ஏமாறாதே ஏமாற்றாதே......( சிறுகதை)
-----------------------------------
பதிவர் வே.நடனசபாபதி அவர்கள் ஏமாற்றுவதும் ஒரு கலைதான் என்னும் தலைப்பில் பலவகை ஏமாற்று வேலைகளை பதிவிட்டு வருகிறார். அதன் பாதிப்போ என்னவோ ஒரு சிறு கதைக்கு வித்து கிடைத்தது, எழுதி இருக்கிறேன் படித்துப் பாருங்களேன்.
பொழுது
விடிந்துவிட்டதா.?கிராமங்களில் சேவல் கூவுவது கேட்டுப் பொழுது விடிந்து விட்டது
தெரிந்து கொள்வார்கள்.ஆனால் நகர்ப் புறங்களில் சேவலாவது கூவுவதாவது. உடலே ஒரு
அலார்ம் கடிகாரம் போன்றதுத்தானே, விடிகாலையில் எழுந்து பழக்கப்பட்டுவிட்டால்
கடிகாரமோ அலார்மோ தேவை இருக்காது உடலிலேயே ஒரு பையாலாஜிகல் க்லாக் இருக்கும் போல. எனக்குத்
தூக்கம் முற்றும் போய் விட்டது. இனி அன்றைய ரொடீன் வேலைகளுக்குத் தயார் ஆகவேண்டும்
உணர்வுகளின் ஏதோ ஒரு இன்ஸ்டிங்க்ட் அன்றைய பொழுது சரியாக இருக்கப் போவதில்லை என்று
சொல்கிறது. பெரும்பாலான நேரங்களில் அந்த உணர்த்தல் சரியாகவே இருந்திருக்கிறது
நான்
ஒரு பெரிய கம்பனியின் விற்பனைத் மேலாளன். என் கீழ் ஏரியாவுக்கு ஒருவர் என்று பலர்
பணியில் இருக்கிறார்கள். வியாபாரம் செய்யும் பொருட்களை எங்கள் கம்பனி கடனுக்குக்
கொடுப்பதில்லை. எல்லாமே cash ant carry business தான் தினம் ஆயிரக்கணக்கில் பொருட்கள் விற்பனையாகும் பிரபல
நிறுவனம் விற்பனையாளர்களிடமும் வியாபாரிகளிடமும் பணப் புழக்கம் சற்று அதிகரித்தே
இருக்கும். லாபத்துக்குச் சொல்லவா வேண்டும்
அன்று காலையில் இருந்தே என் மனம் ஏதோ ஒரு கெட்ட
செய்தியை எதிர்பார்த்திருந்தது. அன்று எனது அலுவலகத்தில் கணக்கு வழக்குக்ளை
ஆடிட் செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியும் பலருக்கும்
தெரியும்
இதுவ்ரை எல்லாமே சரியாகத்தானே இருந்திருக்கிறது. அன்றும் எல்லாம் சரியாய்
இருக்கும் என்று நான் அலுவலகம் போனேன் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும்
அதிகாரிகள் முகத்தில் ஒரு இனம் தெரியாத கடுப்பு. தவறு என்று எதையாவது கண்டு
பிடித்து, இல்லை என்று அது நிரூபிக்கப்பட்டால்................. ஆகவே ஒன்றுக்கு இரு
முறைசரிபார்க்க வேண்டிய நிலை. எனது வருகைக்காகவே காத்திருந்த அதிகாரிகள்
கணக்குப் படி ஏதோ பெரிய தவறு நேர்ந்திருக்கிறது என்று கூறினர். செலவுக் கணக்கும்
வரவுக் கணக்கும் tally
ஆகவில்லை.
லட்சக்கணக்கில் வித்தியாசம் இருந்தது. எனக்கு ஏதும் புரியவில்லை. நானும்
வாரத்துக்கு ஒரு முறையாவது பில்லிங் மற்றும் பேமெண்டும் சரியாகக் கணக்கிடப்
பட்டிருக்கிறதாஎன்று செக் செய்வது வழக்கம். எல்லாமே இதுவரை சரியாய்த்தானே இருந்து
வந்திருக்கிறது எழுப்பப்படும் invoice களின் எண்களின் கீழ் அக்கௌண்ட் பிரிவில்
பணம் செலுத்தப் பட்டதாகவே இருந்திருக்கிறதுபிறகு ஏன் டாலி ஆகவில்லை. உண்மையிலேயே
அது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்தது.
சரி
கணக்காயர்களிடம் எந்த ஏரியாவில் தவறு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது என்று நான்
கேட்டேன் ஒரு குறிப்பிட்ட ஏரியாதான் இந்தக் குளறுபடிக்குக் காரணம் என்று
தெரியவந்தது. எனக்கு ஏதும் புரியவில்லை. தவறு நேர்ந்திருந்தால் எங்காயிருந்தாலும் நானே
பொறுப்பு என்னும் விதத்தில் அதிகாரிகள் பேசத்தொடங்கினர். தவறு நேர்ந்திருந்த ஏரியா
அதிகாரியைக் கூப்பிட்டு விசாரிக்கலாம் என்றால் அவர் அன்று விடுப்பில் இருப்பதாகத்
தகவல் கிடைத்தது
சரி,
எத்தனை நாளாக கணக்குகள் tally ஆகவில்லை என்று கேட்டால், சுமார்
மூன்றுமாதங்களாக வித்தியாசங்கள் காணப்படுவதாகக் கூறினார்கள். நஷ்டமாகத் தொகை
ரூபாய் லட்சக் கணக்குகளில் ஓடியது என்றும் தெரியவந்தது. விவகாரம் பெரிதாகப் போய் என்
பெயருக்கே கேடு விளைக்கும் என்றுநான் அஞ்சினேன். விடுப்பில் இருந்த ஏரியா
அதிகாரியின் வீட்டுக்குப் போய் விசாரிக்கலாம் என்று தோன்றியது.காலையில் இருந்தே
மனம் இது பற்றித்தானோ சஞ்சலப் பட்டுக் கொண்டிருந்தது என்று நான் எண்ணினேன்
ஏரியா
அதிகாரியின் வீட்டுக்குப் போனால் அங்கே ஊர்ப்பட்ட கூட்டம் அவர் வீட்டில் தூக்கில்
தொங்கி இருக்கிறார். விவரிக்க முடியாத சஞ்சலத்துடன் நான் அலுவலகத்துக்கு தகவல்
தெரிவித்தேன் ஏரியா அதிகாரி தூக்கில் தொங்கினதுக்கும் இந்தக் கணக்கு
வழக்குகளுக்கும் தொடர்பு இருக்கிறதாஎன்று என் மனம் ஆராயத் தொடங்கியது செத்தவனிடம்
விசாரிக்கவா முடியும்
ஒவ்வொரு
இன்வாய்ஸையும் அதற்கான பணம் கட்டின விவரங்களையும் அக்கௌண்ட் பிரிவில் சரிபார்க்க
முயன்றபோது சிக்கல்களின் காரணம் பிடிபடத் துவங்கியது.
Cash
and carry system என்பதால் குறிப்பிட்ட இன்வாய்ஸுக்குப் பணம் வாங்கி, அந்த
இன்வாய்ஸ் நம்பரின் கீழ் ஒருசிறுதொகை பணம் கட்டப்படும் டெஸ்பாட்ச் பிரிவுக்கு அந்த
இன்வாய்சுக்குப் பணம் கட்டி விட்டதாகத் தகவல் போக அவர்களும் அந்த இன்வாய்சில்கண்ட
பொருட்களை அனுப்பி விடுவார்கள் இன்வாய்சுக்குப் பண்ம்வந்த மாதிரி இருக்கும்
பொருட்கள் பட்டுவாடா ஆகி இருக்கும் ஆனால் அக்கௌன்ட் பிரிவுக்கு முழுத் தொகையும்
வந்திருக்காது. இந்த ஓட்டையைக் கண்டு பிடித்து அதை தனகுச் சாதகமாகப் பயன் படுத்தி
ரூபாய் லட்சக் கணக்கில் மோசம் செய்து ஏரியா அதிகாரி உபயோகித்திருக்கிறார் .இறந்து
போன ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சொல்லக் கூடாது அல்லவா ஆகவே
ஒரு
வேளை விற்பனை டீலர்களிடம் தவறு இருக்கலாமோ என்று தோன்ற அவர்களிடம் விசாரித்தேன்
அவர்கள் அனைத்து இன்வாய்ஸுகளுக்கும் மொத்த பணமும் கட்டியே பொருட்களைப் பெற்றதாக
உறுதி கூறினர் இறந்து போனவனின் வாக்கு மூலம் இல்லாமல் எதையும் நிச்சயம் செய்ய
முடியவில்லை.
காவல் துறைக்குப்
புகார் கொடுக்கப் பட்டது. இறந்தவன் தற்கொலை செய்து கொண்டானா அல்லது கொல்லப்
பட்டானா என்றெல்லாம் கேள்விகள் எழ வயிற்றில் புளி கரையத் தொடங்கிவிட்டது
இரண்டு
மூன்று நாட்களுக்குப் பின் ஏரியா அதிகாரியின் வீட்டிலிருந்து வந்திருந்த ஒரு
கடிதம் காவல் துறையால் கண்டெடுக்கப் பட்டது. அதில் அவர் வீட்டில் அவரது தங்கையின்
திருமணம் சிறப்பாக நடந்த்து என்றும் அவன் அனுப்பி இருந்த பெரும் தொகையே சமயத்தில்
உதவியது என்றும் எழுதப்பட்டிருந்தது. ஏரியா அதிகாரியின் உறவினர்களை விசாரித்ததில்
அவர் இதுவரை பணம் ஏதும் அனுப்ப முடியாததற்கு வருத்தம் தெரிவித்திருந்த கடிதமும்
வெளிவந்தது ஒரே நேரத்தில் இவ்வள்வு பெரிய தொகை உறவினர்களிடமும் சந்தேகத்தை எழுப்பி
இருந்தது
எனக்கு
எல்லாம் புரிய ஆரம்பித்தது. எனக்குப் புரிந்தால் போதுமா?என்ன நடக்குமோ
பொறுத்திருந்து பார்க்கத்தான் வேண்டும்
இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொண்டால் இல்லாத தெய்வங்களுக்கெல்லாம் நன்றி கூறிக் கொண்டு கோவில் கோவிலாகப் போகவேண்டுமோ.?
எல்லாம் புரிந்து விட்டது ஐயா முடிவு என்ன ஆனது தொடரும் போல நிறுத்தி விட்டீர்களா ?
ReplyDeleteசோகமான முடிவு. தங்களின் இந்தக்கதையில் போனவர் போய்விட்டார். இனி இருப்பவர்கள் பாடுதான் திண்டாட்டம்.
ReplyDelete//பதிவர் வே.நடனசபாபதி அவர்கள் ஏமாற்றுவதும் ஒரு கலைதான் என்னும் தலைப்பில் பலவகை ஏமாற்று வேலைகளை பதிவிட்டு வருகிறார்.//
பொதுவாக அவர்கள் எழுதி வெளியிடுபவை நாம் இதுபோல ஏமாறாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஓர் வழிகாட்டியாக உள்ளன. தங்களுக்கு அதுவே ஓர் கதைக்கான கற்பனையாகியுள்ளது. எனினும் மகிழ்ச்சியே.
கஷ்டமான நிலைதான்.
ReplyDeleteசோக முடிவாக அமைந்துவிட்டதே ஐயா
ReplyDeleteஐயா, தங்களின் பின்னூட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் தங்கள் வலைத்தளத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பேன். நேரம் ஒத்துழைக்காததால் அது முடியவில்லை. இன்று விடாப்பிடியாக வந்துவிட்டேன். இனி தொடர்கிறேன்.
ReplyDeleteகதையின் முடிவு சோகமாக இருந்தது.
ஒரு கேள்விக்குறியோடு முடிச்சிட்டீங்க!அப்படித்தான் முடிக்கமுடியும்.
ReplyDeleteநன்று
ReplyDelete@ கில்லர்ஜி
முடிவு என்ன ஆகும் . தவறு செய்யாதவன் தப்பித்தால் போதும். வருகைக்கு நன்றி ஜி
ReplyDelete@ கோபு சார்
யார் எப்படியெல்லாம் ஏமாறலாம், ஏமாற்றலாம் என்னும் கேள்வியே கதை ஆயிற்று. வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ஸ்ரீராம்
கஷ்டமான நிலைதான்.... இருப்பவருக்குத் தானே ஸ்ரீ
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
சோகமான முடிவு அல்ல ஐயா . ஒரு எச்சரிக்கைதான் வருகைக்கு நன்றி.
ReplyDelete@ செந்தில் குமார்
கதையின் முடிவு சோகமாய் இல்லை ஐயா. ஒரு எச்சரிக்கைதான் வருகைக்கு நன்றி.
ReplyDelete@ சென்னை பித்தன்
கதையின் உட்பொருளைப் புரிந்து கொண்டு கருத்திட்டதற்கு நன்றி சார்
ஆபீஸ் சிஸ்டத்தில் ஒரு ஓட்டை. அதைக் கண்டுபிடிக்க ஒருவன் தற்கொலை செய்யவேண்டும். ஆடிட்டர்களும் இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும்.இப்படித்தான் பல ஏமாற்றுகள் நடக்கின்றன.
ReplyDeleteஉங்களது கதையுடன் நாங்கள் கலந்துவிட்டோம். நன்றி.
ReplyDeleteதவறே செய்யாதபோது கூட இப்படி மாட்டிக் கொள்வது நடக்கிறது. எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் போல!
ReplyDeleteநல்ல கதை.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
ஆபீஸ் சிஸ்டத்தில் ஒரு குறை. அதை உபயோகப்படுத்தி ஏமாற்று வேலை. தவறு செய்தவன் குற்றம் அவனைத் தற்கொலை செய்து கொள்ள வைத்ததோ. இருக்கும் பாசிபிலிடிசை சொல்லிப்போகவே கதை. வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
இப்படி நடக்க வாய்ப்புகள் இருக்கிறது என்பதே கற்பனை. ரசித்ததற்கு நன்றி ஐயா
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
பல நேரங்களில் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது நடக்கத்தானே செய்கிறது. வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்
#இல்லாத தெய்வங்களுக்கெல்லாம் நன்றி கூறிக் கொண்டு கோவில் கோவிலாகப் போகவேண்டுமோ.?#
ReplyDeleteஇப்படித்தான் பலரும் செய்துக் கொண்டிருக்கிறார்கள் :)
வணக்கம்
ReplyDeleteஐயா
எல்லாம் மனித வாழ்வில் நடக்கும் நிகழ்வுதான் ஐயா சுவைபட அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனச்சாட்சியே கொன்று இருக்குமோ...?
ReplyDeleteஇன்னதுதான் காரணம் என்று வரையறுக்கவியலாத அல்லது வரையறைக்குள் அடங்காத அல்லது சாத்தியப்படாத சம்பவங்கள் எத்தனையோ நிகழ்ந்துவிடுகின்றன. அப்படியான ஒரு சம்பவத்தை மிக அழகாக கதையாக்கிய விதம் நன்று. ஆரம்பம் முதல் இறுதிவரை நூல் பிடித்தாற்போன்ற நேர்த்தியான எழுத்தோட்டம். பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteஒரு சிறு கதை உதிக்க எனது பதிவு காரணமாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி. பணம் புழங்கும் பெரும்பாலான நிறுவனங்களில் உள்ள அமைப்புமுறையின் பலவீனத்தால், நடக்கும்/நடந்துகொண்டிருக்கும் கையாடல் பற்றி அருமையாய் கதையில் வடித்திருக்கிறீர்கள். கதை முடியவில்லை என்றும் சோகமாய் முடிந்துவிட்டது என்றும் பின்னூட்டத்தில் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். கதையின் முடிவை வாசகர்களின் ஊகத்திற்கு விடுவதில்தான் ஒரு எழுத்தாளனின் வெற்றி அமைந்திருக்கிறது. அந்த வெற்றியை நீங்கள் பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDelete
ReplyDelete@ பகவான் ஜி
சில விஷயங்களில் நம் எண்ணங்கள் ஒத்துப் போகின்றனவோ, வருகைக்கு நன்றி ஜி
ReplyDelete@ ரூபன்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
அவர் மனசாட்சியைத் துணைக்கழைத்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. வருகைக்கு நன்றி டிடி
ReplyDelete@ கீதமஞ்சரி
சிலஓட்டைகளைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பின் விழிக்கும் பலரின் கதையே. வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ வே.நடனசபாபதி
கதை வித்துக்குக் காரண கர்த்தாவே உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஐயா.
உங்களிடமிருந்து இந்தப் பதிவு குறித்து மடல் ஏதும் வராததால் தாமதமாக ஜி+ மூலம் தெரிந்து கொண்டேன். முன்னரே தெரிந்தாலும் சில சமயங்களில் உடனடியாக வர முடிவதில்லை! :))))
ReplyDeleteகதை சட்டென முடிந்து விட்டது. இன்னும் ஏதோ சொல்ல நினைத்துச் சொல்லாமல் விட்டு விட்டது போன்ற ஒரு உணர்வு!
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
எப்படி ஆனாலும் வருகை தந்ததற்கு நன்றி.இந்தமுறை யாருக்குமே மடல் அனுப்பவில்லை.சொல்ல வந்ததைச் சொல்லி முடித்துவிட்டேன். முடிவு வாசகர்களின் கற்பனைக்கேற்ப விட்டு விட்டேன் . கதையின் தலைப்பே கரு.
இது போல நான் வேலை பார்த்த கம்பெனியில் ஒரு சம்பவம் நடந்தது.குதிரைப் பந்தயத்தில் பணம் தோற்றுக் கொண்டிருந்த ஒருவர் ஆயிரக்கணக்கில் அடித்துக் கடைசியில் அவர் வேலையை விட்டுப் போகும் நேரத்தில் தான் விவரம் வெளியே தெரிய வந்தது.
ReplyDelete
ReplyDelete@ அப்பாதுரை
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று இருக்கவில்லையே. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்
சார் தவறு செய்துவிட்டு பரிகாரம் என்று கோவில் கோவிலாகச் செல்வபர்கள்தான் அதிகம். தவறு செய்யாதவர்கள் தங்கள் மீது நம்பிக்கை இருக்கும் போது கோயிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லைதானே. கதையில் இறுதியில் கேள்வி தொக்கி நிற்கின்ற மாதிரி உள்ளது...
ReplyDelete
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து.
கதையைப் படித்து வரும்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். பொறுப்பு என்னிடம் யார் தவறிழைத்தாலும் அதற்கு என் கீழ் உள்ளவர்களுக்கும் சேர்த்து நானே பதில் சொல்லவேண்டும் தவறு செய்தவன் என்று எண்ணப்படுபவன் இறந்து விட்டாலும் நஷ்டத்துக்கு நானே பதில் சொல்ல வேண்டும் என்னும் நிலை எழுந்தால் அந்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தால்....... இப்போது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன் வருகைக்குக் கருத்துக்கும் நன்றி சார்.