Wednesday, February 7, 2018

கூட்டாஞ்சோறு


                                     கூட்டாஞ்சோறு
                                     -------------------------
முதலில் ஒரு கர்நாடகப் பாட்டு மேற்கத்திய இசையில்



செய்யாத குற்றமென்னும் பதிவு எழுதி  இருந்தேன் அதில் முதுமையால் வரும் சில பிரச்சனைகளைச் சொல்லி  வயோதிகம்  செய்யாத குற்றத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையா என்று கேட்டிருந்தேன்  அது சில பின்னூட்டங்களைக் கொண்டுவந்தது
அதன் மூப்பு இயற்கையானது; யதார்த்தமானது. தவழந்த பருவத்திலிருந்து தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறதே! உள்ளம் சோர்வுற்றாலும் அதற்கும் சேர்ந்து இதுவும் சோர்வுற்றது. இப்பொழுது இதற்கு சோர்வு வரும் பொழுது…….?.

உள்ளம்--உடல் என்னும் இரட்டை மாட்டு வண்டி சவாரியில், மாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு தானே தவிர பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டையும் தட்டிக் கொடுத்து பயணிக்க வேண்டியது தான்!
வயொதிகம் என்பது புறத்தோற்றமே உள்ளம் இளமையாய் இருப்பதே முக்கியம்
 அயல் நாடுகளில் பெரும்பாலான சாதனைகள் பணி முதிர்வுக்குப்பின்தான் வயது முதிர்ந்தோரால்தான் நிகழ்த்தப்படுகின்றன. இது உண்மை.
முதுமை வரமாகவோ சாபமாகவோ ஆக்கப்படுவது
இம்மாதிரியான பின்னூட்டங்கள் என்னை முதுமை ஒரு பரிசு என்னும்  ரீதியில் எழுத வைத்தது  
முதலில் முதுமையின்  சில பயன்பாடுகளைப் பட்டியலிட்டேன்  அதில்

நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத்து  வைத்திருக்க வேண்டும்.
என் இளமையின் சிரிப்பே என்
முகச் சுருக்கத்தின் அடையாளம்
சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
இருந்து இறந்தோர் ஏராளம்.

அனுபவ முதிர்ச்சியாலும், உண்மைத் தன்மையாலும் முதுமையினை வென்ற இளமையான மனத்தினை  பாடல் வரிகளில் கொண்டுவர விரும்பினேன்
 .
 வயதாகும்போது உள்ளதை உணர்வது
எளிதாகிறது. ஏனையோர் நினைப்பேதும்
என்னை பாதிக்க விடுவதில்லை.

விட்டு விடுதலையான ஒரு நினைப்பு இருப்பதைக்காட்டினேன்
என்னதானெழுதினாலும் முதுமையை அனுபவிக்க நோயற்ற உடல் வேண்டும்
கற்பனை உலகில் வாழப் பழக வேண்டும் 

சில வேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று பாரதி எழுதினான் ஆனால் சில சம்பவங்கள் நிகழும்போது வேடிக்கை மனிதர் போல் கை கட்டி இருக்கத்தான் வேண்டி இருக்கிறது நான் அவற்றுக்கு எதிராக என்ன செய்ய முடியும் எதைச் செய்வதானாலும் உடலில் உறுதி வேண்டுமல்லவா

ஆண்டுகள் கழியும்போது சில நேரம்
மனமுடைந்து போயிருக்கிறேன்.- உற்றார்
இழப்பும்,சிறார்களின் தவிப்பும்,அன்பின்
புறக்கணிப்பும்,போதாதா மனமுடைக்க?.
நிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்
நொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.

முதுமையை அனுபவிக்கும்போது மேலே வரும் வரிகள் என்ன சொல்ல வருகிறது என்னும் கேள்வியும் எழுந்தது முதுமையை ரசிக்கும் போதுஎல்லாவித உணர்வுகளும்தானே கூடவே வருகிறது

என் பதிவுகளுக்கு வரும்  பின்னூட்டங்களை நான் ரசித்துப் படிப்பேன்  அது என் எழுத்தை நான்  ரசிப்பது போல் என்று நண்பர் ஒருவர் கூறி இருந்தார் அதுவும் சரிதான்  என் எழுத்துகளின் முதல் ரசிகன் நான் பின்னூட்டங்கள் எனக்கு வாசிப்பவர் பற்றி பல விஷயங்களைக் கூறும் பலரது பின்னூட்டங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை மொய்க்குமொய் என்று வரும் பின்னூட்டங்கள் பற்றி நான்  அதிகம் கூற வேண்டாமே நான்யார் யாருடைய பதிவுகளைத் தொடர்கிறேனோ அவற்றுக்கு என்கருத்துகளைக் கூறிவிடுவேன் என்பதிவுகளுக்கு 172 பின் தொடர்பவர்கள்  இருப்பதாக கூகிள் கூறு கிறது ஆனால் எல்லோரும் படிக்கிறார்களா  இல்லையா என்பதுதெரிவதில்லை  சிலருக்கு என்பதிவு பற்றிய செய்தி அனுப்பினால் வருகிறார்கள் எதையும் நேராகச் சொல்வது பலருக்கும்  விருப்பமில்லை காழ்ப்பு இல்லாமல் கருத்து சொல்வது சரியே என்று நினைக்கிறேன் என் பதிவுகளின்  நோக்கத்தைக் கூறி இருக்கிறேன் சில மாதங்களுக்குமுன்   இது பற்றி சற்று விரிவாகவே எழுதி இருந்தேன் பார்க்க
 
 அதிகம்பாராட்டாத வலைப் பதிவர் என்னைப் பாராட்டி  கே பாலசந்தர்  பாசமலர் என்னும்  படத்தில் வந்த வசனம்  அப்படம்வெளிவருவதற்கு முன்பே அதேபோல் என்  நாடகத்திலும் இருந்ததைப் பாராட்டி எழுதி இருந்தார் இதையெல்லாம்  நினைவு படுத்த நான் எனக்கு வந்த பின்னூட்டங்களை  மீண்டும் படித்து உற்சாகப் படுத்திக் கொள்வது     தவறில்லையே என் எழுத்துகளை நான் ரசித்துப்படிப்பது மட்டுமல்லாது  பின்னூட்டங்களையும்  பின் நோக்கிப் பார்ப்பேன் 

உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையில் உயிர் கொடுக்கும் முயற்சிதான் என் எழுத்துகள் பலவும்  பொழுதுபோக்குவதோடு என் எண்ணங்களையும் பகிரவும் வழி அல்லவா என் எழுத்துகள்  

20 comments:

  1. ஆம்.. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். உள்ளத்து உணர்ச்சிகளுக்குக் கொடுக்கும் வார்த்தை ஓவியமே எழுத்து. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எழுத்துகளை ரசிக்கிறீர்களா நன்றி சார்

      Delete
  2. >>> நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
    கொடுத்து வைத்திருக்க வேண்டும்..<<<

    உண்மையான வார்த்தைகள்..

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் தேற்றிக் கொள்ள வேண்டும் நன்றி சார்

      Delete
  3. உங்கள் அசைபோடல் சுவாரஸ்யமாகவும், எங்களையும் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. என்ன சிந்திக்கிறிஒஇர்கள் என்றும் சொல்லலாமல்லவா நன்றி ஸ்ரீ

      Delete
  4. // அதிகம்பாராட்டாத வலைப் பதிவர் என்னைப் பாராட்டி கே பாலசந்தர் பாசமலர் என்னும் படத்தில் வந்த வசனம் அப்படம்வெளிவருவதற்கு முன்பே அதேபோல் என் நாடகத்திலும் இருந்ததைப் பாராட்டி எழுதி இருந்தார் //இது என்ன? புரியலை! பாசமலர் படம் வந்தப்போ பாலசந்தர் சினிமாத்துறைக்கு வரலைனு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. /1963 பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.

      சிவாஜியும், ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளி, தொழிலாளி- (அட! இங்கே கூட அப்படித்தான்!) இருவரும் உணர்ச்சியுடன் வார்த்தையாடிப் பேசும் (மோதும்) ஒரு கட்டத்தில் ஜெமினி பேசுவதாக ஒரு வசனப் பகுதியும் இப்படியாக ஒரு ஆங்கில வார்த்தைத் தொடருடன் "Those days were gone Mr.Raju! TO DAY ALL FOR EACH AND EACH FOR ALL" என்று முடியும்!

      ஆக, சினிமாவுக்கு போயிருந்தாலும் கலக்கித்தான் இருந்திருப்பீர்கள், போலிருக்கு!

      கே பாலசந்தர் என்று எழுதிவிட்டென் போலிருக்கிறது அந்தப் பாராட்டு வரிகளைக் கொடுத்து இருக்கிறேன்

      Delete
  5. காணொளியில் அந்தப் பெண் பாடுவதை ஏற்கெனவே கேட்டிருக்கும் நினைவு! ஆனாலும் அந்தப் பெண்ணின் குரல் மிக சரளமாக எங்கெல்லாமோ சஞ்சாரம் செய்கிறது! நல்ல குரல் வளம்.ஆனால் என்னால் இதை ரசிக்க முடியவில்லை! :))))

    ReplyDelete
    Replies
    1. இசையை எப்படியும் ரசிக்கலாம் . இப்படியும் ஒரு விதம்

      Delete
  6. நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
    கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//

    அதோடு நோய் நொடி இல்லாமல், கவலை இல்லாமல் வாழ கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

    பாடல் பகிர்வு கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. முதுமை ஒரு பரிசு என்று எழுதி இருந்தபோது ரசிக்கவில்லையா முதுமையை பரிசாகவும் தண்டனையாகவும் ஏற்றுக் கொள்ளலாம் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  7. கன்னச்சிரிப்பின் சுருக்கங்களை காணாமல் மறைந்தோர் ஏராளம்

    ஆம் ஐயா அதைக்காணவும் பாக்கியம் வேண்டுமே...

    உள்ளம் தங்களைப்போல் இளமையாய் இருந்தால் இன்னும் எழுதி சாதிக்கலாம் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. முன்பு எழுதி இருந்தபோது பாடல் வரிகளை பலரும் கவனிக்க வில்லை போல் இருக்கிறது நன்றிஜி

      Delete
  8. பாட்டு ஒரு வழி போகுது. பின்னணி இசை வேற வழில போகுது. மொத்தத்துல எனக்கு சர்க்கரைப் பொங்கல், பிட்சா ஹட் மெனுல இருக்கறமாதிரியே ஒரு ஃபீலிங். (அதாவது சர்க்கரைப் பொங்கல், தொட்டுக்க கெச்சப், சீஸ் ஸ்டிக்ஸ் ஒரு தட்டுல வச்சமாதிரி சம்பந்தமில்லாத கலவையாத் தோன்றியது) பெண் குரல் நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இது மாதிரிப் பாடல்களை இளையோர் அதிகம் ரசிக்கின்றனர் இசை எப்பவும் சுவை அதை அணுகும் விதத்தில் அணுகினால் மாடர்ன் கர்நாடக இசை

      Delete
  9. வயதாகும்போது உள்ளதை உணர்வது
    எளிதாகிறது. ஏனையோர் நினைப்பேதும்
    என்னை பாதிக்க விடுவதில்லை.

    தங்களின் இளமையின் ரகசியமும்
    வெற்றியின் ரகசியமும் இதுதான் ஐயா

    ReplyDelete
    Replies
    1. அனுபவம் கற்றுக் கொடுத்த பாடங்கள் சார்

      Delete
  10. பாட்டு is not my cup of Tea.

    முதுமை காலத்தின் கட்டாயம். என்ன ஒன்னு பயணம் செய்யும்போது கொஞ்சம் கஷ்டமாப் போயிருது....

    ReplyDelete
  11. பழைய நிகழ்வுகளை நினைத்து அசைபோடுவது முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை தடுக்க உதவுமாம். எனவே பழைய நிகழ்வுகளை எழுதுங்கள். நாங்களும் மகிழ்கிறோம்.

    ReplyDelete