காந்திஜியின் நினைவுகளால் உந்தப்பட்டு
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
”சுய சரிதை எழுதுவது என்பது மேற்கத்தியவரின் ஒரு பிரத்தியேக குணம். எனக்குத்
தெரிந்து கீழை நாட்டவர் சுயசரிதை
எழுதியதாகத் தெரியவில்லை. அப்படியே எழுதுபவர் மேலை நாட்டினரின் வழக்கங்களால்
ஈர்க்கப் பட்டிருக்க வேண்டும். நீ என்னதான் எழுதுவாய்.?இன்று நீ கடைப்பிடிக்கும்
கொள்கைகளில் இருந்து நாளை மாறுபட்டாலோ அல்லது மாற்றினாலோ உன்னை பின் பற்றும் மனிதன் உன் கொள்கை
மாற்றத்தாலோ, மாறுபாட்டாலோ குழப்பமடைய மாட்டானா.?”
இந்த மாதிரியான எண்ணம் என்னைச் சிந்திக்கச் செய்தது. ஆனால் நான்
எழுத் முற்பட்டது என் சுய சரிதை அல்ல..நான் என் வாழ்வில் மேற்கொண்டுள்ள சத்தியப்
பரிசோதனைகளின் தொகுப்பாய்த்தான் அது இருக்கும். இந்த மாதிரியான சத்தியப்
பரிசோதனைகள் வாழ்வு முழுவதும் , இருப்பதால் அதன் தொகுப்பே ஒரு சுய சரிதையாகிவிட
வாய்ப்புள்ளது. அதுவே நான் எழுதும் ஒவ்வொரு பக்கத்திலும் விரவி இருந்தாலும் நான்
கவலைப் படமாட்டேன். இந்த சோதனைகளின் விவரங்கள் இதை வாசிப்பவருக்கு உதவாமல் போகாது
என்று நினைப்பதில் பெருமைப் படுகிறேன்.அரசியல் துறையில் என் பரிசோதனைகள் இந்தியாவில் மட்டுமல்ல ”நாகரீக” நாடுகளிலும்
ஓரளவுக்குத் தெரியப் பட்டதே.அதன் மதிப்பு பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை.எனக்கு
“மஹாத்மா” என்ற
பட்டம் பெற்றுத் தந்தது பற்றியும் நினைப்பதில்லை.ஆனால் சில சமயங்களில் வருத்தப் பட
வைத்திருக்கிறது. ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த ஆன்மீகப் பரிசோதனைகளையும்,
அதிலிருந்து எனக்குக் கிடைக்கும் சக்தி எப்படி அரசியல் துறையிலும் உதவியாய்
இருக்கிறது என்பது பற்றியும் எழுத விழைகிறேன். இம்மாதிரியான பரிசோதனைகள் உண்மையில்
ஆன்மீகமாக இருந்தால் என்னை நானே புகழ்வது சரியாயிருக்காது. சிந்தித்துப்
பார்க்கும் போது அது என் பணிவுக்குக்த்தான்
பலம் சேர்க்க வேண்டும்.கடந்து போன நிகழ்வுகளில் மனம் செல்லும்போது என் தகுதிகுறைபாடுகளே
வெகுவாய்த் தெரிகிறது.
இப்போது நான் குறிப்பிடுவது என் பதினாறாம் பிராயத்து
நிகழ்வுகள். என் தந்தை fistula எனும் நோயால் பாதிக்கப் பட்டு
படுக்கையில் இருந்தார் என் தாயும், ஒரு வேலையாளும் நானும் என் தந்தையைக்
கவனித்துக் கொள்ளும் முக்கிய நபர்கள். என் செவிலிப் பணியில் அவரது காயத்துக்கு
மருந்திடுவதும் , வேளாவேளைக்கு மருந்து கொடுப்பதும் , வீட்டில் தயார் செய்யக்
கூடிய மருந்துகளைத் தயார் செய்வதும் அடங்கும்.ஒவ்வொரு இரவும் அவரது கால்களைப்
பிடித்து அமுக்கிக் கொடுப்பதும் வாடிக்கை. அவர் போதுமென்று சொன்னாலோ அவர்
உறங்கினாலோ அல்லாமல் தொடர்ந்து செய்வேன். அதில் நான் தவறிய நினைவில்லை. அவருக்குச்
செய்ய வேண்டிய சிசுருக்ஷைகளிலும் பள்ளிப் படிப்பிலும் என் நேரம் பங்கிடப் பட்டது.
இந்த காலகட்டத்தில் என் மனைவி கர்ப்பமாய் இருந்தாள்.-ஒரு
கால கட்டம் இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது நான் எப்படிக் கட்டுப்பாடு
இல்லாமல் இருந்தேன் என்று தெரியப் படுத்துகிறது..ஒன்று நான் அப்போது இன்னும் மாணவன்தான்.
இரண்டு என் காமவேகம் என் படிப்பை விடவும் என் பெற்றோருக்கான கடமைகளை விடவும்
ஆக்கிரமித்திருந்தது. ஒவ்வொரு இரவும் என் கைகள் தந்தையின் கால்களைப்பிடித்து
விட்டுக் கொண்டிருக்கும்போது மனம் ம்ட்டும்
படுக்கை அறையைச் சுற்றி வரும்.பொது அறிவும் மருத்துவ தேவையும் மத உபதேசங்களும்
அந்த நேரத்தில் உடல் புணர்ச்சிகளில் ஈடுபடுவது தவறு என்று தெரியப் படுத்தியும் என்
சேவை முடிவுற்றதும் நேரே படுக்கை அறைக்குள் நுழைவேன்.
இந்த இடைவெளியில்
தந்தையார் நிலைமை சீர் குலையத் தொடங்கியது. ஆயுர்வேத மருத்துவர்களும் ,
ஹக்கீம்களும் பலவித சிகிச்சைகளை மேற்கொண்டனர். ஆங்கில அறுவைச் சிகிச்சை மருத்துவரும்
பார்த்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தபோது மருத்துவர் அவரது வயதைக் காரணங் காட்டி குறுக்கே நின்றார்,.அறுவைச்
சிகிச்சை எண்ணம் கைவிடப் பட்டது. அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால்
அவர் குணமடைந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
இறப்பு என்பது உறுதியானபிறகு யார் என்ன செய்திருக்க
முடியும்.
அவர் நாளுக்கு நாள் நலிந்து கொண்டு வந்தாலும் வைணவ
முறையிலான சுத்தங்களைக் கடைப் பிடிப்பதில் குறியாய் இருந்தார். படுக்கையில்
இருந்து எழுந்து வந்து அவர் கடன்களைச் செய்வதைப் பார்க்கும்போது ஆச்சரியமாய்
இருக்கும்.என் தந்தையின் சகோதரர் அவரது நிலையைக் கேள்விப்பட்டு ராஜ்கோட்டிலிருந்து
வந்திருந்தார்..நாள்முழுவதும் என் தந்தையின் அருகிலேயே அமர்ந்திருப்பார்.
அன்று இரவு பத்தரை பதினொன்று மணி இருக்கும். தந்தையின்
கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். அப்பாவின் சகோதரர் என்னை
விடுவித்தார். நான் நேராகப் படுக்கை அறைக்குள் நுழைந்தேன். என் மனைவி உறங்கிக்
கொண்டிருந்தாள் . நான் அருகில் இருக்கும்போது அவள் எப்படித் தூங்க முடியும்? அவளை
எழுப்பினேன். ஐந்தாறு நிமிடங்களில் கதவு தட்டப் பட்டது. பணியாள் நின்றிருந்தார்.
நான் பயத்துடன் பார்த்தேன். அப்பா உடல் நிலை மோசம் என்றார்.எனக்கு அது
தெரிந்ததுதானே ”என்ன விஷயம் சீக்கிரம் சொல் “ என்றேன்.”அப்பா போய்விட்டார்” என்றான்
#######################
காலையில் எழுந்ததிலிருந்தே காந்தியின் நினைவாக இருந்தது.
சிறு வயதில் காந்தியை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் நான். காந்தியின் பாதிப்பு
இந்தியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் உணரப் பட்டது. நாங்கள் அப்போது அரக்கோணத்தில்
இருந்தோம். பிள்ளைகள் நாங்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தோம். தாசில்தார்
தெரு என்று நினைவு. அடுத்த வீட்டுக்காரர் ஒரு திரை அரங்கின் சொந்தக் காரர். அவர்
வீட்டில் ரேடியோ இருந்தது. பொதுவாகவே சத்தமாக வைப்பார்கள். அன்று 1948-ம் வருடம்
ஜனவரி 30-ம் நாள் மாலை ரேடியோ செய்தி அலறியது. “ காந்திஜி சுட்டுக் கொல்லப்
பட்டார்” விளையாடிக்
கொண்டிருந்த பிள்ளைகள் நாங்கள் செய்தி கேட்டு ஓரளவு அதிர்ச்சி அடைந்தோம். தெரு
முழுவதும் ஓடி காந்தியின் இறப்புச் செய்தியை அறிவித்தோம். பிறகென்ன .? ஊரே இழவுக்
கோலம் பூண்டது. என் தந்தையார் துயரத்தில் விக்கி விக்கி அழுதார். எங்கள் வீட்டில்
என் சிற்றன்னையின் உறவினர் ஒருத்தி இருந்தார். மொட்டை மாடிக்குச் சென்று கதறிக்
கதறி அழுதார். அப்போது தெரிந்து கொண்டேன். காந்தியின் பாதிப்பு படிப்பறிவு இல்லாத
ஒரு மூதாட்டியையே பாதித்த்து என்றால் அவரது கியாதி எவ்வளவு பரவலாய் இருந்திருக்க
வேண்டும்.நீங்கள் படித்தது காந்திஜியின் நினைவாக அவரது ” MY EXPERIMENTS WITH TRUTH “ என்னும்
புத்தகத்தில் இருந்து தமிழாக்கம் செய்து எழுதியது.
( இது ஒரு மீள்பதிவு)
நல்ல பகிர்வு.
ReplyDeleteகாந்தியின் சத்திய சோதனையை நான் படித்துள்ளேன். தாங்கள் மேற்கோள் காட்டிய நிகழ்வினை அவரது நூலில் படிக்கும்போது அதிசயப்பட்டேன், இப்படியும் ஒருவரால் எழுத முடியுமா என்று. அனைவருடைய வாழ்விலும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால் அதனை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ள ஒரு துணிவு வேண்டும். அத்துணிவினால்தான் அவர் மகாத்மா எனப்பட்டார். ஒவ்வொருவரும் சத்திய சோதனையைப் படிக்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான சொன்னீர்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
வணக்கம் ஐயா வார்த்தைகளை எத்தனை எளிமையாக சொல்லிக்கொண்டு போகின்றார் தங்களால் அவரது விடயங்கள் சில அறிந்தேன் நன்றி ஐயா...
ReplyDeleteஎனது காந்தியைப்பற்றிய பதிவு கடைசி நேரத்தில் அடுத்த வருடத்திற்க்கு மாற்றி விட்டேன் தாங்கள் காந்தியை நேரில் கண்டவர் நான் கனவில் மட்டுமே கண்டவன்....
aya vanakam vaalthukal. gandhi santhipu patri konjam virvaga tharugal. 3 aanduku munbuthaan sathiya sothanai padithan andru mudal maamesam unpadili. uirai kaapatra aangala maruthuvathal mudiavilai endral atharkupadi maamesam undu uier vaala thevai ilai endru maruthuvaridam vivathepar than manivien udal nalatherkaga. maanavargal padika vendiya pokisam.
ReplyDeleteசிறப்புப் பதிவை வித்தியாசமாகக்
ReplyDeleteகொடுத்த விதம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ReplyDelete@ ஸ்ரீராம்
வருகைக்கு நன்றி ஸ்ரீ
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
அதே எண்ணம்தான் என்னை இந்தப் பகுதியைத் தமிழாக்கம் செய்ய வைத்தது. வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ நண்டு@நொரண்டு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDelete@ கில்லர்ஜி
ஏன் அடுத்த வருடம் ஐயா. கந்திஜியைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் போதாது. வருகைக்கு நன்றி.
ReplyDelete@ மை மொபைல் ஸ்டூடியோஸ்
நான் காந்திஜியைப் பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான் சந்திப்பு என்றால் அவரும் என்னுடன் பேசி இருக்க வேண்டாமா. நான் அவரைப் பார்த்தது 1946-ல் என்று நினைக்கிறேன் என் எட்டாவது வயதில். நீங்கள் ஆங்கிலத்தில் தமிழ் எழுதுவது படித்துப் புரிய கஷ்டமாக இருக்கிறது.தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை என்றால் ஆங்கிலத்திலேயே எழுதலாமே வரவுக்கு நன்றி.
ReplyDelete@ ரமணி
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.
சிறந்த பதிவு
ReplyDeleteசத்தியசோதனை வாசித்துள்ளேன்.
சிறந்த பதிவு
ReplyDeleteசத்தியசோதனை வாசித்துள்ளேன்.
சிறந்த பதிவு
ReplyDeleteசத்தியசோதனை வாசித்துள்ளேன்.
சிறந்த பதிவு
ReplyDeleteசத்தியசோதனை வாசித்துள்ளேன்.
ReplyDelete@ துளசி கோபால்
நான்கு முறை வாசித்துள்ளதைத்தான் இப்படிச் சொன்னீர்களோ, நான் ஆங்கிலத்தில்தான் வாசித்திருக்கிறேன் வருகைக்கு நன்றி மேம்
படித்தது உண்டு என்றாலும் தமிழில் வாசித்த போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது...
ReplyDeleteஅருமையான பகிர்வு சார்!
படித்திருக்கிறேன், பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமீள் பதிவு என்றாலும் மீண்டும் படிக்கத்தூண்டிய பதிவு.வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅண்ணல் காந்திஜியின் சத்திய சோதனை - படித்திருக்கின்றேன்.. அவ்வப்போது படித்துக் கொண்டிருக்கின்றேன்..
ReplyDeleteபதிவுக்கு நன்றி..
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
தமிழில் நான் எழுதியது தமிழாக்கம் வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
இதே பதிவை முன்பே படித்திருக்கிறீர்களா ? வருகைக்கு நன்றி.
ReplyDelete@ வே நடன சபாபதி.
காந்திஜியைப் பற்றிய நினைவுகள் எ ந்றதும் பழைய பதிவே நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும் ஒவ்வொரு பரிமாணம் புரியும் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ துரை செல்வராஜு
எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் வருகைக்கு நன்றி சார்.
//இதே பதிவை முன்பே படித்திருக்கிறீர்களா ?//
ReplyDeleteஅப்படி ஒரு அர்த்தம் உண்டா? குறிப்பிட்ட நிகழ்வைக் குறித்து காந்தி எழுதி இருப்பதைப் பல புத்தகங்களும் சொல்லி இருக்கின்றன. அதைத் தான் படித்த்ருக்கிறேன் என்று கூறினேன். :)
//படித்த்ருக்கிறேன் என்று //
ReplyDeleteபடித்திருக்கிறேன் என்று த்ருத்திப் படிக்கவும். மடிக்கணினியில் கீ போர்டில் சில, பல கீக்கள் சரியாய் வேலை செய்வதில்லை! :) சதி செய்யுது! :)
ஹிஹிஹிஹி, மறுபடியும் தப்பு!
ReplyDeleteதிருத்தி!
I give up! :)))
வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம் அய்யா..
ReplyDelete
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
என் புதிய கணினியில் வேகமாகத் தட்டச்சு செய்யும்போது தவறாக வருகிறது. வேண்டுமென்று யாரும் தவறாக எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்
ReplyDelete@ எம் .கீதா
பதிவர் விழாவுக்கு எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு தேவை இல்லை. இருந்தாலும் சில ஆலோசனைகளைக் கூறி இருந்தேன் நிகழ்ச்சி நிரலில் நேர்த்தோடு நிகழ்வுகள் கொடுக்கப் பட்டிருக்கிறதா தெரியவில்லை. அழைப்பிதழ் பதிவிட்டதைப் பார்க்கும் போது அது இல்லை என்றே தோன்றுகிறது
விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
ReplyDeleteபணம்அறம்
நன்றி
நேர்மைக்குப் பாராட்டுக்கள் சார்.
ReplyDeleteமதமும் மருத்துவ தேவைகளும் பொது அறிவும்... உடல் தேவையைத் தவறு என்கிறதா? நீங்கள் செய்து கொள்ளும் சமாதானமா? no need. நீங்கள் செய்ததில் குற்றம் எதுவும் இல்லையே? மனம் நிறைவாக இருப்பதில் எந்தக் குற்றமும் இல்லை. அந்த வயதில் அதைவிட மனித நிறைவு வேறு எதில்?
காந்தியை நேரில் பார்த்திருக்கிறீர்களா? உங்களை இன்னொரு முறை நேரில்பார்த்துவிட வேண்டும் சார். what a privilege!
மன நிறைவு வேறு எதில் என்று படிக்கவும்.
DeleteThis comment has been removed by the author.
Delete
ReplyDelete@ கார்த்திக் சேகர்
வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி சார்
ReplyDelete@ அப்பாதுரை
சார் பதிவில் எழுதி இருந்தது காந்திஜியின் அனுபவங்கள். நான் காந்திஜியை என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன் எனக்கும் உங்களை மீண்டும் சந்திக்க ஆவல்
hi hi.. appadiya?
ReplyDelete
ReplyDelete@ அப்பாதுரை
/hi hi appadiya?/ ethu.?