Thursday, July 21, 2016

சில பகிர்வுகள்


                                            சில பகிர்வுகள்
                                            ------------------------
I  இந்தமுறை ஒரு வித்தியாசமான பதிவு.
 எழுதுவதற்கு செய்திகள் இல்லாவிட்டால்தான் என்ன ?பகிர்ந்து கொள்ளச் செய்திகள் இருக்கிறதே எனக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உண்டு. ஆனால்  ஆர்வம் உள்ள அளவு திறமை இல்லை. இந்த நிலையில் வெங்கட் நாகராஜ், ராமலக்ஷ்மி போன்றோர் வெளியிடும் படங்கள் என்னைப் பொறாமைப்பட வைக்கிறது. இதைக் குறைக்க எனக்கு வந்த பல புகைப்படங்களில்  சிலவற்றை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

ஆயிரத்தில் ஒன்றா கோடியில் ஒன்றா

மேகமா தேவதையா
                                
ஆயிரம் தாமரை மொட்டுக்களே 

பனிக்கட்டியில் ஐஸ்  ரோஜா
இத்தனை பெரிய பறவையா மேகங்களின் விளையாட்டு
                       -------------------------------------------------------------
 இந்தமாதம்  பத்தாம் தேதி என் இளைய மகனின் மணநாள். அவன் வீட்டுக்குப் போகும் முன் திருமண பந்தத்தில் இணையப் போகும்  ஒரு ஜோடியைக் காணச் சென்றிருந்தோம்
வருங்கால வரனும் வதுவும் 
திருமண பந்தத்தில் இணையப் போகும் ஜோடி
 மகன் வீட்டில் வலையில் எழுதுவது பற்றிப்பேச்சு வந்தது  எனக்காக என் பேரன் எழுதியது இவனைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்  பாட்டிக்கு  பிறந்தநாள் வாழ்த்து அட்டை கொடுத்தவன்  சிகரம் ஏறும் பேரனின்  இயற்கையை நேசிப்பது பற்றிய கவிதை? ( ஆங்கிலத்தில் )
Protect your nature and then you can say "I LOVE MY NATURE 

    














  


28 comments:

  1. எல்லாப் படங்களும் நன்றாக இருந்தாலும் மேகத்தின் விளையாட்டு மிக அருமை. இயற்கையாக வருவது அல்லவா? புதுசாய்த் திருமணம் செய்து கொள்ளப் போகும் தம்பதிகளுக்கு வாழ்த்துகள். உங்கள் மகனின் திருமண நாளுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. எனக்கும் மேகதேவதைதான் பிடிச்சுருக்கு :-)

    ReplyDelete
  3. மேகப் படங்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன. மகனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இது உங்கள் பேரனே எழுதிய கவிதையா? நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள்! முடிந்தால், தமிழிலும்! படங்கள் அழகாக இருந்தன.

    ReplyDelete
  5. மிக அடக்கமாகச் சொல்லி இருக்கிறீர்கள்
    படங்கள் அப்படி இல்லை
    காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் வகையில்
    அற்புதமாக உள்ளன
    மிகக் குறிப்பாக மேகக் கழுகு

    புதுமணத் தம்பதிகளுக்கும்
    குட்டிக் கவிஞருக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மேகப்பறவை மிகவும் அருமை ஐயா....
    இந்தப்பதிவு இப்பொழுதுதான் டேஷ்போர்டில் வந்தது

    ReplyDelete
  7. படங்கள் அருமை ஐயா அதுவும் 1000 ஒன்று அழகு.

    ReplyDelete
  8. ​//​
    ஆயிரம் தாமரை மொட்டுக்களே
    ​//

    தாமரை அல்ல. அல்லி.

    படங்கள் நீங்கள் எடுத்தவை என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது ஒன்றைத் தவிர பிற படங்கள் தங்களுக்கு வந்தவை என்பது.

    பேரனின் கவிதை பாராட்டும்படி உள்ளது.

    வில்லங்கப் பதிவுகளுக்கு இடையில் இது போன்று Relax please பதிவுகளும் அவசியம்.

    ஜெயக்குமார்


    ReplyDelete
  9. அழகான படங்கள்...


    குட்டி பையனின் கவிதை அருமை...

    ReplyDelete
  10. படங்கள் அழகு...
    திருமண நாள் காண்பவர்களுக்கும்...
    திருமணப் பந்தத்தில் இணையப் போறவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    கவிதை நன்று.

    ReplyDelete

  11. @ கீதா சாம்பசிவம்
    எனக்கு வந்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் வாழ்த்துகளுக்கு நன்றி மேம்

    ReplyDelete

  12. @ துளசி கோபால்
    ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு டேஸ்ட் பின்னூட்டங்களே தெரிவிக்கின்றன வாழ்த்துக்கு நன்றி மேம்

    ReplyDelete

  13. @ ஸ்ரீராம்
    படங்களை எடுத்தவர் யாரோ எனக்கு அனுப்பியவருக்கும் பாராட்டுகள் உரியது நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  14. @ இ பு ஞானப்பிரகாசன்
    இந்த சந்தேகம் வரலாம் என்றுதான் என் பெரன் அவன் கைப்பட எழுதியதைப்பகிர்ந்தேன் இயற்கையை நேசிப்பது பற்றிய அவன்கருத்துகள் என்னைக் கவர்ந்தது. அவனுக்குத் தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது பேசுவதே தமிழில் அல்ல அவன் சிகரம் ஏறும் காணொளி கண்டீர்களா வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  15. @ ரமணி
    படங்கள் எடுத்தவருக்கே எல்லாப் பாராட்டும் இந்த வயதிலேயே கவிதை என்றால் தலைப்பு சுற்றுப்புறமும் இயற்கையும் வருவதாலேயே இதனைப் பகிர்ந்தேன் பாராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete

  16. @ கில்லர்ஜி
    ஒவ்வொருவர் சுவையே வேறுதான் எனக்கு இன்னும் நிறையப் படங்கள் வந்தன. அவற்றில் சிலவையே பகிர்ந்திருக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  17. @ தனிமரம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  18. @ ஜேகே22384
    என் பிற பதிவுகள் வில்லங்கமாகப்படுகிறதா உங்களுக்கு கீதைப் பதிவுகளுக்கும் இடையில் நான் ரிலாக்ஸ் பதிவுகள் எழுதியதுண்டு. அல்லிக்கும் தாமரைக்கும் வித்தியாசம் தெரியாதவன் நான் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  19. @ அநுராதா பிரேம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்

    ReplyDelete

  20. @ பரிவை சே குமார்
    வருகைக்கு நன்றி குமார் கவிதை என் பேரனுடையது

    ReplyDelete
  21. அன்பின் ஐயா..

    தங்கள் பேரன் எழுதியிருக்கும் கவிதை அருமை.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  22. படங்களை ரசித்தேன். படம் எடுத்தவர்களுக்கு பாராட்டுகள். உங்கள் அன்பு பேராண்டிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

  23. @ துரைசெல்வராஜு
    என் பேரனின் கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி சார் முதலில் இயற்கையைக் காபந்து செய் . பின் இயற்கையை நேசிக்கிறேன் என்று உரக்கக் கூறு என்று எழுதியதே என்னை கவர்ந்தது மீண்டும் நன்றி

    ReplyDelete
  24. @ தி தமிழ் இளங்கோ
    வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  25. தங்களின் புகைப்பட ரசனையை ரசித்தோம். பேரனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

  26. @ Dr. B.Jambulingam
    A thing of beauty is a joy for ever Thanks for the complements

    ReplyDelete
  27. மேக தேவதை படம் வெகு அழகு.......

    என்னைப் பற்றியும் இப்பகிர்வில் சொல்லி இருப்பதற்கு நன்றி.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. உங்களைப் போல் படம் எடுக்கமுடியாவிட்டாலும் நல்ல படங்களைப் பகிர்ந்ததில் மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி

    ReplyDelete