ஒருசிறுகதை எழுத
-----------------------------
ஒரு
சிறுகதை எழுதலாமே என்று அமர்ந்தேன் ஆனால் உடனே நீ எழுதுவது எந்த சிறு கதையின்
இலட்சணத்துக்கோ இலக்கணத்துக்கோ பொருந்துவதாயில்லை என்னும் பொதுவாக வாசகர்கள் மத்தியில் உலாவும் கருத்து
என்னை எழுதத் தடுக்கிறது இதுவே என் பழைய சிறுகதைகள் சிலவற்றைப் பார்க்கச்
செய்தது. அப்போது எனக்குத் தெரிந்தது என்னவென்றால் என் சிறுகதைகள் சற்றே
வித்தியாசமாய் எழுதப்பட்டவை அவற்றில்
நான் எனது சில உத்திகளை பிரயோகித்திருப்பேன்
ஒரு வேளை அதுவே இலக்கண இலட்சணங்களுக்கு மாறுபட்டுத் தோற்ற மளிக்கிறதோ தெரியவில்லை.
புதிதாக ஒரு கதை எழுதுவதை விட என் பழைய கதை ஒன்றை மீள் பதிவாக்கினால் என்ன என்று
எண்ண வைத்தது அது கீழே. வாசகர்கள் அவர்களது மனதில் பட்டதைக் கருத்தாகக் கூறக்
கேட்டுக் கொள்கிறேன்
சேது அன்று மாலை வருவதாகத் தகவல் அனுப்பி
இருந்தான்.தங்கமணிக்கு கொஞ்சம் ஆறுதல். ஏதோ இருக்க ஒரு வீடு இருந்தாலும் தினப்படி
செலவுக்கு எங்கே போவது.? வயிற்றுப் பாட்டுக்கு கிராமத்தில் ஒன்றிரண்டு பட்டர்
(பிராமணர்) வீடுகளில் பாத்திரம் தேய்த்து , முறிகளை அடிச்சு கோரினால்(பெருக்கி
எடுத்தால்) அம்மியார் ( பிராம்மண அம்மணி) கொடுக்கும் சோறும் கூட்டானும் கொண்டு
அவளும் அவளது தாயாரும் வயிறு நிறைக்கலாம். கூட இருக்கும் சகோதரி தேவானை அவள்
வகையில் வீடுகளில் பணி செய்து அவளது வயிற்றுப் பாட்டைக் கவனித்துக் கொள்வாள்.
வாழ்க்கை என்பது வெறும் வயிற்றோடு முடிவதா என்ன.?இருக்க இடம் உண்ண உணவு மட்டும்
போதுமா.?உடுத்தவும் மேனி அலங்கரிக்கவும் இன்னும் எத்தனையோ தேவைகள் இருக்கின்றனவே..
இந்த மாதிரித் தேவைகளைப் பூர்த்திசெய்ய சேது மாதிரியான புண்ணியவான்கள் இருக்கவே இருக்கிறார்கள்.
தங்கமணிக்கு ஓரோர் சமயம் இந்த வாழ்க்கை சரியா என்ற எண்ணம்
தோன்றும் சரியோ தவறோ இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. கட்டின கணவனுக்கு என்ன
காரணத்தாலோ இவளுடன் தொடர்ந்து வாழப் பிடிக்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்றால்
இவள் இஷ்டப்படி வாழ்வதிலும் கேள்வி வரக்கூடாது. வயசான அம்மா இருக்கும்வரை
தலைக்குக் கூரை நிச்சயம். அம்மா போனாலும் இது தொடரும், கூடப் பிறந்த “ஆங்கள்” ( சகோதரர்கள்) தாயின் வீட்டில் பங்கு கிடைக்காதென்று தெரிந்து (மருமக்கத்தாயம்)
அவரவர் வழிகளில் சென்று விட்டனர்.
( இந்த வேதாளம் மறுபடியும்
முதுகில் ஏறிவிட்டது போல் தெரிகிறது. நிச்சயமாய் என்னிடம் கேள்வி கேட்டுக் குடையப்
போகிறது. நான் எழுதுவதைப் படிக்காமல் இருக்கப் போகிறதா என்ன.?)
தங்கமணியின் வீட்டைப் பற்றிக் கூறவேண்டும்.
அவளது அம்மா அவரது ”தரவாடு” பற்றி நிறையவே கூறி இருக்கிறார். இப்போது மிஞ்சி இருப்பது ”பெத்தப்” பேர்மட்டும்தான்.
”கூட்டுப்புறத்து வீடு” என்றால் தெரியாதவர் கிடையாது. தங்கமணியின்
அம்மாவுக்குக் கூடப் பிறந்த சகோதரிகள் ஆறு
பேர். அவரவருக்குக் குடும்பம் குழந்தைகள் என்று ஆனபிறகு இரண்டு கட்டுத் தரவாட்டு
வீடு விற்றுப் பணமாக்கப் பட்டு பாகம் பிரிக்கப்பட்டு வந்த பணத்தில் தங்கமணியின்
அம்மா இந்தக் குச்சு வீட்டைக் கட்டினாள். இவர்களும் கூட்டுப் புறத்து வீட்டின்
பெயரில் அவகாசிகள் ( சொந்தம் )ஆனார்கள். இதே பெயருக்கு சொந்தம் கொண்டாட
இவர்களுக்கு சந்தான சம்பத்து இல்லாமல் போயிற்று.
(வேதாளம் முதுகில் நிலை கொள்ளாமல்
தவிக்கிறது. இவன் என்ன எழுத வருகிறான் என்று தெரியாமல் குழம்புகிறது என்று
தெரிகிறது)
தங்கமணியின் அம்மா திண்ணையே கதி என்றிருப்பாள். திண்ணையை
ஒட்டி ஒரு ரேழி . அதை அடுத்து சின்ன மித்தம் ( முற்றம்) அதன் இரு பக்கங்களிலும்
இரண்டு முறிகள் ( அறைகள்) ஒன்றில் தங்கமணியும் மற்றதில் அவள் சகோதரி தேவானையும்
உறங்குவது வழக்கம்.
சேது வரும் தகவல் தேவானைக்கும் தெரிந்தது. அவளுக்கு ஒரு
விஷயம் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. இப்படி அடிக்கடி வந்து
போகும் இந்த சேது அக்கிரகாரத்தில் இருப்பவன். தங்கமணியிடம் சம்பந்தம் வைத்துக்
கொள்வானா இல்லை அவளைக் கை கழுவி விடுவானா?அவன் கொஞ்சம் பசையுள்ளவன். தொடர்ந்து
வருபவனை வற்புறுத்திக் கல்யாணம் செய்து கொள்ள முடிந்தால் தங்கமணி அதிர்ஷ்டம்
செய்தவள் ஆவாள். இல்லையென்றால் ......? இலையென்றால் என்ன.? நாடிவருபவர்கள்
எல்லோரையும் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன.?
தங்கமணி சேதுவை நம்பி இருக்கிறாள் என்பது மட்டும்
புரிந்தது.
( வேதாளத்துக்கு இருப்பே
கொள்ளவில்லை. ‘ யோவ், நீ என்னதான் சொல்ல வருகிறாய்.?’என்று காதருகே குசுகுசுத்தது. வேதாளத்துக்கு எழுந்த சந்தேகம் எனக்கும்
இருந்தது. நான் என்ன எழுதப் போகிறேன், சொல்ல வருகிறேன் என்று எனக்கே தெரியாதே.
கணினியின் முன் அமர்ந்து தட்டச்சுகிறேன். எண்ணங்கள் கோர்வையாய் வந்தால்
கதையாக்கலாம் எண்ணங்கள் கோர்வையாக வராவிட்டால் என்னும் என் எண்ணம் வேதாளத்துக்குத்
தெரிந்து விட்டது. அது சொல்லியது.” தோன்றுவதை
கொஞ்சம் விலாவாரியாக எழுதிக் கொண்டே போ. முடியும் வரை எழுது. நாளைக்கு வேறு ஏதாவது
ஐடியா கிடைக்கும். அப்போது தொடரலாம்” வேதாளத்தின்
உத்தியை முயன்றுதான் பார்ப்போமே.)
இந்த சேதுவை முதன் முதலில் எங்கு கண்டாள் என்று நினைத்துப்
பார்த்தாள். ஆம். ஒரு ஆறுமாதமிருக்குமா.?அக்கிரகாரத்தில் பணிமுடிந்தபின் தங்கமணி
வந்துகொண்டிருந்தாள். எதிரே சற்று தூரத்தில் ஒரு கையில் குடையுடன் மறுகையால்
வேட்டியின் நுனியைத் தூக்கிப் பிடித்தபடி ,ஆஜானுபாகுவாக என்று சொல்ல முடியாது;
இருந்தாலும் அந்த சந்தி வேளையில் சற்று தூரத்தில் இருந்தே தெரிந்த பட்டை விபூதி
நெற்றியுடன் நல்ல உயரத்துடன் அவன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும்
தங்கமணிக்கு மேனியெல்லாம் என்னவோ செய்தது. மனசு குறுகுறுத்தது.
;’நமக்கும் ஒருவன் வாய்த்தானே என்னும் அலுப்பும் கூடவே
வந்தது. இவளைக் கடக்கும் நேரம் அவன் நின்று “ ஆ.. தங்கமணியல்லே.? எவிடெக்கா ? வீட்டிலிக்கா.?” என்று ரொம்பவே அறிமுகம் ஆன மாதிரி ‘சம்சாரிக்கத்’ தொடங்கினான். தங்கமணிக்கு தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று
தெரியவில்லை. வெட்கப் பட வேண்டுமா, தலையைக் குனிந்து கொள்ள வேண்டுமா ஒன்றும்
புரியவில்லை. எல்லாம் கலந்த கலவையான ஒரு பாவம் வந்து போயிற்று. சேது தொடர்ந்தான் “
தங்கமணியக் கெட்டியவன் எவிடெ பணி எடுக்குன்னு.?”
“ ஆ செத்தையினக் குறிச்சு ஒன்னும் கேழ்க்கண்டா சாமி” என்றாள். இந்த பதில் சேதுவுக்குக் கொஞ்சம் தைரியம் கொடுத்தது..” ஒன்னும் விஷமிக்கண்டா தங்கமணி. ஞங்கள் ஒக்க இல்லே” என்று நூல் விட்டுப் பார்த்தான். தங்கமணி ஏதும் சொல்லாமல் தலையை நிமிர்த்தி
பின் சரித்து ஒரு புன்னகையைத் தவழவிட்டாள்.இப்போது சேதுவுக்குத் தான் சொன்னது
விளையாட்டுக்கு இல்லை உண்மைதான் என்று நிரூபித்துக்காட்ட வேண்டும் போல் இருந்தது.
நேர் எதிர்த் திசையில் போய்க் கொண்டிருந்தவன் இப்போது அவள்
செல்லும் திசைக்கே திரும்பினான். அவளது எதிர்பார்ப்புகள் என்ன என்று தெரிந்து
கொள்ளும் ஆவலில் அவளது நித்திய ஜீவனம் பற்றியும் அதை அவள் எப்படி சமாளிக்கிறாள்
என்றும் கேட்டுத்தெரிந்து கொண்டான். தங்கமணியிடம் பேச்சுக் கொடுத்ததில் அவளைப்
போலவே அவள் தங்கை தேவானையும் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். அவன் உள்மனது
முட்டைகள்பொரியும் முன்பே குஞ்சுகளைக் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது.
பேசிப்பேசியே தங்கமணியின் வீட்டுக்கு வந்து விட்டான்.
வாசலில் நின்றவன்,
‘இன்னால் ஞான் போட்டே” என்று இழுத்தான்.
“ உள்ளிலிக்கு வரூ. காப்பி குடிச்சிட்டுப் போகாம்” என்று அவளும் வலை விரித்தாள்.
“ உன்னுடன் பிறந்தவள் எங்கே “
“எவிடெயெங்கிலும் போயிரிக்கும்’
“அம்மை.?”
“அது ஒரு பிரஸ்னமில்லா. கண்ணும் சரிக்கி காணில்லா.
உள்ளிலிக்கு வரூ” என்று அவன் கையைப் பிடித்துக் கூப்பிட்டாள். சேதுவுக்கு
இருந்த கொஞ்சம் நஞ்சமுமான தயக்கமும் போய் விட்டது.
அவளது முறிக்குக் கூட்டிக் கொண்டு போனாள். கதவைத்
தாழ்ப்பாளிட்டாள் ஆரம்பத் தடுமாற்றங்கள் ஏதுமில்லாமல் இருவரும் இணைந்தனர். அவனருகே
படுத்திருந்தவள் சற்று ஒருக்களித்து படுத்துக் கொண்டு “சாமிக்கு என்னே இஷ்டப்
பட்டோ?” என்று கேட்டாள். இஷ்டப்படாமலா இவ்வளவு நேரம் நடந்தது என்று நினைத்துக்
கொண்டான். “ பின்னே.....” என்று ஒரு நமுட்டுச் சிரிப்பினை உதிர்த்தான். ”சமயமாகி. பின்னெ நாளேக் காணாம் “ என்று கூறியவன் அவள் கையைப் பிடித்து அதில்
சில ரூபாய் நோட்டுகளை அழுத்தினான். கதவு திறந்து வெளியே வரும்போது அங்கே தேவானை
நின்று கொண்டிருந்தாள்.சேது அவளை ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கடந்தான்.
தேவானைக்குத் தடுமாற்றம். தங்கமணியைவிட தான் எந்த விதத்தில்
குறைவு என்னும் எண்ணம் எழுந்தது அது என்னவோ தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவர்கள்
ஏறத்தாழ எல்லோருமே “ பர்த்தா” இல்லாதவராகவே இருக்கிறார்கள். இது
ஆண்களின் பொறுப்பின்மையா, அல்லது பெண்களின் ஆதிக்கக் காரணமா.... என்ன இருந்தாலும்
வாழ்க்கை என்ற ஒன்றை வாழ்ந்துதானே ஆகவேண்டி இருக்கு. இந்த சேது ஆள் நன்றாகத்தான்
இருக்கிறான். அவன் எதிர்பார்ப்பை தங்க மணி கொடுக்க முடியும் என்றால் தன்னால்
முடியாதா என்ன.? எண்ணங்கள் திட்டங்கள்.... ...!
வந்து போன சேதுவுக்கும் தேவானையைப் பார்த்ததும் உடலில் ஒரு
சூடு பொங்கி எழுந்து அடங்கியது. தேவானையும் லட்சணமாகப் பாந்தமாகக்”கிண்” என்று இருந்தாள். தங்கமணியுடன் சேர்ந்தால் தேவானையை ஒதுக்க வேண்டும் என்று
ஒன்றும் இல்லையே. எண்ணங்கள்....திட்டங்கள்......
தங்கமணியும் தேவானையும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கத்
தொடங்கினர். சேதுவோடு இருக்கும்போது “ இந்தப் பெண்ணின் நோட்டமும் பார்வையும் சரியில்லையே” என்று சற்று உரக்கவே கூறினாள். இவனோ “ பாவம், அவளும் உன்னைமாதிரிதானே” என்று சொன்னான். ”அப்படியானால் அவளிடம் சேர்வதுதானே” என்று கோபத்தில் கூறினாள் ‘ ஆஹா இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என்று எண்ணியவன் “மாற்றமே வாழ்விசுவை”
( variety is the spice of life) அனுபவிக்க என்ன செய்யலாம் என்றும் சிந்திக்கத் தொடங்கினான். இதற்கு ஒரே வழி
இருவரும் இருக்கும் நேரத்தை ஒதுக்கிவிட்டு ஒருவர் இல்லாத நேரத்தில் ஒருவர் என்று
கணக்குப் போட்டான். தங்கமணியை சந்தித்தபோது நடந்தவற்றை ரிபீட் செய்வதுதான் நல்லது
என்று எண்ணி ஒரு நாள் தேவானை வேலை முடிந்து வரும்போது அவளை மடக்கினான்.இந்த
சந்தர்ப்பத்துக்குத்தானே அவளும் காத்திருந்தாள். திட்டமிட்டபடி எல்லாம் நடக்க ஒரு
நாள் இவன் தேவானையின் அறையில் இருந்து வெளியே வரும்போது தங்கமணி நின்றிருந்தாள்.
இவனைப் பார்த்ததும் மூஞ்சியை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள்.
இருந்தாலும் இருவருக்குமே வாழ்க்கையை வாழவேண்டுமென்றால் பல
நேரங்களில் பல விஷயங்களையும் விட்டுக் கொடுக்க(compromise) வேண்டும் என்று புரிந்தது..
எதையும் கண்டுகாமல் சிவனே என்றிருந்த அவர்களது தாயாரை
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உசுப்பி விட்டனர். கிழவிக்கு தன் மகள்கள்
யாருடனாவது சம்பந்தம் வைத்துக் கொள்வதில் தவறு தெரியவில்லை. ஆனால் இருவரும்
ஒருவனையே என்று எண்ணிப் பார்பது கஷ்டமாக இருந்ததுஇதற்கு ஒரு முடிவு கட்டத்
தீர்மானித்தாள் கிழவி.
கிழவி திண்ணையில் அரைகுறைத் தூக்கத்தில் படுத்துக் கிடப்பாள்.
சில நேரங்களில் சேது அவளைத் தாண்டிப்போக வேண்டி இருக்கும். ஒரு நாள் சேதுவுக்கு
மகள்களில் யாரோ ஒருவருடன் கூடும் நாளும் நேரமும் பார்த்துக் காத்திருந்தாள் கிழவி.
சேதுவும் கிழவிக்குக் கண்சரியாகத் தெரியாதே என்று அவளைத் தாண்டினான் உடனே “ ஐயோ...
ஐயோ.”. என்று கூக்குரலிட்டு வெளியே ஓடினான் கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.” இனி உனக்கு இன்பம் தரும் உறுப்பின் முக்கியம்தான் இங்கு வரும்போது நினைவுக்கு
வரும்” தங்கமணியோ தேவானையோ (யாரோ ஒருவர்) ஏன் சேது அப்படி கத்திக் கொண்டு ஓடினான்
என்று தெரியாமல் விழித்தாள்.
( ”உன்னைப்
பார்க்கவே பயமாய் இருக்கிறது, எழுதுவதற்கு உத்தி சொன்னால் இப்படியா எழுதுவது,? இனி
உன் வழிக்கே நான் இல்லையப்பா..” என்று
கூறிக்கொண்டேஎன் முதுகில் இருந்து அகன்றுவிட்டது.)
என்ன நண்பர்களே நண்பிகளே கதை எப்படி?. உண்மையான உங்கள்
கருத்தைப் பதிய வேண்டுகிறேன்
'
சில இடங்களில் இப்படி வாழ்க்கையும் நிகழத்தான் செய்கிறது ஐயா தாங்கள் வெளிப்படையாக எழுதி விட்டீர்கள் அவ்வளவே...
ReplyDeleteமுன்பே நிங்களோட தளத்தில் படிச்சது போல் ஞனக்கு ஓர்மயான்னு...
கதையின் கருத்து பற்றிய கருத்தை விட இது சிறுகதை வகையில் சேருமா என்பதே கேள்வி நானே இது மீள் பதிவு என்று கூறி இருக்கிறேனே வருகைக்கு நன்றி
Deleteவேதாளம் ஓடும் அளவிற்கு - வித்தியாசமான சிந்தனையில் வந்த கதையை மீண்டும் ரசித்தேன்...
ReplyDeleteகதையின் உத்தி பிடித்திருந்ததா டிடி வருகைக்குநன்றி
Deleteபாலசந்தரின் திரைக்கதை போல சற்றே, இல்லையில்லை, அதிகமாகவே வித்தியாசமாக, உள்ளது ஐயா.
ReplyDeleteஎழுத எழுத தோன்றும் எண்ணங்களே கதை ஆயிற்று வருகைக்கு நன்றி
Deleteஏற்கெனவே படிச்சிருக்கேன்!
ReplyDeleteஅதைத்தான் சொல்லி இருக்கிறேனே இது மீள் பதிவு என்று சிறுகதையின் இலக்கணங்கள் பற்றிக் கூறு வீர்கள் என்று எதிர்பார்த்தேன் நன்றி மேம்
Deleteஇலக்கணங்களில் அடங்குமா சிறுகதை ?நிகழ்வைப் படம்பிடித்து காட்டிவிட்டீர்கள் ,இதுவே போதும்:)
ReplyDeleteசேதுவின் ஓலக்குரலைக் காதில் ஒலிக்கவைத்த வகையில் உங்கள் கற்பனைக்கு வெற்றிதான் :)
தமிழ்மண மகுடதாரியிடமிருந்துபாராட்டுக்கு நன்றி
Deleteநானும் படித்த நினைவு இருக்கிறது. சில இடங்களில் வார்த்தைப் பிரயோகங்கள் புரியாவிடினும் பொதுவாகக் கதையின் போக்கைப் புரிந்து கொள்ள முடிகிறது. கிழவி செய்தது சரியா இல்லையா என்று தங்கமணியும், தேவானையும்தான் சொல்லவேண்டும்! அவரவர்க்கு அவரவர் தேவைகள், நியாயங்கள்!
ReplyDeleteதம +1
சிறுகதை பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன் படித்திருக்கக் கூடிய கதைதான் இதுதான் மீள் பதிவாயிற்றே வருகைக்கு நன்றி ஸ்ரீ
Delete"....வாழ்விசுவை” ( variety is the spice of life)-என்று வருகிறதே, யார் சார் அந்த விசு?
ReplyDelete(2) கடைசி பாராவில் அவன் ஏன் கத்திக்கொண்டே ஓடுகிறான்?
(3) "இன்பம் தரும் உறுப்பின் முக்கியம்தான்..." என்று வருகிறது. அது என்ன உறுப்பு? கொஞ்சம் விரிவாகத்தான் சொல்லிவிட்டால் என்ன?
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
இப்படிக் கலாய்க்கக் கூடாது சார் வாழ்வில் சுவை என்பது தவறி தட்டச்சாகி விட்டது என் பதிவைச் சிலராவது வாசிக்கிறார்கள் நீங்கள் கேட்டமாதிரி விரிவாகச் சொன்னால் என் வாசகர்களும் வேதாளம்மாதிரி ஓடி விடுவார்கள் நன்றி சார்
Deleteவித்யாசமான சிந்தனையும் அருமையான கதை . அறிந்திராத புதிய வார்த்தைகள் .சில மட்டும் அடிக்கடி கேட்ட மாதிரி இருக்கு மித்தம் ,முறி .
ReplyDeleteஇதுதான் நிதர்சனம் . அந்த மூதாட்டி செய்தது சரியே .வாழ்க்கை என்பதை புரிந்தவர் அதனால் சேது துரத்தப்பட்டார்
வேதாளம் பாவம் பயந்துவிட்டதுன்னு நினைக்கிறேன் :) திருப்பி அழைத்து வரவும் .
..
சிறுகதைன்னா ஒரு வாழ்வியல் சம்பவம் இருக்கணும் சம்பவம் இந்த தேவானை தங்கமணியின் வாழ்வை பிரதிபலிக்குது. கதை மாந்தர் 3 பேர் மட்டுமே சிறுகதையில் ஒரு சிக்கல் அல்லது முடிச்சி இருக்கனும் அது சேது தான் இக்கதையில் அந்த முடிச்சை அலறி ஓட வச்சாச்சு மேலும் இடைவெளியின்றி ஒரே மூச்சில் வாசித்து விட்டேன் அருமையான சிறுகதையை
வேதாளத்தை திருப்பி அழைத்து வந்தால் அது உங்கள் முதுகில் ஏறிவிடலாம் இதுதான் சிறு கதையின் இலக்கணமா அப்போது நான் எழுதுவது எல்லாமே சிறு கதைதான் வருகைக்கு நன்றி மேம்
Deleteமேடம்லாம் இல்லை :) ஏஞ்சல் இல்லைன்னா தமிழில் அஞ்சு என்றே அழைக்கலாம் ...//சிறுகதை இலக்கணம் //முந்தி எங்கேயோ யார் பதிவிலோ வாசித்தது மற்றபடி இதுதான் இலக்கணம்னு இல்லை ரசிக்கும் விதத்தில் ஒரே மூச்சில் தங்குதடையின்றி செல்லும் கதை யோட்டம் இருக்கும் அனைத்தும் சிறுகதைகளே .
DeleteOk angel/ இல்லையென்றால் அஞ்சலை. கதையை ரசித்ததற்கு நன்றி
Deleteஹாஹா :) சிரித்து விட்டேன் நாங்க ஜெர்மனில இருக்கும்போது ஆஞ்சலா என்றுதான் கூப்பிடுவாங்க ஜெர்மன் மக்கள் :)அவங்களுக்கு பிரிட்டிஷ் அமெரிக்கன் A நம்ம தமிழ் ஆ மாதிரிதான் :)
Deleteஎனக்கு அஞ்சு என்பதை விட அஞ்சலை என்னும் பெயர் அதிக தமிழ்த்தனமாய் இருந்தது இன்னொரு கேள்வி. நீங்கள் இடும் பின்னூட்டங்களில் கூடவே வரும் உங்கள் நண்பியைக் காணோமே அவரது தமிழ் ரசிக்க வைக்கும்
Deleteஇன்னிக்கு ஈவ்னிங் கூட்டிட்டு வரேன் அவங்க இப்போ வேலைக்கு போயிருப்பாங்க .
Deleteஐயா பெரியவரே... உங்கட மீசை என்னை மிரட்டுது அதனால்தான் இங்கின வரப் பயந்தேன்ன்.. இன்று நீங்க தேடியதாக எனக்கு என் பிரித்தானிய தூதுவர் சொல்லி அனுப்பினா ஓடிவர கொஞ்சம் தாமதமாகிட்டுது...:)
Deleteநீங்க என்னை தேடிய விதத்தில் ஒரு தப்பிருக்கிறது:).. அதாவது அஞ்சலை:).. உங்களோடு கூடவே வரும் உங்கள் சுவீட் 16 தங்கை:) எங்கே எனக் கேட்டிருந்தால் மின்னல் வேகத்தில் வந்திருப்பேன்ன்.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு:).
///ஏஞ்சல் இல்லைன்னா தமிழில் அஞ்சு என்றே அழைக்கலாம் ...///
Deleteஹையோ முருகா.. இத்தனை காலமும் என்னை ஏமாத்தியது பத்தாதெண்டு..:) இப்போ உலகத்தை ஏமாத்த திட்டம் போல விட மாட்டேன்ன்ன்:)... ஆங்கிலத்தில் ஏஞ்சலின் ஆம்ம்.. தமிழில் மொழிபெயர்த்தால் அஞ்சுவாம்ம்ம்... ஆண்டவா ஐயா GMB... இந்த அஞ்சு சொல்வதை எல்லாம் நம்பிடாதீங்க:))
///எனக்கு அஞ்சு என்பதை விட அஞ்சலை என்னும் பெயர் அதிக தமிழ்த்தனமாய் இருந்தது///
Deleteஅஞ்சு என்பது நாங்கள் எல்லோருமா வச்ச பெயர்...:).. நீங்க சொல்லும் அஞ்சலை:) தான் மிகப் பொருத்தமானது என நினைக்கிறேன்ன்.. ஏனெனில்.. எங்கட கந்தசாமிக் கோயில் வாசலில் கடலை வறுத்து விக்கும் பாட்டிக்கு அஞ்சலைப்பாட்டி எண்டுதான் பெயர்:)).. ஹா ஹா ஹா... இண்டைக்கு இது போதும் போஸ்ட் படிக்க நேரம் இல்லை.. இன்று நல்ல நாளில் வந்திடலாம் என வந்தேன்ன் பின்பு வாறேன்ன்:)...
ஊசிக்குறிப்பு:) சொந்தச் செலவில சூனியம் வைச்ச கதையா முடிஞ்சு போச்சு அஞ்சுட நிலைமை:) என்னால:) ஹா ஹா ஹா..:)
This comment has been removed by the author.
Deleteவித்தியாசமான சிந்தனையில் முளைத்த கதை ஐயா
ReplyDeleteரசித்தேன்
நன்றி
கதையை ரசித்ததற்கு நன்றி சார்
Delete@ அஞ்சலை /அதிரா
Deleteகாலையில் கணினி பக்கம்வர முடியவில்லை. ஆனால் வந்து பார்க்கும் போது கணினி கலகலவென இருந்ததுஅதுதான் அதிரா வந்து விட்டார்களே என் மீசையைப் பார்த்துபயப்பட வேண்டாம் மீசை இல்லாத என்னை வீடியோவில் பார்த்து எனக்கே பாவமாய் இருந்தது அது இந்த கெட் அப் புக்குக் காரணம் இனி என்தளம் கல கலக்கும் இரண்டு சிட்டுக்குருவிகள் இங்கு இனி வருமே அஞ்சலைப் பெண்ணை பாட்டி என்று சொல்லலாமா பாவம்கிடைக்கும்அதிராவின் எந்த தளத்தை நான் தொடர எதில் நன்றாக எழுதுகிறீர்கள்வருகைக்கு நன்றி பெண்டுகளா
ஐயா.. சிட்டுக்குருவிகள் என அழகாக ஆரம்பிச்சு.. முடிவில் பெண்டுகள் எனச் சொல்லிக் கவிட்டுப்போட்டீங்களே.. இது உங்களுக்கே ஞாயமாகப் படுதோ?:)..
Deleteஎனக்கு எங்கு போனாலும் சீரியசாக கதைக்க வராது, எப்பவும் நகைச்சுவையாகவே சொல்லி விடுவேன், அதனால்தான் பெரியவர்கள் பக்கம் போய் அரட்டை பண்ணப் பயம்... இப்படி ஓபினாக நம் எழுத்துக்கள் பிடிச்சிருக்கு எனச் சொன்னமையால் அப்பயம் போயிந்தி:)...
என்னிடம் இருப்பது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என ஒரு புளொக் தான்.. ஐதை மெயிண்டைன் பண்ணவே நேரம் போதவில்லை...
Deleteஎன் பெயரின் கீழ் இருக்கும் ஏனையவை என் தேவைக்காக நான் ஒளிச்சு வச்சிருப்பவை....
இதுதான் என்பக்கம்.. http://gokisha.blogspot.com/
பெண்டுகளா என்று கூறியதில் வருத்தம் என்றால் அதை நீக்கிவிடுங்கள் நான் அதைத் தவறாகப் பிரயோகிக்க வில்லை என்றே எண்ணுகிறேன் இன்னுன் இப்பதிவு பற்றிய கருத்து ஏதும் கூறவில்லை என்பதை நினைவூட்டுகிறேன் இனி உங்கள் பக்கம் என்னைப் பார்க்கலாம் நன்றி
Deleteஅச்சச்சோ அதில் வருத்தமா எனக்கா?:) அப்படி என்றால் என்னவென்றே தெரியாது எனக்கு:)... உங்களோடு கொமெடி பண்ணினேன்:)...
Delete///இன்னுன் இப்பதிவு பற்றிய கருத்து ஏதும் கூறவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்///
Deleteஹா ஹா ஹா ஐயா... கரெக்ட்டாப் பிடிச்சிட்டீங்க:)..
இந்த அஞ்சலை இருக்கிறா தானே.. அவ ஆரம்பம் நான் இப்பக்கம் வந்த நேரம் தொடங்கி என்னை மிரட்டுறா.. நீ இன்னும் போஸ் படிக்கவில்லை.. ஒழுங்காப் படிச்சு கொமெண்ட்ஸ் போட்டிடு என மிரட்டினா:)).. அவவிடம் ஒளிச்சுத் திரிஞ்சேனா:) உங்களிடம் மாட்டிவிட்டேன்ன் ஹா ஹா ஹா...
இல்லை நீங்க டெய்லி ஒரு போஸ்ட் போட மாட்டீங்க என தெரிந்ததனால், அவசரப்படாமல் போடலாம் கதைக்கான கொமெண்ட் என இருந்தேன்ன்.. தோஓஓஓஓஓஓ வந்திட்டேன்ன்... ஓகே டிசுரேப்பூ பண்ணாதீங்கோ ஆரும், நான் கதை படிக்கப்போறேன்:)..
//ஒழுங்காப் படிச்சு கொமெண்ட்ஸ் போட்டிடு என மிரட்டினா:)).. // அது ! அந்த பயம் இருக்கட்டும்
Deleteஎனக்குத்தெரியும் அது உங்கட கோமடின்னு உங்களை மாதிரி எழுதறேனா எப்பவாவது ஒரு பதிவு போடுவதே சிரமமாய் இருக்கிறதுகற்பனை மழுங்கி விட்டது பொல் தெரிகிறது
Delete"நீ எழுதுவது எந்த சிறு கதையின் இலட்சணத்துக்கோ இலக்கணத்துக்கோ பொருந்துவதாயில்லை" என வாசகர்கள் மத்தியில் கருத்து உலாவுகிறதா?
ReplyDeleteபரவாயில்லை. மணித்துளி நேர வாழ்வைப் படித்துச் சுவைக்க முடிந்தால் கதை!
நாம் மருகி மருகி எழுதுவதைச் சிலர் அப்படிக் கூறுவது கண்டுதான் இக்கேள்வி. வருகைக்கு நன்றி சார்
Delete/// இலட்சணத்துக்கோ இலக்கணத்துக்கோ பொருந்துவதாயில்லை என்னும் பொதுவாக வாசகர்கள் மத்தியில் உலாவும் கருத்து என்னை எழுதத் தடுக்கிறது///
ReplyDeleteஎனக்கிது புரியவில்லை.. எதுக்குப் பொருந்தோணும்? கதை என்பது நம் கற்பனையில் உதிப்பதுதானே? அதுக்கு வரையறை ஏதும் உண்டோ?..
சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்னைக் கட்டுப்ப்படுத்துவதில்லை நான் சிலர் அப்படிக் கூறுகிறார்கள் என்றுதான் சொன்னேன்
Delete///என் எண்ணம் வேதாளத்துக்குத் தெரிந்து விட்டது. அது சொல்லியது.” தோன்றுவதை கொஞ்சம் விலாவாரியாக எழுதிக் கொண்டே போ. முடியும் வரை எழுது. நாளைக்கு வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். அப்போது தொடரலாம்”///
ReplyDeleteஹா ஹா ஹா நல்லாத்தான் சீரியல்கள் பார்க்கிறீங்கள் எனத் தெரிகிறது:)... எனக்கும் வேதாளத்தாரைப்போல ஒரே கொயப்பமாக இருக்குது இப்போ.. சரி என்னதான் நடக்கப் போகிறதெனப் பார்ப்போமே.. ஒரு ஆர்வக்கோளாறில் தொடர்கிறேன்:)..
ஆஹா கதை படித்து முடித்துவிட்டேன்ன்.. வேதாளத்தைப்போலவே எனக்கும் எழும்பி ஓடிடலாமா எனத்தான் தோன்றியது, ஆனாலும் பின்னூட்டம் போடாமல் ஓட முடியாதே:).. வேதாளத்தை மட்டும் எப்படி பின்னூட்டம் போடாமல் ஓட அனுமதிச்சீங்க:)...
ReplyDeleteசரி அது போகட்டும்... உங்கள் எழுத்து நடை, கிராமத்துப் பழைய வீடுகளை எல்லாம் நினைவுபடுத்துது.. போறிங் இல்லாத வகையில் எழுதி முடிச்சிருக்கிறீங்க... அது இடையிடையே பாவித்திருப்பது மலையாளம்தானே.. படிக்க ஆசையா இருக்கு... எனக்கு மலையாளம் கற்றுக்கொள்ள வேணும் என ரொம்பவே ஆசை, ஏனெனில் அது கொஞ்சம் இலங்கைத்தமிழோடு ஒத்திருப்பதால், பழகுவது ஈசி.
கதையின் முடிவு ... தாய் கலைத்தது மிகச் சரியான முடிவு. தாய்க்கு முன்பே மகள்கள் கலைத்திருக்க வேண்டும்.. தனியே வாழும்போது, தமக்கென ஒருவரைத் தேடிக் கொள்வதில் தப்பே இல்லை.. ஆனா இப்படியான ஒளிவுமறைவான, குப்பை வாழ்க்கை தப்புத்தான், நல்லபடி யாராவது ஒருவர், சேதுவை திருமணம் முடித்து வாழ்ந்திருந்தால் முடிவு சந்தோசமாக அமைந்திருக்கும், ... எனக்கூறிக்கொண்டு.. புறப்படுகிறேன்:).
வேதாளம் என்பதே கதையை நகர்த்த ஒரு உத்தி. ஒரு வில்லங்கமான கருவில் கதை எழுத வேதாளம் துணைநின்றது கேரளத்தில் இம்மாதிரியான வழக்கங்கள் சகஜமாக இருந்திருப்பதாகத் தெரிந்தது. அதுவே கதைக்கு வித்தானது எனக்கு மலையாளம் கொறச்சு கொறச்சு அறியும் உங்கள் இலங்கைத் தமிழும் ரசிக்கத்தெரியும் மீண்டும் வந்து கருத்திட்டதற்கு நன்றி
ReplyDelete