என்று தோன்றும்.---யாரோ--
காதலுக்குக் கண் இல்லை. கலியாணம்
கண் திறக்க வைக்கும்.--யாரோ--
மனைவிக்குக் கார் கதவை ஒருவன்
திறந்து விடும்போது. ஒன்று நிச்சயம் அது புதிய கார் அல்லது அவள் புதிய மனைவி.
நான் என் மனைவியை எங்கு அழைத்துச்
சென்றாலும் தவறாமல் வீட்டுக்கு திரும்பி வந்து விடுகிறாள்
.
.
நான் என் மனைவியை எங்கள் திருமணநாள்
விழாவுக்கு எங்கு போக வேண்டும் என்று கேட்டேன். எங்கானாலும் இதுவரைப் போகாத
இடத்துக்கு என்றாள். அப்படியானால் “ சமையல் அறைக்கு ?” என்றேன்.
-----யாரோ—
எப்பொழுதும் என் மனைவியின் கையை விட மாட்டேன். விட்டால் ஷாப்பிங் போய்விடுவாள்.
குப்பைத் வண்டி பின்னால் ’ நான்
தாமதமாகி விட்டேனா?’ என்று கேட்டுக் கொண்டு ஓடிய என் மனைவி பின்னே ஓடிச் சென்ற நான்,“ இல்லை . ஏறிக்கொள்
‘ என்றேன்.
அவன் திருமணம் செய்து கொள்ள ஏன் பயப்
படுகிறான் என்று சொன்னான். திருமண மோதிரம் சிறிய கை விலங்கு போல் தெரிகிறதாம்
”உன்
மனைவி முன் வாசலில் இருந்தும் உன் செல்ல நாய் பின் வாசலிலிருந்தும் அனுமதி வேண்டி
இரைந்தால் யாரை முன்னால் உள்ளே விடுவாய்?” . ”நிச்சயமாய்
என் நாயை அது அனுமதிக்கப் பட்டவுடன் குரைப்பதை நிறுத்தும்.”
----- யாரோ---
-
ஒருவன் ஒரு வேண்டுதல்
கிணறுக்குள் வேண்டிக் கொண்டு சில்லறையை வீசினான். அவன் மனைவியும் வேண்டுதலுக்காக
கிணற்றுக்குள் எம்பிப் பார்த்தபோது தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டாள். அவன்
ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். “ அட... இவ்வளவு சீக்கிரம் வேண்டுதல் நிறை வேறி விட்டதே “
இன்று தங்களது தளத்தில் இரண்டு பதிவர்கள் சுட்ட பதிவுகள் பற்றி எழுதி இருக்கிறார்கள்( தி. தமிழ் இளங்கோ மற்றும் ஊமைக் கனவுகள்). என்ன பொருத்தம் நானும் ஒரு பதிவு சுட்டு எழுதி இருக்கிறேன். ஆனால் இது என்றோ சுட்டது. மீள்பதிவு
இன்று தங்களது தளத்தில் இரண்டு பதிவர்கள் சுட்ட பதிவுகள் பற்றி எழுதி இருக்கிறார்கள்( தி. தமிழ் இளங்கோ மற்றும் ஊமைக் கனவுகள்). என்ன பொருத்தம் நானும் ஒரு பதிவு சுட்டு எழுதி இருக்கிறேன். ஆனால் இது என்றோ சுட்டது. மீள்பதிவு
ReplyDeleteஅனைத்துமே சிந்திக்ககூடிய விசயத்தை உள்ளடக்கி இருக்கிறது கடைசியில் சொன்ன கிணறு அருமை ஐயா அவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான் அப்படியானால் அவள் மூழ்கவில்லையா ? சிந்திக்க்கூடியதே...
ஐயா எனக்கும் நகைச்சுவையை ரசிப்பதில் மோகம் உண்டு
நாங்கள் கூட ஆரம்ப காலத்தில் எங்களுக்கு வந்த மின்னஞ்சலை வைத்து 'மனைவி அமைவதெல்லாம்' என்று ஒரு பதிவிட்டோம்.
ReplyDeleteஇரண்டு மூன்று கோபமான பெண்கள் மெயில்களைத் தொடர்ந்து எங்கள் ஆசிரியர் குழுவிலிருந்த பெண் ஆசிரியர் ஒருவர் உடனடியாக அதையே உல்டாவாக்கி கணவன் அமைவதெல்லாம் என்று பதில் பதிவிட்டார். கலாட்டாவாக இருந்தது.
'மனைவி அமைவதெல்லாம்' பதிவிலிருந்து இரண்டு குறிப்புகள் :
1) உங்கள் மனைவியை ஒருவன் கடத்தி விட்டால் அவளை அவனிடமே விட்டு விடுவதுதான் அவனைப் பழிவாங்குவதற்கு சிறந்த வழி!
2_) திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகி விடுகின்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது...ஆனால் சேர்ந்துதான் வாழ்கிறார்கள்!
:))))))))))))))))
மீள் பதிவை மீண்டும் ரசித்தேன். பெண்களைப் பற்றிய கிண்டல்களை பெண்களும் ரசிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteநகைச்சுவையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். மதுரை வலைப்பதிவர் சந்திப்பில் ஜோக்காளியிடம், நீங்கள் பெண்களைக் கிண்டல் செய்தே அதிகம் எழுதுகிறீர்கள் என்று சொன்னேன்.
தாங்களுமா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதாங்களும் நானும் ஒத்த மனஅலைவரிசையில் இருப்பதை சகோ .தமிழ் இளங்கோ சொல்வதில் இருந்தே புரிந்து முடிகிறதே :)
ReplyDeleteசுட்ட பதிவு என்றாலும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது !
உங்களில் ஒருவன் என்ற உரிமையில் தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் !
என்னப்பா இது பெண்மைக்கு வந்த சோதனை...?!
ReplyDeleteஹ ஹ ஹா!
( சத்தம் வெளியே கேட்காமல் சிரித்து விடுகிறேன்! என்னைப் போல் ஊமையாய் இருந்துவிட்டால் பல பிரச்சனைகள் வராதுதானே?
தங்களது வித்தியாசமான பதிவைக் கண்டேன். பதிவைப் படிக்கும்போது நீங்கள் எழுதியதுதானா என்ற ஐயம் வந்தது. இருப்பினும் தங்களது பல்துறை அறிவு இத்துறையிலும் பயன்படத் தொடங்கியதன் விளைவு எங்களுக்கு ஒரு சிறப்பான பதிவாக கிடைத்துள்ளது. நன்றி.
ReplyDeleteநகைச்சுவை.. நகைச்சுவை..
ReplyDeleteசுட்ட பதிவு - சுவையான பதிவு!..
அய்யா வணக்கம். தங்களின் பதிவுகளைப் பார்த்து வருகிறேன். இந்தப்பதிவு வித்தியாசமாக இருக்கிறதே! தாங்கள் சொன்னதுபோல இது சுட்ட பதிவு அ்ல்ல அ்யயா.
ReplyDeleteஉங்கள் மனசைத் தொட்ட பதிவு. நண்பர்கள் இருவருமே சொல்லிவிடடார்கள் பாருங்கள். நன்றி
இன்று ஒரே சுட்ட பதிவுகள் பற்றிய இடுகைகள்தான்..ஒவ்வொன்றாகப் படித்து விட்டு வந்தால் தங்களதும்...
ReplyDeleteஅனைத்துமே ரசித்தோம். அதுவும் "சமையலறையில்" .,...
அனைத்துமே ரசித்தோம்...இப்படி ஆண்களுக்குப் பெண்களைப் பற்றி/மனைவி பற்றி எழுதினால் ரசிக்கின்றார்களோ அது போன்று கணவன்/ஆண்களைப் பற்றி எழுதினால் பெண்கள் ரசிக்கின்றனர்!
இதையெல்லாம் நாங்க சீரியஸ்ஸா எடுத்துக்குவோமா என்ன?
ReplyDeleteஅவ்வப்போது.... ஆண்களும், கணவர்களும், தங்கள் ஏக்கத்தை இப்படித் தீர்த்துக்கொள்ளவும் அனுமதிப்போமே:-)))
மீள்பதிவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது.
ReplyDeleteநாங்களும் ரசித்துச் சிரித்தோம்
ReplyDeleteமுந்திரியாய் மொத்தமாகக் கொடுத்ததற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஹா.... ஹா....
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
ReplyDelete
ReplyDelete@ கில்லர்ஜி
அண்மையில் விஷயங்களைச் சுடுவது பற்றி பரவலாக எழுதப் பட்டு வருகிறது.நம் மனதில் ஓடும் எண்ணங்கள் எல்லாமே நாம் பார்த்து படித்துக் கேட்ட விஷயங்களின் அடிப்படையில்தான் இருக்கும். இப்படி நான் பார்த்து படிதத சில விஷயங்களைச் சுட்டு எழுதினேன். வந்து ரசித்ததற்கு நன்றி ஜி
ReplyDelete@ ஸ்ரீராம்
சில நாட்களுக்கு முன் வருண் ஒரு பதிவில் ஒரு கதாசிரியர் பெண்களைப் பற்றிய கருத்துக்களை வெளியிட்டிருந்தது பற்றி எழுதி இருந்தார். எனக்கும் பெண்களைப் பற்றிய பொதுவான சில கருத்துக்கள் உண்டு. அவற்றை அவ்வப் போது பதிவாக்கி இருக்கிறேன். இந்தப் பதிவுக்கு வந்திருக்கும் வாசகர் எண்ணிக்கை மீண்டும் அப்பதிவுகளை இடுகையாய் இட எண்ணம் கொடுக்கிறது.பெண் வாசகர்கள் எல்லோரும் திருமதி துளசி போல் sportive ஆக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். வருகைக்கு நன்றி ஸ்ரீ.
ReplyDelete@ தி. தமிழ் இளங்கோ
எனக்கும் மனைவி ( அவளும் ஒரு பெண்தானே) இருக்கிறாள். பெண்களைக் கிண்டல் அடித்து எழுதுவதை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஆனால் ஒரு எச்சரிக்கை. கிண்டலின் நடுவே சில உண்மைகளும் இருக்கலாம். வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
/தாங்களுமா/ நான் விதிவிலக்கில்லையே ஐயா. வருகைக்கு நன்றி.
ReplyDelete@ பகவான் ஜி
தொடர்ந்து வாருங்கள்
எனக்கு நகைச் சுவை எழுத வராது என்பது உண்மை.ரசிப்பதில் வேண்டுமானால் ஒத்த அலை வரிசை இருக்கலாம்.தமிழ் மணத்தில் ஒரு நாள் தள்ளியே நான் இணைப்பது என்னைத் தொடர்பவர்கள் படித்தபின் மற்றவர்களுக்கு என்றுஇருப்பதும் அது கூடுதல் வாசகர் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்பதாலும் தான். வருகைக்கு நன்றி ஜி
ReplyDelete@ ஊமைக்கனவுகள்
ஊமைக்குக் கருத்து சொல்ல முடியாமல் இருக்கலாம். எழுதலாமே ஹஹஹ...! வருகைக்கு நன்றி ஐயா,
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்.
என் பதிவுத் திறமையைப் பாராட்டியதற்கு நன்றி ஐயா.
ReplyDelete@ துரை செல்வராஜு
பாராட்டுக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ முத்து நிலவன்
முதலில் வருகைக்கு நன்றி ஐயா. நிச்சயமாக இது என் மனதைத் தொட்ட பதிவு அல்ல. எத்தனையோ மனதைத் தொட்ட பதிவுகளுக்கு உங்கள் கருத்துரை எதிர்பார்த்து இருந்தது நிஜம். பதிவுகளைப் பார்த்தவர் கருத்துரை எழுதாமல் போவது எழுத்தில் உடன் பாடு இல்லாததாலா...? புரியவில்லை. மீண்டும் நன்றி.
ReplyDelete@ துளசிதரன்.
ஒரு ஆணாகப் பெண்கள் பற்றி எழுதி இருக்கிறேன். அவ்வப்போது அவை மீள் பதிவாகும் நன்றி.
ReplyDelete@ துளசி கோபால்
இன்னும் பல பதிவுகளை எதிர் நோக்கலாம் மேடம் I know you are a good sport. வாருங்கள் தொடர்ந்து. நன்றி.
ReplyDelete@ தனிமரம்
சிந்திக்க வைக்க இன்னும் பல பதிவுகள் கைவசம் உண்டு ஐயா. தொடர்ந்து வந்து ரசிக்க அழைக்கிறேன் நன்றி.
ReplyDelete@ ரமணி
இது மொத்தம்ல்ல ரமணி சார். ஒரு சாம்பிள்தான். வருகைக்கு நன்றி.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
வந்து ரசித்ததற்கு நன்றி டிடி.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
“ வசிஷ்டர் வாயால்...?” நன்றி சார்.
சுட்ட பதிவானாலும் ரசிக்க வைத்த பொன்மொழிகள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன்..... சிரித்தேன்!
ReplyDelete
ReplyDelete@ தளிர் சுரேஷ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
வந்து ரசித்ததற்கு நன்றி சார்
ReplyDeleteஅதுதான் தொடக்கத்திலேயே சுட்டபதிவு என விளக்கம் கொடுத்து இருக்கிறீர்களே....
அடுத்த பதிவு ஆண்களும் கணவர்களும் என்பது தானே?
ReplyDeleteமுன்பே வந்து படித்து ரசித்துக் கருத்திட்டேன். என்னவானது தெரியவில்லை. ( சிரித்துக் கொள்கிறேன். மனைவிக்குத் தெரியாமல் )
ReplyDeleteநீங்கசொன்னா நம்பமாட்டீங்க, ஒரு வயதுப் பெண்ணை (ஏன் வய்தான பெண்ணையும்தான்) , Seems like you gained few pounds (அவ உண்மையிலேயே கொஞ்சம் குண்டாகி இருக்கும்போது) ணு சொன்னால், அது ரொம்ப ரொம்ப அஃபெண்சிவ் என்பார்கள் அமெரிக்காவில். அதுக்கப்புறம் அவள் உங்களோட பேசுவது அரிது. இதிலிருந்து என்ன தெரியுது? "பொய் பேசுறவர்களை அல்லது நடிப்பவர்களை" த்தான் பெண்களுக்குப் பிடிக்கும். :)
ReplyDelete