தொடரும் நினைவுகள்
-----------------------------------
ஆனால் என்ன பிரச்சனை என்றால் தொடர்ச்சியாக இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது ஓரொ சமயம் இடம்காலமெல்லாம் சரியாக நினைவில் வருவதில்லை ஆகவே தொடர்ச்சி கிட்டுவதை மட்டும் பகிர்கிறேன் திருமணம் நடக்கும்போது நான் எச் எம் டி வாட்ச் ஃபாக்டரியில் பயிற்சியில் இருந்தேன் அப்போதெல்லாம் சிவாஜி நகரிலிருந்து ஃபாக்டரிக்கு பஸ்ஸில் போவோம் ஆனால் இந்த பஸ் பயணமே எனக்கு அலர்ஜி பேரூந்தில் ஏறியதும் கண்களை மூடிக் கொள்வேன் இல்லையென்றால் வாந்தி வரும்போல் இருக்கும் ஆனால் பிற்காலத்தில் எங்கும் பஸ்ஸில் போய் வந்திருக்கிறேன் பழக்கப்பட்டு இருக்கும் சென்னையில் வில்லி வாக்கத்தில் இருந்தபோது இவருக்கு வாரம் தோறும் ஷிஃப்ட் மாறும் நல்ல வேளை இவரது தம்பி கூட இருந்தார் அவருக்கும் ஷிஃப்ட் உண்டு என்ன,,, இவர் டே ஷிஃப்டில் இருக்கும் போது மச்சினர் நைட் ஷிஃப்ட்மச்சினர் டே ஷிஃப்டில் இவருக்கு நைட் ஷிஃப்ட் தனியாக இருக்கும் பயமில்லாமல் இருந்தது ஒரு உண்மையைச் சொல்கிறேன் நாங்கள் சென்னை வந்தபோதுஎனக்கு சமையல் செய்யவே தெரியாது மச்சினர் தான் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொடுத்து சாதம் வடிக்கவே கற்றேன் இவரானால் எல்லா பொறுப்புகளையும் என்னிடமே விட்டுவிடுவார் அதுவும் ஓரளவுக்குச் சரிதானே நீரில் இறங்காமல் நீச்சல் கற்க முடியுமா நான் இப்படி என்றால் இவர் அதைவிட நான் கன்சீவ் ஆனதே தெரியவே நான்குமாதங்கள் ஆயிற்று மாதாந்திர செக் அப் எல்லாம் மூச் தெரியவே தெரியாது எப்படியோ நானுமொன்பது மாதங்கள்கழித்துதான் பிரசவத்துக்கு தாய் வீடு சென்றேன் ஹூம் அதெல்லம் ஏதோ கனவுபோல் இருகிறது இப்போதெல்லாம் நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு எல்லாம் தெரிந்து இருக்கின்றனர் திருமணம் என்றால் கணவனும் மனைவியும் ஜாலியாக ஊர் சுற்றி சினிமா எல்லாம் பார்ப்பது என்ற அளவில் மட்டுமே என் ஞானம் இருந்தது அப்படி இருந்தநானெப்படி மாறி விட்டேன் உன்னால் முடியுமென்று எப்போதும் ஊக்குவிப்பார் என்கணவர் ஓரோர் சமயம் அவர் செய்ய வேண்டியதை என்னைச் செய்யச்சொல்லும் சாமர்த்தியமாகவும் இருக்கலாம் எனக்கு நோ ரிக்ரெட்ஸ் இப்போது விஜய வாடா நினைவுகள் என்னை சொல்லு என்னைச் சொல்லு என்கின்றன விஜய வாடா என்னை நான் அறிய காரணமாயிருந்தது அதற்கு என் கணவரின் நண்பரின் மனைவியும் முக்கிய காரணம் என் வீட்டில் என்னை பேபி என்றே அழைப்பார்கள் அதேபோல் இவருடைய நண்பரின் மனைவியும் அழைப்பார் காலை ஏழுமணிக்கு இவர் சைட்டுக்குச் சென்றால் இரவு எட்டு மணிக்கு முன்பாகவரமாட்டார் திருச்சிபோல் இல்லாமல் எனக்கு நிறையவே நேரமிருந்தது நாங்கள் விஜயவாடா போய்ச் செர்ந்தபோது பணி புரிய மாற்றலில் வருபவர்களின் பிள்ளைகளுக்கு பள்ளியில்சேர்க்க தேவையானதைச்செய்ய இவருக்கு கடமையாகியது எங்கள் வீட்டின் அருகே சுமார் 100 மீட்டர்தொலைவில் ஒரு தொடக்கப் பள்ளி இருந்தது சும்மா அங்கு போய்க்கேட்டேன் பள்ளியில் பணிபுரியலமா என்று என்னை பற்றிய விபரங்களுக்குப் பின் பள்ளி நிர்வாகப் பொறுப்பில் கரஸ்பாண்டண்டாகச் சேர விருப்பமா என்று கேட்டார்கள் உடன் சம்மதம் தெரிவித்தேன் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபொல் எனக்கு வேலைக்கு வேலையும் பிஎச் இ எல் பணியாளார்களின்குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் ஒருவாய்ப்பாக இருந்தது அப்பள்ளியின் உரிமையாளர் சற்றே வித்தியசமானவர் விஜய வாடா வெயிலிலும் டை அணிந்தே பள்ளிக்கு வருவார் படிக்கும்பிள்ளைகளுக்கு பாடம் நடத்துபவர்களின் கை எழுத்து நன்றாக இருக்க வேண்டு என்று ஆசிரியைகளின் கையெழுத்து நன்றாக இருக்க தினமும் அவர்களை கர்சரி ரைட்டிங் எழுதச்சொல்லுவார் என்மூலம்பல பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடிந்தது பி எச் இ எல் போன்ற நிறுவனத்தின் அதிகாரியின் மனைவி சிம்பிளாக இருப்பது அவருக்கு ஆச்சரியம் தந்தது
விஜயவாடாவில் பாங்க் போவது வீட்டுக்குத்தேட்வையானவற்றைக் கவனிப்பது போன்ற வேலைகள் எனக்கு டெலிகேட் செய்யப்பட்டன
அதற்கெல்லாம் உறுதுணையாக இருந்தவர் இவரதுநண்பரின் மனைவி நன்றாக சமையல் செய்வார்
முக்கியமாக நான் வெஜிடேரியன் வகைகள்
நான் முதலில் நா வெஜ் சாப்பிடுபவளாக
இருந்தாலும் திருமணத்துக்குப் பின் அறவே ஒதுக்கி விட்டேன்
இப்போது நினைத்தாலும் சிரிப்பு சிரிப்பாக வருகிறது நானும்சிநேகிதியும்
ஒரு முறைமார்க்கெட் சென்றோம் சிநேகிதி கொஞ்சம்கருவாடு வாங்கினாள்
அதன்பின் நாங்களொரு ஜவுளிக்கடைக்குச்சென்றோம்
ரெகுலராகப் போகும் இடம்தான் நாங்கள் சென்ற
சிறிதுநேரத்தில் கடையின் உரிமையாளர் மூக்கை சுணக்கி ”ஏமோ செச்சு போயிந்த வாசன ஒஸ்துந்தி”
என்று சொல்லிக் கொண்டே இருந்தார் என் சிநேகிதி சைகையால் என்னைப் பேசாமல் இருக்கக் கூறி அவரும் மூக்கைச்சுணக்கி மோப்பம்பிடிப்பதுபோல்காட்டினார்
அப்போது வீட்டில் என் தந்தைஇருந்தார் அவரிடம் இதைக்கூறி நாங்கள்சிரித்தோம் அதன் பின் என் அப்பா அந்த சிநேகிதியை கருவாட்டு மாமி என்றே அடையாளம்
சொல்வார்
விஜய வாடாவிலும் லேடிஸ் கிளப் தொடங்கினோம்
விஜய வாடாவில் பென்ஸ்சர்க்கிள் என்னும் இடமுண்டு ஆனால் அங்கிருப்பவர்களுக்கு அதுபென்ச் சர்க்கிளே
ஞாயிற்றுக் கிழமையும் இவர்
வேலைக்குச் செல்வார்ஆனால்மதியம் வந்து விடுவார்
ஞாயிறுமாலை கட்டாயமொரு சினிமா உண்டு தியேட்டருக்குப் போனால் என் இரண்டாம் மகன் கண்களைப் பொத்திக்
கொண்டுவிடுவான் அபோதெல்லாம்சினிமா என்றாலே அவனுக்குப்பிடிக்காது ஆனால் இடை வேளையில் சமோசாவுடன்ஒரு கூல் ட்ரிங்கும்
உண்டு தெலுங்குபேசக் கற்றுக் கொண்டதும் அங்குதான். ஆந்திரக்கார்களுக்கு சினிமா என்றால் உயிர்பல நல்ல தெலுங்குப் படங்களைப் பார்த்திருக்கிறோம் இன்னும் ஏதேதோ நினைவுகள் அவற்றை நினைவு வரும்போது சொல்கிறேன்விஜயவாடா பள்ளி உரிமையாளருட ன் |
விஜய வாடா பள்ளியில் |
நினைவுகள் தொடரட்டும்.
ReplyDeleteஇதுபோன்ற பொதுவான நிகழ்வுகளில் குறிப்பிடும்படியான சுவையான சம்பவங்கள் இருந்தால் அதையும் சேர்த்து சொல்லுங்கள் அம்மா. சுவையாயிருக்கும்.
அப்புறம் ஒரு விஷயம் அம்மா...
நீங்கள் சொல்லச்ச்சொல்ல டைப் அடிக்கும் சார்கிட்ட சொல்லி கொஞ்சம் பத்தி பிரித்துப் போடச் சொல்லுங்கள் அம்மா. நீங்களே கூட டைப் அடிக்கலாமே அம்மா...
கூடியவரை நினைவுகளின் கோர்வையே என் மனை சொல்லச் சொல்ல நான் டைப் செய்வதில்லை அவர்கள் அவ்வப்போது நினைவுகளைப் பகிர்வார் அதுவே பதிவாகிறதுஅவர்களே டைப் செய்தால் எனக்கு ம் பளு குறையும் பத்தி பிரித்து போடுவஹில் இன்னும் கவனம் தேவை என்று அறி கிறேன்
Deleteசுவாரஸ்யமாக செல்கிறது... கருவாட்டு மனம். தொடர்ந்து சொல்லுங்கள்.
ReplyDeleteஎப்போதும் கருவாட்டு மணம் வந்தால் பதிவே வாசமாயிருக்கும்
Deleteஸ்வாரஸ்யமான நினைவுகள்.
ReplyDeleteவிஜயவாடா - சிறு வயதில் ஒவ்வொரு விடுமுறை சமயத்தில் சென்று தங்கிய ஊர். எனது பெரியப்பா அங்கே இரயில்வேயில் இருந்தார்.
கருவாட்டு மணம்! :)
விஜய வாடவை நாங்கள் ப்லேஜ்வடா BLAZEVADAஎன்போம்
Deleteபடிக்கும்பிள்ளைகளுக்கு பாடம் நடத்துபவர்களின் கை எழுத்து நன்றாக இருக்க வேண்டு என்று ஆசிரியைகளின் கையெழுத்து நன்றாக இருக்க தினமும் அவர்களை கர்சரி ரைட்டிங் எழுதச்சொல்லுவார்
ReplyDeleteஅருமையான முயற்சி
இனிமையான நினைவுகள்
தொடரட்டும்
அப்படியும் சில ஆசிரியர்கள்
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteநினைவுகள் தொடரணும்
பலருக்கு அறிவு ஆகணும்
நினைவுகள் தொடரத் தொடர் பதிவுகளும் தொடரும்
Deleteமகிழ்ச்சியான நினைவுகள் தொடரட்டும் ஐயா...
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்
Deleteஇந்த சமயங்களில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
ReplyDeleteஅதுதான் ஐம்பது வயதுகளில் என்று எழுதிக் கொண்டிருந்தீரே
ReplyDeleteநினைவுகள் பதிவு அருமை.
ReplyDeleteசின்ன வயது படங்கள், அவர்கள் பணியாற்றிய விவரம் எல்லாம் அருமை.
பழைய நினைவுகள் பதிவுகளையும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்நினைவுகளை இன்னும் பகிர்ந்துகொண்டால் தொடரலாம்
Deleteஅம்மா அருமையான நினைவுகள் இல்லையா? ஸ்வாரஸ்யம்தான். இப்படி நினைவுகளைப் பகிர்வதிலும் ஒரு சந்தோஷம்தான். இன்னும் பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை நினைவுக்கு வரும் போது கொடுங்கள்.
ReplyDeleteதுளசிதரன், கீதா
கீதா: மூன்று வருடங்கள் முன் வட்லமுடில இருந்தப்ப விஜயவாடா போயிருக்கிறேன்....தெனாலி அருகில் உள்ள டவுன். அருமையான ஊர்.
எனக்கும் லேசாக நினைவுக்கு வருகிறது உங்கள் பதிவு
ReplyDeleteஉங்கள் நடையை மாற்றிக்கொண்டு உங்கள் மனைவி பேசுவது போல எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
ReplyDeleteஅவர் மனைவியின் நினைவுகளைத் தானே பகிர்ந்து கொண்டு வருகிறார்! நீங்கள் முந்தைய பதிவுகளில் பார்க்கலைனு நினைக்கிறேன்.
Deleteநன்றி மே ம்
Deleteஇதுவும்நானே என்று தெரிய வில்லையாபாராட்டுக்கு நன்றி
ReplyDeleteஎன் நடை போய் நாட்களாகிறது எழுதும்போய் விட்டதா
ReplyDeleteசுவாரசியமாகப் போகிறது. தொடர்ந்து உங்கள் மனைவியின் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்கள் கோணத்தில் அலசி இருக்கிறீர்கள். அதே போல் உங்கள் மனைவியின் கோணமும் தெரிய வரும். நன்றாகச் சொல்லி இருக்கிறார்கள்.
ReplyDeleteநன்றி மேம்சரியான புரிதல்
ReplyDelete