நகைத்துச் செல்ல
-----------------------------
சென்றபதிவின்
பின்னூட்டத்தில் அதிரா அவர்கள் என்
நகைச்சுவை உணர்வு வெளிப்படுவதாகக் கூறி இருந்தார்
நானும் நகைச் சுவை உணர்வுடையவந்தான்
ஆனால் ஒரிஜினலாக சொல்லத்தெரியாது for that matter பலரும் பகிரத்தானே செய்கிறார்
. அதுபோல் எனக்கு வந்த மின்னஞ்சல பகிர்வுகளில் சில இதோ
ஒருவன் ஒரு புதிய ரெஃப்ரிஜெரேடர் வாங்கினான். அவனுடைய பழைய
ஃப்ரிட்ஜை வீட்டின் முன்னால் இருந்த காலி இடத்தில் வைத்து, “நல்ல நிலையில் உள்ளது.
தேவை உள்ளவர் இனாமாக எடுத்துப் போகலாம் ”என்று ஒரு அட்டையில் எழுதி அருகே தொங்க
விட்டிருந்தான். இரண்டு மூன்று நாட்களாகியும் அதை யாரும் எடுத்துப் போகவில்லை.
அடுத்த நாள்” ஃப்ரிட்ஜ் விற்பனைக்கு. நல்ல
கண்டிஷன். விலை ரூ.200-/
என்று அட்டையை மாற்றி எழுதினான். அதற்கு மறுநாள் ஃப்ரிட்ஜ்
திருட்டுப் போயிருந்தது.!
--------------------
--------------------
ஒரு நாள் நண்பர்களுடன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன்.
திடீரென்று ஒருவன் “அதோ ,அந்த செத்த பறவையைப் பார் “ என்று கத்தினான். அநேகமாக
அனைவரும் வானத்தை நோக்கி “
எங்கே “ என்று கேட்டனர்.!
குடி போக ஒரு வீடு வாடகைக்குத் தேடிக்
கொண்டிருந்தான் நண்பன் ஒருவன். வீட்டு ப்ரோக்கரிடம் ” வடக்கு திசை எது ?காலையில் எழுந்திருக்கும்போது
சூரியக்கதிர் முகத்தில் அடிக்காமல் இருக்க வேண்டும் “ என்றான்.சற்று நேரம் கழிந்து
அவன் மனைவி “ சூரியன் வடக்கில் உதிக்கிறதா “ என்று கேட்டாள்.” சூரியன் கிழக்கில்தான் உதித்துக்
கொண்டிருக்கிறது “என்று பதில் சொன்னான் நண்பன். ”இப்போதெல்லாம் நடக்கும்
நிகழ்வுகளை நான் கண்டு கொள்வதில்லை “ என்று கூறினாள் நண்பனின் மனைவி.!
இக்கட்டான நிலையில் காரில் அகப்பட்டுக் கொண்டால் இருக்கை பெல்டை அறுத்து விடுவிக்கும் கருவி ஒன்று என் சகோதரியின் காரில் உள்ளது. அவள் அதை பத்திரமாக காரில் பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறாள்,!
--------------------------------------------------------
விமானம் இறங்கி வெளியே வரும்போது என் லக்கெஜ் கன்வேயரில் வரவில்லை. LOST
LUGGAGE ஆஃபிஸுக்குச் சென்று புகார் கொடுத்தேன். அங்கிருந்த பெண்மணி ஆறுதலாக ‘சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். சொல்லுங்கள். நீங்கள் வரவேண்டிய விமானம் வந்துவிட்டதா?” என்று கேட்டாளே பார்க்கலாம்.!
---------------------
ஒரு PIZZA பார்லரில் பணியில் இருந்தபோது ஒருவர் தனியாக வந்து ஒரு PIZZA ஆர்டர் செய்தார்.கடை சிப்பந்தி அதை நான்கு துண்டுகளாக நறுக்கவா இல்லை ஆறு துண்டுகளாக நறுக்கவா என்று கேட்டார். வந்தவர் சற்று யோசித்து ” நான்கு துண்டுகளாகவே நறுக்குங்கள். ஆறு துண்டுகளும் சாப்பிடும் அளவுக்கு எனக்குப் பசி இல்லை” என்றார்.!
இது நான்சி பெலோசி என்னும் பிரபலம் பற்றிய உண்மைக் கதை என்று சொல்லப் படுகிறது. ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேச ஒரு பிரபல மனநிலை மருத்துவர் வந்திருந்தார். அவரிடம் நான்சி “ சாதாரணமாய்த் தெரியும் ஒருவர் மன நிலை பாதிக்கப் பட்டவரா என்று எப்படிக் கண்டு பிடிப்பீர்கள் ?” என்று கேட்டாராம். ” ஒரு சுலபமான கேள்வி கேட்போம். அவர் கூறும் பதிலில் அவரைப் பற்றித் தெரிந்துவிடும் “என்றார்.
“ என்ன மாதிரியான கேள்வி.?”
“ காப்டன் குக் மூன்று முறை உலகை சுற்றி வலம் வந்தார். அதில் ஒரு முறை அவர் உயிர் விட்டார் எந்த முறை.?”
” வேறு மாதிரியான கேள்வி கேட்க மாட்டீர்களா. நான் சரித்திரத்தில் கொஞ்சம் வீக் “
என்று கூறினாராம் நான்சி பலோசி.!
-------------------------------
ஒருவன் காரில் ட்ரைவ் செய்து கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ட்ராஃப்ஃபிக் கேமரா மின்னியது. அதிக வேகத்துக்காக இருக்கும் என்று எண்ணிய அவன் சற்றுக் குறைந்த வேகத்துடன் அதே இடத்தை மறுபடியும் கடந்தான். இப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. இன்னும் குறைந்த வேகத்தில் மூன்றாம் முறை யும் சென்றான். அப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. குழப்பமாகி நத்தை வேகத்தில் நான்காம் முறை அந்த இடத்தைக் கடந்தான். இப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. ஐந்தாம் முறை சிரித்துக் கொண்டே மெதுவாக அவன் அந்த இடத்தைக் கடந்து சென்றான். இரண்டு வாரம் கழிந்து அவனுக்கு சீட் பெல்ட் போடாமல்
ஐந்து முறை வண்டி ஓட்டியதற்காக அபராதம் கட்ட நோட்டிஸ் வந்திருந்தது
(எனக்கு வந்திருந்த
மின் அஞ்சலில் இருந்து தமிழாக்கம் செய்தது)
எல்லாமே இரசிக்க வைத்தது குறிப்பாக
ReplyDelete//செத்த பறவை வானத்தில் எப்படி பறக்கும் ஸூப்பர்//
பிட்சா அருமை பகிர்வுக்கு நன்றி
அது பொதுவான இயல்பு பலர் எதையாவது குறித்துக்காட்டினால் அதை நோக்க மனம் விரும்பும் அதுவே நகைச் சுவைக்காக செத்த பறவை யாகியது
Deleteமனநிலை மருத்துவர் பற்றி ஏற்கெனவே படிச்சேன். மற்றவை புதிது. ரசிக்கும்படி இருந்தது!
ReplyDeleteஇது ஒரு பொறுப்பில் இருப்பவர் எப்படி அறியாமையில் இருக்கிறார் என்பதைக் காட்ட
Deleteஆங்கிலத்திலிருந்து தமிழ்ப்படுத்தும்போது புன்னகை வந்தது. Native joke மாதிரி இல்லை. ஆனாலும, ரசித்தேன்
ReplyDeleteபெரும்பாலும் மக்கள் இயல்பைத் தொட்டுச்செல்வதாலேயே பகிர்ந்தேன் ஜோக்குக்காக அல்ல
Delete
ReplyDeleteசில நகைச்சுவைகள் படிக்காதது இங்கு படித்து ரசித்தேன்
எல்லாவற்றையும் படித்து இருந்தால் இப்பதிவு ஒரு வேஸ்ட்
Deleteநகைச்சுவையிலும் உங்களின் ரசனை. அருமை.
ReplyDeleteநகைச் சுவை ரசனை என்பதை விட மக்கள் இயல்பு பற்றியது ஆனதால் பகிர்ந்தேன் என்பதே சரி
Deleteபடித்து ரசித்தேன்.
ReplyDeleteநன்றி இளங்கோ சார்
Deleteபடித்தேன்.. ரசித்தேன்...
ReplyDeleteரசனைக்கு நன்றி சார்
Deleteஒன்றிரண்டைத் தவிர மற்றவை எனக்கு புதுசு. ரசிரித்தேன்.
ReplyDeleteபல செய்திகளைப் படிப்பவர் நீங்கள் ஒன்றிரண்டு எது என்று கூறி இருக்கலாமோ
Deleteசிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவைகள் ஐயா!
ReplyDeleteமனித இயல்பு பற்றி சிந்திக்க வைத்தால் மகிழ்ச்சி
Deleteரசித்தோம் சார்! எல்லாமே புதுசு எங்களுக்கு...
ReplyDeleteபலரது பின்னூட்டங்களும் ஏனோ ஒரே பாதையில் செல்வது போல் இருக்கிறது எனக்கு
Deleteஅனைத்தையும் இரசித்தேன்! ஆனாலும் அதிகம் இரசித்தது நான்சி பலோசியின் பதிலைத்தான்.
ReplyDeleteஎந்த நிலையில் இருந்தாலும் அவர்களும் சாதாரண மனிதர் தானே வருகைக்கு நன்றி ஐயா
ReplyDeleteSuch posts are always interesting. Thank you for sharing enjoyable humour
ReplyDeletethank you for your comments madam
ReplyDelete😊😊😊😊😊😊
ReplyDelete------- நன்றி
ReplyDelete--------
சிலவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன். ஏர்போர்ட் லக்கேஜ் மற்றும் நான்சி பல்லோசி நகைச்சுவை அருமை. சில சமயம் மனிதர்கள் மனதால் சூழ்நிலையை விட்டு விலகி இருப்பதால் இப்படிப்பட்ட பதில்கள் தரப்படுகின்றன.
ReplyDeletewww.onlinethinnai.blogspot.com
பெரும்பாலான நகைச்சுவை நிகழ்ச்சிகள் எங்கோ யாராலொ சொல்லப்படுபவையே
ReplyDelete