Wednesday, March 4, 2020

ஒரு மாற்றம்


                         

                                                ஒரு மாற்றம்
                                                 --------------------

 இனி நான்  எழுதும்  பதிவுகள் சற்றே  வித்தியாசமாய் இருக்கும் நாம் அறிவொம்   நம்மைவிட நமமை படிப்பவர்கள் அறிகிறார்கள்போலும் எனக்கு அப்படித்தோன்றவில்லை ஒன்று மட்டு நிச்சயம்   எல்லோருக்கும் எல்லாம் தெரியும் நான் எழுதுவது பாம்பும் சாகக் கூடாது  கம்பும் உடையக் கூடாது  என்பது போல் இருக்கிறதாம்  அப்படியா நண்பர்களே  வெட்டு ஒனறு  திண்டு இரண்டு என்பதுபோல் இருப்பதாகவே என் வாசகர்கசள் நினைக்கிறார்கள் என்றே எண்ணி வந்தேன்
எனக்கு என்று  சில எண்ண்ங்கள்   பெரும்பாலும்அவையே என் எழுதுபொருளாக இருக்கும்  நம் சமூகத்தில் நிலவும்   ஏற்றதாழ்வுக்சள் தவிர்க்கப்பட வேண்டியவை  எனக்குத்தோன்றிய சில தீர்வுகளும்அதில் இருக்கும் நம்பிக்கை என்னும் பெயரில்நடக்கும்  சில நிகழ்வுகள் என்னை என்னவோ செய்யும் அவற்றுக்கு  எதிராக குரல் கொடுத்திருக்கிறேன் பலரும் பைத்தியக்காரன் என்று  நினைத்திருக்கலாம் அதை தெரிந்தே  எழுதிய வரிகள் இவை

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?

எனக்கு பலநேரங்களில் தோன்றுவது  பலரும்  say yes when they mean no இது ஒரு பர்செப்ஷன் தான்  நிஜமாயிருக்க வேண்டும் என்றில்லை  நான் என்னைப்பற்றியே அதிகம் எழுதுவது  பலருக்கு சலிப்பேற்படுத்தலாம் முகம் காட்ட விரும்பாதபதிவர்கள்மத்தியில் ஒளிவு மறைவின்றிஎழுதுவது  என்பலமாகலாம் பலவீனமும்  ஆகலாம் 
எல்லோரும்நல்லவரெ என்று  எழுதி இருந்தேன்   கருத்து வேறுபாடுகள் இருப்பதால் நல்லவர் அல்லாதவராகி விடுவாரா நான் என்கருத்துகளை  எழுதுகிறேன் பலர் எழுதத் தயங்கலாம் ஆக என்பதிவுகள் இனி  வித்தியாயசமாய் இருக்கும் என்றேன்  நல்லதாக நான் நினைப்பதை  எழுதலாம் என்று இருக்கிறேன்  அதாவது சில காம்ப்ராமைசுகள்  செய்யலாம்  ஆனால் அதுவும்  பலரும் ஏற்கும்படியாய் இருக்காமலும் போகலாம் என் இரண்டாம் மகன்  ஒரு பொறி இயல் பட்டதாரி நல்ல உத்தியோகம்  நானெல்லாம்  படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் ஒரு வேளை உயரத்தில் பற்ந்தி ருக்கலாம்   பாருங்கள்மீண்டும்புலம்பலாஎன்று  கேட்பது காதில்விழுகிறது  வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் அவற்றில் நான் ஏன் அவலசம்பவங்க்களை  நினைவு கூற வேண்டும்  சரி விஷயத்துக்கு  வருவோம்
பட்டதாரிகளுக்கு பட்டம்வழங்கும் வைபவம் ஆங்கிலத்தில் கான்வொகேஷன் என்பார்கள்ன்மகனை அம்மாதிரி ஒருபட்டமளிப்பு  விழாவில் தலைமைஏற்க கூப்பிட்டிருந்தார்கள் நான் எழுதுபவன்என்னிடமென்னபேசலாம் என்றுஎன்மகன் கேட்டான் நான் என் வழக்கம்போல் பட்டம்பெற்று வெளி வருபவர்கள் சுதந்திரமாக  இருக்க பழகிக் கொள்ள வேண்டும்  என்னும்ரீதியில் எழுதிக் கொடுத்தேன் என் மகனுக்கு அது பிடிக்கவில்லை போலும் பின் என்ன நான் சொல்வதை ஏறக வேண்டுமா என்ன என்மகனே என்றாலும் என்னிடம் அதை சொல்லாமலேயே  அவனே வேறு ஒரு பேச்சைத் தயார்செய்திருந்தான்  என்னிடம் ஏதும் சொல்ல வில்லை  எல்லாம் முடிந்தபின் தான்எனக்குத்தெரிந்தது பரவாயில்லை நானதைப் பதிவிடுகிறேன் நல்ல
 விஷயங்களில் கவனம் செலுத்தினால் மனம் உற்சாகமாக இருக்க்லாம்



பட்டமளிப்பில் 



பாண்ட் முழக்கத்துடன்வரவேற்பு 





அவனது உரை ஆடியோ  அப்லோட் ஆகவில்லை அல்லது தொழில் நுணுக்கம் எனக்கு  தெரியவில்லை எதொ முயன்று  இருக்கிறேன் கீழே சொடுக்கினால்   ஆடியோ கேட்குமென்று நினைக்கிறேன் 

https://drive.google.com/open?id=19vqMbnbO_4f7KGsbY-J5O42lDxi-iFz5


மனசுக்கு மகிழ்ச்சி தரும்செய்தி பகிர்ந்து கொள்கிறேன் 








24 comments:

  1. உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. எண்ணம் எழுத்தாக்கம் பெறட்டும்
    வாழ்த்து

    ReplyDelete
    Replies
    1. அதுதான்நடக்கிறது என்று நினைக்கிறேன் முதல் வருகை? க்கு நன்றி

      Delete
  3. தங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு ந்ன்றி சார்

      Delete
  4. தங்களது எண்ணங்களை எழுத்தாக்குங்கள் ஐயா. உங்கள் மகனுக்கு எமது வாழ்த்துகள்.

    சுட்டி இயங்கவில்லையே... ஐயா எனது தளம் பக்கம் பல பதிவுகளுக்கு வரவே இல்லையே...?

    ReplyDelete
    Replies
    1. சுட்டி இயங்குகிறதே திரு தைண்டுக்கல் தனபாலனின் பின்னூட்டம்பாருங்கள் நான்ஃபாலோ செய்யும் பட் இவர்களின் பதிவுகள் என் டாஷ் போர்டில் தெரியும்ஒரு வேளை தாமதமானால் மிஸ் ஆகலாம்

      Delete
  5. தந்தையின் கருத்தை மகன் ஏற்காமலிருக்க உரிமையுண்டு . ஆனால் தன் தயாரிப்பைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சொல்லி இருக்கலாம்நன் ஆவணப்படுத்தவில்லையோ என்னவோ

      Delete
  6. தங்களின் உற்சாகம் மேலும் பெருக்கட்டும்...!

    அட ஆடியோ உரை... அப்லோட் ஆகியிருக்கிறது... உரையும் நன்றாக உள்ளது...

    ஆடியோ அப்லோட் செய்வதில், கிட்டத்தட்ட 90% செய்து விட்டீர்கள்... அதன் இணைப்பை பதிவில் ஆடியோ ஸ்கிரிப்ட் மூலம் இணைக்க வேண்டும்... அவ்வளவே...

    இருந்தாலும், இவ்வாறே இனிமேல் செய்யுங்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. கூகீளில் சொல்லி இருந்தபடி செய்தேன்உற்சாகத்தை தக்க வைக்க வேண்டும்

      Delete
  7. உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி மேம்

      Delete
  8. அவரவர் எண்ணம் அவரவருக்கு. அனைவரும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே வாழ்க்கை. சிறக்கும். சிறப்பு. மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது அல்லவா? காத்திருப்போம்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஒன்பது வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது ஒரு மாற்றம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
    Replies
    1. வலைப்பட்டியலில் என்தளமில்லையெ வலைஓலையில் இணைக்க வேண்டுமா

      Delete
  9. மகனுக்கு வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  10. ஒரு பதிவே எழுதி விட்டேனே

    ReplyDelete
  11. உங்கள் மகனுக்கு வாழ்த்துகள். என் மகனுக்கு ஒரு பேச்சுப்போட்டிக்கு என் தந்தையும் எழுதிக் கொடுத்தார். நானும் எழுதிக் கொடுத்தேன். மகன் நான் எழுதித் தந்ததைப் பேசி, பரிசும் வாங்கினான். இது நீங்கள் சொல்லியிருப்பதிலிருந்து சற்றே மாறுபட்டது!

    ReplyDelete
  12. உங்களுக்குத்தான் மக்களின் நாடி கையில் ஆயிற்றே

    ReplyDelete
  13. மகனுக்கு இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete