விடுப்பும் அனுபவங்களும்
-----------------------------------------
நாங்கள் வீட்டைப் புதுப்பித்ததும் இன் இளைய மகன் குடும்பத்துடன் வந்து பார்த்து நன்றாக வந்திருக்கிற்து என்று சொன்னான். தரை சற்று வழுக்கலாக இருக்கிறது கவனம் தேவை என்றும் கூறினான். எங்களை அவன் வீட்டுக்கு வந்து சில நாட்கள் இருக்கும் படிக் கேட்டுக்கொண்டான். அவனும் ஒரு பத்து மாடிக் குடியிருப்பில் ஏழாவது த்ளத்தில் அண்மையில் ஒரு த்ரீ பெட் ரூம் வீடு வாங்கி இருந்தான்.
இளையவனின் குடியிருப்பு முன்னால் |
லிஃப்ட் இன்னும் வராத நிலையில் அங்கு போக யோசனையாய் இருந்தது. அங்கும் எல்லோரும் பணிக்கும் பள்ளிக்கும் சென்று விடுவார்களாதலால் நாங்கள் தனியேதான் இருக்க வேண்டும். ஏதாவது வாரக் கடைசியில் அங்கு போய் ஓரிரு நாட்கள் இருப்போம் இப்போது லிஃப்ட் வந்து விட்டது. ஒன்று சொல்லியாக வேண்டும். என் மக்களிடம் போனாலும் அங்கும் தனியே நானும் இவளுமிருக்க வேண்டும் என்பதாலும் எங்கள் mobility –க்கு அவர்களையே சார்ந்திருக்க வேண்டும் என்பதாலும் போகும் முன் மிகவும் யோசிப்போம். ஆனால் என் மூத்த மகன் (மகர் என்று சொல்ல வேண்டுமோ? மரியாதை...!) படத்தின் இடது ஓர மூலையைக் கவனிக்கவும்
எப்பொழுதும் பறந்து கொண்டிருப்பவன் இம்முறை நாங்கள் கட்டாயம் சில நாட்கள் சென்னையில் வந்து இருக்கவேண்டும் என்றும் அவனே வந்து கூட்டிப்போவதாகவும் சொன்னான்.15-ம் தேதி மூத்தமருமகள் மூத்த பேரன் சகிதம் வந்திருந்தான் வந்தவன் ஒரிரு நாட்கள் தம்பி குடும்பத்தாருடனும் இருக்க விரும்பி அன்றே எல்லோரும் இளைய மகன் இல்லம் சேர்ந்தோம். என் இரண்டாவது பேரன் was in clouds nine. என் மூத்த பேரன் தன் தம்பிக்கு hot wheel ஒன்று வாங்கி வந்திருந்தான் அதனை ஒருங்கிணைத்து காரை ஓட்டும் வரைஅவனுக்கு நிம்மதி யில்லை.
(காணொளி) சின்னவனும் பெரியவனும் மீன் தொட்டி வைத்திருக்கிறார்கள். அந்த மீன்களைப்பார்த்துக் கொண்டிருப்பதே அலாதி சுகம். ஆனால் எனக்கென்னவோ பெரியவன் வீட்டுத் தொட்டியில் இருக்கும் ஒரு ஷார்க்கைப் பார்க்கின்றபோது மச்சாவதார நினைவே வரும். இந்த மீன் சிறியதாக இருந்த போது வாங்கி வைத்தது. இப்போது வளர்ந்து இருப்பதைப் பார்த்தால் வளர்ந்து தொட்டி கொள்ளாமல் போய் மச்சாவதாரக் கதைபோல் ஆகிவிடுமோ என்னும் சந்தேகம் எழுகிறது.
சின்னவன் வீட்டு மீன் தொட்டி. |
16-ம் தேதியும் 17-ம் தேதியுமிளையவனுடன் கழித்தோம். பெரிய
பேரன் அவன் நண்பர்களுடன் 17-ம் தேதி காலையில் ஏற்காடுக்குச் சென்று விட்டான் .
மறுநாள்18-ம்தேதி சென்னை போகும் வழியில் காலை சுமார் பதினொரு மணிக்கு கிருஷ்ணகிரி
அருகே இருக்கும் A2Bயில் சந்திப்பதாக ஏற்பாடு.. இப்படியாக
சென்னையில் எங்களுக்கான விடுப்பு துவங்கியது.
கிருஷ்ணகிரி அருகே பேரனைப் பிக் அப் செய்யவேண்டி
இருந்ததால்காலை சுமார் பத்தரை மணிக்குக் கிளம்பினோம். நல்ல புது கார். நல்ல சாலை.
நாங்கள் A2Bயை
அடைந்தபோது சுமார் பனிரெண்டு மணி இருக்கும். பேரனுக்காகக் காத்திருப்பது என்று
முதலில் நினைத்து அவனிடம் தொடர்பு கொண்டபோது அப்போது அவன் சேலத்துக்கே வந்து
சேரவில்லை. அவர்கள் பயணப்பட்ட வண்டியில் ஏதோ பழுதாகி எப்போது வருவான் என்று சொல்ல
முடியாத நிலை.சில நேரக் காத்திருப்புக்குப் பின் மதிய உணவு எடுத்துக் கொண்டு பி
அவன் வரும்வரைக் காத்திருப்பது என்று முடிவாயிற்று. காத்திருந்த நேரத்தில்
அங்கிருந்த இனிப்புப் பெட்டியில் ஒரு கரப்பான் பூச்சி இருப்பதைப் பார்த்து
சிப்பந்தியிடம் கூறினோம். ஆனால் அந்தமாதிரிச் சூழலில் அதைச் சற்றும்
எதிர்பார்க்கவில்லை. உணவும் முடிந்தது. நேரம் இரண்டு மணியையும் தாண்டி இருந்தது.
பேரனுடன் தொடர்பு கொண்டால் இதோ இப்போது வந்து விடுவேன் என்று சொல்லியே அரைமணி
நேரத்துக்கும் அதிகமாகி விட்டது. A2Bக்கு அடுத்த டோலில் அவனை
இறங்கச் சொல்லி நாங்கள் அங்கே அவனைப் பிக் அப் செய்யப் புறப்பட்டோம். வெயிலின்
சூடு காருக்குள் இருந்தவரை தெரியவில்லை. பாவம் அவனும் பசியுடன் டோலில்
காத்திருந்தான் நேரம் மணி மூன்றாகி இருந்தது. அவன் உண்டிருக்கவில்லை. போகும்
வழியில் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னான். ஆம்பூரில் பிரியாணி
வாங்கி அதை அவன் காரிலேயே உண்டான். இவ்வளவு விலாவாரியாக நான் எழுதக் காரணம்
சென்னைக்கு நாங்கள் போய்ச் சேரும்போது இரவு மணி எட்டாகி விட்டது.சென்னைக்கு காரில் |
தொடரும்.
சில சமயம் பயணம் சுலபமாக அமையும். சில சமயம் அப்படி அமையாது. இது அப்படி ஒரு காத்திருப்பு நேரம் போல. எப்படியோ பேரன் தாமதமாகவேனும் வந்தான் அல்லவா! :)
ReplyDeleteஇனிப்புப் பெட்டியில் கரப்பா? ஐயோ...! பேரு பெத்த பேரு போல இருக்கும் போலேருக்கே!
ReplyDeleteதொடர்கிறேன்.
வீடியோ ஓபன் ஆகவில்லை.
ReplyDeleteஇந்த பாசக்கார மகரை மதுரை பதிவர் திருவிழாவில் பார்த்ததாய் நினைவு :)
ReplyDeleteத ம +1
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
மொத்தத்தில் இந்த விடுப்பு திருப்தியாக இருக்கவில்லை. அடுத்த பதிவில் விளக்கமாக. முதல் வருகைக்கு நன்றி மேடம்
ReplyDelete@ ஸ்ரீராம்
முதலில் பார்த்தபோது அசாத்தியக் கோபம் வந்தது. ஆனால் என் மருமகள் இதைப் பெரிது படுத்தவேண்டாம் என்று கூறி முதலில் சிப்பந்தியிடம் தகவல் தெரிவித்தாள். வெளியே உண்ணும் இடங்களில் நமக்கு கவனம் தேவை. பெயரைப் பார்த்து ஏமாறுவது கூடாது.வருகைக்கு நன்றி ஸ்ரீ.
ReplyDelete@ ஸ்ரீராம் ஏன் என்று தெரியவில்லை. எனக்கு ஓப்பென் ஆகிறது. முதல் வீடியோ சின்ன பேரன் ஹாட் வீல் ஒருங்கிணைத்து விளையாடுவது.
இரண்டாவது பெரிய பேரன் காரில் ஆம்பூர் பிரியாணி உண்பது. மீண்டும் ட்ரை செய்து பாருங்களேன் மீண்டும் நன்றி.
ReplyDelete@ பகவான் ஜி
உங்கள் நினைவு சரியே. இந்த மகர்தான் மதுரைக்குக் கூட்டி வந்தார். வருகைக்கு நன்றி ஜி.
ReplyDeleteமதுரை விழாவுக்கு வந்தவர் இவர்தானே ஐயா...
காணொளி கண்டேன்.
*** சின்னவனும் பெரியவனும் மீன் தொட்டி வைத்திருக்கிறார்கள். அந்த மீன்களைப்பார்த்துக் கொண்டிருப்பதே அலாதி சுகம்.***
ReplyDeleteபறவைகளை கூண்டில் அடைப்பது தப்பாக தோன்றுவதுபோல், மீன்களை தொட்டியில் அடைப்பது தோனாது. அது ஏன் என்று தெரியவில்லை..
****காத்திருந்த நேரத்தில் அங்கிருந்த இனிப்புப் பெட்டியில் ஒரு கரப்பான் பூச்சி இருப்பதைப் பார்த்து சிப்பந்தியிடம் கூறினோம். ****
ReplyDeleteஇதுபோல் நீங்கள் செய்யும் பெரிய உதவிக்கு "நன்றி" எல்லாம் சொல்லமாட்டாங்க சார். :)
பயணம் விவரம் அருமை!
ReplyDeleteபத்தரைக்குக் கிளம்பி ராத்திரி 8 என்றால்
பனிரெண்டேமுக்காலுக்குக் கிளம்புன நாங்கள் பத்துமணிக்குப்போய்ச் சேர்ந்த கணக்கு சரியா இருக்கே:-)))))
விடுமுறை அநுபவங்ககை சுவையாக சொல்லி இருக்கிறீர்கள். பெரும்பாலும் பயணத்தில் இருக்கிறீர்கள்.
ReplyDeleteகரப்பான் பூச்சிகளும் தலை முடிகளும் பெரிய கடை சிறிய கடை என்று பேதம் பார்ப்பதில்லை
ஷார்க் சற்று பெரிதானால் தொட்டியை நாசம் செய்து விடும்...
ReplyDeleteதொடர்கிறேன்...
நீங்கள் மகர் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் பாலையா, முத்துராமனிடம் ரவிசந்திரனைக் காட்டி ‘அசோகர் உங்கள் மகருங்களா?’ என்று மிக பவ்யமாக கேட்டது நினைவுக்கு வந்தது. எப்போதுமே பயணங்கள் ஒவ்வொரு தடவையும் புதிய அனுபவத்தைத்தான் கொடுக்கும்.பதிவையும் காணொளியையும் இரசித்தேன்.
ReplyDeleteஎனக்குத் தெரிந்தவரையில் இந்த மகர் என்ற சொல்லை முதல்முதலில் அறிமுகப்படுத்தியவர் நம்ம பதிவர் கீதா சாம்பசிவம்தான்.
ReplyDeleteபயணங்கள் பல சமயங்களில் மோசமான அனுபவங்களைத் தருகின்றன.
ReplyDeleteA2B - கரப்பு - :( சொன்னதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாது இன்னும் மோசம்!
***துளசி கோபால் said...
ReplyDeleteஎனக்குத் தெரிந்தவரையில் இந்த மகர் என்ற சொல்லை முதல்முதலில் அறிமுகப்படுத்தியவர் நம்ம பதிவர் கீதா சாம்பசிவம்தான்.***
டீச்சர்: காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா முத்துராமனிடம் சொல்லுவார்னு நெனைக்கிறேன் (ரவிச் சந்திரனை உங்க "மகர்" என்று) :)))
ReplyDelete@ கில்லர்ஜி
மதுரைக்கு என்னை அழைத்து வந்தவர் இவர்தான் ஜி. வருகைக்கு நன்றி.
ReplyDelete@ வருண்
பறவைகளை கூண்டுக்குள் அடைப்பது தவறாகத் தெரிகிறது. ஏனென்றால் அவற்றின் பறக்கும் இயல்பு தடை செய்யப் பட்டு விடுகிறது. தொட்டியில் மீன்கள் அப்படியில்லையே.அவற்றின் இயல்புக்கு நீந்தி வருகின்றன. கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete@ வருண்
சண்டை போடாமல் குறிப்பிட்டுக் காட்டியதற்கு ஒரு நன்றி தேவைதான். உங்கள் கருத்துக்கு நன்றி வருண்.
ReplyDelete@ துளசி கோபால்
எங்கள் பயணம் அதிக நேரம்பிடித்ததற்கு எங்கள் காத்திருப்பும் ஒரு காரணம். மதுரை விழாவுக்கு சென்னைக்குச் செல்லும் போது எங்களுக்கு ஆறு மணி நேரத்துக்கும் குறைவாகவே ஆயிற்று. அதுவும் மாலைசென்னை ட்ராஃபிக்கில் சிக்கியும் .வருகைக்கு நன்றி மேடம்.
ReplyDelete@ டி.என். முரளிதரன்
நான் பயணிக்கவே விரும்புகிறேன். ஆனால் இப்போதெல்லாம் ஃப்ரிகுவென்சி குறைந்து விட்டது.கூடியவரை சுத்தமாக் இருப்பதைத்தானே விரும்புவோம். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி முரளி.
ReplyDelete@ தனபாலன்
ஷார்க் பெரிதாவதைப் பார்க்கும் போது அவதாரக் கதை நினைவுக்கு வந்ததைத்தான் குறிப்பிட்டேன்.மீன் பெரிதானால் தொட்டியும் பெரிதாகும் என்று நினைக்கிறேன். நன்றி டிடி.
ReplyDelete@ வே. நடனசபாபதி
மகன் வளர்ந்து விட்டான் என்பதைக் குறிக்கவே நகைச் சுவையாக மகர் என்றேன்.நீங்கள் குறிப்பிட்டதைப் படித்தபோது எனக்கும் அத்திரைப்படம் நினைவுக்கு வருகிறது. வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ துளசி கோபால்
ஒரு சிறு திருத்தம் மேடம். பதிவர் கீதா சாம்பசிவம் எப்பொழுதுமே பையனைப் பையர் என்றுதான் எழுதுவார். மகன் என்றோ மகர் என்றோ எழுதியதாக நினைவில்லை. நான் சும்மா தமாஷுக்கு மகர் என்று எழுதினேன்.
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
எனக்கு மூன்று சாய்ஸ் இருந்தது. கண்டுகொள்ளாமல் இருப்பது, தெரிவிப்பது. ரகளை பண்ணுவது.நான் சாத்விகவாதி. தெரிவிக்கவும் வேண்டும். திருத்தவும் வேண்டும் காட்சிப் பொருளாகவும் கூடாது. வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ வருண்
திருமதி கீதா சாம்பசிவம் உபயோகிக்கும் வார்த்தை பையர். மகரென்று காதலிக்க நேரமில்லை எனும் படத்தில் பாலையா மிகவும் பவ்யமாகக் கூறுவார்.
தங்களின் பயண அனுபவம் வாசிக்க சுவாரஸ்யமாக உள்ளன. ஆனால் தாங்கள் அன்று சிரமப்பட்டிருப்பீர்கள் அல்லவா!
ReplyDeleteஇனிப்பு பெட்டியில் கரப்பு - அதிர்ச்சி!
@துளசி, பையனைத் தான் நான் "பையர்" என மரியாதையாகச் சொல்வேன்.(விளையாட்டுக்குத் தான்!) இது இப்போ அநேகரிடம் போய் இருக்கிறது. பாலையா தான் "மகர்" என்று சொல்லுவார். காதலிக்க நேரமில்லைக்கு வசனம் எழுதியவர் யோசனையோ, ஶ்ரீதர் யோசனையோ! தெரியாது! :) இணையத்தில் "பையர்" என்று சொல்ல ஆரம்பித்தது நான் தான்! :)) அதுவும் ஒரு நண்பர் செய்த கேலியில் விளையாட்டாக ஆரம்பித்து, இப்போப் "பையர்"னு தான் எழுதவே வருது! :))))
ReplyDelete
ReplyDelete@ ஆதி வெங்கட்
பயணங்கள் சில நேரங்களில் இப்படியும் அப்படியும் அமைவதுண்டு. you have to take them in your strides.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
இணையத்தில் நான் அறிந்தவரை நீங்கள் ஒருவர் மட்டுமே பையனைப் பையர் என்று எழுதுகிறீர்கள். நான் என் மறுமொழியில் விளக்கி இருக்கிறேனே.
மகன் - மகர்
ReplyDeleteஅப்போ மகள்:)))
நீங்க மகன் என்று குறிப்பிட்டால் யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க, உங்க பையன் (பையர்)யும் சேர்த்து. எவ்வளோ வளர்ந்தாலும் பெற்றோருக்கு குழந்தைகள் தானே:) அவன், இவன் என்று குறிப்பிட தான் யோசிக்கவேண்டும் இல்லையா சார்???
ReplyDelete@ மைதிலி கஸ்தூரி ரெங்கன்
எனக்குத்தான் மகளில்லையே. மகர் என்று எழுதியது சும்மா தமாஷுக்குத்தான். வருகைக்கு நன்றி மேடம்.
சில கடைகள் சுகாதரம் பேணுவதே இல்லை ஐயா! பயணம் அனுபவம் வித்தியாசமாக இருக்கு.
ReplyDeleteஅடடா..... மகரையும் பையரையும் குழப்பிவிட்டேனே:(
ReplyDeleteவிளக்கங்களுக்கு நன்றிகள்.