Tuesday, August 9, 2016

பிரிவின் கொடுமை


                                                          பிரிவின் கொடுமை
                                                          ---------------------------
1965-ம் ஆண்டு நான் சென்னையில் பணியில் இருந்தேன் என் மூத்த மகனின்  பிரசவத்துக்கு  என் மனைவியை ஊருக்கு அனுப்பி இருந்த நேரம் அவளது பிரிவின் வாட்டத்தை இரவு ஷிஃப்ட் முடிந்து வீட்டுக்கு வரும்போது எழும் என்  எண்ணங்களை எழுதி வைத்திருந்தேன்  அது இப்போது  மீள் பதிவாக

 கனவில்தான்   நினைவில்தான்   உன்னைத்தான்
                    எண்ணித்தான்  உருகுவேனோ  |
        இல்லைத்தான்   உன்னைத்தான்  நேரில்தான்
                     கண்டுத்தான்   பேசுவேனோ  |
        இருகண்ணைத்தான்  காட்டித்தான்  என்னைத்தான்
                      கவரத்தான்   ஹுஹும்  நீயும்
        உன்மனசில்தான்  எண்ணித்தான்  என்றுதான்
                       முடிவுந்தான் செய்தாய்  கண்ணே..!



  ஓடிக்களைத்து ஊணுக்கலைந்து தேடிச்சோறு நிதம் தின்று
  வாடி அலையும்நிந்தன் கொழுநன் பாடிப்பகரும் அல்லைக்கேளடி


ஊரடங்கி பேயாடும் நேரம் போரடித்து வளைய வரும் வேலை
சாகடித்து கொல்லாமல் கொல்லும்--உன் பிரிவு  
நோகடிக்குதே எண்ண எண்ண ! 

 
வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !

 
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை  ட் இல்லை சோறில்லை !

 
மாறுபட்ட சுழ்நிலையில்  வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி !




28 comments:

  1. பிரிவு என்பது மிகவும் கொடுமை,,,/

    ReplyDelete
  2. தங்களின் எழுத்து அப்பொழுதே மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா. நினைவுகூர்ந்து எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. கவிதைகள் நன்றாக இருக்கின்றன. இளவயது... அந்தப் பிரிவுத் துயர் நன்றாகவே வாட்டியிருக்கும்!

    ReplyDelete
  4. பழமையில் மூழ்கிய கவிதை அருமை நினைவுகள் நன்று ஐயா.

    ReplyDelete
  5. //G.M Balasubramaniamதிங்கள், 8 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 4:16:00 IST

    காதல் அனுபவம் இல்லாதவரின் வேதாந்தம்
    பதிலளி
    பதில்கள்

    ப.கந்தசாமிதிங்கள், 8 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 8:07:00 IST

    அனுபவம் பேசுகிறது.//

    அனுபவம் பேசவில்லை. கவிதையாக பொங்குகிறது. கவிதைகள் சிறப்பாக உள்ளன.
    ​ஐயா கந்தசாமி அவர்கள் மனைவியை ஒருபோலும் பிரிந்திருக்க மாட்டார். பிரிவு வரும்போது தான் காதல் அனுபவம் வரும். ​

    --
    Jayakumar

    ReplyDelete
  6. உங்கள் கவிதை....அத்தான் என்னத்தான் என்ற பாடலின் மெட்டில் பாடலாம்! ஏன் உங்கள் கவிதை அத்தான் என்னத்தான் என்ற பாட்டின் inspiration என்றும் சொல்வேன்!

    எப்படி நான் சொல்கிறேன் என்றால், பள்ளியில் படிக்கும் போது நானும் கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட என் இரு நண்பர்கள்,ஆக மொத்தம் மூன்று பேரும் தமிழ் பாடத்தில் சுமார் தான்! ஆனால், பாட்டு எழுதுவதில் "படு கில்லாடிகள்" ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைத்தவன் இல்லை!

    தமிழ் வகுப்பில், திருக்குறள், நாலடியார், ராமாயணம் இப்படி பாடம் எடுக்கும் போது, எங்கள் ஆசிரியர் முடிக்கும் முன்பே...அதை அப்படியே "அப்படி இப்படி" பாட்டாக எழுதி எங்களுக்குள் சிரித்துக் கொள்வோம். வாங்கின திட்டுக்கள் தான் எவ்வளவு! இன்றும் ஒரு சினிமா பாட்டு வந்தால், அந்த பாட்டு முடியும் முன்னே என் கவிதை கொட்டும். I sorely miss my [friends] Krishnans!

    ReplyDelete

  7. @ விமலன் பேராளி
    எல்லோருக்கும் என்று சொல்ல முடியாது ஒரு படத்தில் ஜனகராஜ் ”தங்கமணி ஊருக்குப் போயிட்டா” என்பதுபோல் மகிழ்வோரும் உண்டு வருகைக்கு நன்றி

    ReplyDelete

  8. @ டாகடர் ஜம்புலிங்கம்
    இப்போதெல்லாம் முன்புபோல் எழுத வரவில்லை. வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  9. @ ஸ்ரீராம்
    இளவயதில் மட்டுமல்ல. இப்போதும் என் மனைவியைப் பிரிந்திருக்க முடிவதில்லை வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  10. @ கில்லர்ஜி
    பழமைடில் மூழ்கிய ---- புரியவில்லை. ஒருவேளை அந்த நாட்களை இப்படிக் கூறுகிறீர்களோ வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  11. @ஜேகே22384
    / பிரிவு வரும்போது தான் காதல் அனுபவம் வரும்/ எனக்கு அப்படித் தோன்றவில்லை.திருமணத்துக்கு முன் வருவதே காதல் என்றால் அது எனக்கு உடன்பாடில்லை. நானே மறந்த பின்னூட்டங்களை நினைவு படுத்தி எழுதியதற்கு நன்றி சார் ​

    ReplyDelete

  12. @ நம்பள்கி
    / உங்கள் கவிதை அத்தான் என்னத்தான் என்ற பாட்டின் inspiration என்றும் சொல்வேன்!/ இல்லை ஐயா. என் பாடலுக்கு வறுமையில் வாடிய ஒருவர் எழுதியதேinspiration . அந்தப் பாடல் இதோ
    கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கதான் கற்பித்தானா
    இல்லைத்தான் பொன்னைதான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா
    அல்லைத்தான் சொல்லித்தான் யாரைத்தான் நோகத்தான் - ஐயோஎங்கும்
    பல்லைத்தான் காட்டத்தான் பதுமற்றான் புவியிற்றான் பண்ணினானே
    திரை இசைப்பாடல்களின் மெட்டில் எழுதிய பழக்கம் எனக்கும் உண்டு வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  13. அட.. என் மனமே!..

    நீயும் தான் தனிமையில் இருந்தாய்/ இருக்கின்றாய்!..
    அப்படியோர் பாடல் தான் புனையக் கற்றாயா?..

    என்ன கற்றாய்?.. ஏது கற்றாய்?..
    இப்படியும் எழுதுதற்கு - இதையாவது கற்றாயே!..

    ReplyDelete
  14. சுவையான கவிதைகள்! படித்துவிட்டு உங்கள் மனைவியார் என்ன சொன்னார் என்பதைச் சொல்லவில்லையே! ;-)

    'செயிண்ட்டு தி கிரேட்டு' குறும்படத்தில் உங்களைப் பார்த்தேன். இந்தத் தள்ளாத வயதிலும் எழுதுகிறீர்களே என்று இத்தனை நாட்கள் பாராட்டினோம். இப்பொழுது நடிக்கவும் தொடங்கி விட்டீர்கள்! மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete

  15. @ துரை செல்வராஜு
    உங்கள் எழுத்து என்னிடம் சலனம் ஏற்படுத்துகிறது என் எழுத்துமா....? வருகைக்கு நன்றி

    ReplyDelete

  16. @ இ பு ஞானப்பிரகாசம்
    நான் எங்கு நடித்தேன் சொல்லச் சொன்னதைக் கிளிப்பிள்ளை மாதிரிச் சொன்னேன் அவ்வளவுதான் உங்களுக்குத் தெரியுமா அந்தக் காலத்தில் நானே நாடகங்களை எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறேன் சில நாடகங்களைப் பதிவுமாக்கி இருக்கிறேன் என்னைப் பார்த்தால் தள்ளாத வயது மாதிரியா தெரிகிறது வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. பிரிவுக் கவிதை மிக அருமையாக இருந்தது. பகிர்ந்ததற்கு நன்றி !

    ReplyDelete
  18. பிரிவின் கொடுமை கவிதை அருமை.

    அவர்கள் மகிழ்ந்து இருப்பார்கள் இல்லையா?

    //இளவயதில் மட்டுமல்ல. இப்போதும் என் மனைவியைப் பிரிந்திருக்க முடிவதில்லை வருகைக்கு நன்றி ஸ்ரீ//




    முதுமையில் வாழ்க்கைதுணையின் துணை மிகவும் அவசியம். முழுமையான அன்பு வயதானாலும் தொடரும் தானே!(பாட்டு நினைவுக்கு வருமே)

    ReplyDelete

  19. @ S.P. SENTHILKUMAR
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  20. @ கோமதி அரசு
    பிரிவின் கொடுமையை நான் என் மனைவிக்கு கடிதத்தில் எழுதி இருந்தேன் அதைப் படித்து அவள் மகிழ்ந்திருப்பாளா . ?வாழ்க்கைத் துணை அவசியம்தான் இருவருக்கும் எனக்கு திரை பாடல்கள் நினைவுக்கு வருவதில்லை. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  21. பிரிவு பற்றிய
    அருமையான பதிவு


    குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
    http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

    ReplyDelete

  22. @ jeevalingam yarlpavanan kasirajalingam

    வருகைக்கு நன்றி ஐயா குழுப்பகிர்வை பயன் படுத்தாத நான் கருத்து கூறுதல் சரியாக இருக்குமா

    ReplyDelete
  23. பிரிவும் கவிதைகள் தர வல்லது......

    கவிதைகள் நன்று.

    ReplyDelete

  24. @ வெங்கட் நாகராஜ்
    ஓரளவுக்கு உண்மை எந்த அதீத உணர்வும் கவிதைக்கு வழி வகுக்கலாம் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  25. ஐயாவின் கவிதை அருமை, நினைவு கூர்ந்து சொல்லியிருப்பது சிறப்பு!

    பிரிவென்பது என்றுமே வலி தான்! சில நேரங்களில் இந்த சிறு பிரிவுகள் நெருக்கத்தை ஏற்படுத்தும்.

    ReplyDelete

  26. @ அருள்மொழிவர்மன்
    நினைவு கூர்ந்து சொல்லவில்லை என்றோஎழுதி வைத்தது சிறு பிரிவுகள் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  27. பிரிவில் எழுதிய கவிதை அருமை!

    ReplyDelete

  28. @ கீதா சாம்பசிவம்
    ஏனோ வரவில்லை என்று நினைத்திருந்தேன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்

    ReplyDelete