Friday, June 15, 2018

கவிதை எழுத வாருங்கள்



                                                     கவிதை எழுத வாருங்கள்
                                                    -----------------------------------------

நான்  ஏன்  பிறந்தேன்,
மூன்று  வார்த்தைகள்  மூன்று வரிகளில்
வருதல்  வேண்டும்அதுவே  விதி.

வாசகப் பதிவர்களும்  முயற்சிக்கலாமே

     
சிறுவயது  முதலே  என்  தேடலின்  வரிகள்;
     
நானும்   எழுதுகிறேன்  
      "
நான்  நானாக   இருக்கையில்
      
நீ   மட்டும்  வேறாக
      
பிறந்தேன் (பிறந்து  ஏன் ) பழி தீர்க்கிறாய் "

"
நான்" நானாகவும் "நீ" என் மனமாகவும் 
நான் படும்  பாட்டை  பகிரவே
வந்து விழுந்த  வரிகள் 
நாமெங்கு  பிறந்தோம் , நம் வரவே 
ஒரு விபத்தின்  விளைவன்றோ ?
(
பார்க்க  என் பிறிதொரு  பதிவை)
       நிலையிலா  வாழ்வில்  நான்  எங்குள்ளேன்.? 
       
என்  எண்ணில் "நான்" போனால்
       
நலம்  பல விளையலாம்.

நன்கு  பழகிய  நண்பரொருவர்
நலமெலாம்  விசாரித்து  பிரிய  மனமின்றி
பிரியா  விடை  பெற்றுச்  சென்றார்.
மறுநாள்  காலை  வந்தது  சேதி ,
தூங்கச்  சென்றவர்  துயிலெழ வில்லை
நேற்றிருந்தவர்   இன்றில்லை
நிலையிலா   வாழ்வில்  என்றுமவர்   இனி 
வெறும்  நினைவாகவே  திகழ்வார்
பெயர் ஒன்று  கொண்டு  புவியில்   திரிந்தவர்
போகையிலே  வெறும்   பிணமே  வெறும் சவமே
கையில்  கடிகாரம்  கட்டினால்
காலத்தை  வென்றவர்  ஆவோமா ?
பிறப்பும்  இறப்பும்  நம் கையில்  இல்லை
இன்றிப்போது  காண்பதே  இறுதிக்  காட்சியாகலாம் .
இருக்கையில்  வேண்டுமா  காழ்ப்பும்  கசப்பும்.?

       
ஏனென்று  கேள்வி  கேள்
       
உன்னை  நீ அறியலாம்,
       உரைத்தவன்  சாக்ரடீஸ்

       
உண்மை  உணர்வதே
      
வாழ்வின்  நோக்கம்,
       
கூறினான்  காந்தி.

      
அயலவனை  நேசி
      
உன்னிலும்  மேலாக
      
என்றவன்  ஏசு.

உண்மையும்  நேசமும்  ஒன்றாக  இணைந்தால்
பிறந்த  காரணம்  புரியலாம்  ஒருவேளை .





26 comments:

  1. கவிதைப்போட்டி வைத்து, நீங்களே அருமையான கவிதையைத் தந்துவிட்டீர்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. கவிதைப்போட்டி ஏதுமில்லை ஐயா முயற்சிக்கலாம் என்றுதான் எழுதி இருக்கிறேன் கவிதைப் போட்டி என்று நினைத்துபலரும் வரத் தயங்குகிறார்களோ

      Delete
  2. அருமை ஐயா ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஜி

      Delete
  3. உங்கள் ஹைக்கூக்கள் அழகு.. நானும் முயற்சிக்கிறேன்ன்.. கவிதை பிறந்தால் தூக்கிக்கொண்டு வருகிறேன்:)..

    ReplyDelete
    Replies
    1. இப்படி எழுதுவதுதான் ஹக்கூவா

      Delete
  4. எனக்கெல்லாம் கவிதை எழுதவே வராது! நல்லா எழுதி இருக்கீங்க!

    ReplyDelete
    Replies
    1. எழுதிப் பழலினால் எதுவும் கைகூடும்

      Delete
  5. கவிதை படிக்க வாருங்கள் என்றாலே காத தூரம் ஒடுபவன் அப்படி இருக்க கவிதை எழுத சொன்னால்.....சரி சரி போட்டி முடிந்த பின் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. இதைப் படிக்க எந்த முயற்சியும் தேவை இல்லை போட்டி என்று சொல்ல வில்லையே

      Delete
  6. பின்னர் முயற்சிக்கிறேன். நேற்று நள்ளிரவுதான் வெளியூரிலிருந்து திரும்பினேன். தூக்கம் என் கண்களை......!!!

    ReplyDelete
    Replies
    1. தூக்கமுன் கண்களைத் தழிவியாயிற்றா

      Delete
  7. Replies
    1. கவிதை எழுத வேண்டும் என்று நினைத்து பல வாசகர்கள் காத தூரம் ஓடிவிட்டார்களோ வருகைக்கு நன்றி டிடி

      Delete
  8. உங்கள் கவிதை வரிகளை ரசித்தேன். ரசிப்பது மட்டுமே எனக்குத் தெரிந்தது......

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி சார்

      Delete
  9. நான் ஏன் பிறந்தேன்?
    இறக்கும் முன் சிறப்பாக
    இருப்பதற்கு!

    ReplyDelete
  10. இறப்பதற்காகப் பிறந்து
    பிறப்பதாக
    இறக்கிறோம்!

    ReplyDelete
  11. பிறப்பது
    இறப்பிற்குப் பின்னும்
    சிறந்து இருப்பதற்கு.

    ReplyDelete
  12. நான் ஏன் பிறந்தேன்?
    அதைத்தான் நானும்
    கேட்கிறேன்.

    ReplyDelete
  13. சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்..
    இறப்பைச் சொல்லவில்லை.
    கவிதையைச் சொன்னேன்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் பதிவில் ஏன்பிறந்தேன் என்பது கேள்வி அல்ல நான் ஏன் பிறந்தேன் மூன்று வார்த்தைகள் மூன்று வரிகளில் வர வேண்டும் என்பதே விதி அதற்கு உட்பட்டுக்விதை எழுத வேண்டும் முயற்சிக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  14. நான் ஏன் பிறந்தேன்?
    நான் பிறக்க ஏதுவாக
    இரண்டு ஆள் கூட்டு
    ஆனால், படைத்தவர் கடவுள்!
    நல்லதைச் செய்ய வேண்டும்
    கெட்டதை மறக்க வேண்டும்
    விளைவாகக் கைக்கு எட்டுவது
    நல்ல பெயர் என்பேன்!

    ReplyDelete
  15. பதிவு சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது ஆர்வமுடன் எழுதியதற்கு நன்றி சார்

    ReplyDelete
  16. மனதில் எழும் கேள்விகள் பல
    அதில் ஒன்று சில சமயம்
    நான் ஏன் பிறந்தேன்.

    ஒவ்வொரு பிறப்பிற்கும்
    ஓர் அர்த்தமுண்டாம் -
    என் பிறப்பிற்கு என்னவோ?
    தேடு தேடு
    நான் ஏன் பிறந்தேன் என்று

    கருவாய் நான் அம்மாவின் பையில்
    உருவாக வேண்டாம் என்று
    மருந்து தின்றாராம் அம்மா
    இருந்தும் நான் ஏன் பிறந்தேன்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கு வாழ்த்துகள் இருந்தாலும் சரியாகப் புரியவில்லையோ என்னும் சந்தேகம் நான் ஏன் பிறந்தேன் மூன்று வார்த்தைகள் மூன்று வரிகளில் வரவேண்டும் இந்த மூன்றுவார்த்தைகளும் மூன்று கவிதைகளில்வந்து விட்டது பாராட்டுகள்

      Delete