தீபாவளி சில நினைவுகள் சில நிகழ்வுகள்
------------------------------------------------------------------
தீபாவளிவரும்போதெல்லாம் சில நினவுகளும் கூடவெ வரும் தவிர்க்க முடிவதில்லை நானும் என் தம்பியும் 1948ம் வருட வாக்கில் எங்கள் தந்தை வழிப்பாட்டி வீட்டில் கோவிந்த ராஜ புரத்தில் இருந்தோம் பொதுவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளிக்கு கேரளத்தில் அவ்வளவு மவுசு கிடையாது பட்டாசு மற்ற வாண வேடிக்கைகள் எல்லாம் விஷுவின் போதுதான் இருந்தாலும் ஆங்காங்கே தமிழர் வாழும்பகுதிகளில் தீபாவளி கொண்டாடப் படும் எங்களுக்கு தீபாவளி பட்டாசு வெடிக்க ஆசை ஆனால் அவற்றை வாங்க வழி இருக்க வில்லை பாட்டி தீர்மானமாகக் கூறி விட்டார்கள் பட்டாசு வாங்க காசு இல்லை என்று … தீபாவளிக்கு முன் தினம் எங்கள் மாமாக்கள் இருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள் ஏதோ வேலையாகநாங்கள்முகம்வாடி இருப்பது கண்டு காரணம் கேட்டுத் தெரிந்து எங்களுக்கு ரூபாய் இரண்டு கொடுத்து பட்டாசு வாங்கிக்க சொன்னார்கள் எங்களுக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை ஊருக்கு வெளியில்கந்தகப் பொடி விற்பவர்களிடம் இருந்து கொஞ்சம் கந்தகப் பொடி வாங்கினோம் சிகரெட்டை பாக் செய்யும் அலுமினியப் பேப்பரை ரோடில் இருந்து பொறுக்கி வந்தோம் ஒரு துளையுள்ள பெரிய சாவியை ஒரு குச்சியில் கட்டினோம் அதே குச்சியில் ஒரு நீளக்கயிறில் ஒரு ஆணியையும் கட்டினோம் பிறகென்ன பட்டாசு வெடிக்கநாங்கள் தயாராகி விட்டோம் கந்தகத் தூளை அலுமினியப் பேப்பரில் சிறு உருண்டைகளாக்கி சாவித்துளையில் போட்டு அதில் கட்டிருக்கும் ஆணியை நுழைத்து ஓஓஓஓங்கி ஒரு போடு ..டமார் என்னும் வெடி அந்த தீபாவளியை மறக்க முடியாது
இன்னொரு தீபாவளி சமயம் நான் பயிற்சியில் அம்பர்நாத்தில் இருந்தேன் என் அண்ணா நேவியில் இருந்தார் பாம்பே கொலாபாவில் ஒரு வீட்டின் அறையில் தங்கி இருந்தார் தீபாவளிக்கு நான்கொலாபா போயிருந்தேன் அந்த விட்டில் இருந்தவர்களுடன் தீபாவளி அவர்கள் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்தார்கள் சாலைக்கு வந்து பட்டாசு வெடிப்பது இயலாத ஒன்று. பட்டாசுத் திரியில் நெருப்பு கொளுத்தி கீழே வீசுவார்கள் அவை அந்தரத்திலேயே வெடிக்கும் மாடி பால்கனியில் ஒரு தாம்பாளத்தில் ஒரு பாட்டிலில் செருகிய புஸ்வாணத்தை கையை நீட்டிப் பிடித்து பற்ற வைப்பார்கள் புஸ்வாணம் சீறி மேலே போகும் அது ஒரு வித்தியாசமான தீபாவளி அனுபவம்
நான் திருமணமாகி என் பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடியது திருச்சி குடியிருப்பில்தான் காலை எழுந்தவுடன் முதலில் ஒரு லக்ஷ்மி வெடி போட்டு பின் குளித்து புத்தாடை உடுத்தி என் பிள்ளைகள் தீபாவளிக்கு ப் பட்டாசுவெடிக்கத் தயாராவார்கள் குடியிருப்பில் காலை ஐந்து மணிமுதல் ஒரே வெடிச்சத்தம்தான் ட்ரெயின் என்றொரு வகை உண்டு அதை ஒரு மாடியில் இருந்து இன்னொருமாடிவரைக் கட்டிய கயிறில் இந்த வகையை வைத்துக் கொளுத்தினால் அது அங்கும் இங்கும் நகருவது பார்ப்பது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிதான்
இன்னொரு நினைவும் வருகிறதுநீலகிரி வெல்லிங்டனில் என் தம்பிகளுடன் பட்டாசு வெடித்தது யார் வீட்டில் அதிகவெடி என்பதை தெரிந்து கொள்ள அதிககுப்பைகள் வெடித்த பட்டாசுகளது இருக்கும் சின்ன வெடிகள் ஓரிரண்டுவெடிக்காமல் இருக்கும் அவையும் அந்தக்குப்பையில் இருக்கும் விடிந்ததும் அவற்றை வெடிக்க முயற்சியும் நடக்கும் அம்மாதிரி சமயம் ஒன்றில் என் தம்பி வாயருகே ஒரு ஊதுவத்தியின் நெருப்பு கொண்டுவெடிக்காத பட்டாசுகளுக்கு நெருப்பு பற்ற வைக்க முயல ஒரு பட்டாசு அவன் வாயருகே வெடிக்க அவன்”அம்மா செத்தேன்” என்று கதறி ஓடி வந்ததும் நினைவுக்கு வருகிறது
அப்பாவி அதிரா எனக்கு இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டிருந்தார்கள் அவருக்காக கீழே என் எண்ணங்களை பதிப்பிக்கிறேன்
பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ?
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்
கட்டத் துவங்கிய தினமென்றும், சமணர் மகாவீரர் நிர்வாணம்
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில் ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை ”தலை முழுகுதல்” எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
“நான்”ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப்
பண்டிகை நன்று கொண்டாடுவோம்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ?
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்
கட்டத் துவங்கிய தினமென்றும், சமணர் மகாவீரர் நிர்வாணம்
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில் ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை ”தலை முழுகுதல்” எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
“நான்”ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப்
பண்டிகை நன்று கொண்டாடுவோம்
(நினைவுகள் முற்றும் நிகழ்வுகள் தொடரும் )
அருமையான நினைவலைகள். அதே போல் தீபாவளி கொண்டாடுவது குறித்த வசன கவிதையும் நன்றாக இருக்கிறது. தாமதமான தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்
Deleteஉங்கள் தீபாவளி நினைவுகள் அருமை. 'டிரெயின்'-எங்க அப்பா நான் 3வது வகுப்பு படிக்கும்போது தீபாவளிக்கு வாங்கினார். அவருடைய உதவியோடு அதனைக் கொளுத்தி மகிழ்ந்தோம்.
ReplyDeleteபண்டிகை என்பதே, ஒரு குடும்பமாக மகிழ்ச்சியோடு கொண்டாடத்தானே. (ஆனால் இந்தத் தடவை வெடிச் சத்தம், பெரிய தலைவலியாக எனக்கு இருந்தது. ரோட்டில் வெடிப்பதற்குப் பதில் அவங்க வீட்டுக்குள்ளேயே வெடித்தால் என்ன என்று தோன்றியது :) )
வெளியில் வெடிக்கதானே வெடிகள் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
Deleteநினைவுகளை அற்புதமாய் மீட்டெடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்! தீபாவளி கொண்டாட்டம் பற்றிய தங்களின் கருத்தில், எனக்கும் உடன்பாடு உண்டு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்நன்றி ஐயா
Deleteநினைவுச்சிதறல்கள் அருமை. தீபாவளி இனித்திருக்குமென நம்புகிறேன்.
ReplyDeleteநன்றாகவே இருந்தது உமேஷ்
Deleteகோவிந்தராஜபுரம், அம்பர்நாத், திருச்சி, நீலகிரி வெல்லிங்டன் என்று ஓவ்வொரு ஊரின், மலரும் தீபாவளி நினைவுகள் ஒவ்வொரு பருவ அனுபவம். நினைவுகளுக்கு முற்றுப் புள்ளி வேண்டாம். தொடரட்டும் உங்கள் நினைவாற்றல்.
ReplyDeleteஅந்தந்த நேரங்களில் அந்தந்த ஊர்களின் நினைவும் கூடவே இன்னுமெத்தனை நாட்களுக்கு பார்க்கலாம்
Deleteஅழகிய நினைவுகள் சார் ..இப்போல்லாம் எல்லாமே கிடைக்குது .அந்த காலத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய வெடியில் இருக்கும் மகிழ்ச்சி இப்போ நிச்சயம் இருக்காது :)
ReplyDeleteநாங்களும் ட்ரெயின் பட்டாசு கொளுத்திருக்கோம் ..எங்க வீட்டு கொய்யா மரத்தில் இருந்து பெரியப்பா வீட்டு கொய்யா மரத்துக்கு கயிறு கட்டி அதில் ட்ரெயின் பட்டாசு கொளுத்தி ரசித்த நினைவுகள் இன்னும் இருக்கு ..
பண்டிகை கொண்டாடுவதில் காரணத்தை இனிய கவிதையாக வடித்த விதம் அழகு
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஏஞ்செல்
Deleteசிறப்பு
ReplyDeleteநன்றி
Deleteசின்ன வயசிலே வெடிகுண்டு தயாரித்த ஆள் நீங்க உங்ககிட்ட ஜாக்கிரதையாக இருக்கனும் இல்லேன்னா பெரிய வெடிகூண்டு செஞ்சு அமெரிக்க மேலே வீசிட்டா வம்மா போச்சே...
ReplyDeleteஅனுபவங்கள் படிக்க இனியமையாக இருக்கின்றன்
அந்தகாலத்தில் என்னொத்த சிறுவர்கள் அனாயாசமாகச் செய்ததே பட்டாசு வெடிக்கச் செய்யும் வித்தை வருகைக்கு நன்றி சார்
Deleteஅருமையான நினைவுகள் ஜி எம் பி ஐயா.. ரெயின் பட்டாசு எனக்குத் தெரியாதே...
ReplyDeleteதீபாவளியை கவிதையில் சொன்ன விதம் அருமை.
இப்போது உங்கள் கேள்விக்கு விடை கிடைத்ததா அதிரா
Deleteஎங்கள் நினைவுகளையும் தூண்டி விட்டு விட்டீர்கள். சுவாரஸ்யமான நினைவுகள்.
ReplyDeleteஎல்லோருக்கு பண்டிகை தின நினைவுகள் இருக்குமல்லவா அதை தூண்டியதில் மகிழ்ச்சியே ஸ்ரீ
Deleteஅப்பவே நீங்க விஞ்ஞானி மாதிரி வேலை செய்து இருக்கீங்களே.. ஐயா
ReplyDeleteதீபாவளிக்கான காரணக்கதைகள் இன்னும் திரிக்கப்படும் நாளை எங்கள் அண்ணன் வீரப்பனை கொன்றதால் தீபாவளி கொண்டாடுகிறோம் என்றும் சிலர் சொல்லலாம்
தொடரட்டும் நினைவலைகள்.
த.ம.5
/தீபாவளிக்கான காரணக்கதைகள் இன்னும் திரிக்கப்படும் நாளை எங்கள் அண்ணன் வீரப்பனை கொன்றதால் தீபாவளி கொண்டாடுகிறோம் என்றும் சிலர் சொல்லலாம்/ இன்னும் சில ஆண்டுகள் போனால் அம்மாதி கடைக்கவும்செய்யலாம் வருகைக்கு நன்றி ஜி
Deleteஉங்கள் கந்தக வெடி தயாரிப்பு அனுபவம்பற்றி கிம் ஜொங்-உன் -இற்குத் தெரிந்தால், உங்களை அங்கு டெப்யுடேஷனில் அழைக்ககூடும் !
ReplyDeleteஅது ஒரு ப்ரிமிடிவ் முறை சார்
Deleteஅருமையான நினைவுகள் ஐயா...
ReplyDeleteவெடிக்காத வெடிகளையும் குப்பைகளையும் குவித்துப் பற்ற வைத்து அதிலும் வெடிகளைப் போட்டு வெடிக்க வைத்து மகிழ்ந்ததை மறக்கமுடியுமா..?
வருகைக்கு நன்றி குமார்
Deleteநிலைவலைகள் என்றுமே இனிமையானவை
ReplyDeleteஉங்களது ஸ்டாண்டார்ட் பின்னூட்டம் என் ஸ்டாண்டார்ட் பதிவுக்கு நன்றி சார்
Deleteமலரும் நினைவுகள் அருமை..
ReplyDeleteஎல்லாருக்கும் தீபாவளி நகிழ்ச்சி இப்படியாகத் தான் இருக்கும்..
வாழ்க நலம்..
அடுத்து தீபாவளி நிகழ்வுகள் சார் வருகைக்கு நன்றி
Deleteதீபாவளி நினைவுகளை ரசித்தோம் ஐயா.
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்
Delete👍👍
ReplyDeleteபுரியவில்லை
ReplyDeleteஇனிய நினைவலைகள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி மேம்
ReplyDelete