பாடலும் உரையும்
-------------------------------
தமிழ்
மொழி பற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியம்தான் நாம் எதை எழுதினாலும் அதற்கு சமயோசிதமாக உரை கூறி விளக்கவும் இந்த மொழியில் முடியும் என்று தோன்றுகிறது எடுத்துக் காட்டாக ஒரு
கதை அந்தக் காலத்தில்சோழ அரசன் சபையில்
கம்பர் போன்றோர் வீற்றிருந்தகாலம்
படிதவர்களையும் புலவர்களையும் அரசன் ஆதரித்து வந்தகாலம் ஒரு ஏழை
விறகுவெட்டி வறுமையால் வாடியபோதுஅவன் மனைவி
அரசனைப் பற்றி ஏதாவது எழுதிபரிசில் வாங்கி வரலாமே என்று கூறினாள் ஏழை விறகு வெட்டிக்கு சாத்தியப்படக்கூடியதா
என்ன யோசனையுடன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது
சிறு பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தார்களம் மண்ணைக் குழைத்து சோறு என்று படைத்து விளையாடும்போது
படைக்கப்பட்டவரைப்பார்த்து மண்ணுண்ணி மாப்பிள்ளையே என்று கூறினராம் நம் விறகு வெட்டி அதைக் குறித்துக் கொண்டானாம்போகும்
வழியில் காகம் கரைந்ததாம் குயில்
கூவிற்றாம் அதையே காவிறையே கூவிறையே
என்று குறித்துக் கொண்டானாம் போகிற
வழியில் இருவர் சண்டையில் உங்கப்பன் கோவில் பெருச்சாளி என்று சொல்லி சண்டையிட்டுக் கொண்டிருப்பது கண்டு /
கேட்டு அதையும் குறித்துக் கொண்டானாம் இது
வரை எழுதியதை நண்பன் ஒருவனிடம் காட்டி தன் கவிதையைப் பற்றி பெருமையுடன் சொன்னானாம்
நண்பனும் அதைப்பார்த்து கன்னா பின்னா என்றுஇருக்கிறது மன்னரைப் பற்றி ஏதும்
இல்லையே என்றானாம் விறகு வெட்டியும் தானெழுதியதில் கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கபெருமானே என்றுமுடித்து விட்டானாம்
தான் எழுதியதை மன்னன் முன் பாடிக்காட்டி பரிசில் வேண்டினானாம் அரச சபையில்
இருந்தோர் ஏளனமாகச் சிரித்தனராம் அரசனுக்கும் கோபம் வந்தது ஆனால் கம்பர் அதை வெகுவாக சிலாகித்துக் கூறினாராம்
அரசன் அப்பாடலின் பொருளைக் கூறும்படிக்கேட்க கம்பரும் பொருளுரைத்தாராம்
மண்ணுண்ணி
மாப்பிள்ளையே என்றால் தன் சிறுவயதில் மண்ணை வாயில் போட்டுக்காட்டிய
மஹாவிஷ்ணுவைக் குறிப்பதாகவும்
காவிறையே என்றால் கா என்பது கற்பகம் அதற்கு இறைவன் இந்திரன்
கூ
என்பது பூமி அதனிறைவன் நம் பெருமான் அதாவது அரசன் உங்கப்பன் கோ என்பது உங்கள் தந்தையும்பெரிய சக்கர
வர்த்தி அவர் வில் வித்தையில் பெரிய ஆள் அதையே வில் பெருச்சாளி எனக் கூறுகிறார் கன்னா –கர்ணனே பின்னா அவனுக்குப்பின் பிறந்ததர்மராஜனே மன்னா-அரசே
தென்னா -தென்நாட்டுக்குத்தலைவனே சோழங்கபெருமானே -சோழ நாட்டைஅங்கமாய் உடைய பெரியவனே என்றும் கூறி
விளக்கினாராம் அதனினும் இது இணைக்
குறளாசிரியப்பா
ஏகாரத்தில்முடிந்திருக்கிறது என்று கூறி
சீரும் பிரித்துக் காட்டினாராம்
மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறையே, கூவிறையே
உங்களப்பன் கோவில் பெருச்சாளி,
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்கப் பெருமானே!”
தமிழ் மொழியில் எதையும்கூறி உரை சொல்ல முடியும் நமக்குப் புரிவது
எல்லாம் உரை யல்ல
இன்னும் வேறு விதமாகவும் உரைகூறியும் இக்கதை சொல்லப்படுவதுண்டு
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ReplyDeleteகேள்விப்பட்டு இருக்கலாம் ரசித்தீர்களா
Deleteமீயும் கேள்விப்பட்டிருக்கிறேன்... ஜி எம் பி ஐயாவின் கேள்வி வருவதற்குள் அடுத்ததையும் சொல்லிடுறேன்ன்.. ரசித்தேன் உங்கள் எழுத்தை.
Deleteஎன் எழுத்தில் தமிழை ரசித்து இருக்கிறேன் நன்றி ஞானி
Deleteஇது தமிழ் மொழியின் ரசனைக்காகக் கூறப்படுவது.
ReplyDeleteஇம்சை அரசன் 23ம் புலிகேசியிலும் இந்த மாதிரி, 'அண்டங்காக்கையே', 'முடிச்சவிக்கி', 'மொள்ளமாரியே' என்றெல்லாம் புலவர் கவிதை சொல்லி, நல்ல அர்த்தம் சொல்வார்.
இதைப்போல இரட்டை அர்த்தம் வரும் பல பாடல்கள் இருக்கின்றன சிலேடைப் பாடல்களும் இதுபோல்தான் இருக்கும். காளமேகப் புலவர் நிறைய சிலேடைக் கவிதைகளை எழுதியிருக்கிறார்.
பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும் - பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும் பொருந்தும்.
நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும் - பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும். இதுபோன்ற பல பாடல்கள் உண்டு.
தமிழைப் பற்றிப் படிக்கும்போது மனதில் எப்போதுமே இன்பம் தரும். நம் மொழியல்லவா? பகிர்வுக்கு நன்றி.
சிலேடைகள் தெரிந்தே புனையப்படுகின்றன ஆனால் இதில் சிந்திக்காத பொருள் கூறப்பட்டு இருக்கிறது ரசனைகள் ஒவ்வொருவிதம்
Deleteஆச்சர்யமாக இருக்கிறது ஐயா.
ReplyDeleteரசித்தீர்களா ஜி
Deleteஇது பற்றிப் படித்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஎத்தனையோ விதத்தில்பகிரப் படுகின்றன இது என் வழி
Deleteபலமுறை இதை படித்துள்ளேன் ஐயா...
ReplyDeleteரசிப்பதுதான்முக்கியம்
Deleteசமீபத்துல என் ஐஞ்சுவை அவியலில் இதை பத்தி பதிவிட்டிருக்கிறேன்ப்பா
ReplyDeleteமீண்டும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteபடித்திருக்கிறேன். திரைப்படங்களிலும் பயன்பட்டிருக்கிறது.
ReplyDeleteஉங்கள் பதிவு ஒன்றின் பின்னூட்டமாக கன்னா பின்னா என்று ஏதோ எழுதி இருந்தேன் அதை ஒட்டி ஒரு பொஅடிவு எழுதப்போவதாக கூறிகம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடுமென்று கூறி இப்ப்பாடலைப் பகிர்ந்திருந்தீர்கள் நன் ரசித்ததுதமிழ்மொழியில் எழுதுவது பற்றி வருகைக்கு நன்றி
Delete@பானுமதி திரைப்படத்தில் வந்தால் பலரும்நினைவு கொள்கிறார்கள்
Deleteபாடலை பலமுறை கேட்டு இருக்கிறேன்.
ReplyDeleteமீண்டும் ரசித்தேன்.
சொல்லிக் கேட்டதா படித்து அறிந்ததா
ReplyDelete