Wednesday, August 23, 2017

பழைய கதை புது வடிவில்


                                   பழையகதை புது வடிவில்
                                    ---------------------------------------
வெட்டுக்கிளி எறும்பு கதை பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்  நான்  பதிவெழுத வந்த புதிதில்  அதேகதையை சற்றே பகடி செய்து  ஒரு பதிவு எழுதி இருந்தேன்   அந்தக்காலத்து நிகழ்வுகளைச் சேர்த்து  எழுதியது இன்று படிக்கும்போது ரசனையாக இருக்கிறது  அதையே மீள் பதிவாக இப்போது

வளரும்  நாடு. ( ஒரு  சிறுகதை. )
------------------------------------------------
            
பாடுபட்டுக்  கோடையில்பாந்தமாக  உழைத்து,
            
வீடு  கட்டிசேர்க்கும்  உணவினை,
            
களிப்போடு   உண்டு  மகிழும்  எளியோன்
            
சிறியோன்   எறும்பினைக்   கண்டு

உள்ளம்  வெதும்பி  வேகும்  வெட்டுக்கிளியும்,
தான்  உழைக்காதது  மறைத்து  பொறாமையால்
கூட்டியது   ஒரு  பத்திரிகைப்  பேட்டியினை.

           
அடுக்கியது   குற்றச்சாட்டுகளை
           
சாடியது  ஏற்றத்தாழ்வு  விளைவுகளை.
          "
குடியிருக்க   ஏற்ற  புற்று
           
தேவைக்கும்  மீறிய   உணவு,
           
காண்பீர்  இந்த  அநியாயம்
           
கேட்பீர்  சிறுபான்மையோர்   அவதிகளை"
           
என்றே  ஒப்பாரி  ஓலமிட்டு
           
கண்ணீர்  விட்டே  கதறியது.
தொலைக்காட்சி   சானல்கள்
கூடிவந்து   கேட்டன,
நாளெல்லாம்   பேசின
வெட்டுக்கிளி  படும்  பாட்டை.
ஒருபக்கம்  வெட்டுக்கிளி  அழுகை,
மறுபக்கம்  எறும்பின்  ஏறுமுகம்,
புட்டுப்புட்டுக்  காட்டின,
ஏராளமான  படங்களுடன்.

           
பிறகென்ன  ஒரே சேதிதான்  எங்கும்  எதிலும்.
           
வெட்டுக்கிளி  வேதனை  போக்க
          
அருந்ததிராய்    ஆர்பாட்டம்,
           
எறும்பின்   ஏற்றம்   குறைக்க
           
மேதா   பட்கர்   போராட்டம்,
           
துவங்கியதங்கே  ஓர்  அரசியல்  ஆரவாரம்.
           
வேதனையில்  வாடும்   வெட்டுக்கிளிக்கு
          
வேண்டும்  உணவும்  இருப்பிடமும்
           
சமூக  அநீதி  அது இது என மாயாவதி  கூற,
           
மேற்கு  வங்கம்  அறிவித்தது  ஒரு நாள்  பந்த்,
           
கேரளமும்  கேட்டதொரு  நீதிக்  கமிஷன்.
           
நிலைமை    கை  மீறிப்போக
           
வாளாவிருக்குமா   மத்திய    அரசு.?
           
கொண்டு  வந்தது   ஒரு சட்டம்
           
போடா   போலொரு   போடாக்   
            (PREVENTION  OF TERRORIST ACT  AGAINST GRASS HOPPERS.)
 வெற்றி  என்றே  கூவியே
ஆர்பாட்டம்  போராட்டம்
எல்லாம்  கைவிட்டனர்
ராயும்  பட்கரும்.

          
விட்டு  வைக்குமா  தொலைக்காட்சிகள் 
          
படம்    பிடித்தே   காட்டின  
          
பாவம்    எறும்பின்   பறிகொடுப்பை  
         
பார்த்தே   மகிழ்ந்தனர்   பாவி   மக்கள்

வெற்றி   பெற்ற   வெட்டுக்கிளி
செத்தே   மடிய    அன்றே  போல்
விரட்டப்பட்ட    எறும்புகளும்
தஞ்சம்   புகுந்தன   அயல்நாட்டில்
மீண்டும்   உழைத்தே   முன்னேறி
தேடிப்பெற்றன   பெயரும்   புகழும்
கணக்கில்   அடங்கா   கம்பனிகளை
வாங்கிக்  குவிக்க, கோடிகளை
உழைத்தே  பெற்றன  சீராக.

            
ஊருக்கிளைத்தவன்   என்றாலும்
            
உழைத்தால்   பிழைக்கலாம்இது   நீதி.
            
நீதிகள்   அறியா  இந்தியாவோ
            
என்றும்  வளரும்  நாடேதான் 




 

27 comments:

  1. ரொம்ப நல்லாருக்கு சார்...மிகவும் ரசித்தோம்!!!! இருவருமே

    //(PREVENTION OF TERRORIST ACT AGAINST GRASS HOPPERS.)// ஹாஹாஹாஹா...இதை வாசித்ததும் சிரித்துவிட்டோம்..!!!

    நல்ல பகடி!!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து ரசித்ததற்கு நன்றி

      Delete
  2. நன்றாக இருக்கிறது ஐயா ரசித்தேன்
    த.ம.2

    ReplyDelete
  3. கவிதை வழி ஒரு நல்ல கதை.

    த.ம. நான்காம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா வருகைக்கு நன்றி சார்

      Delete
  4. Replies
    1. பாராட்டுக்கு நன்றி மேம்

      Delete
  5. Replies
    1. ரசிப்புக்கு நன்றி மேம்

      Delete
  6. அருமை... ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்

      Delete
  7. Replies
    1. கருத்து ஏதும் இல்லையா வருகைக்கு நன்றி சார்

      Delete
  8. ரசிப்புக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி டிடி

    ReplyDelete
  10. Replies
    1. பாராட்டுக்கு நன்றி மேம்

      Delete
  11. வெட்டுக்கிளி எறும்புக் கதை எனக்கு ஏற்கனவே தெரியாது, நீங்க சொல்லியிருக்கும் விதம் மிக அருமையாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அதிரா

      Delete
  12. கவிதை ஊடாக அருமையான நீதி. நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தற்கால நடப்புகள் இதை பகடியாக எழுத வைத்தது சார் வருகைக்கு நன்றி

      Delete
  13. பதிவை இரசித்தேன்! கடைசி நான்கு வரிகள் உண்மையை உரக்கச் சொல்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. என் வலைத்தளத்தின் தாரக மந்திரமே உண்மை என்று பட்டதைக் கூறுவதுதான் ரசிப்புக்கு நன்றி ஐயா

      Delete
  14. அருமையான எண்ணங்கள்
    நமது இளசுகள் சிந்தித்தால் இந்தியா சிறக்கும்


    தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

    ReplyDelete
  15. எனக்கு கணினி அறிவு குறைவு. இருந்தாலுமுதவி பெற முயல்கிறேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete