இனி ஒரு விதி செய்வோம்
-------------------------------------------
கல்வி
கல்வி பற்றி எழுதிக் கொண்டே போகலாம் முதலில் நம் இலக்கு என்ன என்னும் புரிதல் வேண்டும் அதன்
பின் அதில் இருக்கும் சிக்கல்களை ஆராய்ந்து தீர்ப்பு கூற வேண்டும்
இந்தப் பதிவில் கூறப்படும் விஷயங்களில் சில கருத்துக்கள்
பற்றி நான் ஏற்கனவே எழுதி இருப்பேன் நல்ல
விஷயங்கள் என்று தோன்றுவதை ரிபீட் செய்வதில் தவறில்லையே நம் கண் முன்னே விரியும், நடக்கும், நமக்கும், ஏன் சமுதாயத்துக்கும் ஒவ்வாத ஒவ்வொரு நிகழ்வும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முடிந்தால் இந்த உலகத்தையே
புரட்டிப் போட்டு மாற்ற வேண்டும் என்ற வேகமும் எழுகிறது. நியாயமானதுதானே. நியாயத்துக்கும் தர்மத்துக்கும் கட்டுப் பட்டு நடக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும்
எண்ணக்குவியலே அவை. இருந்தாலும் நடப்பவைகள் எல்லாமே தவறானவை
அல்ல. வேண்டத்தகாதவைகள்
அல்ல. இன்னும்
சிறப்பாக இருக்கலாமே, நன்றாக இருக்குமே
என்ற ஆதங்கமும், விருப்பமும்தான் மனதில் தோன்றுகிறது
முதலில் நூறு
சதவீதக் கல்விதான் இலக்கு. இதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லைகல்வி என்பது
எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
நம்மை நாமே
ஆளும்போது ,நாம் எல்லோரும் சமம்
எனும்போது ,
வாய்ப்புகளும் சமமாக
இருக்க வேண்டும். வாய்ப்பு வேண்டிப்
போராட கல்வி அறிவு அவசியம். அதுவும் பரவலான நூறு சதவீதக்
கல்வி அவசியம்.
நாம்படித்தறிந்ததை பகுத்தறிந்து உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக ஆவோம்(. படித்தவர்கள் எல்லோரும்அறிவுள்ளவர்கள்அல்ல .படிக்காதவர்கள் அனைவரும் அறிவில்லாதவர்களும் அல்ல.)
ஆனால் ஒருவனை அறிவாளியாக்க படிப்பறிவு மிகவும் உதவும்
எழுத்தறிவும் கல்வியறிவும்
பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும் திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்.
முனிசிபல், கார்ப்பரேஷன் பள்ளிகளில் படித்துப்
பெயர் வாங்கும் சிறார் சிறுமிகளும் இருக்கிறார்கள்.,என்பது நமக்குத் தெரிந்ததே. நாம் எந்த ஒரு விஷயத்தையும் விவாதிக்கும்போது மிடில்
கிளாஸ் மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப் பயன்படுத்துகிறோம். ஏழை பாழைகளின் கருத்தைக்
கேட்கவோ எடுத்துச் சொல்லவோ நம்மில் பலரும் முன் வருவதில்லை இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும் படிப்பறிவும் இருந்தால் அவர்களை
அவர்களே மேம்படுத்திக் கொள்வார்கள்
நூற்றாண்டுகாலமாக
இன்னாருக்குத்தான் கல்வி இன்னாருக்கு அது
கூடாது என்னும் ஆதிக்க மனப்பான்மையில் பெரும்பாலோருக்குக் கல்வி செல்லவே முடியாத
நிலை இருந்தது இந்த ஆதிக்க மனப் பான்மையே நிலவும் ஏற்ற தாழ்வுகளுக்கான முக்கிய
காரணம் கல்வி அறிவு வந்து விட்டால் மக்கள் சிந்திக்கத் துவங்குவார்கள் ஆனால்
தற்போதைய கல்விமுறை சிந்திக்க வைக்கும் தன்மையுடையதா?கல்வி கற்றவர்கள் சிந்திக்கத்
துவங்கியதும் நாடு அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற்றதும் உயர்வு தாழ்வுகளே
முன்னேற்றத்துக்குத் தடை என்று அறிந்து பிற்படுத்தப் பட்டவர்களும் முன்னேற
வேண்டும் என்ற எண்ணத்துக்கு விதை தூவப்பட்டதும் பலரும் அறிந்ததே
நாடு சுதந்திரம் அடைந்ததும் பிற்பட்டோருக்கும்
தாழ்த்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு கல்வியிலும் உத்தியோகத்திலும் தேவை என்று
உணரப்பட்டு 25% இட ஒதுக்கீடு 25 ஆண்டுகளுக்கு என்று நிர்ணயித்தார்கள் ஆனால் 25
ஆண்டுகளில் பெரிதான முன்னேற்றம் ஏதும் இருக்கவில்ல என்று அறிந்து அதிக
ஒதுக்கீட்டுடன் இன்னும் தொடரப் படுகிறது இந்த இட ஒதுக்கீடு சரியான முறையில்
பயன் படுத்தப்பட்டிருக்கிறதா என்பதும் ஒரு
கேள்வி. இட ஒதுக்கீடு பெற்றதனால் உயர் நிலைக்கு வந்தவர்கள் தங்களது
வாரிசுகளுக்கும் அதைக் கோர பிற்படுத்தப்பட்டோரில் மீதி உள்ளோரின் நிலைமையும் சீர்படவில்லை. ஒரு காலத்தில் ஆதிக்க சாதியாக பிராமணர்களே
கருதப் பட்டனர். ஆனால் இன்றோ பிராமணர்கள் பிற்படுத்தோர் ஆகி மற்றையோர் உயர்
சாதியாகக் கருதப்படும் சாதி
இந்துக்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும்
தொடர்கின்றனர் பிற்படுத்தப் பட்டோரில் நல்ல நிலைக்கு வந்தவர்கள் (creamy
layers) தங்கள் வாரிசுகளுக்கும் ஒதுக்கீடு
கோருவது சரியானதா. ? முன்னேறிய சாதியினர் என்று
கூறப்படுபவர்களில் வாழ்க்கைப் படியில் மிகவும் பின் இறங்கிய நிலையில்
இருப்பவர்களும் உண்டு. பிறந்த சாதியின்
காரணமாகவே அவர்கள் முன்னேறியவர்களாகக் கருதப் படுகின்றனர். இதுவும் அல்லாமல்
இப்போது ஒரு புதியசாதி உருவெடுத்துள்ளதுஏழை பணக்காரன் எனக்கு என்னவோ இந்த உயர்வு தாழ்வுகள் ஒழிக்கப்
பட வேண்டுமானால் மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும் தானாக வரவில்லையானால் வருவிக்கப்
படவேண்டும் மனிதருள் அனைவரும் சமமே என்று
ஏற்று கொள்ளப் படும் பக்குவம் இன்னும் பலருக்கும் இல்லை. இல்லாததை வருவிக்க
மனிதருள் ஏற்ற தாழ்வு இல்லை எனக் காட்ட அதைத் துவங்கும் இடமே கல்விக்கூடமாகத்தான்
இருக்கவேண்டும்அதற்கு ஒரே வழி எல்லோரும் சமம் என்று உணர்த்தப்படும் கல்வி
வேண்டும் அது எப்படி உணர்த்தமுடியும்
என்னும் கேள்வி எழலாம் பள்ளிக்குச் செல்லும் சிறார்களைப் பள்ளியில் ஒரே
மாதிரியாகப் பாவிக்க வேண்டும் அந்த இள வயதில் இந்த பாவனை வந்தால் அடுத்த
தலைமுறையிலாவது பேதங்கள் இல்லாமல் போகும்
அதற்கு பள்ளிப் படிப்பு எல்லோருக்கும் கட்டாயப் படுத்தப்பட வேண்டும் அனைவருக்கும்
சமமான கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் அனைவருக்கும் இலவச உணவு அளிக்கப்படவேண்டும் அனைவருக்கும் ஒரே
சீருடை வழங்கப்பட வேண்டும் இவை அத்தனையும் அரசாங்கச் செலவில் இலவசமாக வழங்கப்பட
வேண்டும் படிக்கும் சிறார் மனதில் உயர்வு
தாழ்வு எண்ணம் மடிந்து போகும்
ஆனால்............
இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமா என்னும் கேள்வியும்
எழுகிறது கல்வி என்பது மத்திய அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும் நிதி ஒதுக்கீட்டில்
கல்விக்கான நிதியே முதலிடம் வகிக்க வேண்டும்
இது நடக்க இப்போது இருக்கும் கல்வி
வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்
இருக்கும் நிலை தொடர்ந்தால்தானே இவர்கள் இன்னும்
செழிக்க முடியும்
கல்வியை வியாபாரமாக்கும் கும்பலுக்கு நாம்தான்
துணை போகிறோம். அரசு பள்ளிகளை
ஆதரித்து ,அதன்
தரம் உயர
நாம் ஏன் பாடுபடக்கூடாது. ?
எனக்குத்
தெரிந்த ஒருவர் பழைய சாமன்களை வாங்கி விற்றுப் பிழைப்பு நடத்துபவர் எதிர் வரும்
ஆண்டில் அவரது பிள்ளைகளுக்கான பள்ளிக் கட்டணத்துக்கு என்ன செய்வது என்னும் கவலை
அவருக்கு அவரது குழந்தைகளை ஆங்கில வழிப் போதனை செய்யும் பள்ளிகளுக்கு
அனுப்புகிறார் ஆங்கிலவழிக்கல்வி பெற்றால் பெருமை சிறந்தது என்னும் எண்ணம் அவருக்கு. என்னதான் அரசாங்க இலவசக் கல்வி அளித்தாலும் இவர்
ஆங்கிலவழிப் பள்ளிக்குத்தான் தன்
பிள்ளைகளை அனுப்புவார் இந்த வித்தியாசம் எதுவும் இல்லாமல் இருந்துவிட்டால்
உன்கல்வி நல்லது என் கல்வி மோசம்
என்னும் எண்ணமே இருக்காதல்லவா
இரண்டரை வயதுக்கும் கீழான குழந்தைகளை ப்ளே
ஸ்கூலுக்கு அனுப்புகிறார்கள் குழந்தைகளை வள்ர்க்கும் பொறுப்பில் இருந்து
விலகுகிறோமோ பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் போது நிலைமை இன்னும் மோசம் மழலை மாறாத குழந்தைகளுக்கு அபத்தமான ரெயின் ரெயின் கோஅவே என்னும் ரைம்ஸ் கற்பிக்கப்
படுகிறது சிறார்களுக்கு ஐந்து ஆறு வயதில்தான் விரல்களை வசப்படுத்தும் சக்தி இருக்கும் ஆனால் இம்மாதிரி பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை
எழுத வைக்கிறார்கள் இதுதான் சரி என்று பெற்றோரும் எண்ணுகின்றனர்இவை எல்லாம் சீரான சிந்தனை இல்லாததை
உணர்த்துகிறது
குறிப்பிட்ட
பள்ளிகளில் மழலைமாறாத குழந்தைகளைச் சேர்க்க முன்னிரவு முதலே வரிசையில் நிற்கும்
பெற்றோர்களை என்ன சொல்வது?முண்டி அடித்து ரூபாய் 50000 வரை கல்விக் கட்டணமாகச்
செலுத்தி அதை பெருமையுடன் பறை சாற்றும் பலரே இன்றையக் கல்வியைச் சாடுகின்றனர் இதைஎல்லாம்
மாற்ற ஒரே வழி அனைத்துக் கல்விநிலையங்களும் அரசுடைமை ஆக்க வேண்டும் வங்கிகளை அரசுடமை ஆக்கிய போதும்தான் குய்யோ
முறையோ என்று கூக்குரலிட்டனர். இன்று நிலை சீராயிருக்கவில்லையா. மாற்றம் ஒன்றே
மாறாதது என்று முழங்குகிறோம் . ஆனால் நல்ல
மாற்றங்களை எதிர்க்கிறோம்
பொறியியல்
மருத்துவம் போன்ற மேல் படிப்புக்குப் பெரும்பாலும் பெற்றோரின் உந்துதலே காரணம் இப்போது பெற்றோரின் தூண்டுதல்
ஐடி படிப்பின் பால் நிற்கிறதுஇதற்கு
பெற்றோரை மட்டும் குறை சொல்ல மாட்டேன் இதெல்லாமே ஒரு மனமயக்கம்தான் பொறி இயலும்
மருத்துவமும் ஐடி படிப்பும்தான் படிப்பு என்னும் மாயத் தோற்றம் இருக்கிறது நான்
பொறீயல் பட்டதாரி அல்ல . இருந்தாலும்
பயிற்சியால் பொறி இயலில் ஏற்றம்
கண்டேன் என் கீழே பல பட்டதாரிகளும் பணி புரிந்தனர் இருந்தாலும் என்னிடம் அவர்கள் மதிப்புக்
குறையவில்லை. நான் என்னைப் பற்றிக் கூற
வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும்
எல்லாமே பட்டப்படிப்பால்தான் முடியும்
என்பது நேரான கருத்து அல்ல என்பதைக் காட்டவே கூறினேன்
அடிப்படையில்
இப்போது இருக்கும் கல்வி நிலை மாற வேண்டும்
. மாற்ற வேண்டும் இனி ஒரு விதி செய்வோம்
உயர்வு தாழ்வு எண்ணங்களைப் போக்க சீரான சமகல்வி அனைவருக்கும் இலவசமாக
வழங்கப் படவேண்டும் பலருக்கும் இது நடைபெற முடியாத ஒன்று என்றும், பள்ளிகளில் இருந்து வெளியே வருவோரின் தரம் குறைந்து விடும் என்றும் எண்ணலாம்ஒரு உதாரணம் கூறி முடிக்கிறேன்
இரண்டாம் உலகப் போர் முடிந்த போது ஜப்பான் அநேகமாக தரை மட்டமாக்கப் பட்டது.
இருந்தாலும் இன்று அவர்கள் உற்பத்தியிலும் தரத்திலும் உலகின் முன்னோடிகள். அப்போதெல்லாம் ஜப்பானியப்
பென்(pen) கள் விலை மிகவும் சலிசாக இருக்கும் / ஆனால் அவற்றின் தரம்
சொல்லும்படியாக இருக்காது. முதலில் அவர்கள் நோக்கம் அதிக எண்ணிக்கை மலிவாகக் கொடுப்பது. பின் போகப்போக அவற்றிலேயே
தரத்தைப் புகுத்துவது
அது போல்
நாம் முதலில் அனைவருக்கும் கல்வி
வழங்குவோம் போகப்போக தரமும் உயரும் /
ஏற்றதாழ்வும் மறையும்
மெக்காலே கல்வித் திட்டம் தான் நம்மைச் சீரழித்தது. ஒழுங்கான கல்வி முறையே இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. அதைச் சிதைத்தது மெக்காலே கல்வி முறையே! கல்வித் திட்டம் மாற வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நம் கலாசாரம், நம் பண்பாடுகள் ஆகியவற்றைப் போதிக்கும் வண்ணம் கல்வி இருக்க வேண்டும். மறைந்து விட்ட பல கலைகளை வெளிக்கொண்டு வரக் கல்வியே சிறந்தது. அழிந்து கொண்டிருக்கும் கலைகளையும் மீட்கவேண்டும். ராஜாஜியின் நல்லதொரு கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்னும் பெயரில் வரவிடாமல் தடுத்துவிட்டனர். இப்போது மந்திரி மகனும் மந்திரி, போலீஸ்காரர் மகன் போலீஸ், மருத்துவர் மகன் மருத்துவர் என்று வரவில்லையா? இது குலக்கல்வி ஆகாதா? இது பற்றி எழுத நிறைய இருக்கு! ஆனால் வாத, விவாதங்கள் வளரும் என்பதால் தவிர்க்கிறேன்.
ReplyDelete>>> முதலில் அனைவருக்கும் கல்வி வழங்குவோம்..
ReplyDeleteபோகப்போக தரமும் உயரும்.. ஏற்றத் தாழ்வும் மறையும்.. <<<
இனிமேல் - இதுவே இலக்காக இருக்கட்டும்..
//சிறார்களுக்கு ஐந்து ஆறு வயதில்தான் விரல்களை வசப்படுத்தும் சக்தி இருக்கும் ஆனால் இம்மாதிரி பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை எழுத வைக்கிறார்கள் இதுதான் சரி என்று பெற்றோரும் எண்ணுகின்றனர் இவை எல்லாம் சீரான சிந்தனை இல்லாததை உணர்த்துகிறது//
ReplyDeleteஅருமையான விடயத்தை முன் வைத்தீர்கள் ஐயா நல்லதொரு அலசல் மிகவும் ரசித்து படித்தேன் மாற்றங்கள் நம் மக்கள் மனதில் முதலில் வரவேண்டும் வருமா ? என்பதே குழப்பம்.
தனியார் மயமாக்கலும் பொதுத்துறை அழிப்பும் முதலாளிகளின் ஊக்குவிப்பும் எல்லாத்துறையிலும் வர்த்தகத்தைப் புகுத்திவிட்டது கல்வி, மருத்துவம் உட்பட. நம்மால் ஆவது ஒன்றும் இல்லை. அரசாங்கம் இதற்க்கெல்லாம் செவி சாய்க்காது.
ReplyDelete5 ஆம் வகுப்புக்கு போகும் என் பேரனுக்கு வருடாந்தர கல்வி கட்டணம் 1L. பஸ் சார்ஜ் 3000 ஒரு மாதத்திற்கு. என்ன சொல்ல!
--
Jayakumar
சிறப்பான எண்ணங்கள். என்னுடைய கற்பனைத்தொடரில் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறேன்.
ReplyDeleteபழனி கந்தசாமி ஸார் போலத்தான் நானும்!
ReplyDeleteநான் படித்தபோது மாதாந்திரக் கட்டணம் மாதம் 20 ரூபாய். இப்பொழுது நினைத்தும் பார்க்க முடியுமா!!??
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
வாத விவாதங்கள் வளரும் என்பதால் தவிர்க்கிறேன் என்கிறீர்கள் பல வேறு கருத்துக்கள் இருக்கின்றன என்பது உண்மையே என் பதிவைக் கூர்ந்து படித்தால் எனக்குத் தோன்றி இருக்கும்தீர்வைக் கூறி இருக்கிறேன் தயிரைக் கடைந்தால்தானே வெண்ணெய் வரும் . குலக்கல்வி பற்றிய உங்கள் கருத்து அடிப்படையிலேயே சரியில்லை என்று தோன்றுகிறது வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ துரை செல்வராஜு
First things first என்பதைத்தான் கூறி இருக்கிறேன் புரிந்து கருத்திட்டதற்கு நன்றி சார்
சிந்திக்க வேண்டிய கருத்துகள் ஐயா! கல்வி என்பது வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் என்ற எண்ணமேகல்வி வியாபராமகிப் போனதற்கான ஒரு காரணம்
ReplyDeleteசாதி மதப் பாகுபாடு கூடாது என்றுதான் அன்றைய பாடபுத்தகமும் இன்றைய பாடபுத்தகமும் சொல்கின்றன. இவரை சமுதாயத்தில் இருந்துதான் கற்றுக் கொள்கிறான். சிகரட் பிடிக்கவோ, குடிபழக்கதையோ பள்ளிகளில் சொல்லிக் கொடுக்காமலே வந்து விடுகிறது. நீதி போதனைகளால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதே உண்மை.
ReplyDelete@ கில்லர்ஜி
மாற்றங்கள் மக்கள் மனதில் ஏற்பட வேண்டும் ஆனால் வாசகர்கள் கருத்தையே சொல்லத் தயங்குவதுதான் புரியாத விஷயம் வருகைக்கு நன்றி ஜி
ReplyDelete@ ஜெகே 22384
வருகைக்கு நன்றி ஐயா பிரச்சனைகள் பலருக்கும் புரிகிறது தீர்வு சொல்வதில்தான் கருத்து வேறுபாடே /5 ஆம் வகுப்புக்கு போகும் என் பேரனுக்கு வருடாந்தர கல்வி கட்டணம் 1L. பஸ் சார்ஜ் 3000 ஒரு மாதத்திற்கு. என்ன சொல்ல!/ இப்படிப் புலம்புவோமே இதைத்தான் நான் மிடில் க்லாஸ் மெண்டாலிடி என்கிறேன் தவிர சரிசெய்ய ஒத்த கருத்து உருவாக என்ன செய்கிறோம் என் கருத்துகளுடன் உடன் படாவிட்டால் மாற்று சிந்தனைகளைக் கூற வேண்டும்மன்னிக்கவும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
உங்கள் தீர்வைப் பகிரலாமே. எனக்குப் படித்த நினைவு இல்லை. சுட்டி கொடுங்களேன் வருகைக்கு நன்றி
ReplyDelete@ ஸ்ரீராம்
பழனி கந்தசாமி போல் நீங்கள் எதில் என்று புரியவில்லை. நான் படித்தபோதுபள்ளி இறுதி வகுப்புக்குக் கட்டணம் மாதம் ரூ 6-/ தான் இப்போது அதுவா பதிவின் கருத்து. ? வருகைக்கு நன்றி ஸ்ரீ/
ReplyDelete@ டி என் முரளிதரன்
சாதி மதப் பாகுபாடு கூடாது என்றுதான் சொல்கிறோம் ஆனால் சிறு வயதிலேயே அதைப் போக்கும் முறைபள்ளிக்கூடத்தில் இருந்து விட்டால் அதுவே வாழ்க்கைப் பாடமாகி விடும்.காரணங்கள் நமக்குத் தெரிகின்றன திருமண விளம்பரங்கள் சொல்லும் நாம் எத்தகைய மனங்கொண்டவர்கள் என்பது அடிப்படைத் தீர்வு மனதில் பட்டது வருகைக்கு நன்றி முரளி
எந்த ஒரு பிரச்னைக்கும் மனசுக்குள்ளேயே ஒரு தீர்வு கண்டு பிரச்னை முடிந்து போன திருப்தியில் இருப்பதில் பழனி கந்தசாமி ஸார் போல என்று சொல்ல வந்தேன்!
ReplyDelete:)))
//சிறார்களுக்கு ஐந்து ஆறு வயதில்தான் விரல்களை வசப்படுத்தும் சக்தி இருக்கும் ஆனால் இம்மாதிரி பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை எழுத வைக்கிறார்கள் இதுதான் சரி என்று பெற்றோரும் எண்ணுகின்றனர் இவை எல்லாம் சீரான சிந்தனை இல்லாததை உணர்த்துகிறது// அருமையான ஒரு விஷயம் சார். இதைத்தான் சொல்லிவருகிறோம் ...
ReplyDelete//இல்லாததை வருவிக்க மனிதருள் ஏற்ற தாழ்வு இல்லை எனக் காட்ட அதைத் துவங்கும் இடமே கல்விக்கூடமாகத்தான் இருக்கவேண்டும்அதற்கு ஒரே வழி எல்லோரும் சமம் என்று உணர்த்தப்படும் கல்வி வேண்டும் அது எப்படி உணர்த்தமுடியும் என்னும் கேள்வி எழலாம் பள்ளிக்குச் செல்லும் சிறார்களைப் பள்ளியில் ஒரே மாதிரியாகப் பாவிக்க வேண்டும் அந்த இள வயதில் இந்த பாவனை வந்தால் அடுத்த தலைமுறையிலாவது பேதங்கள் இல்லாமல் போகும் அதற்கு பள்ளிப் படிப்பு எல்லோருக்கும் கட்டாயப் படுத்தப்பட வேண்டும் அனைவருக்கும் சமமான கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் // இதுதான் மிக மிக முக்கியம் சார்.
கீதா: நான் படித்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் எந்தவித ஏற்றத் தாழ்வும் தெரியாது சார். அப்போது தனியார் பள்ளிகள் என்பதே இப்போது போல் இல்லையே சார். எங்கள் வீட்டில் ஆண் குழந்தைகள் எல்லோரும் அரசுப் பள்ளியில் தான் 12 ஆம் வகுப்புவரை அதற்குப் பிறகும் அரசுகல்லூரிகளில்தான். பெண் குழந்தைகள் நாங்கள் கிறித்தவப் பள்ளிகளில் அரசு மானியத்தில் நடத்தப்படும் பள்ளிகள்...எனவே கட்டணம் என்பது மிக மிகக் குறைவு. பள்ளியில் பூ வைத்துக் கொள்ளக் கூடாது. பள்ளியில் குப்பைகள் அள்ள வேண்டும், ரோட்டில் எப்படி நடக்க வேண்டும், வீட்டையும், வெளிப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், குப்பை போடக் கூடாது, குப்பைத் தொட்டியில்தான் போட வேண்டும்...உடை எப்படி அணிந்து கொள்ள வேண்டும்,பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கூடாது, பிறந்த நாள் என்றாலும் கலர் ட்ரெஸ் கூடாது எல்லோரும் ஒரே மாதிரியான யூனிஃபார்ம் தான் போட வேண்டும் என்றும் பல நல்ல விஷயங்கள்ம், சிவிக் சென்ஸ் எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டது.
கல்வியும் அப்படித்தான். யாரையும் தாழ்த்தியது இல்லை. க்ரூப் ஸ்டடி என்று, ட்யூஷன் எல்லாம் போகக் கூடாது என்று பள்ளியிலேயே பள்ளி முடிந்ததும் ஸ்டடி க்ளாஸ் வைத்து என்று ஏழைக் குழந்தைகளுக்கும் உதவும் வகையில் இருந்தது பள்ளி.
இப்போது வைட் காப் உருவாகியுள்ளது ஏழை - பணக்காரப் பள்ளிகள் என்று. கல்வி வியாபாரமாகியும் இருக்கிறது. பெற்றோர்களும் அதற்கு முக்கியக் காரணம் நீங்கள் சொல்லியிருப்பது போல்.
நம் கல்வியில் மாற்றம் வர வேண்டும் வந்தாலொழிய நீங்கள் இங்கு சொல்லியிருப்பதோ, நாம் பேசுவதோ நடைமுறைக்கு வரும் சாத்தியக் கூறுகள் இல்லை.
நல்ல கருத்துகள்..
பழனி கந்தசாமி ஸார் போலத்தான் நானும்!
ReplyDeleteநான் படித்தபோது மாதாந்திரக் கட்டணம் மாதம் 20 ரூபாய். இப்பொழுது நினைத்தும் பார்க்க முடியுமா!!??
ஆரம்பக் கல்வியிலிருந்து இங்கு மெக்காலே கல்வி முறையிலேயே பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.
ReplyDeleteஇதைத் தான் கீதா சாம்பசிவம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள்.
மெக்காலே கல்வி முறை அலுவலக உதவியாளர்களையே உற்பத்தி பண்ணும். அதிகாரியாக இருந்தாலும் அவர் தனக்கு மேல் அதிகாரிக்கு அலுவலர் போலச் செயல்படுவார். ஓரிடத்தில் குவிக்கப் பட்ட அதிகாரம் அந்த அதிர்காரத்திற்கு உட்பட்ட எல்லோரையும் அலுவலராகச் செயல்பட வைக்கும். தனக்கு கீழ் இருப்பவரை வேலை வாங்குவது என்கிற பொதுபுத்தி கடைசித் தட்டு ஊழியன் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. களத்தில் வேலை செய்வது என்பது கல்வி பெறாத அடிமட்ட ஊழியனே. எல்லோருக்கும் கல்வி என்கிற நம் இலட்சியம் நிறைவேறினாலும் கல்வி முறையில் கேடு இருப்பதினால் காலதிகாலமாக இந்த சிஸ்டமே தொடர்ந்து வரும்.
தொழிற்கல்வி பெற்றவர்களும் அதிகாரிகளாக ஃபைலைத் தான் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். களத்தில் வேலை செய்வது வழக்கம் போல பெரிய படிப்பெல்லாம் படித்திராத அடிமட்ட ஊழியர்களே.
அதிகாரி பொறியியல் பட்டதாரியாக இருக்கலாம். ஆனால் அவர் பெற்ற 'கல்வி' அவர் ஏற்றுக் கொண்ட தொழிலுக்குப் பயன்படுவதில்லை. அவர் காண்ட்ராக்டர்களை அமர்த்துகிற வேலையைச் செய்து கொண்டிருப்பார். களத்தில் வேலை செய்வது அந்த காண்ட்ராக்டர் வேலைக்கு அம்ர்த்தும் கூலித் தொழிலாளர்கள் தாம்.
இந்த இடத்தில் தான் பெற்ற கல்வி நடைமுறையில் எப்படிச் செய்ல்படுகிறது என்பதை யோசிக்க வேண்டும்.
அதனால் தான் எந்தத் துறையிலும் கல்வி பெறுதல் என்பது அதற்கான நடைமுறை வேலைகளுக்கு உபயோகப்படாமலேயே போய்விடுகிறது.
அதனால் தான் ஜப்பான் அடைந்த எழுச்சியெல்லாம் இங்கு பேசிப் பயனிலலை. கல்வி பெற்றவர்கள் என்றைக்கு களத்தில் இறங்குகிறார்களோ ஜப்பானின் நடந்தது போல் அடிமட்ட ஊழியர்களோடு ஒன்றரக் கலந்து களப்பணி ஆற்றுகிறார்களோ அப்பொழுது தான் இந்த நாடு உருப்படும்.
இது தனக்கு கீழுள்ளவனை வேலை வாங்க கற்றுக் கொடுக்கிற கல்வி. தனக்குக் கீழ் உள்ளவனுக்குச் சொல்லிக் கொடுத்து தோழமையுடன் எடுத்துக் கொண்ட செயற்கரிய செயலை நிறைவேற்றுவதற்கான கல்வி இல்லை.
கல்வி பெறாத அடிமட்ட வேலை செய்கிறவர்களை விட, வேலை செய்கிறவர்களை கண்காணிப்பதற்கும், வேலை வாங்குவதற்கும் கல்வி பெற்ற அதிகம் பேர் இருக்கும் நாடு இது.
கல்வியே தேவைப்படாதவர்கள் களப்பணி ஆற்றுகிறார்கள்; கல்வி பெற்றார்கள் அவர்களைக் கண்காணிக்கிறார்கள். களப்பணி ஆற்றுகிறவர்களை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள்.
என்ன கல்வி சார் இது? எதற்கு உபயோகப்படுகிறது சார் இந்தக் கல்வி?..
சொல்லுங்கள்.
எல்லோருக்கும் கல்வி வேண்டும் என்று தான் நான் சொன்கிறேனே தவிர கல்வி பெற்றபின் அது என்ன பயன்பாட்டுக்கு உதவுகிறது என்று சொல்லவே இல்லையே என்று சொல்லிவிடாதீர்கள்.
முதலில் அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறியதை முழுமையாக ஏற்கிறேன். எவ்வளவுதான் பணத்தைக் கட்டி தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தாலும் தரமான கல்வி கிடைக்கின்றதா? அதுதான் இங்கு பிரச்சனை!
ReplyDeleteஇன்று கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது.
~பிற்படுத்தப் பட்டவர்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துக்கு விதை தூவப்பட்டதும் பலரும் அறிந்ததே. நாடு சுதந்திரம் அடைந்ததும் பிற்பட்டோருக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு கல்வியிலும் உத்தியோகத்திலும் தேவை என்று உணரப்பட்டு 25% இட ஒதுக்கீடு 25 ஆண்டுகளுக்கு என்று நிர்ணயித்தார்கள். ஆனால் 25 ஆண்டுகளில் பெரிதான முன்னேற்றம் ஏதும் இருக்கவில்ல என்று அறிந்து அதிக ஒதுக்கீட்டுடன் இன்னும் தொடரப் படுகிறது இந்த இட ஒதுக்கீடு சரியான முறையில் பயன் படுத்தப்பட்டிருக்கிறதா~
சரியாகச் சொன்னீர்கள். இன்று இடஒதுக்கீடு என்பது சரியான முறையில் பயன்படுத்தப் படவில்லை. ஆனால் இந்த இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட மக்கள் பலரும் பயனடைந்துள்ளனர் என்பதை நாம் மறக்க முடியாது.
சில காலங்களுக்கு முன்னர் அனைத்து வங்கிகளிலும் பிராமணர்களே மேலாளர்களாக இருப்பர். ஆனால் இன்று அனைத்து சமயங்களைச் சார்ந்தவரும், மேல் சாதி கீழ் சாதி என்ற பாகுபாடில்லாமல் தகுதியுடைவர்களுக்கு வாய்ப்பு என்ற நிலை உருவாகியுள்ளது. இன்னும் கிராமப்புறங்களில் சாதிக் கொடுமை நின்றபாடில்லை. அவர்களை மேல்நிலைக்கு கொண்டுவர நிச்சயம் இந்த இடஒதுக்கீடு அவசியம், அதேநேரத்தில் இடஒதுக்கீடு சரியாகப் பயன்படுத்தப் படுகிறாதா என்பது கேள்விக்குறியே! இதையே ஆதாயமாகக் கொண்டு தவறு செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இடஒதுக்கீட்டை தடுக்க வேண்டும் என்பதை நானும் ஆமோதிக்கிறேன், ஆனால் செயல்படுத்த இன்னும் சில வருடங்களாகும். இச்சமூகத்தில் சாதியினால் வரும் ஏற்றத்தாழ்வு மறையும் வரையில் இந்த இடஒதுக்கீடு மிகவும் அவசியம்.
முதலில் அனைவருக்கும் கல்வி கிடைக்கப் பெற வேண்டும். அந்நிலை உருவானால் இங்குள்ள மக்களின் பகுத்தறிவு வளரும், சாதி மத பேதம் ஒழிந்து, அனைவரும் சமம் என்ற நிலை உருவாகும். அந்நாளே இந்த இடஒதுக்கீடு ஒழியும்.
இந்த பதிவில் கருத்தை தட்டச்சு
ReplyDeleteசெய்ய கைகள் முன் வரவில்லை ஐயா...
நான் கல்வி கற்க வேண்டிய
காலங்களில் பள்ளிக்கூடம் செல்வதை
விட்டு வேலைக்கு சென்றதால்.....
ஆனாலும் எல்லோருக்கும் கல்வி ஒன்றே
இன்றைய மாணவர்களுக்கு சமமாக
கல்வி கிடைக்க வேண்டும்....
ReplyDelete‘அடிப்படையில் இப்போது இருக்கும் கல்வி நிலை மாற வேண்டும் . மாற்ற வேண்டும் இனி ஒரு விதி செய்வோம் உயர்வு தாழ்வு எண்ணங்களைப் போக்க சீரான சமகல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப் படவேண்டும்.’ என்ற உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
என்றைக்கு மக்கள் ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது என்ற மாயையை விட்டு விலகுகிறார்களோ அன்றுதான் நல் வழி பிறக்கும் என நினைக்கிறேன்.
ReplyDelete@ ஸ்ரீராம்
எந்த ஒரு பிரச்னைக்கும் மனசுக்குள்ளேயே ஒரு தீர்வு கண்டு பிரச்னை முடிந்து போன திருப்தியில் இருப்பதில் பழனி கந்தசாமி ஸார் போல என்று சொல்ல வந்தேன்!/நான் எழுதி இருப்பது முடிகிற பிரச்சனைபோல் தெரியவில்லை. நான் என்னதான் எழுதினாலும் அதன் ஜிஸ்ட் வாசகர்களுக்குப் போய் சேருவதில்லை. ஒவ்வொருவரும் அவர் மனதுக்குத் தோன்றியது போல் நினைத்துக் கொள்கிறார்கள். இதை நீக்கவே பதிவுகளைச் சுருக்கமாகக் கூறு கிறேன் தமிழ் வலை உலகின் bane இது என்று நினைக்கிறேன்
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
வாருங்கள் . உயர்வு தாழ்வுகள் பள்ளியில் இல்லை. அவர்கள் போதிப்பதிலும் இல்லை. நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று அதற்கு மன மாற்றம் தேவை அதற்கான சூழ்நிலை தேவை. இவற்றை ஓரளவு கிடைக்கச் செய்யும் விதமே நான் பகிர்ந்திருப்பதுவருகைக்கு நன்றி
ReplyDelete@ ஜீவி
மெக்காலே கல்வி முறை பற்றி நிறையவே பேசப்படுகிறது அதுபற்றிய புரிதல் இன்னும் தேவை என்று படுகிறது THOMAS BABINGTON MACKAULAY என்பவர் லார்ட் பெண்டிங் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது இந்தியாவில் கல்வி முறையை அமுல்படுத்த நியமிக்கப்பட்டவர் இவரது ஆலோசனைகளை முழுவதும் ஏற்றுக் கொண்டார் லார்ட் பெண்டிங்.
அவர்களது அலுவலகப் பணிகளுக்கு குமாஸ்தாக்கள் தேவைப்பட மெகாலே கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம் என்று எழுதி இருக்கிறேன் மெக்காலே ஆங்கிலக் கல்வியை அறிமுகப் படுத்தினார். அதனால் அந்த மொழியைக் கற்ற இந்தியர்கள் அப்போதைய ஆங்கில அரசுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக மட்டுமல்லாமல் சிந்தனை ரீதியிலான அடிமைகளையும் உருவாக்க முடியும் என்றார் அவருடைய மொழியில் "We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste" ஆனால் அது மட்டுமே அவருடைய சிந்தனை என்று கூறுவதும் தவறாகும் "In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them, that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population. "
அவருடைய கூற்றுப் படி அந்தக் காலத்தில் கல்வி என்பது பெரும்பாலும் மத போதகமாகவே இருந்தது அது சம்ஸ்கிருதத்திலும் அராபிய மற்றும் பெர்சிய மொழிகளில் மட்டுமே இருந்தது. அவரது கணிப்புப் படி 15-ம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் கிரேக்கமொழியின் வளர்ச்சி இருக்கவில்லை. ஆனால் ஆங்கிலம் பிறமொழிகளில் இருந்த நல்லவற்றை தன்னகத்தே ஏற்றுக் கொண்டது. அதேபோல் இந்தியாவிலும் ஆங்கிலத்தை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் இந்திய மொழிகள் பயன் அடையக் கூடும்
ஆக மெக்காலே ஆங்கிலக் கல்வியை அமுல் படுத்துவதன் நோக்கம் ஒரு வழியில் இந்தியர்கள் உலகத்தின் செல்வங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவியாய் இருந்தது
ஆனால் என்ன நேர்ந்தது என்றால் ஆங்கிலக்கல்வியை அக்காலத்திய மேட்டுக்குடி மக்களே பயில முடிந்து ஆண்டை அடிமை மனோபாவம் தொடர வழி செய்தது.மெக்காலேயின் ஆங்கிலக் கல்வி இந்திய மக்களின் கண்களைத்திறந்து சுதந்திரத்துக்கும் அடிகோலியது. மெக்காலேயின் கல்வி முறை வந்திருக்காவிட்டால் அந்நாளைய வழக்கம் தொடர்ந்து இருந்து ஹிந்து முஸ்லிம்கள் தங்கள் தங்கள் மதங்களைப பரப்புவதில் நாடு ஒன்றாய் சேர்ந்திருக்கும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்
ஆக மக்காலேயின் கல்விமுறை நம் நாட்டில் நிலவி வந்த ஆண்டை அடிமை நிலையை perpetuate செய்ய உதவியது அவர் விரும்பியது போல் அவர்களால் ஒரு வகுப்பை ஏற்படுத்த முடிந்தது A class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste" அதில் வெற்றி கண்டார் அதன் பலனை இன்றும் காண்கிறோம்
கல்வி பெற்றபின் அது என்ன பயன்பாட்டுக்கு உதவுகிறது என்று சொல்லவே இல்லையே என்று சொல்லிவிடாதீர்கள்.அதையும் சொல்லி விடுகிறேன் தற்போதையக் கல்வி முறை உத்தியோகத்தை குறி வைத்தே பணம் சம்பாதிப்பதைக் குறி வைத்தே நிலவிவரும் ஏற்ற தாழ்வுகளை சமன் செய்ய இயலாமல் இருப்பதைக் குறி வைத்தே இருக்கிறது என் மனதில் நான் தெளிவாகவே இருக்கிறேன் நமக்கு வேண்டியது நம்மை ஆள ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரியே ஏன் என்றால் அந்த மொழிதான் நமக்குத் தெரியும் வருகைக்கும் என் கருத்துக்களை இன்னும் விரிவாக எடுத்துரைக்கவும் வைத்த பின்னூட்டத்துக்காகவும் நன்றி சார்
ReplyDelete@ அருள் மொழி வர்மன்
/ஆனால் இந்த இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட மக்கள் பலரும் பயனடைந்துள்ளனர் என்பதை நாம் மறக்க முடியாது./ கூடவே இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதன் பலன் பரவலாகச் செய்ய இவர்கள் உதவுவதில்லை என்றும் கூறி இருக்கிறேன் இட ஒதுக்கீடு என்பது சாதியின் அடிப்படையில் நிகழ்ந்தால் சாதிகளை ஒழிக்கவே முடியாது இந்த சாதி பேதம் மறையும் வகையில் இருக்கும் நான் சொன்ன இலவசக் கல்வி இலவச உணவு இலவசச் சீருடை என்று அனித்துப்பிரிவினருக்கும் கட்டாயப்படுத்தப்பட்டால் இதுவே நான் சொல்லி உள்ள தீர்வு. நடைமுறைப்படுத்த பல தடைக்கறள் இருக்கலாம் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ அஜய் சுனில்கர் ஜோசப்
உங்களுக்கு என்று ஒரு கருத்து இருக்கும் அல்லவா அதைக் கூற அதிகம் படித்திருக்கத் தேவை இல்லை. மேலும் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல படிக்காதவர்கள் அறிவற்றவர்களும் அல்லவருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ வே நடன சபாபதி
ஆங்கிலவழிக்கல்வி வேண்டுமானால்தேவை இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஆங்கிலக் கல்வி ஒரு வரமே வருகைக்கு நன்றி ஐயா
//தற்போதையக் கல்வி முறை உத்தியோகத்தை குறி வைத்தே பணம் சம்பாதிப்பதைக் குறி வைத்தே நிலவிவரும் ஏற்ற தாழ்வுகளை சமன் செய்ய இயலாமல் இருப்பதைக் குறி வைத்தே இருக்கிறது என் மனதில் நான் தெளிவாகவே இருக்கிறேன் //
ReplyDeleteஇப்பொழுது தெளிவாகச் சொல்லியிருப்பதற்கு நன்றி.
ஆங்கில கல்வியின் அருமைகளை அறிவேன். இருப்பினும் சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்குப் பின் என்று ஆங்கிலக் கல்வியை வைத்துக் கொண்டே மனவெளியில் சில சீர்திருத்தங்களைச் செய்யத் தவறி விட்டோம். மீண்டும் மீண்டும் ஆங்கிலக் கல்வியின் அடிப்படையிலேயே எல்லாம் என்று வரும் பொழுது பிரதேச மொழிகளின் வளர்ச்சி மட்டுப்படுத்தப் படுகிறது.
ஃப்ராங்பட் விமான நிலையத்தில் எனக்குத் தெரிந்திருந்த ஆங்கில அறிவு ஒரு கோப்பை தேநீர் வாங்கிச் சாப்பிடக் கூட உபயோகமாகவில்லை. கடைசியில் ஊமை மாதிரியான மொழியற்ற சைகை தான் உதவியது.
ஆங்கில மொழி கொடுத்த அறிவினாலேயோ அல்லது மோகத்தினாலேயோ நாம் சிந்திக்கவும் செயல்படவும் நம் இலக்கியங்களைப் படைக்கவும் முயற்சிப்பது தான் நம் மொழிக்கும் பண்பாட்டிற்கும் வந்து சேர்ந்திருக்கிற ஆபத்து. இதை விளக்குவதற்காகத்தான் 'அழகிஉ தமிழ் மொழி இது' தொடரை எழுத ஆரம்பித்தேன்.
திரு. வெ. நடன சபாபதியின் கருத்து கூட இந்த அடிப்படையில் தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
ReplyDelete@ ஜீவி
எனக்கு வரும் பின்னூட்டங்கள் நான் எடுத்துக் கொண்ட சபொஜெக்டிலிருந்து தடம் மாறிப் போகிறது என்றே தோன்றுகிறது/மக்காலேயின் கல்விமுறை நம் நாட்டில் நிலவி வந்த ஆண்டை அடிமை நிலையை perpetuate செய்ய உதவியது அவர் விரும்பியது போல் அவர்களால் ஒரு வகுப்பை ஏற்படுத்த முடிந்தது A class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste" அதில் வெற்றி கண்டார் அதன் பலனை இன்றும் காண்கிறோம்/ நாட்டில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை சீர்செய்ய உதவும் கல்வி முறையை நான் பகிர்ந்திருக்கிறேன் இப்போது நிலவி வரும்கல்வி முறைகளால் இன்னும் பல தீங்குகள் நிகழலாம் என்பதைல் எனக்கும் உடன் பாடே ஆங்கிலம் எல்லா இடங்களுக்கும் உதவும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆங்கில அறிவால் பல நன்மைகளும் நிகழ்ந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. மீள் வருகைக்கு நன்றி சார்
தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
ReplyDeleteவந்தச்பிறகாவது பதிவுக்குக் கருத்துரை இட்டிருக்கலாமே ஆசிரியரின் கருத்துக்கு மதிப்பு உண்டு அல்லவா? நன்றி ஐயா
தீர முடியாத பிரச்சினைகளில் ஒன்றாக கல்வியைக் கொண்டுவந்துவிட்டுள்ளனர். இதற்கு அரசியல்வாதிகளும் ஒரு காரணம். மாற்றம் ஏற்படுத்தப்படாவிடில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
ReplyDeleteஅருமையான பகிர்வு
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
ReplyDeleteதீர முடியாத பிரச்சனை கல்வி அல்ல. கல்வி கொண்டு தீராமல் நிற்கும் ஏற்ற தாழ்வுகளைத் தீர்க்கலாம் என்றுதான் சொல்லி இருக்கிறேன் வருகைஒக்கு நன்றி ஐயா
ReplyDelete@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்