அபியும் நானும் கோல்டென் மோமெண்ட்ஸ்
------------------------------------------------------------------------
அபியும் நானும் கோல்டென்
மோமெண்ட்ஸ்
இதில் வரும் அபி என்பேரன் இப்போது 13 வயது. அவன் வளர வளர அவன் என்னைப்போல் இருப்பதாகத் தோன்றவே அவனை என்
லுக் அலைக் என்றே கூப்பிடுவேன் வளர்ந்த
பேரனைப் பார்க்கும் போதெல்லாம் அவனது சின்ன வயது செயல்களே நினைவுக்கு வருகிறதுஎன்னதானிருந்தாலும் குழந்தைகள் குழந்தைகச்ளாக இருக்கும் போது கொடுக்கும் மகிழ்ச்சி பெரியவர்களாகும் போது இருப்பதில்லை அபி இன்னும் எட்டுபத்து ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தால்
அவனுடனின்னும் கூடி ஆடி மகிழ்ந்திருக்கலாமோ இல்லாவிட்டால்தான் என்ன அவனது சிறிய வயது செயல்களும்பேச்சும் நினைத்து நினைத்து மகிழ்கிறேன் இதைப் பார்ப்பவருக்கு
காக்கைக்குதன் குங்சும் பொன் குஞ்சு
என்னும் எண்ணம் வரலாம் இது நான் நினைத்து
மகிழ்வதைப் பகிரவே
தொலைக்காட்சியில்
ஒரு விளம்பரம். எனக்கு விளங்க வில்லை.நிறைய விலங்குகள் ஓடி வருகின்றன. ஒருவன் தன்
கையைஇடவலமாக அசைக்கிறான். ஓடி வரும் விலங்குகள் பாதை மாற்றிப் போகின்றன. அடுத்து டைனோசரஸ் போன்ற மிருகம் வாயைப்
பிளக்கிறது/ ஒருவன் அதன் வாய் அருகே கை வைத்து மூடச் செய்கிறான். இன்னும் இதே போல்
விளங்காத விஷயங்கள். புரியவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். என் பேரன்
அருகில் இருந்தான் எனக்கு விளக்கினான். ”அது ஒரு டிவி விளம்பரம். சைகைகளின் மூலமும் சொல்வதன் மூலமும் சானலை மாற்ற
முடியும் அதன் விலை என்ன தெரியுமா. ? ஒரு கோடி ரூபாய் “ அவன் அதை ஆங்கிலத்தில்
சொன்ன விதமே அலாதி. நான் அவனிடம் ஒரு கோடிக்கு எவ்வளவு பூஜ்யம் என்று தெரியுமா
என்று கேட்டேன். அவன் I don’t know . But it is an
awesome big money” என்றான். எட்டு வயது
சிறுவனுக்கு விளங்கும் விளம்பரம் எனக்கு புரியவில்லையே. !
. என் இடது கை விரலில் நான் ஓட்டுப் போட்டதன் அடையாளமான மைப் புள்ளியைப் பார்த்து என்ன
என்றுகேட்டான். ஓட்டுப்போட்டதன் அடையாளம் என்றேன். ஏன் ஓட்டுப் போட வேண்டும்
என்றான். நான் அவனுக்கு எளிய முறையில் விளக்கினேன்.
“ அரசாங்கத்தில் நமக்கு வேண்டியதைச் செய்து தர நாம் அனுப்பும் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப ஓட்டு போடுகிறோம்.”
“ யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.?”
” நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புபவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும்”
“ அதை எப்படித் தெரிந்து கொள்வது.?”
”பொதுவாக மக்களுக்கு சேவை செய்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நம் குறைகளை கேட்டு வருபவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்”
அவனுக்குப் புரிந்தது போலும் புரியாதது போலும் இருந்தது. அவனுக்கு இன்னும் விளங்க வைக்க ”சேவை செய்பவர்களை அடையாளம் காண்பது சிறிது கடினம்தான். தேர்தல் சமயத்தில் நமக்கு பொன்னோ பொருளோ கொடுத்து அவர்கள் நல்லவர்கள் என்று நம்மை நம்ப வைப்பவர்களும் இருக்கிறார்கள் “ என்றேன். அதற்கு அவனது ரியாக்ஷன் நான் சற்றும் எதிர் பார்க்காதது.
“ Is that not cheating , appa.?” என்று கேட்டானே பார்க்கலாம்.
“ அரசாங்கத்தில் நமக்கு வேண்டியதைச் செய்து தர நாம் அனுப்பும் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப ஓட்டு போடுகிறோம்.”
“ யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.?”
” நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புபவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும்”
“ அதை எப்படித் தெரிந்து கொள்வது.?”
”பொதுவாக மக்களுக்கு சேவை செய்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நம் குறைகளை கேட்டு வருபவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்”
அவனுக்குப் புரிந்தது போலும் புரியாதது போலும் இருந்தது. அவனுக்கு இன்னும் விளங்க வைக்க ”சேவை செய்பவர்களை அடையாளம் காண்பது சிறிது கடினம்தான். தேர்தல் சமயத்தில் நமக்கு பொன்னோ பொருளோ கொடுத்து அவர்கள் நல்லவர்கள் என்று நம்மை நம்ப வைப்பவர்களும் இருக்கிறார்கள் “ என்றேன். அதற்கு அவனது ரியாக்ஷன் நான் சற்றும் எதிர் பார்க்காதது.
“ Is that not cheating , appa.?” என்று கேட்டானே பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வமும் பழக்கமும் வர வேண்டும் என்று நினைப் பவன். “புத்தகங்கள் படிப்பாயா “ என்று கேட்டேன். பெரிய எழுத்து ராமாயணம் மஹாபாரதம் போன்ற புத்தகங்கள் வண்ணப் படங்களுடன் பிறந்த நாள் பரிசாக அவனுக்கு வந்தது எனக்குத் தெரியும்.
அவன் என்னிடம் “ Have you
read GERONIMO STILTON”S books ? Awesome books.
I have read many books .You are an author, no..? You must read them.” என்று கூறினான் நான் வலையில் பதிவுகள் எழுதுவது அவனுக்குத் தெரியும். அவனிடம்
“Who is GERONIMO.” என்று கேட்டேன்.
“ He writes stories about mouses , and he assumes himself as a mouse. Oh.! He is awesome.”
“ He writes stories about mouses , and he assumes himself as a mouse. Oh.! He is awesome.”
ஒரு முறை சென்னையில் இவன் பிறந்த
நாளுக்கு வந்திருந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ய வந்தான். அவன் அறிமுகம் செய்ய
வந்த சிறுவன் மலையாளம் பேசுபவன். அவனிடம் இவன் “ You know , he is Tamil..Speak to him in Tamil or English “ என்றான். என் மகன் வீட்டில் அவன்
தமிழ் பேச , அவன் மனைவி மலையாளம் பேச குழந்தைகள் தமிழ் மலையாளம் ஆங்கிலம் என்று பேசுவார்கள்.
இவனுக்கு நிறையக் கதைகள் கூறி இருக்கிறேன். இப்போதும்
அவன் கதை கூறக் கேட்டதும் நான் சொல்ல ஆரம்பித்தால் “ ஓ... இது நீ ஏற்கனவே சொல்லியிருக்கிறாய்.
எனக்குத் தெரியும் “ என்றுசொல்லி கதையை அவன் சொல்லுவான். பிரகலாதன் கதையில் நான் ”இரண்ய
கசிபு” என்று என்று சொல்லியிருந்த பெயரை அவனது வேறு ஒரு நண்பன் அவனுக்குச் சொல்லிக்
கொடுத்திருந்தபடி அந்தப் பெயரை “இரண்ய காஷ்யப்” என்று சொல்ல இவன் என் தாத்தா சொல்லியிருந்ததுதான்
சரி என்று சண்டைக்குப் போக.......
ஒரு முறை
தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில்
ஆடிக்கொண்டிருந்தாள் மாது ஒருத்தி.
யாரந்த அழகி, பேரென்ன அவளுக்கு
என்று அறியாமல் கேட்டு விட்டேன்
அருகில் இருந்த சிறுவனை கவனியாமல்.
பட்டென்று நிமிர்ந்து பார்த்தான்
பேர் சொல்ல வந்த பேரன்.
ஆங்கிலத்தில் கேட்டான் ஆறுவயது சிறுவன்,
" அப்பா, டூ யூ லவ் ஹெர்..?"
அதிர்ச்சியில் ஆடிப்போனேன் ஓரிரு கணங்கள்
"அனைவரும் அன்புக்கு உரியோரே.
உன்னை, உன் அப்பா, அம்மா, அக்கா
அனைவரையும் நான் லவ் செய்கிறேன்.
அதுபோல் உயிரோடிருக்கும் எல்லா
ஜீவ ராசிகளையும் அன்பு செய்கிறேன்.
அன்புதான் கடவுள்; அன்பே சிவம் என்றெல்லாம்
கூறி ஒரு உரையே நிகழ்த்தினேன்.
அவன் எதையும் உணர்ந்தவன் போல்
தோன்றவில்லை. அவன் முகத்தில்
தெரிந்தன சிந்தனைக் கோடுகள் சில பல.
சில நொடிகள் கழித்து சிவந்த முகத்துடன்
கேட்டானே ஒரு கேள்வி, பதிலென்ன சொல்ல.?
"லைக் யூ ஹக் அண்ட் கிஸ் மீ
வில் யூ ஹக் அண்ட் கிஸ் ஹெர் டூ.?"
( "LIKE YOU HUG AND KISS ME,
WILL YOU HUG AND KISS HER TOO.?")
என்னைக் கட்டிப் பிடித்து அணைத்து முத்தம்தருகிறாய்
அதுபோல் அவளையும் கட்டி அணைத்து முத்தம் தருவாயா.?
இன்னொரு முறை
படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை
அடிக்கவோ கடிந்துரைக்கவோ ஆசிரியருமில்லை
தேடிப்பிடித்துக் குறைகாணத் தாயில்லை தந்தையில்லை
பிடித்தபோது தொலைக்காட்சி காணத் தடை
ஏதுமிருந்ததில்லை. அப்பா உன் பாடு ஜாலிதான்
மகிழ்வோடு உன்னைப்போல் நானிருப்பதெந்தக் காலம்----
என்று கூறினான்
நினைக்க நினைக்கநினைவுகள்
சுரங்கம் போல் வெளிப்படுத்துகிறது எழுத எழுதவந்துகொண்டே இருக்கும் அவை பிறிதொரு சமயம்
(
(
இன்றைய குழந்தைகளுக்கு கேள்வித்திறன் அதிகம் இருக்கிறது ஐயா.
ReplyDeleteபெயரனோடு சந்தோஷமாக விளையாடுங்கள்.
குழந்தைகள்சின்ன வயதில் வியக்க வைக்கிறார்கள் இப்போது விளையாட முடியாது அவனும் விரும்பமாட்டான்
Deleteஅபியின் டேபிள் மேட் சூப்பர். ஆனா எழுதும்போது வழுக்கி விட்டுடுமே!!!
ReplyDeleteஅந்த டேபிள் மேட் இப்போது அவனிடம் இருக்கிறதா தெரியவில்லை
Deleteஅருமையான நீரோடை போல அசாத்திய நடையில் உங்களின் ரசனையான பதிவினை ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி சார்
Deleteநிஜமாகவே சுவாரஸ்யமான கணங்கள். கொடுத்து வைத்த தாத்தா. கொடுத்து வைத்த பேரன்!
ReplyDeleteஅந்தக் காலம்பொய் விட்டது ஸ்ரீ அவனும் வளர்ந்து கொண்டிருக்கிறான்
Deleteநினைத்து மகிழும் தருணங்கள் தான்.
ReplyDeleteபேரனுக்கும் தாத்தாவுக்கும் வாழ்த்துக்கள்.
ஆம் நினைத்து மகிழத்தான் முடிகிறது நன்றி மேம்
Deleteவாசிக்க வாசிக்க மனம் முழுவதும் மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteஎனக்கும் நினைத்து நினைத்து மகிழ மகிழ்ச்சியே
Deleteநடந்தது நடந்தபடி எழுதியிருக்கிறீர்கள். படிக்க ஆனந்தமாயிருக்கிறது. பேரன், பேத்தியருடனான பேச்சுகளை மேலும் பதிவில் கொண்டுவாருங்கள்.
ReplyDeleteகுழந்தைகளுடன் பெரும்பாலும் மனிதர் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிப்பதில்லை. அதனைக் கூர்ந்து கேட்பவர், மனதில்கொள்பவர் மிகக் குறைவு என்பதை கவனித்திருக்கிறேன்.
RD LAING (Scottish writer, Psychiatrist) எழுதிய Conversations with Children என்னும் சிறு நூலொன்றை என்னுடைய 27-ஆவது வயதில் படித்திருக்கிறேன். உட்கதவுகளைத் திறந்துவிட்டது அது. பெங்குயின் புத்தகமாகக் கிடைக்கிறது. ஹிகின்பாதம்ஸ் (Higginbothams,) Lankmark போன்ற புத்தகக்கடைகளில் அல்லது அமெஸானில் கிடைக்கும். முடிந்தால் வாங்கிப் படியுங்கள். சுவாரஸ்யமானது.
child is the father of man என்னும் ரீதியில் ஏதோ படித்திருக்கிறேன் குழந்தைகள் வளர வளர மாறிக் கொண்டு வருகிறார்கள் நமக்குத்தா அவர்கள் என்றும் குழந்தைகள்
Deleteதுளசி: நீங்கள் நிஜமாகவே அருமையான தாத்தா!! உங்களுடன் இப்படி குழந்தை பேசி மகிழ்கிறான் என்றால் நீங்களும் அவனுடன் அப்படிப் பழகுவ்தால்...நல்ல இனிமையான தருணங்கள்.
ReplyDeleteகீதா: வாவ் தாத்தா!!!! வாவ் பேரன்! லவ்லி மொமென்ட்ஸ்! கோல்டன் மொமென்ட்ஸ். ரொம்பவே ரசித்தோம்...தோழமையுடன் நீங்கள் அவருடன் இருப்பதால் அவரும் உங்களுடன் அத்தனை தோழமையுடன் பழகுகிறார்...கிஃப்டெட் தாத்தா கிஃப்டெட் பேரன்வாழ்த்துகள் தங்கள் இருவருக்கும்
ஒன்று புரிகிறதா பாருங்கள் நம் குழந்தைகளிடம் இருந்ததை விட பேரக் குழந்தைகளிடம் அன்பு அதிகமாகிறது
Deleteசந்தோஷ தருணங்கள். வளர்க! வாழ்க!
ReplyDeleteவயதாகும் போதுஇம்மாதிரி நினைவுகளே மகிழ்ச்சி தருகிறது
Deleteநல்லா சுவாரசிய தருணங்கள்.
ReplyDeleteஒருவேளை நாம் தவறவிட்ட, நம் குழந்தையோடு நாம் செல்லமாக இருக்கும் அக் கணங்களை, பெயரனோடு வாழ்ந்து பார்க்க நம் மனம் சொல்கிறதோ?
நாம் தவறவிட்ட என்பது அல்ல பெற்றோர் ஆக இருக்கும்போது அன்பை விட கண்டிப்பு அதிகமாகிறதுஆனால் தாத்தா பாட்டிகளுக்கு அன்பு தவிர கண்டிப்பு வருவதில்லை
Deleteஅருமையான தாத்தா, அருமையான பேரன். நல்ல பொழுதுகள் பேரக் குழந்தைகளூடன் தான் அமையும். எங்க பாட்டி, (அம்மா வழி) ரொம்பக் கண்டிப்பு).
ReplyDeleteஎன்னால் பேரக் குழந்தைகளிடம் கண்டிப்பு காட்ட முடியாது
ReplyDelete