Monday, December 3, 2018

நேருவின் நினைவுகள் சில



                        நேருவின்  நினைவுகளில்
                          -------------------------------------
அண்மையில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்றுஒரு பதிவு எழுதி இருந்தேன்   பின்னூட்டத்தில் திரு ஜீவி அவர்கள் நேருவின் மீதுஎன்ன திடீர் கரிசனமென்று கேட்டிருந்தார்  புகழ் பெற்றவர்களின் பிறந்த நாட்களில்அவர்களை நினைவு கொள்ளல்  நம் பழக்கம்  நேருவின்  பிறந்த நாளில்  அவரைப் பற்றியசேதிகள் ஏதும் இல்லாமல் நம் தொலைக்காட்சி  ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தது வருத்தம்தந்தது பதிவு எழுதும்நானாவது அவர் நினைவுகள் சிலவற்றைப் பகிரலாம் என நினைத்தேன்  சுவாரசியத்துக்கு சில செய்திகள் நேரு பற்றி. 
1959-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி தாமோதர் பள்ளத்தாக்குக் கார்பொரேஷனின்(“DVC”) நான்காவது அணை தான்பாத் ( DHANBAD )மாவட்டத்தில் பான்செட்டில் (PANCHET)  திறக்கப் பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அதை அங்கு பணி புரிந்த புத்னி மேஜான் (BUDHNI MEJHAN) என்ற பதினைந்து வயது சாந்தால் இன ஆதிவாசிப் பெண்ணினால் திறக்க வைத்தார்.சிரித்து மகிழ்ந்திருந்த பிரதமரின் பக்கத்தில் அந்தப் பெண்ணுக்குக் கிடைத்த மதிப்பும் மரியாதையும் அவளைக் குதூகலத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.
அந்தப் பெண் அவளுடைய கிராமம் கர்போனாவுக்குத் (KARBONA) திரும்பிச் சென்றார். பிரதமர் நேருவுக்கு திறப்பு விழாவின்போது அவள் மாலையிட்டதால்,அவர்கள் வழக்கப்படி பிரதமருக்கு அவள் மனைவியாகி விட்டாள். பிரதமர் நேரு சாந்தால் இனத்தைச் சேராதவர் என்பதால், அவளுக்கு அந்த இனத்திலும் ஊரிலும் இடமில்லை என்று கூறி, அவளைக் கிராமப் பெரியோர்கள் ஜாதிப் பிரஷ்டம் செய்து துரத்தி விட்டார்கள்.
பான்செட்டில் சுதிர் தத்தா என்பவர் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர் மூலம் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். 1962-ம் வருடம் DVC வேலையிலிருந்து விலக்கப்பட்டார். கிடைத்த வேலைகளைச் செய்து காலங்கடத்திய அவள் 1980-களில், தான் மாலையிட்ட நேருவின் பேரனான அப்போதையப் பிரதமர் ராஜிவ் காந்தியை அணுகி, தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பொரேஷனிலேயே வேலை கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். 2001-ம் ஆண்டு கிடைத்த செய்திப்படி DVC-ல் வேலையிலிருந்த புத்னி, தன் சொந்தக் கிராமம் கர்போனாவுக்குப் போக அனுமதிப்பார்களா என்று கேட்டுக் கொண்டிருந்தாளாம். கடைசியாகக் கிடைத்த செய்திப்படி புத்னி (“ நெருவின் ஆதிவாசி மனைவி”).தனது 67-வது வயதில் , இறந்தார் என்பதே
நாம் சிந்திக்காமலே ஏற்றுக் கொண்ட விஷயங்களில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதும் ஒன்று. மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு நாத்திகர். அவர் கோயில்கள் என்று குறிப்பிட்டது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் தொழிற்சாலைகளையும் விவசாய நீர்ப் பாசனத்துக்கு உறுதுணை செய்யும் அணைகட்டுகளையுமே. அவர் மிகப் பெரிதாகக் கனவு கண்டார். கண்ட கனவுகளை மெய்ப்பிக்க ஏராளமான தொழிற்சாலைகளையும் அணைக்கட்டுகளையும் நிறுவினார். ஊரையும் பேரையும் இணைக்கும் இவற்றின் பட்டியலில் சில இவை
 சிந்திரி ( உரத்தொழிற்சாலை.)
பிம்ப்ரி (பெனிசிலின்).
சித்தரஞ்சன் ( லோகோமோடிவ் )
பெரம்பூர் ( கோச் ஃபாக்டரி )
பிலாய்  ( ஸ்டீல் )
அங்க்லேஷ்வர் ( பெட்ரோலியம் )
நரோரா  ( ஹெவி வாட்டர் )
தாராப்போர் ( அணு நிலையம் )

பல்வேறு உபயோகத்துக்கான அணைக்கட்டுகள்

பக்ரா நங்கல், ஹீராகுத் , DVC அணைகள்,கோசி, துங்கபத்ரா, கேயல்கரோ, சர்தார் சரோவர்

தவிர நிலத்தடி கனிமங்களுக்காக

ஜரியா ( கரி ),ஹஜாரிபாக் (மைக்கா ),சிங்பும், பைலாடிலா, கட்சிரொலி ( இரும்பு கனிமம் ) நெய்வேலி ( பழுப்பு நிலக்கரி ), கியோஞ்சார் ( மாங்கனீஸ் ) கோரபுட் ,கந்தமர்தன் ( பாக்சைட் )

அவர் தொடங்கி பிறகு எழுப்பப்பட்ட நூதனக் கோயில்களின் எண்ணிக்கை பட்டியலில் அடக்குவது சிரமம். இந்தியா பொருளாதார முன்னேற்றத்தில் குறிப்பிடப்படும் ஒரு நாடாகத் திகழ, இந்தக் கோயில்களின் இயக்கம் மிக முக்கியம். இருந்தாலும் இந்த முன்னேற்றம் போதாது இன்னும் வேண்டும் என்பதும் நியாயமானதே. NECESSITY
IS THE MOTHER OF INVENTION என்பார்கள். தேவைகளே கண்டு பிடிப்புகளின் மூலம் (தாய்) எனலாமா.? போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து என்று திருப்திப் பட முடியுமா.? CONTENTMENT SMOTHERS INVENTION என்று எனக்குத் தோன்றுகிறது. திருப்தி என்பது ஆற்றல்களை அழுத்திவிடும். 
எந்தவித முன்னேற்றத்துக்கும் ஒரு விலை உண்டு. ஒன்றின் அழிவில்தான் இன்னொன்று உருவாகிறது என்பதும் நியதி போல் தோன்றுகிறது. நியாய அநியாயங்கள் , சரி தவறு போன்றவை காலத்தினால் முடிவு செய்யப் பட வேண்டியவை.

இந்திய தேசப் பிரிவினைக்குக் கொடுக்கப்பட்ட விலை, ஆயிரக் கணக்கானவர்களின் உயிரும், பல்லாயிரக் கணக்கானவர்களின் வேரறுந்ததுமே.. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வடுக்களும் தழும்புகளும் மாற வில்லை. சம்பந்தப் பட்டவர்களும் இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் புது வாழ்க்கைக்கு, ( இப்போது பழைய வாழ்க்கையாகி விட்டது.)பழகிக் கொண்டு விட்டார்கள். இந்தத் தலை முறையினருக்கு அது தெரிய நியாயமில்லை.

இந்தப் புலம் பெயர்தலும் ,புது வாழ்க்கையும் விடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..என்ன ஒரு வித்தியாசம் என்றால், இவர்களின் வேதனைகளும் வலிகளும் உணரப் படுகின்றன. இவர்கள் செய்வது நாட்டுக்கான தியாகம். இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உயிரிழப்புகள் இருந்தே தீரும் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம் போல. பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் போது சிலரது இழப்புகள் தவிர்க்க முடியாது.

அந்தக் காலத்தில் இந்தப் பொருளாதார முன்னேற்றத்துக்காக, அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ செய்த தியாகம் கண்டு கொள்ளப் படாமலேயே போயிருக்கிறது. ஒரு கணக்குப்படி, சுதந்திரம் கிடைத்த இத்தனை  வருடங்களில், ஐந்து கோடி பேர்களுக்கும்மேல் இடம் பெயர்க்கப் பட்டிருக்கிறார்கள். முன்னேற்றத்தின்போது உரிமைகளைப் பற்றி பேசுவது விரும்பத்தக்கது அல்ல என்று அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், கூறியதாகவும் செய்தி இருக்கிறது.

முன்னேற்றத்துக்காக ஒரு விலை கொடுத்தே ஆகவேண்டும்.ஆனால் இந்த முன்னேற்றத்துக்கு விலை கொடுப்பவரகளுக்கும் உரிமை இருக்க வேண்டும். ஆதிவாசிகளின் அடி வயிற்றில் கை வைத்து அவர்களின் வேதனையில் முன்னேறுபவர்கள், தனிப்பட்ட மனிதர்களாக இருப்பது வெட்கப் பட வேண்டிய விஷயம்.
ஒருமுறை நான் கடவுளோடு கனவில் உரையாடியபோது அவர் சொன்னார்.
( PAIN IS INEVITABLE. BUT SUFFERING IS OPTIONAL ) வலி தவிர்க்க முடியாதது. ஆனால் வேதனையாக எண்ணுவது நாமே தேடுவது .முன்னேற்றத்தில் வலி இருக்கும், அவர்களின் வேதனையைக் குறைக்க அரசாங்கம் ஆவன செய்யலாமே.

உரிமைக்காகப் போராடுபவர்களும் ஒரு லட்சுமணன் கோட்டைப் போட்டுக் கொள்வது நலமோ என்று தோன்றுகிறது. .அதை அவ்வப்போது மீறி ராமாயணம் தொடரவும் வழி செய்யலாமோ.?.

நேருபற்றி இப்போது கூறுபவர்கள் அவருடைய சொந்த வாழ்க்கையின்  சில பகுதிகளை
அடிக்கோடிட்டு தூற்றுகிறார்கள் அவர்களை மன்னிப்போம் மறப்போம்
1960 என்று நினைவு நான் பயிற்சி முடித்து எச் ஏ எல்  ஏரோ எஞ்சின்   டிவிஷனில் பணியில் இருந்தேன்  பெரிய பெரிய மெஷின்களை  எரெக்ட் செய்து கொண்டிருந்தோம்   நேரு தொழிற்சாலைக்கு வந்திருந்தார் ஹைட்ரோடெல் என்னும் மெஷினில் நான் இருந்தேன்  அவர் அந்த மெஷின்களின் டிடெயில்ஸ்களை ஆர்வத்துடன்கேட்டுக் கொண்டிருந்தார்  அந்த மெஷினிலிருந்து அவருடைய bust  ஒன்றை அந்தமெஷினில் உருவாக்கினோம்  அதை அவருக்கு நினைவுச் சின்னமாகக் கொடுத்தோம் மிக்க மகிழ்ச்சியுடன்பெற்றுக் கொண்டு  அதை செய்த விதத்தை கேட்டுத்தெரிந்து கொண்டார் ஓரிடத்திலிருப்பவர் நாம் நினைக்கும் முன்னே இன்னோர் இடத்திலிருப்பார்  குழந்தை போன்ற உற்சாகம் நடையிலும்  பேச்சிலும்   அவரது உருவப்படம் ஒன்றை ஒரு நண்பன் வரைந்து  அவருக்கு கொடுக்க முன்வந்த போது அவரது மெய்க்காவலர்கள் தடுத்துவிட்டனார்  இதெல்லாம் சொந்த அனுபவங்கள்  மனிதருள்  மாணிக்கம் என்று  சும்மாவா சொல்கிறார்கள்  

15 comments:

  1. Replies
    1. போற்றப்பட வேண்டியவரே

      Delete
  2. தங்களது அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பதிவாக்க்யதில் என் அனுபவம்மிகக் குறைவே

      Delete
  3. Replies
    1. ஆதிவாசி சாந்தால் இனப் பெண்பற்றிய தகவல்கள் தானே

      Delete
  4. புதிய செய்திகளை அறிந்தேன். அவருடைய நூல்களால் நான் அதிகமாக ஈர்க்கப்பட்டேன்.

    ReplyDelete
  5. நேரு அரசியலுக்கு வந்திருக்கா விட்டால் எழுத்துலகில் சோபித்திருப்பார்

    ReplyDelete
  6. புதிய தகவல்கள் சார் குறிப்பாக அந்த ஆதிவாசிப் பெண்ணைப் பற்றிய தகவல்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. வாசகர்களை அந்த தகவல் மட்டுமே ஈர்த்திருகிற்து நேருவுக்கு அஞ்சலி செய்யும் செய்திகள் அத்தனைவரவேற்பு பெறாதது துரதிர்ஷ்டமே

      Delete
  7. ஆதிவாசிப் பெண் பற்றிய தகவல் புதிது. வியப்பு. அவருக்கு நேரு எதாவது ஒருவகையில் உதவி இருக்கலாம்.

    ReplyDelete
  8. வியப்பதற்கு ஏதுமில்லை அப்படி செய்வதுநேருவின் குணாதிசயமே அந்த ஆதிவாசிப்பெண்பற்றிய பிந்தைய செய்திகள் அவருக்குத் தெரியாமலேயே போயிருக்கலாம்

    ReplyDelete
  9. நிறையப் புது விசயங்கள் அறிஞ்சேன் இங்கு.

    ReplyDelete
  10. நேரு பற்றிய பதிவுக்கு வாசகர்களின் பினூட்டங்ககொஞ்சம் ஏமாற்ற மளித்தது

    ReplyDelete