Monday, June 4, 2018

கண்ணாடி ஓவியம் நடராஜர்


                                  கண்ணாடி ஓவியம்  -நடராஜர்
                                   ----------------------------------------------

இந்த ஆண்டு எனக்கு வந்திருந்த காலண்டர்கள் மதுரை மீனாட்சி கோவிலின் திரு உருவங்கள் ஓவிய தீட்டுவதுஎன்பொழுது போக்கு என்பதை முன்பே சொல்லி இருக்கிறேன்   ஆனால் இப்போதெல்லாம் ஓவியம் தீட்ட கண்களும்  கைகளும் ஒத்துழைப்பதில்லை  இருந்தாலும்  காலண்டரிலிதுவரை நான்வரையாத நடராஜர் படமிருந்தது அதைக் கண்ணாடி ஓவியமாக்க விரும்பினேன் என்னால் முடிகிறதா என்று பார்க்கவே இந்த முயற்சி
 கண்ணாடி ஓவியம் வரைய நான் கையாளும்வகைகள் முதலில் படத்தை சேரோக்ஸ் செய்வேன்  அது ஒரிஜினல் படத்தின் மீது வரையாமல் இருக்க வைக்கும்  அந்த நகலில் இருந்து படத்தின்  மிரர் இமேஜை  வரைவேன்  கார்பன் பேப்பரை வைக்கும் முறையில் இது சாத்தியம்   ஏன் மிரர் இமேஜ் என்றால்  வண்ணம் தீட்டிய பகுதி கண்ணாடியின்மறுபக்கம் இருக்கும்   அந்த மிரர் இமேஜை கண்ணாடியின்  கீழ் வைத்து கண்ணாடிமேல் படத்தின் அவுட்லைனை வரைவேன்
முதலில் எதை வண்ணம்தீட்டுகிறோமோ  அதன் மேல் வண்ணம்தீட்டினாலும் மறு பக்கம் அது வராது ஆபரணங்கள் முதலில் தீட்டுவேன் கண்ணாடி 2 மில்லி மீட்டர் கனமே இருக்க வேண்டும் இல்லை யென்றால் பாரலாக்ஸ் எரர் வரலாம்  வரைந்து முடித்தபின் மறு பக்கம் ஒரிஜினல்படத்தில் இருந்ததுபோல் வரும்  நிறைய பொறுமை வேண்டும்  நான் வரைந்தபடத்தின் பல  புகைப்படங்கள் இன்னும்விளக்கமாக இருக்கலாம்   ஆனாலும் எண்ட் ப்ராடக்ட் அத்தனை திருப்தி தரவில்லைஎன்பதே நிஜம்நிறைய டிடெயில்கள் நானாக மாற்றியது இதனால் என்னால் வலைப்பக்கம அதிகம்வர இயலவில்லை ஏதோ வரைந்து விட்டேன்  இதை  ஃப்ரேம் செய்தும் விட்டென் 
காலண்டர் படம் 
xerox செய்த படம்


traced picture with mirror mage



மிரர் இமேஜ் பெயின்டிங்
கண்ணாடியின்  மறு பக்கம்  முடிந்த ஓவியம்

ஃப்ரேம்போட்டபின்  
கால் மாறி ஆடிய நடராஜர்  திருக்கோலம்  




    

20 comments:

  1. அருமையாக இருக்கிறது
    எனக்கு ஓவியம் வரைவது...எனக்கும், பிக்பாஸ் ஓவியாவுக்கும் உள்ள தூரம்.

    ReplyDelete
    Replies
    1. ஓவியாவே ஒரு ஓவியம் ஆனதாலா ஜி

      Delete
  2. நன்றாகவே இருக்கிறது சார்....

    நான் க்ளாஸ் பெயிண்டிங்க் செய்திருக்கேன் ஆனால் இப்படியானது செய்ததில்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் நானாக செய்வது ஃபாப்ரிக் பெயிண்டை உபயோகிப்பேன் க்ளாஸ் பெயிண்ட் வேறு வருகைக்கு நன்றி கீதா

      Delete
  3. வரைய ஆசைதான். ஆனால் அந்தப் பெயின்ட் வாசனை எல்லாம் ஒத்துக்காது!

    ReplyDelete
    Replies
    1. இந்த பெயிண்ட் வாசனை யெல்லாம் வராது நிறைய பொறுமை வேண்டும்

      Delete
  4. நன்றாக வரைந்திருக்கீங்க! அதுவும் இந்த வயசில்!

    ReplyDelete
    Replies
    1. கண்களும் கைகளும் ஒத்துழைத்தால் இன்னும் சிறப்பாக வரும் ஒவியம் வரைய வயசு தடை இல்லை

      Delete
  5. ரொம்ப நல்லா வரைந்திருக்கிறீர்கள். எப்போதும் ஓவியத்தில் கையெழுத்தும் (பெயரும்), வரைந்த தேதியும் போடுதல் நல்லது. நான் அப்படிப் போட்டிருக்கிறீர்களா என்று சோதித்தேன். என்னால் காண இயலவில்லை. ஓவியங்கள் காலம் கடந்து நிற்கும்.

    ReplyDelete
    Replies
    1. இதுவழ்ரை நான் வரைந்துள்ள எந்த ஓவியத்திலும் என் பெயர் பொறித்ததில்லை தேடினால் கிடைக்காது

      Delete
  6. Replies
    1. எனக்கு அத்தனை திருப்தி தரவில்லை டிடி

      Delete
  7. மிக மிக அழகாக வரைந்திருக்கிறீங்க.. நான் கண்ணாடி ஓவியம் மட்டும் இதுவரை வரைந்ததில்லை.

    வெளிப்பக்கம் சில்வர் க்குப் பதில் கோல்ட் கலர் கொடுத்திருப்பின் இனும் பிரைட்டாக இருந்திருக்கும்.

    கண்ணாடிக்குக் கீழே படத்தை வைத்துவிட்டு மறுபக்கம் அப்படியே பெயிண்ட் பண்ண வேணுமோ? அப்போ கண்ணாடியில் எந்த அடையாளமும் போடத் தேவையில்லையோ?..

    ReplyDelete
    Replies
    1. பெயிண்டிங்கில் கலரை நான்சூஸ் செய்வதில்லை. முடிந்தவரை ஒரிஜினலில் இருக்கும்வண்ணமே உபயோகிப்பேன் கண்ணாடிக்குக் கீழே மிரர் இமேஜ் ட்ராசிங்கை வைத்து அதன் மேல் பெயிண்ட் செய்வேன் பெயிண்ட் செய்யும்போது வலப்பக்கமிடப்பக்கமாகவும் இடப்பக்கம் வலப்பக்கமாகவும் இருக்கும் கண்ணாடியின் மறு புறம் ஒரிஜினலில் இருந்ததுபோல் வரும் செய்முறை விளக்கி இருக்கிறேன் சரியாகவில்லையோ பெயிண்டிங் பற்றிக் கருத்திட்ட உங்கள் பின்னூட்டமே கவர்ந்தது நன்றி அதிரா

      Delete
  8. மிக மிக அருமை ஐயா...

    trace செஞ்சு வரையறது கொஞ்சம் கடினம் தான் ...

    நான் reverse glass tanjore painting பண்ணுவேன்.. அதில் அந்த படம் கண்ணாடியின் பின்புறம் reverse ஆக print பண்ணி இருக்கும் அதில் நாம் paint பண்ணனும்..

    நீங்களும் அந்த painting செஞ்சு இருப்பீங்க ன்னு நினைக்கிறன்...



    ReplyDelete
  9. அனுராதா ப்ரேம்குமார் வருகைக்கு நன்றி நான் முறையாக ஓவியம் தீட்டக் கற்றுக் கொள்ள வில்லை முதன் முதைல் வரைந்த கண்ணாடி ஓவியம் நன்றாக வந்திருந்தது ரஜஸ்தான்பாணியில் ராதா கிருஷ்ணர் ம்று மொழியில் அதை இட முடியவில்லை தஞ்சாவூர் பெயிண்டிங் பாணியில் கண்ணாடி ஓவியமும் தீட்டி இருக்கிறேன்

    ReplyDelete
  10. மிக அருமையான கைவண்ணம் ஸார். எனக்கு வராத கலை.

    ReplyDelete
    Replies
    1. சில ஆண்டுகளுக்கு முன் நானும் ஓவியம் தீட்டுவேனென்று நினைத்துக்கூட பார்த்ததில்லை எல்லாமொரு ஆர்வத்தின் விளைவே வருகைக்கு சற்று தாமதமானாலும் நன்றி ஸ்ரீ

      Delete