சென்னையில் சில நாட்கள்
-------------------------------------------
சென்ற
கோடையில் சென்னைக்கு சென்று வந்தேன் என் மகனின் புதிய வீட்டு கிரகப்
பிரவேசத்துக்குச் சென்றது அதன் பின் இப்போது ஃபெப்ருவரி மாச நடுவில் என் மகன்
இங்கு வந்து எங்களை கூட்டிக் கொண்டு சென்றான் என் சென்னைப் பயணம் பற்றி ஸ்ரீராம் தில்லையகத்து கீதா செல்லப்பா மற்றும் நெல்லைத்தமிழனுக்கு அறிவித்திருந்தேன் இம்முறை நாங்கள் அவர் வீட்டுக்கு வரவேண்டும்
என்று செல்லப்பா கூறி இருந்தார் என்
மகன் தங்கி இருக்கும் பெரும்பாக்கம் சென்னையின்
வெளிப் புறம் இருக்கிறது செண்ட்ரலிலிருந்து சுமார் 30 கி மீ தூரமிருக்கும் பொதுவாக சென்னை வந்தால்
பதிவர்கள் சிலரை நான் சந்திக்க
அழைப்பதுண்டு இம்முறை இருப்பிடம் தூரம்காரணமாக இருந்ததாலும் யாருக்கும் தொந்தரவு தர விரும்பவில்லையாதலாலும்
யாரையும் வேண்டி வருந்திக்
கூப்பிடவில்லை
திரு
செல்லப்பாவின் வேண்டுகோள் பற்றி என்
மகனிடம்கூறி இருந்தேன் அவன் எங்களை அவனது காரில் கூட்டிச் சென்றான் கூகிள் வரைபடமே நாவிகேட் செய்ய உதவியது
செல்லப்பாஎன் மகன்வீட்டிலிருந்து சுமார் அரை மணி தூரத்தில் அவரது குடியிருப்பு இருப்பதாகக் கூறி இருந்தார் ஆனால் ஷார்ட்கட்டில் பயணம் செய்தும் ஒருமணி
நேரம் ஆயிற்று அப்போதுதான்
திரு செல்லப்பா வேளச் சேரியில் என் மகன் வீட்டுக்கு வர எத்தனை சிரமப்
பட்டிருப்பார் என்று யூகிக்க
முடிந்தது மாலை சுமார் நான்கு மணி
அளவில் அவர் வீட்டுக்குச் சென்றோம் சுமார்
ஒரு மணிநேரம் அவருடனும் அவர் மனைவியுடனும்
அளவளாவினோம் தோசையும்
காப்பியும் கொடுத்தார்கள்
பிறகு
அங்கிருந்து திரும்பினோம்
திரு செல்லப்பா தம்பதியுடன் |
திரு செல்லப்பாவீட்டு பால்கனி தோட்டம் |
என் மகன்
சொன்னது சென்னையின் வடக்கு பாகமும் பழைய மாமல்லபுரம் இருக்கும் இடங்களும்
மக்களுமே மாறுபட்டவர்கள் என்றும் வட பாகத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பகுதியில் இருப்பவருக்கும் வாழ்க்கை
முறையிலும் அணுகலிலும் நிறையவே
வித்தியாசங்கள் இருக்குமென்றும் இங்கிருப்பவர்களுக்கு வடசென்னை ஒத்துவராது என்றும் அவனது அபிப்ப்ராயத்தைக்கூறினான்
அங்கும் ஏற்ற தாழ்வுகள் பிரச்சனை
என்
மருமகள் ஒரு சாய்பாபா பக்தை அடுத்த நாள் சனிக்கிழமை ஓ எம் ஆர் சாலையில் இருக்கும் சீரடி பாபா கோவிலுக்குப் போனோம் எனக்கு அதுஒரு வித்தியாசமான அனுபவம் நான் ஷீரடியில் இருக்கும் சாய் பாபா கோவிலுக்குப் போய்
இருக்கிறேன் எல்லாமே வணிக மயமாய்
இருந்தது. ஆனால் இங்கே ஒரு ட்ரஸ்ட் நடத்தும் இந்தக் கோவில் ஆச்சரியப்படவைத்தது அமைதியான சுற்றுப் புறம் கோவிலில் உண்டியலோ எதற்கும் கட்டணமோ கிடையாதுமுக்கியமாக பணம் எதற்கும் பணம்
பெறுவது தடைசெய்யப் பாட்டிருக்கிறது
வழிகாட்டி |
பாபா கோவிலில் பதாகை |
தியான மண்டபத்தில் பாபாவின் சிலை |
பாபாவி வாக்கு கள் |
வரும்வழியில் கடல் நீரை குடி நீராக மாற்றும் டிசேலியனேஷன் ப்லாண்ட் இருப்பதாகக் கூறினான் ஏதோ அந்தாசாக படம் பிடித்துக் கொண்டேன்
கடல் நீர் குடிநீராக மாறும் இடம் ? |
காலை சிற்றுண்டி அங்கே இருந்த அன்ன பூர்ணாவில் உண்டோம் மினி ப்ரேக் ஃபாஸ்ட்
என்று பல ஐட்டங்கள் எனக்கு மிகவும்
போதுமானதாக இருந்தது
மினி டிஃபின் ? |
.என்
மகன் வீட்டை பற்றி முன்பே எழுதி இருக்கிறேன் அந்தக் குடியிருப்பை சுற்றி வந்தால் சுமார் ஒரு கி மீ நேரமாகும்
மாலை வேளைகளில் நான்
நடைப் பயிறசிக்குப் போவதோடுசரி
எங்கு போகவும் தூரம் ஒருபிரச்சனை
ஜனங்களை பார்ப்பதே அரிதாக இருந்தது
எதற்கும் மகனது உதவி தேவை கணினியில் இருந்தும் வலைஉலகில்
இருந்தும் விலகி இருந்தேன் என்
மொபைலில் சில விஷயங்களைக் கற்று தந்தான்
என் மகன் ஒரு விஷயம் எனக்குப்
புரியவில்லை என் பேரனின் பாத் ரூம் கதவில் எழுதி ஒட்டப்பட்டிஎருந்த
வாக்கியம் அது பற்றிக் கேட்ட போதுபேரன் ஒரு ந்முட்டுச் சிரிப்பு சிரித்தான் ஒரு நாள் மாலை என் பேரன் எங்களுக்காக பூரி பட்டூரா
செய்து தந்தான்
பாத்ரூம் கதவில் |
பேரனின் சன்னா படூரா |
பெங்களூருக்கு வரும் சதாப்தி அதிகாலை ஆறு மணிக்கு புறப்படுகிறது
ரயில் நிலையத்துக்கு வர காலை நான்கு மணிக்கே கிளம்ப வேண்டி இருந்தது சதாப்தி ர்யில் புறப்படும் நடை மேடை பற்றி ரயில்வே ஊழியர் ஒருவரிடம் என் மகன் கேட்டான் என்னை பார்த்த அவர் நடைமேடையில் தூரம் நடக்க வேண்டும் என்றும் என்னை ஒரு வீ; சேரில் கூட்டிப்போகவும் கூறினார் எனக்கு அது பிடிக்காது என்றும் நடக்கவே விரும்புவேன் என்றும் மகன் கூற அவர் ஆச்சரியப் பட்டு எனைப் புகழ்ந்தாராம்
பெங்களூரில் என் இரண்டாம் மகன் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தான் இரண்டாம் மருமகள் மருத்துவ மனையில் அட்மிட் ஆகி இருந்தவள் அன்றுதான் வீட்டுக்கு வந்திருந்தாள் பொதுவாக எங்கள் சென்னை வருகையின் போது ஒரு மழையாவதுபெய்யும் இந்த்முறை பெய்யவில்லை
பெங்களூரில் என் இரண்டாம் மகன் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தான் இரண்டாம் மருமகள் மருத்துவ மனையில் அட்மிட் ஆகி இருந்தவள் அன்றுதான் வீட்டுக்கு வந்திருந்தாள் பொதுவாக எங்கள் சென்னை வருகையின் போது ஒரு மழையாவதுபெய்யும் இந்த்முறை பெய்யவில்லை
அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியான விசயம் ஐயா.
ReplyDeleteதிரு. இராய.செல்லப்பா ஸார் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
சென்னை வருகையைப் பதிவாக்க நாட்கள் அதிகமாயிற்று
Deleteமகிழ்ச்சியான பதிவு. சுவாரஸ்யமான சந்திப்பு. உங்கள் பேரனின் பாத்ரூம் கதவில் எழுதியிருந்த வாசகத்தின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. வாழ்த்துகள்.
ReplyDeleteநியூட்டனின் விதியை அவன்பாத்ரூமில் எழுதி வைத்து நம். 2 போவதோடு சம்பந்தப்படுத்தி இருக்கிறான் என்பது தெரிகிறது
Deleteதமிழ்! எப்படி இருக்கீங்க?.. உங்கள் பின்னூட்டத்தை இங்கு பார்த்து மிகவும் மகிழ்ச்சி.
Deleteதமிழ் இளங்கோ வின் வருகை மகிழ்ச்சி தந்தது
Deleteநல்லது
ReplyDeleteநன்றி சார்
Deleteகொசகொசவென்று முற்றுப்புள்ளி கூட வைக்காமல் எழுதுவதை விட இப்படி வார்த்தைக்கு வார்த்தை இடவெளி விட்டு எழுதினால் தான் அழகாக வாசிக்க எளிதாகவும் இருக்கின்றது.
ReplyDeleteகவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் நன்றி
Deleteமழை பெய்யாததற்குக் காரணம் நீங்கள் முன் செய்த நல்ல காரியங்களினால் சேர்த்த புண்ணியம் தீர்ந்து போனதினால் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபுண்ணியங்களையும் சேமிக்க வேண்டும் போல் இருக்கிறதே
Deleteகந்தசாமி சார்... உங்க புதிய இடுகை காணலை. ஆனால் உங்கள் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை.
Deleteதிரு கந்தசாமி சார் ஒரு விசேஷ மனிதர் நகைச்சுவை உணர்வுடன் சற்றுக் கோபக்க்காரரும் கூட என்றுநான் நினைத்ததுண்டு
Deleteசொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆரம்பம் எதுவாக இருந்தாலும் தொடர்ச்சி கலையாமல் எழுத உங்களுக்கு வைவந்திருக்கிறது. கடைசியில் முடித்த 'பொதுவாக எங்கள் சென்னை வருகையின் போது ஒரு மழையாவதுபெய்யும் இந்த்முறை பெய்யவில்லை'' என்ற
ReplyDeleteஅந்த வரியை மிகவும் ரசித்தேன். அருமையான முடிப்பு.
ஊக்கமளிக்கும் கருத்துக்கு நன்றி சார்
Deleteஉங்கள் சென்னை விஜயத்தில் ஶ்ரீராம், தி/கீதா போன்றோரையும் சந்திக்க முடிந்ததா? வெகு நாட்கள் உங்களைக் காணவில்லை என்றதும் கொஞ்சம் கவலையாக இருந்தது. உங்கள் மெயில் பார்த்ததும் புரிந்தது. பேரனின் குளியலறைக் கதவின் எழுத்துக்களின் மர்மம் புரியத் தான் இல்லை. இரண்டாவது மருமகளுக்கு உடல்நலம் பூரணமாகக் குணமடையப் பிரார்த்தனைகள்.
ReplyDeleteதி கீதா முடிந்தால் வருகிறேன் என்றார் ஸ்ரீ ராம்பெரும்பாக்கம் எங்கிருக்கிறது என்று கேட்டார் எல்லாம் என்வயதின் கோளாறு பேரனின் எழுத்துகளில் ஏதோ சொல்ல முயன்றிருக்கிறான் இரண்டாம் மருமகள் இப்போது நலமே
Deleteபடங்கள் வழக்கம் போல என்றாலும் பிர்காலத்தில் நினைவுகளை மீட்டெடுக்க துணை புரியும் என்பதினால் பொக்கிஷம். பாத்ரூம் கதவு வாசகங்கள் யோசித்துப் பார்க்க சிரமப்படுத்துவோருக்கு நீங்களே சொல்லி விடலாம். உங்கள் பேரனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.
ReplyDeleteநான்கேட்ட போது அவன் நமுட்டுச்சிரிப்பு சிரித்தான் என்று எழுதி இர்ந்தேனே என் கெஸ் வர்க் தவறாகலாம்
Deleteபெரும்பாக்கம் இல்லையா? நினைக்கவே மலைப்பாகத் தான் இருக்கிறது. என்ன செய்கிறீர்கள் என்றால் போரூரில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு நீங்களே உங்கள் மகன் காரில் அடுத்த முறை சென்னை வரும் போது வந்து விடுங்கள்.
ReplyDeleteஅடுத்தமுறை என்பது எப்போது என்று தெரியவில்லை அப்படியே வந்தாலும் எங்காவது உங்கள் வீட்டில் ஆனாலும் பலரயும் சந்திப்பதாக இருக்க வேண்டுமெறு நினைக்கிறேன்
Deleteஅப்படியே ஆகட்டும். ஸ்ரீராம் நிச்சயம் வருவார்.
Deleteபலரும் கூடினால் மகிழ்ச்சியே
Deleteஆம், தூரம் சற்று யோசிக்க வைத்தது உண்மைதான். பேரன் எழுதி இருப்பது Newton's Second Law of Motion!!
ReplyDeleteநானே அப்படி நினைத்துதான் யாரையும் வருந்திக்கூப்பிடவில்லை நியூட்டனின் விதியை நான் காலைக் கடனுடன் சம்பந்தப்படுத்திப்பார்த்தேன் வருகைக்கு நன்றி சார் நியூட்டனின் விதிகளில் ஒன்று என்று நீங்கள் சொல்லும்போதுதான் தோன்றியது வருகைக்கு நன்றி ஸ்ரீ
Deleteஎனக்கும் இதான் தோன்றியது. நிச்சயப்படுத்திக் கொள்ள நியூட்டனின் விதிகளைக் கூட சரிபார்த்துக் கொண்டேன். யார் சொல்லப் போகிறார்கள் என்பதற்காகக் காத்திருந்தேன்.
Deleteஉங்கள் பேரனுக்கு எங்கள் சார்பில் கங்கிராட்ஸ் சொல்லி விடுங்கள். இந்த மாதிரியான வாழ்த்துக்கள் குழந்தைகளை மேலும் உற்சாகப்படுத்தும்.
நீங்களும் அப்படி யோசித்தீர்களா too conservative to share ?
Deleteநான் எதையும் முந்திக் கொண்டு சொல்வதை விட யார் யார் என்னன்ன சொல்கிறார்கள் என்பதில் அதிக கவனம் கொள்ப்வன். பிறர் பதிவுகள் என்றாலும் பின்னூட்டங்களைக் கவனமாகப் படிப்பவன். அதனால் தான்.
Deleteஎன் சுபாவம் யார் எப்படிச் சொன்னாலும் என்மனதில் இருப்பதைப் பகிர்ந்துவிடுவேன்
Deleteசென்ற முறை சென்னை வரும்போது அழைத்து இருந்தீர்கள்! என்னால் வர இயலவில்லை! இந்த முறை நான் வலையுலகில் விலகி இருந்தமையால் உங்கள் வருகை அறிய முடியவில்லை! சாய்பாபா கோயிலில் நன்கொடை இல்லை என்பது ஆச்சர்யமான விஷயம். நன்றி சார்!
ReplyDeleteநீங்களும் தூரத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியும் வலையில் எழுதாமல் இருந்தாலும் இதுபோல் அவ்வப்போது வந்துபின்னூட்டம் எழுதலாமே சாய்பாபா கோவில் என்னையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது உண்மை
Deleteசெல்லப்பா சாரை சந்திக்கமுடிந்ததா? நல்லது.
ReplyDeleteபிரயாணம் (பெங்-சென்) செய்வது கஷ்டமாக இல்லையா?
என்னை கூட்டிச் செல்ல யாராவதுமுன்வந்தால் எந்தகஷ்டமும் தெரிரிவதில்லை
Delete2ம் சுற்ருச் சந்திப்பு மிக அருமை. படங்கள் எல்லாம் மனதை கவருது.
ReplyDeleteசீரடி சாயிபாபா கோயில் கனடவிலும் இருக்கு... அங்கு போனால் போவோம்.. அங்கும் அப்படித்தான் ஒரு ரூபா கூட எதிர்பார்ப்பில்லை.. எந்நேரம் போனாலும் பிரசாதம் ஃபிரீயாக் கிடைக்கும்.. மக்கள் செய்து செய்து எடுத்து வந்து குடுக்க குடுக்க அதை அப்படியே உடனேயே கும்பிட வருவோருக்கு வினியோகித்துக் கொண்டே இருப்பினம்..
இடியப்பம் புட்டு, இட்லி, கொழுக்கட்டை வடை கேசரி உப்புமாஅ...ப்லகாரங்கள் சுண்டல் இப்படி விதம் விதமாக குடுத்த வண்னம் இருப்பார்கள்.. நாம் விரும்பினால் உண்டியலில் பணம் போடலாம்...
எழுதியிருப்பதைப் பார்த்தால், கனடாவில் வெளி இடங்கள் சுற்றாமல், சாயிபாபா கோவிலையே சுற்றிச் சுற்றி (பிரசாதத்துக்காக) வந்ததுபோல் தெரிகிறதே... பூனை என்பதால் இருக்குமோ?
Delete@அதிரா இங்கு நாங்கள் போனபோது பிரசாதம் ஏதும் தரவில்லை ஆனால் சுத்தமாக இருந்தது அமைதியாக இருந்தது ஊரின் ஒதுக்குப் புறம் என்பதால் கூட்டமும் குறைவு
Delete@நெத அதிராவுக்கு கனடா நினைவு வந்து விட்டதுபோல் இருக்கிறது
Deleteகுட்டி பதிவர் சந்திப்பு நடந்திருக்கும் போல! செல்லப்பா சாரின் வீட்டு மாடி தோட்டம் அருமை....
ReplyDeleteகுட்டிப்பதிவர் சந்திப்பு அல்ல நானும் செல்லப்பாவும் மட்டுமே பதிவர்கள்
Deleteபயணம் இனிமையாய் அமைந்ததில் மகிழ்ச்சி ஐயா
ReplyDeleteஆம் சார் பயணம் இனிதாக இருந்தது.என்ன வலை உலகில் இருந்து விலகி இருக்க வேண்டியதாயிற்று
Deleteஇன்னும் சற்றுநேரம் தாங்கள் இருந்திருக்கலாம். காலில் வெந்நீரை ஊற்றிக்கொண்டவர்போல் அவசரப்பட்டீர்கள். தோசை மட்டுமே தரமுடிந்த்து. அடுத்தமுறை சூப்பர் விருந்து ரெடி!
ReplyDeleteதங்கள் பதிவின்மூலம் என் துணைவியாரின் மதிப்பில் மிகவும் உயர்ந்துவிட்டீர்கள் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(இனிமேல் என்னைச் சந்திக்க வரும் வலைப்பதிவர்கள் இதேபோன்று எழுதவேண்டும் என்று தெரிவிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.) - இராய செல்லப்பா சென்னை
எங்கே காணோமே என்று இருந்தேன் உங்களை சந்திக்க வரும் பதிவர்கள் இதைவிட சூப்பராக எழுதுவார்கள் துணைவியாருக்கு எங்கள் மதிப்பை தெரியப் படுத்துங்கள் அவசரத்துக்குக் காரணாஅம் நான் மட்டும் அல்ல
Deleteஇப்பொழுது வேளச்சேரியில் இல்லையா?
ReplyDeleteவேளச்சேரியில் இல்லை என் மகன் பெரும்பாக்கத்தில் ஒரு வீடு வாங்கிக் குடி போயிருக்கிறான் சென்ற ஆண்டு புது மனை புகு விழா குறித்து எழுதி இருந்தேனே [
ReplyDeleteநீங்கள் சென்னை வருவது குறித்து எழுதி இருந்தீர்கள். நானும் அந்த சமயத்தில் திருச்சி வந்தாலும், சென்னை வர முடியவில்லை. தமிழகம் வரும் சமயங்களில் இணையத்திலிருந்து விலகியே இருக்கிறேன்.
ReplyDeleteஇராய. செல்லப்பா அவர்களுடன் உங்கள் சந்திப்பு - மகிழ்ச்சி.
காலம் கனிந்து வரும்போது சந்திக்கலாம் வருகைக்கு நன்றி சார்
Deleteஉங்களின் சந்திப்பு மகிழ்வினைத் தந்தது. உடன்வந்தது போன்ற உணர்வு. பகிர்வுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteஉங்களையும் நேரில் சந்திக்க இன்னும் வாய்ப்பு வரவில்லை
Deleteமகிழ்ச்சியான சந்திப்பு
ReplyDeleteஆனால்,
மழை பெய்யாதது கவலை தான்
நேரம் கெட்ட நேரத்தில் மழைபெய்வதை பலரும் விரும்புவதில்லை
Deleteபயணம் குறித்த பகிர்வு அருமை.
ReplyDeleteவலைப் பதிவுகள் அதற்குத்தானே நன்றி மேம்
Delete