பரீட்சித்து மஹாராஜா.
-----------------------------------
தேர்தல் வாக்குறுதிகளையும் கட்சிகளின் சொரூபத்தையும் காண வேண்டி எழுதிய சீரியஸ் பதிவுகள் தற்சமயத்துக்குப் போதும் என்று தோன்றுகிறது இனி ஒரு கதை.
தோண்டத் தோண்ட குறையாத கதை ஊற்றுக்களைக் கொண்டது மஹாபாரதம் மஹாபாரதக் கதைகள் என்னும் தலைப்பில் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் இப்போது பரீட்சித்து மஹாராஜாவின் கதை
இந்தக்
கதையை நான் தேர்ந்தெடுக்கக் காரண மானவள்
என் மனைவி
அவ்வப்போது
கோவிலில் பாகவத சப்தாகம் நடக்கிறது என்று
கூறிக் கொண்டு கோவிலுக்குப் போவாள் எனக்கோ கோவிலில் சப்தாகமாக சொல்லும்
பாகவதத்தின் கதைகளைத் தெரிந்து கொள்ள ஆசை. நான் மஹாபாரதக் கதைகளை நிறையவே
கேட்டிருக்கிறேன் படித்திருக்கிறேன்.
ஆனால் பாகவதம் படித்ததில்லை. என் மனைவியிடம் அவள் அப்படிக் கேட்கும் பாகவதக்
கதைகளில் எனக்குத் தெரியாதது இருக்கிறதா
என்று சற்றே ஆணவத்துடன் கேட்பேன்
பாவம் அவள் முக்காலும் தெரிந்த கதைகள் தான் என்பாள் தெரிந்த கதைகளை மீண்டும்
மீண்டும் கேட்கவைப்பது என்ன என்று எனக்குப் புரியத் தொடங்க நானும் பாகவதக் கதைகளை
ஆங்காங்கே புரட்டிப் பார்த்தேன் அப்போது
எனக்குத் தோன்றியதுதான் மீண்டும்
மஹாபாரதக் கதைகள் பாகவதத்தில் வரும் கதைகள் சிலவற்றை அவை பாகவதத்தில்
இருக்கின்றன என்று தெரியாமலேயே
பதிவிட்டிருக்கிறேன்
எல்லாஅவதாரக்
கதைகளும் பாகவதத்தில் சொல்லப் படுகின்றன நானும் எல்லா அவதாரக் கதைகளையும்
பதிவிட்டிருக்கிறேன் இது தவிர அசுவத்தாமன் கதையும் ஜராசந்தன் கதையும் ஜயத்ரதன் கதையும்
பதிவிட்டிருக்கிறேன் பாகவதத்தில் இரண்டாம் பாகம் முழுவதும் கண்ணனின் கதைகளே அதையும் வெகு சுருக்கமாகக் கிருஷ்ணாயணம்
என்னும் தலைப்பில் எழுதி உள்ளேன் கண்ணனின் கதையில் கம்சனை வதைக்கும் வரையே பதிவு .
தெரிந்தோ தெரியாமலோ அதற்கு மேலும் சொல்லிச் செல்ல ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறேன் இத்தனை சுய
புராணங்களும் தேவையா என்று என் மனம் கேட்கிறது
வாசிக்காதவர்களுக்கு வாசிக்க இது ஒரு அரிய வாய்ப்பாகுமே அல்லவா(பார்க்க மஹாபாரதக் கதைகள் -அசுவத்தாமன்
ஜராசந்தன்
அவதாரக் கதைகள் மச்சாவதாரம் மீனாக ஆமையாக பன்றியாக நரசிம்ஹமாக வாமனனாக ராமனாக பரசுராமராக
கிருஷ்ணனாக )
அவதாரக் கதைகள் மச்சாவதாரம் மீனாக ஆமையாக பன்றியாக நரசிம்ஹமாக வாமனனாக ராமனாக பரசுராமராக
கிருஷ்ணனாக )
இன்னும் ஏழே நாட்களில் முடியப் போகிறது பரீட்சித்து
மஹாராஜாவின் காலம் .பிறக்கும் போதே இம்மாதிரியான ஒரு இக்கட்டான நிலையில் இருந்து
மீண்டவர்அந்த கண்டத்தைக் கண்ணன் துணையால்
கடந்தார் இம்முறை அது சாத்தியமல்ல. விதி
விட்டபடி என்று சாவை எதிர்நோக்கத் துணிகிறார்
அதற்கு
முன் தன் மகன் ஜனமேஜயனுக்கு
முடிசூட்டுகிறார் அதன் பின் அனைத்தையும் துறந்து அரண்மனையை விட்டுப்
புறப்பட்டு கங்கைக் கரையை அடைந்தார் தர்ப்பைப்புல்லில் அமர்ந்து அன்னம் நீர்
இல்லாமல் ஏழு நாட்களையும் வடக்கு நோக்கி இருந்துபகவானை நினைத்து உயிர் துறக்க முடிவு
செய்தார் ஏராளமான முனிவர்களும் ரிஷிகளும் பரீட்சித்துவைக் காண வந்தனர் அவர்களிடம் அவர் தான் நல்ல நிலையில் மோட்சமடைய
என்னவழி என்று கேட்கிறார் அப்போது அங்கே சுகர் மகரிஷி தோன்றினார் அவரிடம் இந்த ஏழுநாட்களையும் தான் எவ்வாறு கழிக்க
வேண்டும் என்று ராஜா வினவினார் மனிதனின் வாழ்நாட்களை எப்படியும் கழித்திருந்தாலும் அந்திம
காலத்தில் பகவானை நினைத்து அவனது பாதகமலங்களில் சரணாகதி அடைந்தால் முக்தி கிடைக்கும்
என்று கூறுகிறார் பரீட்சித்துவும் அதை உணர்ந்து பகவானின் திரு நாமங்களையும்
திருவிளையாடல்களையும் எடுத்துரைக்கும்
பாகவதத்தை தனக்குக் கூறுமாறு வேண்டுகிறார் பரீட்சித்துவின் கோரிக்கைக்கு இணங்கி சுகர்
பாகவதக் கதைகளை சொல்லத் துவங்கினார்
அதன் நீட்சியே இப்போதும் சப்தாகமாக பாகவதம் சொல்லப்
படுகிறது அதைக் கேட்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்னும் நம்பிக்கை
அஸ்தினாபுரத்தில்
தருமன் எவ்விதக் குறையும் இன்றி அரச பரிபாலனம் செய்து வந்தான் கண்ணனால் கருவிலேயே
காப்பாற்றப் பட்ட அபிமன்யுவின் மனைி உத்தரையின் கர்ப்பம்
நல்ல முறையில் வளர்ந்து அவள் பத்தாம் மாதத்தில் ஒரு அழகிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள்
பகவான் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டதால் அக்குழந்தைக்கு விஷ்ணு ராதன் என்னும் பெயர்
சூட்டப்பட்டது இன்னொரு கதையும் உண்டு கருவில் இறந்த குழந்தையை கிருஷ்ணர் நீர் தெளித்து உயிர்ப்பித்ததாகவும்
கருவிலேயே தன்னை உயிர்ப்பித்தவர் இவர்தானா என்று பரீட்சித்துப்பார்த்ததால்
பரீட்சித்து என்னும் பெயர் வந்ததாகவும் கூறுவார்கள் ( பார்க்க மஹாபாரதக் கதைகள் –அசுவத்தாமன்
)
குருக்ஷேத்திரப்
போரால் மனம் வருந்தி தீர்த்த யாத்திரை மேற்கொண்ட விதுரர் அஸ்தினாபுரம் திரும்பினார். விதுரருக்கு யாதவ
குலமே கண்ணன் உட்பட அழிந்தது தெரிந்திருந்தது/ ஆனால் அவர் யாரிடமும் அது குறித்துப் பேசவில்லை துவாரகைக்கு கண்ணனைத்
தேடிச் சென்ற அர்ச்சுனன்திரும்பி வந்தபோதுதான்
பாண்டவர்களுக்குச் சேதி தெரிந்தது இதன் நடுவே திருத ராஷ்டிரரும் காந்தாரியும் துறவு மேற்கொண்டு யாரிடமும் சொல்லாது சென்று விட்டனர் இவற்றைஎல்லாம் கண்ட தருமர்
தன் பேரன் பரீட்சித்துவுக்குப் பட்டாபிஷேகம்
செய்வித்துஅஸ்தினாபுரத்துக்கு மன்னனாக்கினார் அதன் பின் பாண்டவர்கள்
துறவுகோலம் பூண்டு த்ரௌபதியுடன் வடக்கு
நோக்கிச் சென்றனர்/ ஒவ்வொருவராக மரணம் எய்தி
பூவுலகைப் பிரிந்தனர்
பரீட்சித்து
விராட மன்னனின் மகள் இராவதியை மணந்துஅவர்களுக்கு ஜனமேஜயன் முதலான நான்கு மக்கள்
பிறந்தனர் . பரீட்சித்து செவ்வனே அரச பரிபாலனம்
செய்து வந்தார் குடி மக்கள் நலமாக
வாழ்ந்தனர். பரீட்சித்துவின் வாழ்க்கையிலும் விதி விளையாடி அவர் மனதில் ஒரு வேண்டாத கோபத்தை ஏற்படுத்தி
ஒரு மோசமான சாபத்தைப் பெற்றுத்தந்தது
அடர்ந்த
காட்டுக்குள் வேட்டையாடி தன் பரிவாரங்களைப் பிரிந்து வெகுதூரம் வந்திருந்தார்
பரீட்சித்து பசியாலும் தாகத்தாலும்
சோர்ந்து போன ராஜா தூரத்தே ஒரு ஆசிரமம்
இருப்பதைக்கண்டு மகிழ்ந்தார் அந்த ஆசிரமத்தில் ஆங்கிரஸ் என்னும் முனிவரும்
அவர் மகன் சிருங்கியும் வசித்து வந்தார்கள் பரீட்சித்து சென்ற சமயம் ஆசிரம
வளாகத்தில் எவருமே தென்படவில்லை. வாசலில்
நின்றபடியே பசிக்கும் தாகத்துக்கும்
ஏதாவது கிடைக்குமா என்று குரல்
கொடுத்தார் யாரும் பதில் தரவில்லை.
உள்ளே நுழைந்த ராஜா அறையின் நடுவே ஒரு முனிவர் நிஷ்டையில் இருப்பதைக் கண்டார் இவருடைய குரலுக்கு பதில் சொல்லாமல் இருந்ததைக்
கண்ட பரீட்சித்துவுக்கு கோபம் வந்தது
மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தும் எந்த பதிலும் வராததால் மிகவும்
சினங்கொண்ட ராஜா வெளியே ஒரு செத்த பாம்பு
இருப்பதைக் கண்டார் கோபத்தில் என்ன
செய்கிறோம் என்று தெரியாமல் அந்த செத்த பாம்பை முனிவரின் கழுத்தில் மாலையாகப்
போட்டுவிட்டுச் சென்றார்
மன்னன்
பரீட்சித்து சென்ற சிறிது நேரத்தில் முனிவரின் மகன் சிருங்கி அங்கு வந்து தந்தை
முனிவரின் கழுத்தில் மாலையாக செத்த பாம்பு இருப்பது கண்டு மிகவும் கோபம் அடைந்தார்
தன் தவ வலிமையால் இதைச் செய்தவர் பரீட்சித்து மஹாராஜாதான் என்று அறிந்து
அவருக்குச் சரியான தண்டனை தர வேண்டும் என்று
எண்ணி இன்னும் ஏழுநாட்களில் தட்சகன் எனும் பாம்பரசன் தீண்டி பரீட்சித்து
மரிக்கச் சாபமிட்டார்
தியானத்திலிருந்து மீண்ட ஆங்கிர்ஸ் முனிவர் தன்
மகனின் செயலுக்கு வருந்தினார் என்றாலும் இட்ட சாபம் விதியின் செயல் என்று
இருந்துவிட்டார்
அரண்மனை திரும்பிய பரீட்சித்து மன்னர் தனது
செயலுக்கு வருந்தினார் முனிவரின் மகனது சாபம் பற்றியும் தெரிந்துகொண்ட பரீட்சித்து
தனது மகன் ஜனமேஜயனுக்கு முடிசூட்டி தன் சாவை எதிர் நோக்கத் தயாரானார் மரணம்
தவிர்க்க முடியாதது என்று தெரிந்து கொண்ட
பரீட்சித்துபோகும் வழிக்குப்
புண்ணியம் தேடும் முயற்சியாக கடைசி
ஏழுநாட்களில் சுகர் முனிவர் சொல்லப் பகவானின்
லீலைகளை பாகவதம் கேட்டுத் தெரிந்து கொண்டார் இந்த
பாகவதப் புராணத்தைக் கேட்கும் பாக்கியம் கிடைத்ததால் பகவானின் தியானத்தில் ஆழ்ந்த
பரீட்சித்து தட்சகன் தீண்டும் வேதனையைக் கூட அறியாமல் முக்தி அடைந்தார்
.
.
.
அருமையான கதை பகிர்வு. நன்றி.
ReplyDeleteஅறிந்த கதை. மீண்டும் படித்தேன்.
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteஅறிந்த விஷயம் தான்..
ReplyDeleteகதை என்று எடுத்துக் கொண்டாலும் -
இப்படிப்பட்ட மாந்தர்களையும் இந்த மண் பார்த்து தானே இருக்கின்றது!..
இதையெல்லாம் சிறிதும் சிந்தையில் கொள்ளாமல் -
கடைசி மூச்சு வரை எதற்காவது எதையாவது தேடி அலைந்து கொண்டிருக்கும் ஆன்மாக்கள்..
என்ன செய்யலாம் - இதற்கு?..
நம்மவர்கள் நம்மை நெறிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்று இவ்வாறான இலக்கியப்பகிர்வு. அதனைத் தாங்கள் பதிந்துள்ள விதம் அருமை. நன்றி.
ReplyDeleteபழைய... முடிந்து போன கதை அய்யா...
ReplyDeleteஅருமையான அறியாத கதை ஐயா.இப்படியான கதைகள் தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteகதை நன்றக இருக்கிறது உங்கள் நடையில் !
ReplyDeleteஅருமை... அருமை...
ReplyDeleteThis blog is in the style of a Grand Dad telling a story to his Grand child. Your normal style and flow of thoughts are missing. Is this is a second edition of already published blog?
ReplyDeleteI wish you a successful rendering of entire Maha Bharat through blogs. Please do not stop like your earlier venture f "Theivaththin Kural".
Jayakumar
படித்தேன் எனக்கு முதன் முதலாக அறிந்த கதை ஐயா
ReplyDeleteஇணைப்புகளுக்கு பிறகு செல்வேன் நன்றி
ReplyDelete@ கோமதி அரசு
வாருங்கள் மேடம் முதல் வருகைக்கு நன்றி
ReplyDelete@ ஸ்ரீராம்
அறிந்த கதை மீண்டும் படித்தேன் / பெரும்பாலோனவர்கள் கேட்ட கதைதான் நானும் அறிந்த கதைஇது மஹா பாரதத்தையும் பாகவதத்தையும் இணைக்கும் கதை என்பதாலேயே பதிவு. வருகைக்கு நன்றி ஸ்ரீ
@ கரந்தை ஜெயக்குமார்
ReplyDeleteநானல்லவோ நன்றி சொல்ல வேண்டும் உங்கள் வருகைக்கு
@ கரந்தை ஜெயக்குமார்
ReplyDeleteநானல்லவோ நன்றி சொல்ல வேண்டும் உங்கள் வருகைக்கு
ReplyDelete@ துரை செல்வராஜு
பதிவு படித்து ஆதங்கம் கொள்ளலாமா ?வருகைக்கு நன்றி ஐயா
அன்புள்ள G.M.B. அய்யா அவர்களுக்கு வணக்கம். நான் சிறு வயதில் படித்த, ஒரு கதையில், பரீட்சித்து மன்னன், பாம்பு கடிக்கு பயந்து, ஒரு கோட்டை கட்டி வாழ்ந்ததாகவும், அப்படியும் ஒரு பழத்திலிருந்த சிறு புழு போன்ற நாகம் தீண்டி அவன் இறந்து போனதாகவும் படித்து இருக்கிறேன். அந்தக் கதையும், இந்தக் கதையும் வேறு வேறா என்று தெரியவில்லை.
ReplyDelete
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
என்னைப் பொருத்தவரை இதையெல்லாம் கற்பனை மிக்க கதையாகவே எடுத்துக் கொள்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
புராணக்கதைகள் எல்லாமே முடிந்து போன கதைகள் தானே வெகு நாட்களுக்குப் பின் வருகைக்கு நன்றி டிடி
ReplyDelete@ தனிமரம்
எழுதுவது எல்லாம் ஏற்கனவே தெரிந்த கதை என்றே கேட்டுப் பழக்கப்பட்ட எனக்கு உங்கள் பின்னூட்டம் சிறிது தைரியமளிக்கிறது எல்லாப் புராண்க்கதைகள் எல்லாம் எல்லோரும் கேட்டிருக்கத் தேவை யில்லை என்று புரிந்து கொண்டேன் சுட்டிகளில் கொடுத்துள்ள கதைகளும் பாரத பாகவதக் கதைகளே படித்தீர்களா வருகைக்கு நன்றி .
ReplyDelete@ மோகன் ஜி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்
ReplyDelete@ பரிவை சே குமார்
எது அருமை என்று குறிப்பிட்டிருக்கலாமோ வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ jk22384
வருகைக்கு நன்றி சார் பாரத பாகவதக் கதைகளை ஏற்கனவே விதவிதமாக எழுதி இருக்கிறேன் என் நரசிம்மமாக என்னும் கதை குழந்தைகளுக்குச் சொல்வது போல் இருக்க வேண்டும் என்று எழுதியது என் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக எழுத எடுக்கும் முயற்சியே சுட்டிகளில் இருக்கும் பதிவுகளைப் பார்த்தால் தெரியும் பாருங்கள் ஐயா இது மீள்பதிவு அல்ல தெய்வத்தின் குரல் எழுதும் நோக்கம் இன்னும் கைவிடப்படவில்லை. நான் எழுதும் போது என் கருத்துக்களும் கூடவே இருக்கும் . பல ஆன்மீகப்பதிவர்கள் அதை விரும்புவது இல்லை
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
புராணக்கதைகள் பல்வேறு ரூபங்கள் பெற்று நிறையவே பாட பேதத்துடன் இருக்கின்றன எது ஒரிஜினல் கதை என்று தெரிந்து கொள்வது சிரமம் நான் எடுத்தெழுதுவது பாகவதக்கதையைச் சார்ந்தது வருகைக்கு நன்றி ஐயா
ஏற்கெனவே தெரிந்த கதை தான். உங்கள் நடையில் படித்தேன். தெய்வத்தின் குரல் குறித்து உங்கள் கருத்தை தாராளமாகப் பகிரவும். வலை உலகில் ஆன்மிகப் பதிவர்கள் குறைவே.நான் எழுதுவதெல்லாம் பக்திப் பதிவுகள் மட்டுமே. ஆன்மிகம்னா என்னனு எனக்கு இன்னும் புரியவில்லை. :) பக்தியிலும் இன்னமும் கீழேயே தான் இருக்கிறேன். மேம்பட வெகு தூரம் போக வேண்டும். :)
ReplyDeleteதிரு தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னது போல் பரீட்சித்து மகராஜா நீருக்கு நடுவே கோட்டை கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கும்போது நீரில் மிதந்து வந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து முகர்ந்தபோது அதிலிருந்த சிறு பாம்பு ஒன்று கடித்து உயிர்விட்டதாக நானும் படித்திருக்கிறேன். இருப்பினும் இந்த கதையும் சுவரஸ்யமாகத்தான் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteபரீட்சத்து மகாராஜா பெயர்தான் கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர கதை படித்த நினைவு இல்லை. சுவாரசியமாக உள்ளது.
ReplyDeleteடிவியில் ஒளிபரப்பான மகாபாரத்தின் டைட்டில் பாடல் "ஒரு கதைக்குள் பல கதை. பல கதைகளின் ஒரு விதை" என்பது எவ்வளவு உண்மை!
அருமையான கதை!
ReplyDelete@ வே நடனசபாபதி
ReplyDeleteஐயா வருகைக்கு நன்றி இந்தமாதிரி கதையின் நீட்சியெல்லாம் நடக்க இருப்பது நடந்தே தீரும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதைக் கூறு வதற்காக இருக்கலாம் கற்பனைகள் கொடி கட்டிப் பறக்கின்றன.நான் எடுத்தாண்ட கதை பாகவதத்தில் வருவது
ReplyDelete@ டி என் முரளிதரன்
இதையேதான் நான் தோண்டத் தோண்ட ஊறும் கதை ஊற்று மஹாபாரதம் என்றேன் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ எஸ்பி.செந்தில்குமார்
நான் சொன்னதைவிட சுவாரசியமாக திரு தி தமிழ் இளங்கோவும் திரு நடனசபாபதியும் கேட்டிருக்கிறார்கள் வருகைக்கு நன்றி சார்
எத்தனை எத்தனை கதைகள்...... உங்கள் நடையில் படித்து ரசித்தேன்.
ReplyDelete
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
என் நடையில் சுட்டியில் இருக்கும் கதைகளையும் படித்தீர்களா? வெவ்வேறு நடையில் பாகவதக் கதைகள் வருகைக்கு நன்றி சார்
பரீட்சுத்து மகாராஜா என்ற பெயர் தான் கேல்விபட்டிருக்கிறேன்.இப்போது தான் முழுமையாக அறிந்துகொண்டேன். நன்றி. சுட்டிகளில் உள்ளவற்றையும் படிக்க ஆசை. முயல்கிறேன்
ReplyDelete
ReplyDelete@ சிவகுமாரன்
பதிவிட்டது வீண்போகவில்லை வருகைக்கு நன்றி சிவகுமாரா. சுட்டியிலும் அறியாத கதைகள் இருக்கலாம்
விதி வலிது என்றுணர்த்தும் சுவாரசியமான பதிவு/கதை.
ReplyDeleteகேள்விப்பட்ட பெயர் ஆனால் அறியாத விஷயம். பகிர்வுக்கு நன்றி ஐயா!
ReplyDelete@ அருள்மொழிவர்மன்
அழகிய சரித்திரப் பெயர் கொண்டவரே வருக. நம் புராணக் கதைகளின் பெயர்கள் கேள்விப்பட்டு அறியாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. அதனாலேயே சிறிய அளவில் எல்லோரும் அறிய என் சிறிய முயற்சி சுட்டியில் இருக்கும் கதைகளில் பல அப்படி உள்ளவையே படித்துப் பாருங்கள் நன்றி
எனது அம்மாவும் இவ்வாறான பல புராண இதிகாச கதைகள் சொல்லி இருக்கிறார்கள்.அதில் பரீத்சித்து ராஜாவுக்கு பாம்பினால் இறப்புநிகழும் என்பது தெரிந்தவுடன் அவர் கடலுக்கு நடுவில் கோட்டை கட்டிவாழ்ந்தார் தன்னைப் பாம்பினிடம் இருந்து பாதுகாக்க.அவரது இறப்பு நாளில் அவர் கடலில் ஒரு அழகிய எலுமிச்சம் கனி மிதந்து வந்ததைக்கண்டு அதை எடுத்து முகர்ந்த போது அக்கனி பாம்பாக மாறி பரீச்சித்துவை கொன்றதாகவும் சொல்லி நான் கேட்டுள்ளேன்.இருப்பினும் இக்கதையும் சிறப்பாகவே உள்ளது.
ReplyDelete