Monday, June 24, 2019

நான் க ற்றது பெற்றது etc


                             நான் கற்றது பெற்றது  etc/
                             ---------------------------------------

கற்றதும்பெற்றதும்  என்றாலேயே பலருக்கும்  எழுத்தாளர் சுஜாதாதான் நினைவுக்கு வருவார் மற்றவர்கள் எல்லாம் கற்றுப் பெற்றுக் கொண்டது இல்லையா
   ஒரு பதிவின் பின்னூட்டத்தில்  திரு. அப்பாதுரை நானே கேள்விகேட்டு பதிலும் சொல்கிறேன் என்று எழுதி இருந்தார். இப்போதெல்லாம் அவரது பின்னூட்டத்திலிருந்து பதிவிடக் கரு கிடைத்து விடுகிறது. அவருக்கு நன்றி. உனக்கு என்ன தெரியும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பதிவு எனக்கு என்ன தெரியும் என்பதை கேள்வி பதிலாக எழுதி நான் கற்றதும் பெற்றதும் என்ன என்று தெரிவிக்கிறேன் இந்தக் கேள்விகளும் பதில்களும் சிலருக்குக் குதர்க்கமாய்த் தெரியலாம்..ஆனால் என்ன செய்ய. ? இது என் வழி... தனி வழி...!
மறுபடியும் முதலில் இருந்து
கேள்வி:- உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும். ?
பதில்:-   எனக்கு எல்லாக் கடவுளையும் பிடிக்கும். ஏனென்றால் கடவுள் என நம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின் சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள். என்னுள்ளும் அவர் இருக்கிறார்.
கேள்வி:- அப்போது கடவுள் என்பவருக்கு ஒரு வடிவம் இல்லையா.?
பதில்:-   கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும்  பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக் கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயு, தங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும்  நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்.
கேள்வி:- இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா.?
பதில்:- பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் செயல் புரிபவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள். இதையே சக்தியின் வெளிப்பாடாகவும் இருத்தலாகவும் மறைதலாகவும் கொள்ளலாம் இதையேmanifestation, establishment and withdrawal  ஆக எண்ணலாம் ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்
கேள்வி: -இந்த விளக்கத்துக்கு முந்தையதே தேவலாம் போலிருக்கிறதே .உதாரணமாக ஏதும் கூற முடியுமா. ?
பதில்:- நான் ஓரிடத்தில் படித்ததைக் கூறுகிறேன் இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் தோன்ற” ஆரம்பித்து விடுகின்றனஉருவாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் தோன்றி எண்ணங்கள் நம் மனதில்நிலையாக’ இருப்பது போல இருக்கின்றன. ஏன் போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்துwithdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்ததுஒரு பானையாக மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது

கேள்வி:- நாம் கேள்விப்படும் ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் பொய்யா.?

பதில் :- பொய் என்று ஏன் எண்ண வேண்டும்.?இந்தமாதிரி அவதாரக் கதைகள் மூலம் மக்கள் நல் வழிப்படுவார்களானால் அந்த நம்பிக்கைகள். இருந்து விட்டுப் போகட்டுமே. நான் கற்றதும் பெற்றதும் இதனால் என்னவென்றால் வாழ்க்கை முறை என்று எண்ணப்படும் நமது சனாதன மதத்தின் அடி நாதமாக இருக்கும் வேதங்களிலோ, உபநிஷத்துக்களிலோ இறைவனுக்குப் பெயர் கொடுத்து வழி பாடு இருந்ததாகத் தெரியவில்லை.

கேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்திருக்கிறாயா.?

பதில்:- அவை படித்தறிந்து கொள்ளக் கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவரை நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்ல முடியும்

கேள்வி. :- வேதங்களில் இந்திரன் ,சூரியன் வருணன் என்னும் பல இறை வடிவங்களுக்கு செய்ய வேண்டிய வேள்வி முறைகளும் , கிரியைகளும் மந்திரங்களாகச் சொல்லப் பட்டிருக்கிறதாமே. உண்மையா.?

பதில்.:- நான் வேதம் படித்ததில்லை. மேலும் இந்த மாதிரியான விஷயங்கள் பற்றிக் கூற வேண்டுமானால். இவை ஆதி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த நடை முறைகள் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்ற என் கேள்வியே பதிலாக இருக்கும். ஏன் என்றால் வேதங்களும் உபநிஷத்துக்களும் வாய்வழியே வந்தவை. காலத்துக்கு ஏற்றபடி இடைச் செருகல்கள் இருக்கலாம். வேதங்களைத் தொகுத்தவர் வேத வியாசர் என்று கூறப் படுகிறது. அவர் கூற அவரது சீடர்கள் மனதில் வாங்கி அவற்றை பலருக்கும் பரப்பி இருக்க வேண்டும். ஒரு விஷயம் வாய்வழியே பரப்பப்படும்போது நிறையவே மாற்ற்ங்களுக்கு உள்ளாகலாம். ஏன் ,அண்மைக்கால பாரதியின் பாடல்களிலேயே பாடபேதம் இருப்பது புரிகிறது. எந்தவிதமான பராமரிப்புகளும் இல்லாத வாய் வழிவந்த வேதங்கள் அவற்றின் ஒரிஜினல் ஃபார்மில் இருக்குமா.? நான் இவை எல்லாம் சரியில்லை என்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இல்லாமலிருக்க நிறையவே சாத்தியக் கூறுகள் இருக்கின்றன
.
கேள்வி:- பட்டும் படாமலும் பதில் சொல்லிவிடக் கூடாது. எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையா.?

பதில்:-  நான் தப்பித்துக் கொள்ள பதில் சொல்லவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் நிறைய விஷயங்கள் ஆதியில் சொன்னதுபோல் இல்லையோ எனத் தோன்றுகிறது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி நிறையவே மாற்றங்கள் இருக்கிறது. உதாரணத்துக்கு வியாசரால் இயற்றப்பட்ட பாரதக் கதை 8000- அடிகளைக் கொண்ட தாக பாரதத்தின் ஆதிபர்வம் கூறுவதாகவும் அது வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது 24000 அடிகளிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு உக்கிராசராவ சௌதி ஓதியபோது 90000 அடிகளைக் கொண்டிருந்ததாகவும் விக்கிப் பீடியாவில் படித்தேன். இந்த 8000 அடிக் கதை 90000 அடிகளாகும் போது அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் இருக்கத்தானே வேண்டும். அதேபோல் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்ப்பட்டதாக ( ஓதப்பட்டதாகக் ) கருதப் படும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அவற்றில் முதலில் சொல்லப்பட்டது மாதிரியே இருக்கும் என்று எண்ண முடியவில்லை. . செய்யும் தொழில்முறைக்கேற்ப  பிரிக்கப்பட்ட நான்கு பிரிவினரும் இந்த இடைச் செறுகல்களால் மனுநீதி என்றும் , தர்ம சாஸ்திரம் என்றும் பெயர்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்க சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன. எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை என்பது பலராலும் கூறப்பட்ட கருத்து.
எந்தவிதமான செய்தியும் ஆராயப்பட்டால் உயர்வு தாழ்வு என்று பாதிப்பின் காரணம் புரியும். புரிந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது நான் அவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறேனோ என்ற எண்ணத்தாலா.?
கேள்வி:- உறங்குபவரை எழுப்பலாம். உறங்குவதுபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா.?
பதில்:- தனிமரம் தோப்பாகாது. என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் charity begins at home  என்பார்கள். நாம் நமது எண்ணங்களை சீராக்கிச் செதுக்குவோம் . உண்மை நிலையை அறிவோம். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். நான் கற்றதும் பெற்றதும் சரியோ தவறோ தெரியவில்லை. கற்றுப் பெற்றதை பதிவிடுகிறேன்.அவ்வளவுதான். .

இந்த சேவல் சண்டையைப் பாருங்களேன் கொசுராக 

   


36 comments:

  1. நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. உங்கள்டமிருந்து வந்த இப்பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது

      Delete
  2. மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டாம் என்பது திருமூலர் வாக்கு

    ReplyDelete
    Replies
    1. அதையே நான் சற்று வித்தியாசமாய் கூற முயன்றிருக்கிறேன் மனதை செம்மைப் படுத்த சில உண்மைகளாஐப் புரிந்து கொள்ள வேண்டும் வருகைக்கு நன்றி சார்

      Delete
  3. தூங்குவது போலும் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு

    //நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். //

    அதுதான் ஒவ்வொருவருக்கும் முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. நம்மை நாமெ மாற்றிக் கொள்ள சில உண்மைகளை ஒப்புக்கொள்ளும் துணிவும் தேவைப்படுகிறது

      Delete
  4. உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும்?

    -- இது என்ன கேள்வி சார்?.. ஏதோ ஆயிரத்தெட்டு கடவுள்கள் இருக்கிற மாதிரியும் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிற மாதிரியும்.

    நாம் கற்பது சரியாக இருக்க வேண்டும். அதற்கேற்பத் தான் பெறுவதும் இருக்கும் என்பதினால்.

    கற்பது புதுப்புது வாசல்களை நம்முள் திறந்து ஞானத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். குறிப்பாக இந்த கடவுள் விஷயத்தில் அதெல்லாம் குறைந்த பட்ச தேவைகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள்குறிப்பிடும் ஞானம் என்னைப் பொறுத்தவரை உண்மையை அறிவதேபதிவிலிருந்தே மேற்கோள்காட்டுவத்சற்கு மன்னிக்கவும் கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும் பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக் கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயு, தங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும் நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்./நீங்கள் ஏதாவது கடவுளின்உருவத்தைதா வாங்குகிறீரகளென்று நினைக்கிறேன்
      அதுவும் ஆயிரம்கடவுள்களில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் இதையே நான் எந்தக் கடவுளைப்பிடிக்கும் என்று கேட்டு இருக்கிறேன்புத்துப்புது வாசல்களில் இதுவுமொன்று சார்

      Delete
    2. பிரம்மன், ஆத்மன், புருஷ்ன் போன்றவை-- என்றால் யாருக்குப் புரிகிறது? யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்? கடவுள் என்று சொல்லப்படுபவருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?..

      உள்வாங்கிக் கொள்ளவே படு சிரமமாக இருக்கிறதே? கடவுள் என்பது யாரோ எதுவோ சொல்லி அதை நாமும் திருப்பிச் சொல்லி புரிதலை ஏற்படுத்தும் அளவுக்கு லேசான விஷயமா?

      மன்னிக்கவும். உங்கள் அலைவரிசையிலேயே புரிந்து கொள்வது எனக்கு போதாமையாக இருக்கிறது.

      Delete
    3. உள்வான்கிப் புரிந்து கொள்ளவே சிரமமாய் இருப்பதால் தான் கடவுள்களைப் படைத்தார்கள் உங்களுக்குபுரிந்து கொள்வதற்கு சிரமமென்பதை நம்பமுடியவில்லை புரிந்து கொள்ளவிரும்பவில்லைஎன்று எடுத்துக் கொள்ளலாமா

      Delete
    4. இல்லை.. கடவுள் விஷயம் ஒருவர் சொல்லி இன்னொருவர் புரிந்து கொள்கிற விஷயமே அல்ல என்று நினைக்கிறேன்.
      அது சொந்த அனுபவத்தில் விளைவது. எதையாவது படித்து விட்டு கடவுளைப் புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைத்து மற்றவர்களுக்கும் புரிய வைக்க முயற்சிப்பது இயலாத விஷயம். அப்படிப் புரிய வைக்க நினைப்பதில் ஏதாவது பதில் சொல்ல முடியாத குறை இருஜ்தே தீரும்.

      மொத்ததில் கற்பதினால் விளைவதில்லை கடவுள் ஞானம்.
      அது சொந்த அனுபவத்தில் பிஞ்சாகி, காயாகிக் கனிவது.

      Delete
    5. ஞானம் என்பதே கடவுளைப் புரிவதால்வருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்

      Delete
    6. ஞானம் பல வகைப்பட்டது. கடவுளைப் பற்றிய ஞானத்தை கடவுள் ஞானம் என்று சொல்லியிருக்கிறேன்.

      'என் சொந்த அனுபவத்தில் கடவுள் இருப்பை உணந்தேன்' என்று நீங்கள் அனுபவ பூர்வமாகச் சொன்னால் அதில்
      உண்மை இருக்கும். யாரோ சொன்னதை வாசித்து விட்டு உணர்ந்தேன் என்று சொன்னால் இன்னும் ஒரு மாதத்தில் வாசித்து சொன்னதைப் பற்றி உங்களுக்கே சந்தேகம் வரும்.

      அதனால் தான் கற்று அறிவதில்லை கடவுள் ஞானம் என்று சொன்னேன்.

      நான் உணர்வதைத் தான் உங்களுக்குச் சொல்கிறேனே தவிர இதையெல்லாம் எங்கும் வாசித்து விட்டுச் சொல்லவில்லை.
      அதனால் என் அனுபவம் என்ற உண்மை என் வாக்கில்
      வெளிப்படுகிறது. நன்றி.

      Delete
    7. கடவுளை உணர்ந்தவரா நீங்கள் மெத்த மகிழ்ச்சி எனக்கு கடவுள் பற்றிய ஞானம் போதாதுதான் நான் எங்கும் கடவுளை உண்ர்ந்ததாகச் சொல்ல வில்லை இருக்கிறது என்று சொல்லும்போது இல்லை என்றும் சொல்ல முடிய்ம் உணராததால் வாசித்து உண்மை நிலையைக்காண முயற்சிக்கிறேன்

      Delete
    8. நான் உணர்வதைத் தான் உங்களுக்குச் சொல்கிறேனே தவிர என்றால்..
      கடவுளை உணர்ந்தவரா நீங்கள்? - என்று கேட்கிறீர்களே!
      நியாயமா இது?
      ஒருவர் சொல்லியோ, அல்லது ஒருவர் எழுதி வைத்ததைப் படித்தோ கடவுளை உணர முடியாது. சொந்த முயற்சியில் நீங்களே உணர்ந்தால் தான் உண்டு. --- இதான் அடிப்படை விஷயம்.

      கைவளை குலுங்க முத்து மாலைகள் அசைய
      தெரு வாசலில் வந்தான்..

      -- என்பது ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் இறைவனை உள்ளார்ந்து உணர்ந்த வரிகள்.

      இந்த வரிகளை நீங்கள் வாசிக்கலாம்; இன்னொருவருக்குச் சொல்லலாம். ஆனால் அவர் கண்ணனை மனசார உணர்ந்த உணர்வைப் பெற முடியாது.

      நீங்களும் அப்படி உளமாற அதற்காக முயற்சித்து காத்திருந்து அந்த இறைவனைக் காணும் சுகானுபவத்தைப் பெறும் பட்சத்தில்....

      நீங்களும் இறைவனை உணரலாம். அதைத் தான் சொந்த அனுபவத்தில் இறைவனை உணர்வது என்று சொன்னேன்.


      Delete
    9. காலினில் சிலம்பு கொஞ்ச
      கைவளை குலுங்க முத்து மாலைகள் அசைய
      தெரு வாசலில் வந்தான்...

      Delete
    10. /நான் உணர்வதைத் தான் உங்களுக்குச் சொல்கிறேனே தவிர இதையெல்லாம் எங்கும் வாசித்து விட்டுச் சொல்லவில்லை./ இதை நான் நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்கொண்டேன் தவறுக்கு வருந்துகிறேன்/
      -- என்பது ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் இறைவனை உள்ளார்ந்து உணர்ந்த வரிகள்/ இடு ஒரு அதீதகற்பனை என்றே தோன்றுகிறது.

      Delete
    11. காலில் சிலம்பு கொஞ்ச என்னும்பாடல் எனக்கும்பிடிக்கும்

      Delete
  5. கொசுறுவும் நன்றாக இருக்கிறது ஐயா...!

    ReplyDelete
  6. ரசனையான கேள்வி பதில்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைக்கும்படி இருந்ததா ஜீ

      Delete
  7. இந்தப் பதிவு என்னையும் சில குழப்பத்திற்கு உள்ளாக்கியது. அதனால் நீங்களே கேள்வி கேட்டு பதில் எழுதுவதற்கு பதிலாக நான் சில கேள்விகளை முன் வைக்கிறேன். அதிகப்பிரசங்கம் என்றால் மன்னிக்கவும்.

    1. மதம் என்றால் என்ன? மதம் கடவுள், அல்லது தோற்றுவித்தவர், அல்லது கோட்பாடுகள் என்ற முறையில் கூறப்படுவதா?

    2. மதத்திற்கு கடவுள் என்ற ஒன்று அவசியமா?

    3. கடவுளைப் பற்றி குறிப்பிடாத சில "மதங்கள்" உண்டு. உ-ம். பௌத்தம். இவை மதங்கள் இல்லையா?

    4.இந்து என்ற பெயரில் மதம் இருந்ததாக தெரியவில்லை. இந்துமதம் என்ற பெயர் காரணம்? இதுவும் சனாதன தர்மம் என்று கூறப்படுவதும் ஒன்றா?

    5. இந்து மதத்தில் கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் உண்டா? உண்டு எனில் அவற்றை உண்டாக்கியவர் யார்?

    6. நாத்திகர்களுக்கு மதம் உண்டா? இல்லை எனில் ஏன் அவர்களுக்கு ஜாதி அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது?

    Jayakumar

    பி.கு. குழப்பவாதி கில்லர்ஜீயின் இன்றைய பதிவும் என்னுடைய இந்த குழப்பத்திற்கு காரணம். கில்லர்ஜீ மன்னிப்பாராக.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு ஒரு பின்னூட்டத்தின் மறுமொழியில் சொல்லமுடியுமா தெரொய வில்லை இதுப்ற்றி பிறிதொரு பதிவில் எழுதுவேன்மதம்பற்றி நான் எழுதவில்லை ஆனால் கடவுள் பற்றிக்கூற முயற்சித்து இருக்கிறேன் குழப்பமே இல்லை சார் எப்படி எல்லாம் திசை திருப்பப் பட்டு இருக்கிறோம் என்பதே என் ஆதங்கம்

      Delete
  8. எந்தவொரு அளவுகோலுக்கும் கட்டுப்படாத பிரபஞ்சம்[கோள்கள், நட்சத்திரங்கள், உயிர்கள் என்று எதையெதையோ உள்ளடக்கியது] இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டுமே மனித அறிவால் அறியப்பட்டுள்ளது.

    இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் எப்போது தொடங்கியது? தோன்றவெல்லாம் இல்லை; எப்போதும் இருந்துகொண்டே[இயங்கிக்கொண்டே] இருக்கிறது என்றால் அது எப்படிச் சாத்தியமாயிற்று?

    இதன் தோற்றம், அல்லது இருந்துகொண்டே இருப்பது எதற்காக?

    இனி எப்போதும் இதற்கு அழிவே இல்லையா?

    இந்தப் பிரபஞ்சத்திலுள்ள பூமியில் உயிர்கள் தோன்றுவதும் வாழ்வதும் அழிவதுமாக இருப்பது ஏன்?

    இப்படி, இன்னும் பல விடை தெரியாத கேள்விகளுக்கிடையே, கடவுள் என்று ஒருவரைக் கற்பித்து, அவர் அளப்பரிய ஆற்றலும் கருணையும் கொண்டவர் என்றெல்லாம் கொண்டாடுவது அறியாமையின் உச்சம்.

    அடுக்கடுக்கான துன்பங்களை எதிர்கொள்ள இயலாத நிலையில், மரணத்திற்குப் பின்னர் என்ன என்பது புரியாமல் மயங்கும் மனிதர்களுக்குக் கடவுள் தேவைப்படுகிறார் என்பது மட்டுமே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. /இப்படி, இன்னும் பல விடை தெரியாத கேள்விகளுக்கிடையே, கடவுள் என்று ஒருவரைக் கற்பித்து, அவர் அளப்பரிய ஆற்றலும் கருணையும் கொண்டவர் என்றெல்லாம் கொண்டாடுவது அறியாமையின் உச்சம்/.பதிவிலிருண்டே சில மேற்கோள்கள் /அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயு, தங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும் நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்து/இருக்கலாமென்று தோன்றுகிறது ம்ரணத்துக்குப் பின்னர் என்னவாயிருந்தால் என்ன யாருக்குத் தெரியப்போகிறது

      Delete
  9. பொதுவாக பதிவுகள் மூலமாகவே பல செய்திகளைக் கூறிவிடுவீர்கள். கேள்வி பதில் உத்தியில் மேலும் பலவற்றை அறிந்துகொண்டோம் ஐயா. உங்கள் வழி தனிதான். நாங்கள் அறிவோம்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி எழுதுவதும் ஒரு உத்திதான் சார்

      Delete
  10. கேள்வி பதில்கள் அருமை. இம்மாதிரி தர்க்கங்களை உங்கள் ஒவ்வொரு பதிவுகளிலும் நிறைவுப் பகுதியில் அவ்வப்போது ஒவ்வொன்றாக இணைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு பகுதியிலுமா முடியுமென்று தோன்றவில்லை

      Delete
  11. சிறப்பான கேள்வி பதில்கள் . முக்கியமாகக் கடைசி பதில் சிறப்போ சிறப்பு !

    ReplyDelete
    Replies
    1. கேள்வி பதில்களகப்பதிவிடுவதுமொரு உத்திதான்சார் வருகைக்கும்பாராட்டுக்கும் நன்றி

      Delete
  12. மஹாபாரதத்தில் இடைச்செருகலுக்கு நிறைய சைத்யம் உண்டு. ஆனால், எது ஒரிஜனல், எது இடைச்செருகல் என்று அறியும் திறமை நம்மில் பலருக்கு கிடையாது.

    ReplyDelete
  13. நிறையவே இடைச் செருகல்கள் உண்டு என்பதெ செய்தி

    ReplyDelete