காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு
-------------------------------------------------------------
எனக்கு இரு மகன்கள் இருவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் அவர்கள்பற்றி
நான் எழுதுவதுதலைப்பை உறுதி செய்வது போல் ஆகும்
என்னால் சாதிக்க முடியாததை அவர்கள் சாதித்து இருக்கிறார்கள் என் மூத்த மகன்
மருத்துவம் படித்து டாக்டராக விரும்பினான்
ஆனால் அது சாத்தியப்படவில்லைஅது கிடைக்க வில்லை என்றவுடன்கிட்டாததை வெட்டென மறந்து எனக்கும் தெரிவிக்காமலேயே எம்பி ஏ போஸ்ட்கிராஜுவேஷன் தேர்வுஎழுதி மணிபால் இன்ஸ்டிட்யூட்டில் சேர இடம் பிடித்தான் என்மகன்
அவனை எப்படியாவது ஒரு மருத்துவனாகப் பார்க்கும் ஆசை எனக்கிருந்தது என்னாலியன்றவரை முயன்று
தோல்விகண்டதுதான் மிச்சம் அண்ணாமலைப் பல்கழக துணவேந்தரையும் எம் ஜீ ஆரைதெரியுமென்பவரிடம் மிகுந்த நம்பிக்கை வைத்து ஏமாந்ததும் இப்போது பழங்கதை
மணிப்பாலில் படித்து முடித்து வந்ததும் அவன்
சேர்ந்தது ஸ்கை பாக் கூரியர் கம்பனியில் தான்
ஆனால் வாழ்வில் முன்னுக்கு வர அதுஇடமல்ல என்று தெரிந்துகொண்டு கணினி அறிவை போதிக்கும் கம்ப்யூட்டர் பாயிண்டில் சேர்ந்தான் அங்கு இருக்கும்போது என் நண்பன் ஒருவன் இவனை என்மகன் என்று தெரியாமலேயே
இக்லூ வீட்டில் இருப்பவர்க்கே ரெஃப்ரிஜிரேடர் விற்கும் சாமர்த்திய சாலி என்று புகழ்ந்தான்அதன்பின் பல கணினி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றினான்
.
கணினி விற்கும் பணியிலிருந்து பாட்டர் விற்பனை செய்யும் எக்சைட் நிறுவனத்தில் சேர்ந்தான் அதன் பின் பாட்டரி விற்கும் பணியிலேயே கவனம் செலுத்தினான் பல நிறுவனங்களில் பணியாற்றினான் முஸ்கட்டை தலைமை இடமாகக் கொண்ட சவுத்பவனுக்காகா துபாயில் பணியாற்றினான் நாங்கள் துபாய் சென்று வந்ததும் அப்போதுதான் டாட்டாஸ் மற்றும் ஹை எனெர்ஜி பாட்டரிஸ் என்று பலநிறுவனங்களில் பணி யாற்றி பாட்டரி மார்க்கெட்டில் இவனைத் தெரியாதவரே இல்லை என்னும் நிலைக்கு வந்தான்

ஆனால் எனக்கு
ஒவ்வாத ஒன்று இப்படி அடிக்கடி இடம் மாறுவது ஆனால் வளர்ந்து விட்ட அவர்களுக்கு தெரியாதா
இப்போது சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கம்பனி ஒன்றில் வேலைஎன் மகன் எது செய்தாலும் அதற்கு ஒரு காரணமிருக்கும் என் கவலை எல்லாம் அவன் இங்கும் ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்னும் கவலையே
நான் என் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தது ஒன்றுதான் EAGLES FLY HIGH BECAUSE THEY THINK THEY CAN
ஒரு மாற்றத்துக்காக கேரள பாரம்பரிய கலை சிங்காரி மேளம் காணொளி
எங்கள் பக்க்சம் இருக்கும் ஐயப்பன் கொவில் விழாவுக்கு வந்திருந்த சிங்காரி மேளம் காணொளி பதிவு நான் விழாஊர்வலத்தில் எடுத்தது

உங்களது மகன்கள் மென்மேலும் உயரம் தொட எமது வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteகாணொளிகள் ரசித்தேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி ஜி
Deleteதாங்கள் சொல்லிக் கொடுத்தது ஒன்றே போதும் ஐயா... அருமை...
ReplyDeleteஅப்படியா நினைக்கிறீர்கள் நன்றி சார்
Deleteநம் வெற்றி, நம் பிள்ளைகளை வழிநடத்திச்செல்வதில் உள்ளது. அதனையும் நீங்கள் சாதித்துவிட்டீர்கள் ஐயா.
ReplyDeleteநான் வழி நடத்திச் சென்றதை விட அவனே சாதித்ததே அதிகம் வருகைக்கு நன்றி சார்
Deleteஉங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
ReplyDeleteநீங்கள் எடுத்த ஐய்யப்பன் கோவில் காணொளி முன்பு பார்த்த நினைவு இருக்கிறது.
மீண்டும் பார்த்தேன்.
நான் எடுத்த காணொளி ஊர்வலத்தின் போது எடுத்தது மற்றதுசிங்காரி மேளம் பற்றி மேலும் புரிய எடுத்தது யூ ட்யுபில் இருந்து
ReplyDelete//EAGLES FLY HIGH BECAUSE THEY THINK THEY CAN //
ReplyDeleteஅருமையான motivational words சார் ..இக்கால பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் அவசியமானதும் தேவையான ஒன்று .
நன்றி ஏஞ்செல்
ReplyDeleteகாணொலி அபாரம்.
ReplyDeleteரசித்ததற்கு நன்றி சார்
Deleteஉங்கள் மகனுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteகாணொளி நன்றாக இருக்கிறது.
ஒரு காணொளி இணையத்தில் இருந்து இன்னொன்று நான் எடுத்தது ஊர்வலத்தின் போதுவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஉங்கள் மகனுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி ஸ்ரீ பயணத்தில் இருப்பதாக அறிந்தேன்
Deleteதங்களின் அன்பு மகனுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சார்
Deleteஉங்கள் இரு மகன்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ந்திடப் பிரார்த்தனைகள்.
ReplyDeleteதலைப்பை கவனியுங்கள் மேம்
ReplyDeleteவெள்ளை நிறம் கொண்ட தங்களைக் காக்கை என்று எப்படி அழைப்பது? தவிர, தங்களுடைய வீராவேசம் தங்கள் குஞ்சுகளின் இல்லாமலா போகும்?
ReplyDeleteஇராய செல்லப்பா சென்னை
என்ன நிறமானால் என்ன என் குஞ்சுதானே வருகைக்கு நன்றி
ReplyDeleteபிள்ளைகள் வெற்றி நடை போட்டுத் தங்களுக்குப் பெயரும் புகழும் ஈட்டித்தருவர்.
ReplyDeleteவாழ்த்துகள்.